Friday, October 7, 2016

ரெமோ – ஜாவா சுந்தரேசன்!!!!


Share/Bookmark
முதல் முதலா ”3” படத்துல அள்ளக்கைய்யா அறிமுகமான சிவா, அடுத்தடுத்து நம்ம ஜாவா சுந்தரேசன் மாதிரி முதல்ல பைக் , அடுத்து கார்ன்னு படிப்படியா முன்னேறி இப்ப ஹெலிகாப்டர் லெவல்ல வந்து நிக்கிறாரு.. அதுவும் அதிகாலை 5 மணி ஷோ போடுற அளவுக்கு. அதுவும் இந்த வளர்ச்சி எப்புடின்னா, ”தமிழ்ப் படம்” படத்துல சிவா ”அழகு”கிட்ட பொண்ணு கேக்க வருவாரு. அப்ப ”உங்கிட்ட என்ன இருக்கு”ன்னு அசிங்கப்படுத்தி சிவாவ வெளில அனுப்பிட்டு ஒரு காஃபி கொண்டு வரச் சொல்லுவாரு. வேலைக்காரம்ம்மா காஃபி கொண்டு வர்றதுக்குள்ள , சிவா ஏர்போர்ட், சிவா ரயில்வே ஸ்டேஷன்னு பெரிய லெவல்ல டெவலப்பாகி கார்ல வந்து இறங்குவாரு. அந்த மாதிரிதான் நம்மளயும் ஆச்சர்ய பட வைக்கிறாரு சிவா. நாலு வருஷத்துல இது மிகப்பெரிய வளர்ச்சி தான்.

நடிச்சது ஐஞ்சாரு படங்கள் அதுல ஹிட்டானது ரெண்டு மூணு படங்கள். இதுலயே சிவகார்த்திகேயன் படங்களுக்கு பல கோடிரூபாய் மார்க்கெட். இந்த ரெமோ கோட 80 கோடி வரை வியாபாரம் ஆகியிருப்பதாக எதோ செய்தில பார்த்தேன். ”என்பது கோடி… நீ பாத்த”ன்னு சூரி  மாதிரி நீங்க கேக்குற கேள்விகளுக்கு கம்பெனி பொறுப்பாகாது. சரி இந்த ரெமோ எப்டி இருக்குன்னு பாப்போம்.

நிச்சதார்த்தம் நடந்த ஒரு பொண்ணோட மனச மாத்தி கரெக்ட் பன்னி கல்யாணம் பன்ற கதைய 100வது முறையா எடுத்துருக்காங்க. இவய்ங்க நிச்சயதார்த்தம் நடந்த புள்ளைங்கள கரெக்ட் பன்ற மாதிரி படங்களா எடுத்து எடுத்து நம்மாளுக அதே ஃபார்முலாவ கல்யாணம் ஆன புள்ளைங்களுக்கு அப்ளை பன்னி, அதுங்கள பிரிச்சி கூட்டிட்டு ஓடிருறாய்ங்க.

சின்ன வயசுலருந்து நடிகனாகனும்ங்குற ஆசையோட இருக்க சிவா, எந்த வாய்ப்பும் கிடைக்காம சுத்திக்கிட்டு இருக்காப்ள. ஒரு தடவ K.S.ரவிக்குமார் படத்தோட audition க்கு போய், லவ் ஃபீலிங் வராம ரிஜெக்ட் செய்யப்படுறாரு. அப்ப ரவிக்குமார் லவ்வுன்னா என்னன்னு சிவாவுக்கு விளக்க, சிவா வெளில வந்த அடுத்த நிமிஷம், ரோட்டுல பாக்குற ஒரு பொண்ணை பாத்து கப்புன்னு விழுந்துடுறாரு. அதுவரைக்கும் பொண்ணுங்கன்னாலே பயம், பொண்ணுங்கன்னாலே பேசத்தெரியாதுன்னு சொல்லிக்கிட்டு இருக்க சிவா, தமிழ் சினிமா ஆரம்பிச்ச காலத்துலருந்து ஹீரோயின் இண்ட்ரோவுக்காக வச்சிருக்க ஒரு பழைய மொக்கை லவ் சிட்சுவேஷன கே.எஸ்.ரவிக்குமார் சொன்னதும் லவ்வு வந்துருது.

ஆனா பின்னாலயே அதுக்கு நிச்சயதார்த்தம் ஆனதும் தெரியிது. அதன் பிறகு மனசு உடைஞ்சி போற சிவா, சந்தர்ப்ப சூழ்நிலையில நர்ஸ் வேஷம் போட்டு, தனுஷ் மாதிரி மாறி, எப்படி கீர்த்தி சுரேஷை எங்கேஜ்மெண்ட் ஆன பையன்கிட்டருந்து பிரிச்சி லவ் பன்றாருங்குறதுதான் கதை.

படத்தில் எக்கச்சக்க க்ளீஷே காட்சிகள். கிட்டத்தட்ட இதுல வர்ற எல்லா காட்சிகளும் ஏற்கனவே பார்த்த காட்சிகள்தான். வசனங்களும் அப்டித்தான். SMS ல வந்த ஜோக், ஏற்கனவே படங்கள்ல வந்த ஜோக்னு கலக்கப்போவது யாருல கண்டெஸ்டண்ட்டா வந்தத இன்னும் மறக்காம அதயே பேசிக்கிட்டு இருக்காரு.

ஆரம்பத்துல கொஞ்சம் மொக்கை போடுற மாதிரி இருந்தாலும், சிவா நர்ஸ் கெட்டப்க்கு மாறுற சீன்லருந்து படம் பட்டைய கெளப்புது. படத்தோட ஆரம்பத்துலருந்து கடைசி வரைக்கும் ஒரே ஆளா நின்னு பர்ஃபார்மென்ஸ்ல பிரிச்சி எடுக்குறாரு சிவா. செம ஸ்க்ரீன் ப்ரசன்ஸ். பாடி லாங்குவேஜ்லயும், ஒன் லைன் பஞ்ச்லயும் கலக்கிருக்காரு. என்ன ஒண்ணு சில சமயம் அவரு சீரியசா அழுதுகிட்டு வசனம் பேசுறப்பயும், அது காமெடியா சீரியஸான்னு தெரியாம ரெண்டு பேரு தியேட்டர்ல சிரிச்சிக்கிட்டு இருக்காய்ங்க.

சிவா கொஞ்சம் போரடிக்கிற மாதிரி இருந்தா அத சரி கட்ட பன்னி மூஞ்சி வாயன், மொட்டை ராஜேந்திரன் மற்றும் சதீஷ் குரூப்பு வந்து காம்பன்சேட் பன்னிருது. மொட்டை ராஜேந்திரனும், பன்னி மூஞ்சி வாயனும் செம. சதீஷ்க்கு ஒண்ணு ரெண்டு காமெடி கவுண்டர் நல்லா வந்துருக்கு.

கீர்த்தி சுரேஷ தொடரில பாத்து ஏற்பட்ட காயமே இன்னும் ஆறாம இருக்க, சூட்டோட சூடா அடுத்து இன்னொன்னு. தொடரிக்கு இதுல கொஞ்சம் பரவால்ல. சிவகார்த்திகேயன் லேடீஸ் குரல்ல பேசிக்கிட்டு இருக்காரு. கீர்த்தி சுரேஷ் ஜெண்ட்ஸ் வாய்ஸ்ல பேசிக்கிட்டு இருக்கு. டைரக்டர் பர்ஃபார்மன்ஸ் பன்ற வாய்ப்ப ரெண்டு பேருக்கும் பகிர்ந்து குடுத்துருக்காரு போல

சிவகார்த்திகேயன் லேடி கெட்டப்புல செமையா இருக்காரு. லேடி கெட்டப்புல இருக்கும்போது கீர்த்தி சுரேஷ் பக்கத்துல நின்னா, ஹீரோயின் ஃப்ரண்டோட ஃப்ரண்டு மாதிரி ரொம்ப சுமாரா தெரியிது. வேற யாரயாச்சும் ஹீரோயினா போட்டுருக்கலாம்ங்குறது என்னோட தாழ்மையான கருத்து.

அர்னால்ட் அனிரூத் இசையில் பாட்டெல்லாம் ஓக்கே.. வழக்கம்போல கொஞ்சம் ஓவர் இறைச்சலும் கூட. சந்தோஷ் நாராயணன் பாடுன டாவுய்யா நோவுய்யாதான் என்னோட ஃபேவோரெட். எல்லா பாட்டையும் நல்லா செலவு பன்னி ரிச்சா எடுத்துருக்காங்க. சிவகார்த்திகேயன் டான்ஸும் சூப்பரா பன்னிருக்காரு.

ஹாஸ்பிட்டல்ல வர்ற ஒரு ஃபைட் அப்படியே அஞ்சாதே படத்துல வர்ற மாதிரி. பல காட்சி அமைப்புகளும் கேரக்டர்களும் அவ்வை சண்முகியின் ஜெராக்ஸ். ஹாஸ்பிட்டல் டீனா வர்ற ப்ரதாப் போத்தன, அவ்வை சண்முகி ஜெமினி கேரக்டர்ல எதிர்பாத்தேன். ஆனா ப்ரதாப் போத்தன ரொம்ப யூஸ் பன்னல. ஒருவேள மொத்தமா சுட்டா ரொம்ப கழுவி ஊத்திருவாய்ங்களோன்னு  விட்டாய்ங்க போல.

லேடீஸ் கெட்டப்புக்காக அவ்வை சண்முகி. ஹாஸ்பிட்டல்ல கதை கொஞ்ச நேரம் நகர்றதால கொஞ்சம் வசூல் ராஜாவும். உடம்பு சரியில்லாத ஒரு சின்னக் குழந்தை. யார் சொன்னாலும் கேக்காதது நம்ம சிவா சொன்ன மட்டும் கேக்கும். கட்டிப்புடி வைத்தியம் மாதிரி மூக்குல மூக்கத் தேய்க்கிறது. விடுங்க. விட்டா சொல்லிக்கிட்டே போவேன். இரட்டையர்களாகப் பிறந்துவிட்டால் திரைக்கதையில் வேறு என்னதான் மாற்றம் ஷெய்ய முடியும்.

நாகராஜ சோழன் கொஞ்ச கொஞ்சமா சீட்டுல உக்காருற மாதிரி, சிவகார்த்திகேயனுக்கு ஸ்பெஷல் டைட்டில் கார்டெல்லாம் போட ஆரம்பிச்சிட்டாய்ங்க. SK ன்னு முதல்ல வந்து அடுத்து அதுலருந்து Sivakarthikeyan ன்னு வருது. அடுத்த படத்துல பேருக்கு முன்னால ஃபயர் ஸ்டார், பர்னிங் ஸ்டார்னு எதயாச்சும் சேக்காம விடமாட்டாய்ங்க. SK ங்குறதப் பாத்ததும் “உனக்கு SK ஜாஸ்திடா”ன்னு சொல்ற விவேக் வசனம் ஞாபகம் வந்தா கம்பெனி பொறுப்பல்ல.

இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் பழைய கதைய எடுத்தாலும் கொஞ்சங்கூட போர் அடிக்காத மாதிரி திரைக்கதை, வசனம் எழுதிருக்காரு. குறிப்பா நிறைய ஒன்லைன் கவுண்டர்கள் நல்லாருக்கு. ஒரு சில காட்சிகள் கொஞ்சம் அபத்தம். சிவா கீர்த்தி சுரேஷூக்கு ப்ரப்போஸ் பன்ற காட்சி கொஞ்சம் ஓவர் டோஸ். அப்றம் லவ்வுன்னா என்னங்குற க்ளாரிட்டி வந்த உடனே, அடுத்து பாக்குற very first person கிட்டயே லவ்வுல விழுந்துடுறாங்க ரெண்டு பேரும். என்னமோ போங்க. PC ஸ்ரீராம் ஒளிப்பதிவு படத்துக்கு இன்னொரு ப்ளஸ்.


மொத்தத்துல ஆணழகன், அவ்வை சண்முகி வரிசையில இன்னொரு தரமான எண்டர்டெய்னர் இந்த ரெமோ. (யாருப்பா அது கந்தசாமிய லிஸ்டுல விட்டுட்டீங்கன்னு சொல்றது) குழந்தைகள், அப்பா, அம்மான்னு மொத்த குடும்பத்தோட எதாவது படம் பாக்கனும்னு ப்ளான் வச்சிருந்தீங்கன்னா ரெமோ அதுக்கு சூப்பர் சாய்ஸ். குறிப்பா குழந்தைகளுக்கும், பெண்களுக்கும் படம் ரொம்பப் பிடிக்கும்னு அனுமானிக்கிறேன். மகிழ்ச்சி.


பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

5 comments:

ஜீவி said...

சி.கா.வை நர்ஸ் வேஷத்தில் பாக்குறப்போ அச்சு அசலா திருநங்கை மாதிரியே இருக்கு

Anonymous said...

film is utter waste.

ThaMaRai said...

Film is not entertaining.

ஜீவி said...

படத்தில் 96 சதவீதம் திரும்ப திரும்ப திரும்ப சிகா ஸ்க்ரீனில் வருவது பெரும் அலுப்பு + சலிப்பு

Unknown said...

That was a great "Cover" story Muthusiva :P . I want to see you soon in Sunnews to be a part of new gen critic group along with Mr. Panda and two other chicks !

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...