Friday, October 24, 2014

கத்தி - கர கர கர!!!


Share/Bookmark
டைரக்டர் முருகதாஸ் எவ்வளவு ப்ரில்லியண்ட்டுன்னு எனக்கு இன்னிக்கு தான் புரிஞ்சிது.  ஒரு படத்துல வடிவேலு எல்லாரயும் கடவுளைக் காமிக்கிறேன்னு சொல்லி ஒரு மலைக்கு அழைச்சிட்டு போயி “அங்க  பாருங்க கடவுள் தெரியிறாரு.. அங்க பாருங்க கடவுள் தெரியிறாரு”ன்னு சொன்ன உடனே எல்லாரும் திருதிருன்னு முழிப்பாய்ங்க. உடனே “அடப்பாவிகளா தப்பு பண்ணீட்டீங்கடா... யார் யார் மனைவியெல்லாம் பத்தினியோ அவங்க கண்ணுக்கு மட்டும்தாண்டா கடவுள் தெரிவாரு”ன்னு சொன்னதும் எங்க நம்ம  மனைவிகளையெல்லம் தப்பா பேசிருவாய்ங்களோன்னு எல்லாரும் “ஆ.. அதோ கடவுள் தெரியிறாரு”ன்னு கையெடுத்து கும்புடுவாய்ங்க. அந்த ஒரு ஃபார்முலாவத்தான் முருகதாஸ் ஸ்ட்ராங்க புடிச்சிருக்காரு. விவசாயிகளோட கஷ்டத்த படம் எடுத்துருக்காங்க.. எங்க இந்தப் படத்த நல்லா இல்லைன்னு சொன்னா நம்மள தேசத் துரோகிகள் லிஸ்டுல சேத்துருவாய்ங்களேன்னு அனைத்து பயலுகளும் அள்ளித் தெளிக்கிறாய்ங்க.

சில படங்களோட க்ளைமாக்ஸ் கொஞ்சம் ட்விஸ்டாவோ இல்லை ரொம்ப சஸ்பென்ஸாவோ இருக்கும் போது அவங்க டைட்டில் ஸ்லைடுலயே ஒண்ணு போடுவாய்ங்க... “இந்த படத்தின் க்ளைமாக்ஸை யாரிடமும் சொல்ல வேண்டாம்”ன்னு. அதே மாதிரி தான் நேத்தும் கத்தி படத்துல   “யார் கேட்டாலும் இந்தப் படம் சூப்பர்ன்னு சொல்லுங்க.. அடிச்சி கேப்பாய்ங்க அப்பவும் சூப்பர்ன்னே சொல்லுங்க”ன்னு ஸ்லைடு போட்டுருப்பாய்ங்க போல. ஏம்பா நீங்க குடுத்த பில்டப்புக்கும் அந்தப் படத்துக்கும் எதாவது சம்பந்தம் இருக்காடா? இதானாப்பா உங்க சூப்பரு டக்கரு குக்கரெல்லாம்? இதுல கொடுமை என்னனனா இத சொன்னது முக்காவாசிப் பேரு அஜித் ஃபேன்ஸூ.

படம் ஆரம்பித்த நாள்லருந்தே கலவரம். லைகா ராஜபக்சேவுடன் நெருங்கிய தொடர்புடைய கம்பெனி. அதனால் அவர்கள் ப்ரோடியூஸ் பண்ண நாங்க அனுமதிக்க மாட்டோம்னு எதோ தமிழினத்தோட எதிர்ப்ப காட்டுறதா நெனைச்சி போராட்டம் நடத்துன மாணவர் அமைப்புகள் தான் உண்மையிலேயே தமிழினத்துக்கு எதிராக செயல்பட்ட குழுக்கள். தெரியாமத்தான் கேக்குறேன். லைக்கா யார வச்சி படம் எடுக்குறாய்ங்க? நம்ம விஜய்ய வச்சி. இத விட லைக்காவ ஒழிக்கிறதுக்கு எதாவது வாய்ப்பு நமக்கு கிடைக்குமா? சன்பிக்சர்ஸயே அலற வச்சவரு நம்மாளு. ஒண்ணு என்னா ஒரு நாலஞ்சி படங்கள வேணாலும் எடுங்கன்னு லைக்காவுக்கு வாய்ப்பு குடுக்குறத விட்டுட்டு, படம் எடுக்கக்கூடாதுன்னு லைக்காவ காப்பாத்த போரட்டம் நடத்திய மாணவர்களுக்கு என்னுடைய கடுமையான கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இப்ப படத்துக்கு வருவோம். அஞ்சான் படத்த கதறக் கதற ஓட்டுன வாயால இந்தப் படத்த சூப்பர்ன்னு சொல்ல சிலருக்கு எப்புடி மனசு வருதுன்னே தெரியல. கிட்டத்தட்ட அஞ்சானுக்கு டஃப் ஃபைட் குடுக்குற அளவுக்கான படம் இது.  ஒரு மாஸ் ஹீரோவோட டபுள் ஆக்சன் படம் எப்புடி இருக்கனும்? நீங்க கருத்து சொல்றது விழிப்புணர்வ ஏற்படுத்துற தெல்லாம் இருக்கட்டும். ஆனா அத ஒரு படம் வழியா சொல்லும் போது அது படம்ங்குற ஒரு குறைஞ்ச பட்ச மரியாதையாவது கொடுத்து எடுக்கனும். அப்படி எந்த ஒரு மரியாதையும் குடுக்காம எடுக்கப்பட்ட ஒரு படமே இந்த கத்தி.

வழக்கமா தமிழ்சினிமாவுல சில காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தே ஆகனும். அதாவது ஹீரோவோட இண்ட்ரோ, இரண்டு ஹீரோக்கள்ன்னா அவங்க சந்திக்கிற சிட்சுவேஷன் அதுக்கு உண்டான பில்ட் அப் எல்லாமே நல்லா பன்னணும். இவையெல்லம் க்ளீஷே காட்சிகளாக இருந்தா கூட இந்த காட்சிகள் ரொம்ப முக்கியம். அப்படி அந்த காட்சிகளுக்கு முக்கியத்துவம் இல்லைன்னா அதவிட பவர்ஃபுல்லான விஷயங்களை வரும் காட்சிகள்ல சொருகி அந்த முக்கியத்துவத்த கொண்டு வரனும். ரொம்ப சாதாரணமா ஆரம்பிக்கிற படம் எந்த இடத்திலுமே நம்மை கொஞ்சம் கூட உள்ள இழுக்கவே இல்லை.

அதுவும் கதிரேசனா வர்ற விஜய் காமெடிங்குற பேர்ல ஒரு பாடி லாங்குவேஜ் யூஸ் பண்றாரு பாருங்க... எழுந்து ஓடிரலாம் போல இருந்துச்சி. அதுவும் சமந்தா விஜய் காதல் காட்சிங்கள்ளாம் அப்பாப்பா.. அஞ்சான் பரவால்ல. சரி இன்னொரு விஜய் இருக்காரு.. எதாவது பண்ணுவாறுன்னு பாத்தா, அவரோட ஃப்ளாஷ்பேக்ல அத்திப்பட்டி கதையை லொக்கேசன் மட்டும் மாத்தி எடுத்துருக்காய்ங்க. அங்க சுப்ரமணி சுவர் கட்டிக்குடுக்க கிராம மக்களோட கலெக்டர் ஆஃபீஸுக்கு போய் நின்னா, இங்க ஜீவானந்தம் இடத்த காப்பாத்துறதுக்காக போய் நிக்கிறாரு. அவ்வளவு தான்.

விவசாயிகளோட ப்ரச்சனைங்குற சென்சிட்டிவான விஷயத்த கருவா வச்சிக்கிட்டு அத வச்சே மற்ற எல்லா குறைகளையும் மறைக்க பாத்துருக்காரு கிட்டத்தட்ட அதுல வெற்றியும் அடைஞ்சிட்டாரு. பாத்தீங்களா படம் பாத்த ஒருத்தன் கூட இதுவரைக்கும் இந்த மொக்கை படத்த சுமார்ன்னு கூட சொல்லாம சூப்பர்ன்னு மட்டுமே  சொல்றாங்கன்னா பாத்துக்குங்க. பூஜை படத்துல எதுக்குய்யா சத்யராஜ் இருக்காருன்னு கேட்ட பயலுக இதுல எதுக்குய்யா இன்னொரு விஜய்ன்னு கேளுங்க? ரெண்டு விஜய்ய போட்டு கல்கத்தா ஜெயிலு, அங்க ஒரு வில்லன்னு சம்பந்தமே இல்லாம அருத்ததுக்கு ஒரு விஜய்ய வச்சே இன்னும் நல்லா எதாவது யோசிச்சி எடுத்துருக்கலாம்.

அதுவும் கத்தி என்கிற கதிரேசன் ஒரு வில்லாதி வில்லன். ப்ளான் போட்டாருன்னா அப்ப்பப்பா... ஒரு பய கெடையாது. முதல் காட்சில ஜெயில்லருந்து தப்பிக்க 2D drawing ah டேபிள்ள வச்சி 3D la இமாஜின் பண்ணி எதோ பண்ணுவாரு ஓக்கே. ஆனா சென்னைக்கு தண்ணிய தடுக்க சென்னையோட blue print வாங்கி அத வச்சி பண்ணுவாரு பாருங்க ஒரு காமெடி. டேபிள் மேல சென்னையோட blue print ah அவச்சி டேபிளுக்கு கீழ குனிஞ்சி பாப்பாரு ஒரு  நாலஞ்சி பைப்பு தெரியும். அதாவது underground la பாக்குறாராம். டேபிள் மேல படத்த வச்சி டேபிளுக்கு கீழ குனிஞ்சி பாத்தவன் ஒலகத்துலயே நீ ஒருத்தன்தான்யா.

அதுகூட பரவால்ல. அந்த imagination முடிச்சிட்டு ஒரு ரிசல்ட் சொல்லுவாரு பாருங்க.  சென்னைக்கு மொத்தம் நாலு ஏரிலருந்து தண்ணி சப்ளை ஆகுது, புழல் ஏரி, சோழாவரம் ஏரி, அந்த ஏரி இந்த ஏரின்னு. டேய் மொன்னை சென்னைக்கு எந்த ஏரிலருந்து தண்ணி வருதுன்னு பக்கத்துல இருக்கவண்ட கேட்டலேதான் சொல்லிருப்பானேடா. இதுல blue print பாத்து அதுல இமேஜினேஷன் வேற பண்ணி, அதுக்கு ஒரு தனி BGM வேற போட்டு எந்த ஏரின்னு கண்டுபுடிக்கிறியாப்பா. அதுவும் ஒரு நாள் தண்ணி வரலன்னதும் ஆகும் பாருங்க ஒரு கலவரம். ஏம்பா குழாய் தண்ணிய தடுத்துட்டீங்க. போர் இருக்கவன் வீட்டு மோட்டர்லயெல்லாம் என்ன மண்ணை அள்ளியா போட்டீங்க. ஆனா இதக் கூட பரவால்ல அடுக்கு மாடி குடியிருப்புகளில்னு நியூஸ்ல சொல்லி கொஞ்சம் தப்பிச்சிருவாய்ங்க.

நா படம் பாக்குறதுக்கு முன்னால படம் பாத்த என் நண்பன் ஒருத்தன்கிட்ட படம் எப்டி மச்சி இருக்குன்னு கேட்டேன். படம் எப்டி இருக்குங்குறத தவற  ”காமெடி இல்லை மச்சி, ஸ்லோவா இருக்கு மச்சி, விழிப்புணர்வு படம் மச்சி”ன்னு மத்த விஷயங்கள் நிறையா சொன்னான். அதயும் விட அனைத்து வெப்சைட்டுலயும் 3.5, 4ன்னு மார்க்க அள்ளித் தெளிச்சிருந்தாய்ங்க. சரி படம் சூப்பர்தான் போலன்னு போய்தான் இந்த கதி. இண்டர்வல் முடிஞ்சப்புறம் அவனுக்கு msg பண்ணி “டேய் என்னடா இப்புடி இருக்கு”ன்னேன். அவன் சுனா பானா காமெடில வர்ற மாதிரி “விஷம் குடிச்சா அப்டித் தாண்ணே இருக்கும்” 
ன்னான். வக்காளி டேய்... நண்பர்களே அவன் பேரு கார்த்தி. அவன எங்க பாத்தாலும் ஸ்பாட்லயே காலி பண்ணுங்க. எவ்வளவு செலவானாலும் கேஸ நா நடத்துறேன்.

தூள் படத்துலருந்து இன்னொரு சின்ன காட்சியையும் உங்களுக்கு ஞாபாகப்படுத்த விரும்புறேன். அமைச்சர் காளைப்பாண்டியா வர்ற ஷாயாஜி ஷிண்டே அவரப் பதவிய விட்டுத் தூக்கப் போறாங்கன்ன உடனே மக்கள் ஆதரவ திரட்ட “நதி நீர் வேண்டி உண்ணாவிரதம்”ன்னு ஒரு டெண்ட போடுவாறு. இதப்பாத்த மற்ற தலைவரகள் “யோவ் என்னைய்யா இது இவன் இப்டி பண்றான். உண்ணாவிரதத்துக்கு போகலன்னா நம்ம பேர டேமேஜ் பண்ணிருவான் போல”ன்னு எல்லாரும் வந்து கலந்துக்குவாங்க. அதே மாதிரி தான் நம்ம பத்திரிக்கை ஊடகங்கள் இங்க பண்ணிருக்காங்க. விவசாயிங்க ப்ரச்சனைப்பா.. நாம எதாவது சொல்லி நம்மள பொளந்துட போறாய்ன்க்கன்னு “கத்தி பளபளக்குது” “கத்தி கூர்மையா இருக்கு” “கத்தி குறி தவறாம பாயும்”ன்னு அடிச்சி விடுறாங்க. ஆனா கத்தி கரகரவென உங்க கழுத்தை அறுக்கும் என்பது தான் நிஜமான உண்மை, உன்மையன truth.  

படத்தோட இரண்டாவது பாதியில விஜய்ட்ட வந்து நாலு பெரியவங்க “தம்பி மீடியா கவனத்த நம்ம பக்கம் இழுக்கு நாங்க வேனும்னா கழுத்த அறுத்து தற்கொலை பண்ணிக்கட்டுமா”ன்னு கேப்பாங்க. அப்போ உடனே எனக்கு “சார் நாங்க வேணும்னா ஒரு நாலு பேர் கழுத்த  கரகரன்னு அறுத்துக்குறோம்.. இனிமே இதுமாதிரியெல்லாம் பண்ணாம இருக்கீங்களா?”ன்னு விஜய்ய பாத்து  கேக்கனும்னு தோணுச்சி.

இந்தப் படத்த சூப்பர் ஹீரோ படமா எடுக்குறதா இல்லை சேரன் படங்களைப் போல ரியாலிட்டியான காட்சிகளை வச்சி சாதாரண படமா எடுக்குறதான்னு நிறைய கன்ஃபியூஷன் இருந்திருக்கும் போல. ரெண்டு மாதிரியாவும் எடுக்காம, நட்டக்க நடுவுல நிக்கிது. ஜீவானந்தம் வர்றப்போ எவ்வளவு ரியலா இருக்கோ, கதிரேசன் வரும்போது அப்படியே வேற மாதிரி இருக்கு. ஜீவானந்தத்தை சண்டை போடத்தெரியாதவராவும், கதிரேசன ஆக்சன் ஹீரோவாகவும் காமிக்கிறதுல தப்பில்லை. ஆனா எடுத்துக்கிட்ட தீம கரெக்டா எதாவது ஒரு ஸ்டைல்ல ரிலேட் பண்ணி அந்த ஸ்டைல்ல காட்சிகள் வச்சிருக்கனும். ஆனா இங்க அது இல்லவே இல்லை. அதோட நிறைய காட்சிகள் குவாலிட்டியா இல்லாம நேரடியா ஷூட்டிங் பாக்குற எஃபெக்ட் இருக்கு.

ஆனா படத்தில் அவர்கள் சொல்ல வந்த விஷயம் ரொம்ப நல்ல விஷயம். விவசாயிகளோட ப்ரச்சனை, நமக்குத்தெரியாம நம்ம நீர் நில வளங்கள் எவ்வளவு கொள்ளை அடிக்கப்படுதுங்குற விஷயங்கள் கண்டிப்பா மக்களுக்கு தெரியப்படுத்தப்பட வேண்டியவையே. கடைசியில் விஜய் பேசும் ஒரு 10 நிமிட வசனம் மட்டுமே படத்துல வந்த ஒரு நல்ல காட்சின்னு சொல்லலாம். முதல் பாதியில விவசாயிகள் மொத்தமாக தற்கொலை செய்து கொள்ளும் காட்சி டக்குன்னு நமக்குள்ள ஒரு பாதிப்ப ஏற்படுத்துது. நல்ல விஷயத்தை சொல்லியிருக்காங்க என்பது வேறு. நல்ல படம் என்பது வேறு. நிச்சயமாக கத்தியில் நல்ல விழிப்புணர்வு கருத்துக்களை சொல்லியிருக்காங்க. ஆனா அதைவிட நிச்சயம் கத்தி ஒரு நல்ல படமில்லை என்பதும்.

உங்களுக்கு விஜய்யை புடிக்காது. அதனால்தான் இப்டி சொல்றீங்க. வேணும்னே படம் நல்லா இல்லைன்னு சொல்றீங்கன்னு நண்பர்கள் சிலர் நிச்சயம் வருவீங்க. எனக்கு அஜித்தும் விஜய்யும் ஒண்ணுதான். யார் நல்ல படம் நடிச்சாலும் நல்லாருக்குன்னு சொல்றதுக்கும் நா தயங்குனதில்லை மொக்கை படங்களை நல்லா இல்லைன்னு சொல்றதுக்கும் தயங்கியதில்லை. படம் பார்த்த நீங்களே உங்களை கேட்டுப்பாருங்க உண்மை என்னன்னு புரியும்.

நல்ல விழிப்புணர்வு கருத்துக்களை தாங்கி வந்தாலும் ஒரு திரைப்படமாக கத்தி நம் கழுத்தை கரகரவென அறுப்பதே உண்மை.


பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

31 comments:

beergani said...

Mr. Arivaali directer maathiri ivvalau idea thareengale peesaama ningalae film direct panna vendiyathu thaane!!!!!!

முத்துசிவா said...

ஹோட்டல்ல சாப்டு, சாப்பாடு நல்லா இல்லைன்னு சொல்றவன, நீ வேணா ஹோட்டல் ஒண்ணு ஆரம்பின்னு சொல்றமாதிரி இருக்குண்ணே... உலக அறிவாளி நீங்க.. ஆனா இந்த மாதிரி வேலை செய்றவங்கல்லாம் இப்புடித்தான் இருப்பாங்க.

beergani said...

Mr.Arivaali, unga review totallaa unga poraamaiya kaanpikkuthu boss..unga super star SIVAJI film ku inth film evvalavo better better better White money block money kkum shreya kooda um nayanthaara kudavum ethukku boss DUIET???

beergani said...

முதலில் யோசிக்கனும்.. பிறகு நேசிக்கனும்.. மனசு ஏத்துகிட்டா சேத்துகிட்டு வாழு..Unga Star sonnathu thaan itha viitu naama aytho diffrenta solromnu korai solla koodaathu boss..

முத்துசிவா said...

// SIVAJI film ku inth film evvalavo better better better White money block money kkum shreya kooda um nayanthaara kudavum ethukku boss DUIET???//

ஹாஹா... இதுக்கு பேரு தான் பாஸூ பொறாமை..

முத்துசிவா said...

//itha viitu naama aytho diffrenta solromnu korai solla koodaathu boss..// அய்யோ நாம different ah சொல்லிடக்கூடாதேன்னு என்னுடைய கருத்துக்களை காம்ப்ரமைஸ் பன்றவன் நா இல்லை கன்னா...

beergani said...

100% la 70% nammala thiripthi patudunaale pothum atha intha film correctta senchuruchu athu pothum oru 120Rs kku evvalavu wortho avvalau thaan boss kodukka mudiyum 120 rs kotuthu film paarthu 10,000 rs kku padam kaami sonnaaa eppadi bosss!!!

beergani said...

naanum super star fan thaan boss first day first show paarpavan thaan enakku ayen super star mela poaraamai antha alavvukku naan periya aaaal illa boss

beergani said...

any way thanks for ur replay boyyyy.

beergani said...

naan unka alauvukku reviewr illa saathrana rasikan en manasula pattatha sonnen sorry boss...

Sivakasikaran said...

//unga super star SIVAJI film ku inth film evvalavo better better better// ஹா ஹா.. எங்க இருந்து பாஸ் இப்படியெல்லாம் தோனுது உங்களுக்கு? உங்க அட்ரெஸ் குடுங்களேன் வந்து ட்யூசன் கத்துக்கிறேன்.. கத்தி, நல்லாத்தான் இருக்கு.. ஆனா உங்கள மாதிரி தான் தியேட்டர்லயும் 4,5 பேர் வருங்கால சூப்பர் ஸ்டார்னு கத்துறாய்ங்க.. மொத தலைவர் கூட கம்பேர் பண்ணுறத நிறுத்துங்க.. அவர் அவர் தான்.. உங்க அணில் அணில் தான்..

Thulasidharan V Thillaiakathu said...

அப்படியா என்ன? கத்தி கழுத்துல இறக்குது கத்தி ங்கற மாத்ரிதானே எல்லாரும் சொல்லறாங்க! சூப்பர்னு வேற சொல்றாங்களா என்ன?..

beergani said...

vanakkam Mr.ramkumar,
super star kooda naan ayenga compare panren!! super star already won the cup but
intha vijayaalayum antha cup pa vaankura sports la play panna mudiyum nu thaan solren...

Anonymous said...

As you said it has good message.. If he would have directed only with that message,no one would have seen that movie.. You are a big fan of commercial movies. you need only entertainment.. if you would have expected those type of movies this movie s not for you.

முத்துசிவா said...

// You are a big fan of commercial movies. you need only entertainment..//

what is cinema bro? why cinema? I need only entertainment. accepted. what u need? message or advice? all are need entertainment from cinema. whatever they want to convey should be in a proper way and it should entertain us doesn't matter whether it creates happiness or sadness.

//if you would have expected those type of movies. this movie s not for you //

Accepted. This is not a movie for me. I am expecting good movies and this is not.



Anonymous said...

Ha ha.. I assume that definition of good movie for u is "you should like that". Could be right.. Many people said its good movie as most of them like it.. so people decided its good movie.. So you can say that u don't like these type of movies or this movie.. can't say its not a good movie..

Anonymous said...

நடித்து காசு வாங்கிக்கொண்டு போவதோடு நிறுத்திக் கொள்ளலாம்.அதை விட்டு என்னவோ நாட்டுக்குக்காக உயிரை கொடுப்பது போல் இயக்குனரும் நடிகரும் கொடுக்கும் பில்டப்பும் அதை நம்பி அலைமோதும் மக்கக் கூட்டமும் .நம் மக்கள் திருந்தவே மாட்டார்களா .இவருக்கு எதற்கு முதல்வர் ஆசை. உண்மையாகவே தமிழ் மக்கள் மேல் அவ்வளவு பாசமா.

முத்துசிவா said...



//Ha ha.. I assume that definition of good movie for u is "you should like that"//

rather we can say "if it is a good movie I'll like it" :-)

epdivo vidunga... ovvorutharukkum ovvoru peeling

Alex said...

Super Siva if i am write a review for this flim it should same as u i am think only this because first half not good. in the second half they manage some but failed to win.
Concept is good but screenplay?
After thooppakki i did not imagine this movie from this combo

Anonymous said...

Stopping with this.. :-) just to remind you while writing review you just wants to mention the negative things wats in ur mind before u forget , though those are not actually negative(ur view) you did not mention about songs BGM villian.. Usually u will mention these things.. "Its a good movie so I like it" . dot

முத்துசிவா said...

Yes... thought of mentioning few more scenes (after kathi kuthu in stomach kathiresan will come back with a small bandage in head), about samantha and about music. Actually I had to finish this review in a short time and also i realize the length of the article exceeded little bit. thats y left those parts. :-)

vimal said...

i never agree with this review. It is a superb film.

vimal said...

kurai solrathukagave porandhavanda nee.

முத்துசிவா said...

@vimal

//kurai solrathukagave porandhavanda nee.//

குறை சொல்றதுக்கு முதல்ல குறை என்னன்னு தெரியனும் பாஸூ...

Hari said...

Sariyana vimarsanam neenga dhan panni irukeenga sir. Padatthil Sila karutthukal nalla irundhalum padam mulusa parkum podhu interesting ah illa enbadhe unmai. Idhe madhiri dhan jilla veeram padathukum yarume nalla ilanu sollave illa. Ellarum hit hit nu sonnanga. Andha 2 padamume ulaga maha mokkaigal. Andha 2 padattha patthi unga karutthu enna?

Rais said...

Hi bro, this is a good review and comment.

If you allow i would copy your review to www.dishtuners.com forum. Just for info. I will remark there that copy from your blog...(if you allow).

Thank you.

Alex said...

Why da manasachiya thotu sollungada intha padam mass hit nu sonna ungaluku ellam cinema arive kidaiyathuda

முத்துசிவா said...

@Rais

No issues boss!!!

nethaji said...

Good review I too agreed tat kathi is not a worthy film but message is worthy..

Anonymous said...

Siva is right. This could have been a good movie if the screenplay was made better. the confusion in the screenplay is quite evident and thus not interesting. I think double role was made to have kathiresan killed in the climax and create an impact like Ramana - favoring political endeavours. Siva has not talked about the message carried over in the movie. there are more comments on that too, in fact.

- Senthil M

மெக்னேஷ் திருமுருகன் said...

Super Review na !!

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...