Monday, January 12, 2015

தங்களுக்குத் தெரியாத சட்டம் ஒன்றும் இல்லை!!!


Share/Bookmark
ரன் படத்துல சாப்பாடு கிடைக்காம தெருத் தெருவா சுத்துற விவேக் ஏதோ ஒரு ஊர்வலத்துல புகுந்துஇந்தப் படை போதுமா? அஞ்சுரூவா தருவீங்களா?” ன்னு கொடியை புடிச்சிட்டு போவாரு. அதுக்கு நெல்லை சிவா “எலே நல்லா சத்தம் போடுலே.. 5 ரூவாய்க்காக 5 கிலோ மீட்டர் நடந்து வருதே.. உனக்கு இவ்வளவு கொழுப்பான்னு அசிங்கப்படுத்துவாரு. லிங்காவுக்கு எதிரா போராடுற ச்சீமான நினைக்கும் போது 5 ரூவாய்க்கு கொடி புடிக்கிற அந்த விவேக்தான் ஞாபகம் வருது. சோத்துக்கு இலை போட்டுருந்தா எங்கருந்தாலும் பல்ல காட்டிக்கிட்னடு கிளம்பிட வேண்டியது.

யாருய்யா நீயி? உனக்கும் இதுக்கும் என்னய்யா சம்பந்தம்? நீ கட்சின்னு ஒண்ணுல இருந்த. அத கட்சியாவே ஒருத்தன் கூட இதுவரைக்கும் மதிச்சதில்லை. ஆனா அந்த கட்சியிலருந்தே உன்ன தூக்கிட்டாய்ங்க. அதாவது கரடியே காரி துப்புனதுக்கப்புறமும் அது எப்புடி உன்னால மட்டும் அந்த மொகரையை சிரிச்சா மாதிரி வச்சிகிட்டு நாலு இடத்துக்கு போக வரமுடியிது? அதுவும் போராட்டம். அப்டியே எவனாவது கூப்டு போனா மதிய சாப்பாட்ட அவன வச்சி கரெக்ட் பண்ணிக்கலாம்னு போயிருப்ப.

சரி அத விடுங்க. வழக்கமா ஆப்புங்குறது கண்ணுக்கு தெரியாது. அது யார் யாருக்கு வச்சிருக்காங்கன்னும் தெரியாது. தெரியாம போய் ஆப்புல சிக்குறவங்க தான் அதிகம். ஆனா இங்க ஒருத்தர்  ஆப்ப தேடிப்போய் அத அவரே நல்ல கூரா செதுக்கி அப்புறம் நச்சின்னு அதுமேல அவரே உக்காந்துருக்காரு.

அவரு வேற யாரும் இல்லை. லிங்காவைப் பற்றி, படம் ரிலீஸ் ஆன நாலாவது நாள்லருந்து ஓடல ஓடலன்னு பிரச்சாரம் பண்ண, பண்ணிக்கிட்டு இருக்க மிஸ்டர் சிங்கார வேலன் அவர்கள் தான். அவரே ஒருத்தருக்கு கால் பண்ணி, அவரே அசிங்கப்பட்டு அத அவரே ரெக்கார்டு பண்ணி எல்லாத்துக்கும் அனுப்பிருக்காரு. அவர் ஃபோன் பண்ணி அசிங்கப்பட்ட அந்த ஒருத்தர் வேற யாரும் இல்லை. ஒன் இண்டியா ஷங்கர் அவர்கள் தான்.நேரமிருப்பவர்கள் தயவு செஞ்சி ஒரு 20 நிமிடம் ஒதுக்கி இந்த ஆடியோவ கேளுங்க. 5 நிமிஷம் தெளிவா பேசுற சிங்கார வேலனுக்கு அடுக்கடுக்கா கேள்விகளையும் டேட்டாக்களைகும் குடுக்க குடுக்க “த ப த ப.. தங்களுக்கு தெரியாத சட்டம் ஒன்றும் இல்லை யுவர் ஹானர்” ன்னு பம்புறத கேளுங்க.இனிமே ஒரு படம் ரிலீஸ் ஆகுறதுக்கு முன்னால அந்த படத்த நம்ம சிங்கார வேலன்கிட்ட போட்டு காமிச்சா போதும். அவர் அந்தப் படம் முதல் வாரம் எவ்வளவு கலெக்சன் குடுக்கும், மூணாவது வாரம் எவ்வளவு கலெக்சன் குடுக்கும், மூணு வருசம் கழிச்சி எவ்வளவு கலெக்சன் குடுக்கும்னு கணிச்சி சொல்லிருவாரு. ஏன்னா லிங்கா ரிலீஸான நாலாவது நாள், அவர் கணக்கு படி ஏழாவது நாள் அவர் எவ்வளவு நஷ்டம் ஆகப்போகுதுன்னு கணிச்சி தான் ப்ரச்சாரம் ஆரம்பிச்சாரம்.

இவ்வளவு கணிப்பு கணிக்கிற சிங்காரவேலன் வாழ்க்கையில முதல் முதலா டிஸ்ட்ரிபியூட் பண்ண படமே லிங்கா தானாம். அவர் கடைசியா பண்ண படமும் லிங்கா தாங்குறது வேற விஷயம்.

அவர் ஒன் இண்டியா சங்கர் அவர்கள் கிட்ட பேசிய உரையாடல்ல சில ஹைலட் உங்களுக்காக

ஷங்கர் : ஆமா இதுல சீமான் யாருங்க? வேல் முருகன் யாருங்க? டிஸ்ட்ரிபியூட்டரா

சிங்காரவேலன் : த..ப… அவர் வந்து நிறைய படம் எடுத்த டைரக்டருங்க

ஷங்கர் : ஆமா.. அவரு அப்டியே கோடிகோடியா லாபம் சம்பாதிச்சி குடுத்த பல படங்கள எடுத்தவரு.. அவரு என்ன பண்ணிக்கிட்டு இருந்தாருன்னு ஊருக்கே தெரியும். சீமான், வேல்முருகன்லாம் சினிமா நல்லா இருக்கனும்னு நினைச்சவங்களா? நீங்க ப்ரடியூசர்கிட்ட பணம் வாங்குனாகூட அவருக்கு கமிஷன் குடுக்கனும்ங்க…

சிங்காரவேலன் : இல்லைசார்.. எங்களுக்கு ஒரு துணை தேவைப்பட்டுச்சி

ஷங்கர் : என்ன துணை தேவைப்பட்டிச்சி? ஆமா ரஜினிக்கு வயசாயிருச்சி, ரஜினி ரசிகர்களுக்கு வயசாயிருச்சின்னு சொன்னீங்களே? என் பையனுக்கு பத்து வயசுங்க. அவன் நைட்டு 1 மணிக்கு சைதை ராஜ்ல மொத ஷோ பாத்தான். நீங்க எப்டிங்க அதெல்லாம் சொல்லலாம்.

சிங்காரவேலன் : (பம்பியபடி) நா வேணா அந்த வார்த்தைகள திரும்ப பெற்றுக்குறேங்க..

டேய் சொரிபுடிச்ச மொன்னை நாயே.. அய்யோ சாரி சாரி.. சிங்காரவேலன் அவர்கள், அவரை பற்றி கொச்சையாக பேசக்கூடாது என்று கூறியிருக்கிறார். அவர் கூறிய கருத்துக்களை திரும்ப பெறுறாறாம். நாமளும் அவர் மொகரையிலயே நாலு அப்பு அப்பிக்கிட்டு அப்புறம் நாம குடுத்த அடிய திரும்ப பெற்றுக்கலாம்.

இன்னும் ஏராளமான காமெடிகள் ஆடியோவில். கண்டிப்பா கேளுங்க.

ஒருபடம் ஓடலன்னு நஷ்ட ஈடு கேக்குறதே ஒரு நியாயமில்லாத செயல். அப்படி கேக்குறவங்க அவங்க லாபம் சம்பாதிச்ச படத்துக்கெல்லாம் லாபத்துல பங்க தயாரிப்பாளருக்கு அதிகமா குடுத்துருக்காய்ங்களா என்ன? சரி ரஜினி படம். அவரு குடுத்து பழக்கிட்டாரு. இவங்க வாங்கிப் பழகிட்டாங்க. ஓக்கே.  ஆனா நாலாவது நாள்லருந்து இந்தாளு பண்ற கூத்தெல்லாம் பாத்தா, யாருக்காவது நியாயமா படுதாப்பா?

கடைசியா ஒண்ணே ஒண்ணு. கடவுள் இருக்கான் குமாரு!!!


பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

5 comments:

megneash k thirumurugan said...

அண்ணே ! ஆடியோ பைல் அப்லோட் பண்ணிருக்கலாம்ல ? அட்லீஸ்ட் லிங்க்கா வது கொடுத்திருக்கலாம்

முத்துசிவா said...

லிங்க் இருக்கு

சிங்கார வேலன் காமெடிங்குற டெக்ஸ்ட்ட க்ளிக் பண்ணுங்க

Ram Kumar said...

அப்பா டைரக்ட்டரும், மகன் நடிகரும் தான் சிங்காரவேலனுக்கு பின்புலம்னு இன்னைக்கு ஃபேஸ்புக்குல ஒரு போஸ்ட் பாத்தேன்.. தக்காளி அந்த நாய்ங்க மட்டும் இத பண்ணிருந்தாய்ங்கன்னா, ப்ளடி, கைக் காசப்போட்டு அவன் படத்தை ஊத்த வைக்கணும்...

Vijay Periasamy said...

எல்லாம் ஒரு விளம்பரம் தான்

ramachandran.blogspot.com said...

சூப்பர்

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...