Monday, July 21, 2014

வேலையில்லா பட்டதாரி- SUPER STAR - IN MAKING!!!


Share/Bookmark
படம் ஆரம்பிக்கிற நாள்லருந்து படத்தோட கதையோ இல்லை படத்தைப் பத்தின செய்தியோ இல்லை  ஏதாவது ஸ்டில்ஸோ ரிலீஸே ஆயிடக்கூடாதுன்னு ஷங்கர் பட பாணியில ரொம்ப சீக்ரெட்டா வச்சி படத்த ரிலீஸ் பண்ணி   ஹிட்டடிக்கிறது ஒரு ரகம். அதே, படத்தோட மொத்தக் கதையையும் முன்னாலயே சொல்லி,  ஆடியன்ஸ தியேட்டருக்கு வரச்சொல்லி,  சொல்லி அடிக்கிறது இன்னொரு ரகம்...இந்த வேலையில்லா பட்டதாரி சொல்லி அடிக்கிற ரெண்டாவது ரகம். இந்தப் படத்தோட ரெண்டு நிமிஷ ட்ரெயிலரே போதும்  படத்தோட மொத்தக் கதையையும் நமக்கு சொல்றதுக்கு. இருந்தாலும் எந்த சலிப்பும் இல்லாம செம  ஜாலியான ஒரு படத்த  கொடுத்துருக்காங்க.

தனுஷுக்குனே அளவெடுத்து தச்சா மாதிரியான ஒரு கேரக்டர். ஏற்கனவே பல படத்துல அவர்  பண்ணதுதான்னாலும் இதுலயும் கொஞ்சமும் குறையில்லாம பண்ணிருக்காரு. முதல் பாதி முழுசுமே செம  ஜாலியா போவுது. காமெடில பிண்ணிருக்காய்ங்க. சிவில் படிச்சிட்டு கட்டிடம் கட்டுறத தவற வேற எந்த  வேலைக்கும் போக மனசில்லாம நாலு வருஷமா வேலைதேடி அலையிறவரு தனுஷ்.  அவருக்கு பின்னால  படிக்கிற தம்பி வேலைக்கு போயி நல்லா சம்பாதிச்சி காரெல்லாம் வாங்க நம்மாளுக்கு லைட்டா பொகையிது அப்பாவும் அடிக்கடி ரெண்டு பேரையும் கம்பேர் பண்ணி பேசி நம்மாள கடுப்பேத்துறாரு. பின்னால  அவருக்கு எப்படி வேலை கெடைக்குது, அதுக்கப்புறம் அவர் ஃபேஸ் பண்ற ப்ரச்சனைகள் என்னென்னங்குறத சொல்றது தான் இந்த VIP. என்னடா சன் டிவி டாப் டென் சுரேஷ் குமார் மாதிரி  பேசுறேனேன்னு தானே வெறிக்கிறீங்க?

தமிழ் சினிமாவோட அம்மா கேரக்டர கொஞ்ச நாளுக்கு முன்னால் சுஜாதா குத்தகைக்கு எடுத்துருந்த மாதிரி  இப்போ சரண்யா. அனைத்து ஹீரோக்களுக்கும் அம்மா அவங்க தான். அப்பாவா சமுத்திரக்கனி செண்டிமெண்ட் வசனங்கள்ல மட்டும் இல்லாம காமெடி வசங்கள்லயும் டெலிவரி செம. "ஏண்டா 15  வருசத்துக்கு முன்னால இதே வீட்டுக்குள்ளருந்து ball எடுத்துத்துட்டு வந்த.. அப்போ உன்னோட 15 பேர்  விளையாண்டாய்ங்க.. எல்லாரும் வேலைக்கு பொய்ட்டாய்ங்க.. நீ இப்பவும் இங்க பால் எடுத்துகிட்டு தான்  இருக்க" ன்னு சொல்றப்போவும், "ஊதுடா ஊது என் மூஞ்சில ஊது"ன்னு சொல்லும் போதும் 7G விஜயன  ஞாபகப்படுத்துறாரு.

அடுத்த வீட்டுப் பொண்ணா அமலாப்பால்... தனுஷ் கிட்ட பக்கத்து வீட்டு அமலாப் பால ஹீரோயின் ரேஞ்சுக்கு சரண்யா பில்டப் பண்ணி சொன்னப்புறம் தனுஷ் அவளப் பாத்து "இதப்பாரு உனக்கு ஹீரோயின் அளவுக்கெல்லாம் சீன் இல்லை..  சுமாராத்தான் இருக்க" ன்னு சொன்னதும் எனக்கு  "ச்ச நம்ம மனசுல இருக்கத அப்படியே எழுதிருக்காய்ங்கையா..." ன்னு செம ஜாலியாயிருச்சி.. நல்ல வேளை அமலா பாலோட அகோர முகரைகளை  காமிக்காம ஓரளவு சுமாராவே காமிச்சிருக்காங்க. தெய்வத்திருமகளுக்கு அப்புறம் இதுல ஓரளவு பாக்குற மாதிரி இருக்கு.

படத்தோட ட்ரெயிலர்லயே எப்படி மொத்தக்க தையையும் டைரக்டர் சொன்னாரோ அதே மாதிரி அனிரூத்தும்  ட்ரைலர்லயே மொத்த மீசிக்கையும் சொல்லிட்டாரு.. வக்காளி ட்ரெயிலர்ல வர்ற ரெண்டே BGM தான்  படம்  மொத்ததுக்குக்கும். ஒரு லெவல்ல BGM கடுப்பேத்த ஆரம்பிச்சிருச்சி. பாட்டும் அதே மாதிரிதான். ட்யூன்  எல்லாம் நல்லாத்தான் இருக்கு, ஆனா இவன் ஏதேதோ instruments ah போட்டு காய் மூய்னு கத்தி, கெடுத்து  வச்சிட்டான். பாட்டு ஓடும்போது காதுல காய்ச்சின எண்ணைய ஊத்தி கொடாய்ஞ்சி விட்டா  மாதிரி ஒரே  கடுப்பா இருக்கு. சில நேரத்துல மேல போஸ்டர்ல தனுஷ் என்ன பண்றாரோ அதயே பண்ணனும்னு போல தோணுச்சி.

முதல் பாதி முழுதும் தம்பி, காதலி, அம்மா அப்பான்னு வீட்டை சுத்தியே செம்ம காமெடியா படம்  நகர்ந்துகிட்டு இருக்க, இரண்டாவது பாதியில கதைக்களமே அப்படியே மாறுது. கொஞ்சம் சீரியஸா.. வில்லனா ஒரு சின்னப் பையன் நம்ம ஆர்யா மாதிரி "என்னே பாஸ்.. எப்டி இருக்கீங்கே பாஸ்"ன்னு கொழ கொழ தமிழ் பேசிக்கிட்டு வர்றான். ஆனா கடைசி வரைக்கும் தனுஷ் அவன ஒரு வில்லனாவே மதிக்காம  இருக்கதுதான் படத்துலயே ஹைலைட். அதுவும் க்ளைமாக்ஸ்ல "தம்பி உனக்கும் எனக்கும் எதாவது  ப்ரச்சனையா?" ன்னு தனுஷ் கேக்கவும் அதுக்கு அந்தப் பையன் பம்புறதும் அல்டிமேட் காமெடி. ரெண்டாவது  பாதியில காமெடிப் பொறுப்ப விவேக் எடுத்துகிட்டு செம்மையாவே செஞ்சிருக்காரு.

ரெண்டாவது பாதில "இவன் வேற மாதிரி" பட ஹீரோயினும் இருக்கு. அதப் பாத்தப்புறம் "அடப் பாவிகளா இந்தப் புள்ளைய மொதல்லையே எறக்கிருக்கலாமேடா,.,. அமலாப் பால் மூஞ்சிய பாக்குறத கொஞ்சம் கம்மி பண்ணிருக்கலாம். நல்ல வேளை தெலுங்குப் பட பாணியில கடைசியில ரெண்டு ஹீரோயினோட தனுஷ் ஆடுற மாதிரி எதும் குத்துப் பாட்டெல்லாம் வக்கல.

என்னதான் படம் கொஞ்சம் கூட போர் அடிக்கலன்னாலும் அங்கங்க சில சில லாஜிக் சொதப்பல்கள், சில  சினிமாத்தனமான காட்சிகளை தவிர்க்க முடியவே இல்லை. அதுவும் கால் செண்டர்ல முதல் மாசத்துல 50000 ரூபாய்க்கு வேலைக்கு சேர்றாரு. கன்ஸ்டரக்ஷன் கம்பெனில வேலைக்கு சேர்ந்த ஆறே மாசத்துல 200 கோடி ப்ராஜெக்ட தனுஷும் விவேக்கும் கொண்ட இரண்டு நபர் குழுவே handle பண்ணுது. நல்லா யோசிச்சி பாருங்க மக்களே இங்க  எவனாவது நம்மள ஒரு 20 லட்சரூபா ப்ராஜெக்டுக்காகவாது own ah decision எடுக்க விடுவாய்ங்களா? அதவிட பெரிய கடுப்பு VIP facebook க்ரூப்புல இவரு போஸ்ட போட்ட உடனே பஸ்ஸு,லாரின்னு ஷங்கர் படத்துல வர்றது மாதிரி ஆளுங்க வந்து குவியிறாங்க. கொஞ்சம் யோசிங்க உண்மையிலயே அதுமாதிரி ஒருத்தன் போட்டா என்ன  பண்ணுவோம்? குரூப்புல இருக்க பாவத்துக்கு கழுதைக்கு ஒரு லைக்க போட்டு விட்டுட்டு பொத்துனாப்புல வீட்டுக்குள்ளயே உக்காந்துக்குவோம். 

பாடல்கள் எடுத்த விதமும் சரி, stunt um சரி... நல்லாவே இருக்கு.  இந்த ஆல்பத்துலயே எனக்கு  ரொம்ப புடிச்ச் பாட்டு "போ இன்று நீயாக" தான். ஆனா அந்தப் பாட்டு பிக்சரைசேஷன் செம சொதப்பல். அது  மட்டும் படத்தோட தரத்துல இல்லாம, தனியாத் தெரியிது. சூப்பர் BGM ம்மோட D25 ன்னு ஆரம்பத்துல வர்ற ஸ்லைடும், வேலையில்லா பட்டதாரி டைட்டில் கார்டும் சூப்பரா பண்ணிருக்காங்க. அதுக்கும் மேல டைட்டில்ல "பாடல்கள் - "poetu" தனுஷ்" ன்னு போடுறது அல்டிமேட்

தனுஷ சைடு ஆங்கிள்ல பாத்தா மொத்த அகலமே ஒரு 30 செண்டி மீட்டர்தான் இருப்பாரு போலருக்கு.  பழைய 7up விளம்பரத்துல வர்ற குச்சி பொம்மை மாதிரி தான் இருக்காரு. அதுவும் அவரோட ஸ்பெஷல்  பைக்க மூஞ்ச பரிதாபமா வச்சிகிட்டு ஓட்டிகிட்டு வரும்போது, சிரிப்பும் வருது பாவமாவும் இருக்கு.  ஒவ்வொரு ரியாக்ஷன்லயும் செம variation. கோவப்படுப்போதும் சரி, பாவமா இருக்கும்போதும் சரி, காமெடி  பண்ணும் போதும் சரி நிறைய இடத்துல தனுஷ் ரூபத்துல சூப்பர் ஸ்டாரே தெரியிறாரு. குறிப்பா சும்மா படுத்துருக்க தனுஷ் ரவுசுக்காக தம்பிய கூப்டு "டேய் ஃபேனப் போடுறா" ன்னு சொல்ற சீன்லயும், அமுல்  பேபி சீன்லயும், ஏன் க்ளைமாக்ஸ் ஃபைட்டுல கூட அதே சாயல்.  இதுல நோட் பண்ண வேண்டிய விஷயம்  என்னன்னா 'அமுல் பேபி" சீனத் தவற வேற எந்த இடத்துலயும் தனுஷ் தலைவர imitate பண்ண முயற்சி  செய்யவே இல்ல. இயல்பாவே அவருக்கு அந்த லுக்கு வருது. 

சூப்பர் ஸ்டார்ங்குற பட்டத்த எவன் வேணாலும் எவண்டயாது காச குடுத்து வாங்கி போட்டுக்கலாம். ஆனா  அதுக்கு பின்னால இருக்க ரஜினிங்குற பேருக்கான  இடத்தை பிடிக்க யாராலையும் முடியாது. ஏன்னா அது  ஒரு சிலருக்கு பிடிச்சமாதிரி படங்களைக் கொடுக்குறதால கிடைக்கிறது இல்லை. சின்ன பசங்கல்லருந்து  பெரிய ஆளுங்க வரை அனைவருக்கும் பிடிச்ச படங்களை கொடுத்தா மட்டுமே முடியும். நகைச்சுவை  ஆக்சன், காமெடி, செண்டிமெண்ட்டுன்னு எல்லாமே செய்க்கூடிய ஒருத்தரால தான் முடியும். இதுவரை சூப்பர் ஸ்டார்  இடத்துக்கு ஆசைப்பட்ட ஆளுங்கள கொஞ்சம் பாருங்க. முதல் மூணு நாள் பாக்குற ரசிகர்களோட  சப்போர்ட்ல மட்டுமே வாழ்ந்து கொண்டிருக்கவங்க. ஒருத்தருக்கு செண்டிமெண்ட்டும் வராது. காமெடியும்   வராது. இன்னொருத்தர் எதப் பண்ணாலும் காமெடியாத்தான் இருக்கும்.  (யார் யார சொல்றேன்னு நீங்களே  புரிஞ்சிக்குங்க)

இப்படிப்பட்டவிங்க போட்டி போட்டுகிட்டு இருக்குற  இங்க, ஓரளவு இலக்கை நோக்கி சரியான பாதையில  போய்கிட்டு இருக்கவர் தனுஷ் மட்டுமே. அதுக்கு இந்த வேலையில்லா பட்டதாரி ஒரு சிறந்த உதாரணம்.  நிச்சயம் பாருங்க. இந்த வருஷத்தோட சிறந்த பொழுதுபோக்குப் படம். 

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

8 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

நன்றி நண்பரே

கரந்தை ஜெயக்குமார் said...

tha ma 1

Anonymous said...

boss, neenga sonna antha 2 perum oru fanbase , and kuripita alavu people support oda irukanga.. but dhanush oru level'ku mela scene potta athu over dose agidum.. athunalathan 8 flops koduthurukaru.. so dhanush kandippa superstar aga mudiyathu.. but he is a good actor only..

”தளிர் சுரேஷ்” said...

சுவாரஸ்யமாகவும் வித்தியாசமாகவும் இருக்கிறது விமர்சனம்! வாழ்த்துக்கள்!

scenecreator said...

இஷாந்த் சர்மா பல காலத்திற்கு பின் திடீர்னு சூப்பரா ஒரு மேட்சுல போட்டா மாதிரி 8 சொதப்பல் படங்கள் தந்து இப்போதான் ஸ்வாசிக்க ஆரம்பித்து இருக்கார்.அதிலும் கடைசியாக வந்த மரியான்,நையாண்டி எல்லாம் எந்த அளவு பிளாப்ன்னு தெரியும்.இதில் சூப்பர் ஸ்டார் in making .நீங்கள் குறிப்பிட்டு உள்ள 2 ஹீரோக்களில் ஒருவர் சிறியவர்கள் முதல் பெரியவர் வரை பிடித்த ஹீரோவாக இருக்கிறார்.இன்னொருவர் இளைஞர்களின் விருப்ப நாயகராக இருக்கிறார்.உங்களுக்கு பிடிக்க வில்லை அவ்வளதான்

முத்துசிவா said...

//boss, neenga sonna antha 2 perum oru fanbase , and kuripita alavu people support oda irukanga.. but dhanush oru level'ku mela scene potta athu over dose agidum.. athunalathan 8 flops koduthurukaru.. so dhanush kandippa superstar aga mudiyathu.. but he is a good actor only..//


@scene creator
//இஷாந்த் சர்மா பல காலத்திற்கு பின் திடீர்னு சூப்பரா ஒரு மேட்சுல போட்டா மாதிரி 8 சொதப்பல் படங்கள் தந்து இப்போதான் ஸ்வாசிக்க ஆரம்பித்து இருக்கார்.அதிலும் கடைசியாக வந்த மரியான்,நையாண்டி எல்லாம் எந்த அளவு பிளாப்ன்னு தெரியும்.இதில் சூப்பர் ஸ்டார் in making .நீங்கள் குறிப்பிட்டு உள்ள 2 ஹீரோக்களில் ஒருவர் சிறியவர்கள் முதல் பெரியவர் வரை பிடித்த ஹீரோவாக இருக்கிறார்.இன்னொருவர் இளைஞர்களின் விருப்ப நாயகராக இருக்கிறார்.உங்களுக்கு பிடிக்க வில்லை அவ்வளதான்//

ரெண்டு பேருக்கும் ஃபேன் பேஸ் இருப்பது உண்மை தான். இல்லைன்னு சொல்லல. என்னைப் பொறுத்த வரை ரெண்டு பேருமே அந்த இடத்துக்கு போட்டி போட தகுதியற்றவர்கள். ஃப்ளாப் கணக்கை பத்தி நீங்க பேசுறதுன்னா அஜித்த இங்க உள்ளயே இழுக்கக் கூடாது. 54 படம் நடிச்சும் அவரோட நல்ல படங்கள்னு, ஓடுன படங்கள்னு பாத்தா இப்பவும் ஒற்றை இலக்கத்துலதான் இருக்கும். ரஜினி திடீரென சூப்பர் ஸ்டார் ஆனவர் இல்லை. திடீர்னு கேரக்டர மாத்தி நடிச்சவரும் இல்லை. வில்லனா நடிச்சப்பவும் சரி ஹீரோவா நடிச்சப்பவும் சரி ஆரம்பத்துலருந்து அவர்கிட்ட அந்த ஸ்டைலும் கெத்தும் அப்படியே தான் இருந்துச்சி. ஆனா விஜய்ய எடுத்துக்குங்க.. திருமலை படத்துக்கு முன்னால அவர் யாரு.. அவரோட படங்கள் எப்படி இருந்துச்சி? சங்கவி கூட படம் நடிச்சிகிட்டு அப்பாஸ், அருண் விஜய் மாதிரி லவ் படங்களை பண்ணிகிட்டு பழம் மாதிரி திரிஞ்சவருக்கு ரெண்டு ஆக்சன் படம் பண்ண உடனே ரஜினிவே மாறிட்ட ஃபீல் வந்துருச்சி.

30 வயசுல தனுஷ்கிட்ட இருக்க அந்த கெத்தும், பாடி லாங்வேஜ்ஜும் இப்ப கூட அஜித்கிட்டயும் விஜய் கிட்டயும் இல்லை. நீங்க சொன்ன மாதிரி விஜய் எல்லாருக்கும் பிடிச்ச ஹீரோவ ஒரு ரெண்டு மூணு வருஷம் இருந்தாரு. ஆனா அடுத்தடுத்த படங்களில் அவரின் அதிகப்பிரசங்கித் தனமான பேச்சுக்களாலயும் ஓவர் பில்டப்புகளாலயும் நிறைய பேரால இன்று வெறுக்கவே படுகிறார். ஆனால் அஜித் இன்னும் மோசம். இளைஞர்கள் சப்போர்ட் தவிற வேற எதுவுமே அவருக்கு இல்லை. அவர் அவ்வளவு reliable um இல்லை.

தனுஷுக்கு ஃபேன் பேஸ் இல்லைன்னு நினைக்கிறீங்களா? மேற்கூறியவங்களுக்கு இருக்கது போல் அடிச்சிக்கிற அளவு ஃபேன்ஸ் இல்லை. ஆனா அவர ரசிக்கிறதுக்கு பல ஃபேன்ஸ் இருக்காங்க. குறிப்பா தாய்க்குலத்தோட ஆதரவு மற்றவர்களை விட தனுஷுக்கே அதிகம். ஆடுகளம் படத்தை தியேட்டர்ல பாத்தப்போ, அவருக்கு கிடைச்ச வரவேற்ப பாத்தப்புறம் தான் இவர் பெரிய லெவல்ல வருவார்னு என்னோட போலீஸ் மூளை சொன்னிச்சி. இப்போ VIP பாத்தப்புறமும் அதேயே தான் சொல்லுது. பாக்கலாம். இவங்களோட வயசு வரும்போது தனுஷ் இவங்க இப்போ இருக்கத விட பல மடங்கு உயரத்துக்கு போக வாய்ப்புகள் நிறையவே உள்ளது.

Anonymous said...

சும்மா நச்சுன்னு இருக்குப்பா தனுஷ் படம்ன எல்லோரும் பார்த்து enjoy பண்ணலாம் மறுபடியும் ஒரு முறை நிருபிச்சுட்டார்

ram said...

Danush is good. .

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...