Sunday, October 25, 2015

நானும் ரெளடி தான் – ராவான ரவுடி!!!


Share/Bookmark
முதல் நான்கு தொடர் வெற்றிகளுக்கு அப்புறம் விஜய் சேதுபதிகிட்ட ஒரு மேடையில “உங்களுக்கு போட்டியா யார நினைக்கிறீங்க?” ன்னு கேட்டப்போ, லேசா சிரிச்சபடி “எனக்கு இப்ப போட்டின்னா அது சிவகார்த்திகேயன் தான்” ன்னு சொல்லிருந்தாரு. அதன் பிறகு சிவகார்த்திகேயன் பன்னுண படங்கள் எல்லாமே பெரிய பேனர். படங்கள் ஊத்திக்கிட்டாலும் எல்லா படத்துக்குமே பெரிய ஹீரோ படங்களைப் போல நல்ல ஓப்பனிங். ஆன அந்த டைம்ல ரிலீஸான விஜய் சேதுபதியோட படங்கள் ஏனோ தானோன்னு தான் இருந்துச்சி. பெரிய அளவுல எந்த வெற்றிப்படமும் இல்லை. வெறும் ஆவரேஜும் பிலோ ஆவேரேஜ் படங்களை மட்டுமே கொடுத்துக்கிட்டு இருந்தவரு ரொம்ப நாளுக்கப்புறம் மீண்டும் பழைய பாதையில் பயணிக்க தொடங்கிருக்காரு.

தலைவரோட ரங்கா படம் பாத்துருப்பீங்க. ஒரு திருடனும், நல்லவனும் ஒரு நாள் ஒண்ணா தங்கி, திருடனா இருக்கது நல்லதா நல்லவனா இருக்கது நல்லதான்னு மாத்தி மாத்தி பேசிக்குவாங்க. காலையில நல்லவனா இருந்த தலைவரு திருடனாகவும், திருடனா இருந்த கரேத்தே மணி நல்லவனாவும் மாறிடுவாங்க. அதே மாதிரி தான் இங்க போலீஸாகனும்னு நினைக்கிற சின்னப்பையன, ஜெயிலுக்குள்ள வர்ற ரவுடி பெயிண்டர் ராஜேந்திரன் ரவுடிங்களோட பெருமைங்கள எடுத்து சொல்லி அவன மாத்துறாரு. போலீஸாக நினைச்ச பையன் அத மறந்துட்டு ரவுடியாக ஆசப்படுறான். அவன் ரவுடியானான இல்லையா எப்படி ரவுடியானாங்குறது தான் படம்.

பார்த்திபன், ராதிகா, ஆனந்த ராஜ், RJ பாலாஜி, அழகம் பெருமாள்ன்னு படத்தில் நடிச்சிருக்க அத்தனை பேருமே பெரிய பெரிய ஆர்டிஸ்டுங்க. அதுவே படம் பாக்குறப்ப ஒரு நல்ல ஃபீல குடுக்குது. டைரக்டர ஓரளவு தப்பிக்க வைச்சதும் இந்த ஸ்டார் காஸ்டிங்குன்னு கூட சொல்லலாம்.

முதல் பாதி முழுக்க விஜய் சேதுபதி ஏற்கனவே பன்னி ஹிட்டான காமெடிங்களையே வச்சி ஓட்டிக்கிட்டு இருக்காங்க. புதுசுன்னு எதுவும் சொல்ல முடியாது. விஜய் சேதுபதி சொல்றாருங்குறதுக்காக நமக்கு சில இடங்கள்ள சிரிப்பு வருதே தவற மத்தபடி பெருசா காமெடின்னு ஒண்ணும் இல்லை. RJ பாலாஜியல்லாம் பாதி கூட யூஸ் பன்னல.

கதையோ திரைக்கதையோ ரொம்ப சுமார் ரகம் தான். அதுல நடிச்சிருக்க நடிகர்களும் ரொம்ப அலட்டிக்காம சுமார் பர்ஃபார்மன்ஸைத்தான் குடுத்துருக்காங்க. இந்த சுமார் பர்ஃபார்மன்ஸூக்கு இடையிலயும் பட்டையக் கிளப்பிருக்கது நயன்தாரா தான். ப்ப்பா.. என்னா நடிப்பு. ஒவ்வொரு படத்துலயும் அழகும் சரி நடிப்பு திறமையும் கூடிக்கிட்டே தான் போகுது. தமிழ் சினிமாவுல இந்த பத்தாண்டின் சிறந்த ”நடிகை” ன்னா அது நயன் தாரா தான். 

படத்துல இன்னொரு ரொம்ப சுமார் ரகம் வந்து கேமரா. செம கப்பி. ரொம்ப லோ க்வாலிட்டி. நிறைய இடங்கள்ல எதோ ஷார்ட் ஃபிலிம் பாக்குற ஃபீல் தான் வருது. நிறைய இடங்கள்ல கையில கேமராவ வச்சி எடுத்து ஆட்டி ஆட்டி கண்ணு வலி வரவைக்கிறாரு. காஸ்டியூமும் அப்டித்தான். விஜய் சேதுபதி ரொம்ப ஆர்டினரியா இருக்காரு. காஸுவலா இருக்கலாம். அதுக்குன்னு எல்லா சீன்லயும் காலையில ஜாக்கிங்க் போறப்ப இருக்க மாதிரி ஒரு ட்ராக்ஸும் ஒரு மொக்கை டீ ஷர்ட்டயும் போட்டுக்கிட்டா இருக்கது. அவரு ஹீரோப்பா. காஸ்டியூம் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்திருக்கலாம்.

”எங்கப்பா ஒருத்தன சுடப்போனாரு”ன்னு சொல்லிட்டு நயந்தாரா நாலஞ்சி நாளா ஜாலியா சுத்துது. அவரு என்னவோ நார்த் இண்டியாவுக்கு சுடப்போனா மாதிரி. அந்தாளு அதே ஊர்ல இருக்க ஒருத்தனத்தான் சுடப்போறாரு. அடுத்தநாளே பதறிருக்க வேணாமா? என்னம்மா நீங்க இப்டி பண்றீங்களேமா.

இதையெல்லாத்தையும் தாண்டி படம் பாத்துட்டு வர்றவங்க படம் சூப்பர்ன்னு சொல்ல வைக்கிறது கடைசி 20 நிமிடங்கள் தான். படம் ஆரம்பிச்சதுலருந்து சுமாரா பர்ஃபார்ம் பன்னிக்கிட்டு இருந்த விஜய் சேதுபதி, பார்த்திபன், ஆனந்த ராஜ் எல்லாருமே க்ளைமாக்ஸ்ல ஃபுல் ஃபார்முக்கு வந்து பட்டையக் கிளப்புறாங்க. செம காமெடி. மொட்டை ராஜேந்திரன் ஒரு 10 நிமிஷம் வந்தாலும் அவரும் சூப்பர். ராகுல்ங்குற தாத்தா செம கெத்து.

ஒரு வில்லன காமெடியா காமிக்கிறது தப்பே இல்லை. ஆனா காமெடின்னு வரும் போது அவன் கொலை பன்றதெல்லாம் கொஞ்சம் தவிர்த்திருக்கலாம். முதல் பாதில பார்த்திபன காமிக்கும்போது அவருக்கும் கேரக்டருக்கும் சம்பந்தமே இல்லாம கொஞ்சம் அதிகப் பிரசங்கித்தனம் பன்ற மாதிரி இருந்துச்சி. ஆனா  க்ளைமாக்ஸ்ல எல்லாத்தையும் ஈக்குவல் பன்னிட்டாரு.

இயக்குனர் விக்னேஷ் சிவனப் பத்தி சொல்லனும்னா, விஜய் சேதுபதி, நயன், பார்த்திபன், ஆனந்த ராஜ், RJ பாலாஜி, ராதிகான்னு அவருக்கு கிடைச்சிருக்க resources ah வச்சி அவர் கொடுத்திருக்க output பாதி கூட இல்லை. ஆனா ரொம்ப மோசம்னும் சொல்ல முடியாது. காமெடி வசனங்கள விட நயன்க்கு எழுதப்பட்ட சீரியஸான சில வசனங்கள் நல்லா இருந்துச்சி.  

அனிருத் எப்பவும்போல பின்னணி இசையில இறைச்சல குடுக்காம, ரொம்ப நல்லாவே பன்னிருக்காரு. ஃபர்ஸ்ட் ஹாஃப் ஓரளவு நல்லா போறதுக்கு அனிரூத்தும் ஒரு காரணம். தங்கம்மே உன்னத்தான் பாட்டு சூப்பர். VIP  மியூசிக்ல Wunder bar films ன்னு போடும்போதெல்லாம் தியேட்டர்ல சவுண்டு காதப் பொளக்குது. ஒரு production கம்பெனி பேருக்கு ஆடியன்ஸ் கத்துறது இதுக்கு மட்டும் தான். தனுஷுக்காக கத்துறாய்ங்களா, அனிரூத்காக கத்துறாங்களா, இல்லை VIP படம் நல்லாருந்துச்சின்னு கத்துறாய்ங்களான்னு தெரியல.


இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, சூது கவ்வும் லாம் பாத்துட்டு வரும்போது இருந்த “விஜய் சேதுபதி satisfaction” இதுல நிச்சயமா இல்லை. ஆனா ரொம்ப போர் அடிக்காம திரைக்கதைய நகர்த்தி, கடைசி 20 நிமிஷ நான் ஸ்டாப் காமெடில நம்ம மண்டையக் கழுவி படம் பாத்துட்டு வர்றவங்கள சூப்பர்னு சொல்ல வைக்கிற ஆவரேஜ் படம் தான் இந்த நானும் ரவுடி தான். 


பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

1 comment:

ROBOT said...

ரொம்ப நியாமான விமர்சனம் . படத்த பார்க்கும் போது எனக்கு இருந்த அதே கருத்துக்கள்.

ஆனா ஒன்னு தான் புரியல .. இணையத்தில் எல்லாரும் இந்த படத்த ஏன் தலைல தூக்கி வைக்குறாங்கன்னு...including gautam menon என்னமோ இந்த நூற்றாண்டின் சிறந்த நகைச்சுவை படம் என்றெல்லாம் ..


நீங்கள் சொன்னது போல சில வசனங்கள் எல்லாம் விஜய் சேதுபதி சொல்வதால் மட்டுமே கேட்க முடிகிறது அதுவும் அவ்வளவு காமெடி எல்லாம் இல்ல . உண்மையான விஜய் சேதுபதியை கிளைமாக்ஸ் காட்சியில் மட்டும் தான் பார்க்க முடிந்தது அதுவும் பார்த்திபன் உடன் போட்டி போட்டு . மற்றபடி ஒன்றும் பெரிதாக இல்லை

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...