சில வருடங்களுக்கு முன்னால் மக்கள் படம் பார்த்த விதத்திற்கும் இப்பொழுது மக்கள் படம் பார்க்கின்ற விதத்திற்கும் நிறைய மாற்றங்கள். முன்பு ஒரு படத்தை படமாகப் பார்த்தார்கள். இப்போது அது படம் என்பதைத் தவிற மற்ற எல்லாமுமாகப் பார்க்கிறார்கள். இயக்குனருக்கே தெரியாத குறியீடுகளைத் தேடிப்பிடிக்கிறார்கள். இன்ன அரசியலைத்தான் இந்தப் படம் பேசுகிறது என பிடித்து வைக்கிறார்கள். படம் எப்படி இருக்கிறது என்பதை விட படம் எதைப் பற்றி பேசுகிறது என்பதைக் கொண்டு படத்தின் தரத்தை நிர்ணயிக்கிறார்கள்.
இரண்டு வருடங்களுக்கு முன்னர் வந்த கத்தி படம் இதற்கு ஒரு சிறந்த உதாரணம். ஏ.ஆர்.முருகதாஸ் எடுத்த படங்களிலேயே ரொம்பவே சுமாரான திரைப்படம் என்றால் அது கத்தி தான். சுவாரஸ்யமில்லாத காட்சிகளால் உருவக்கப்பட்ட கத்தி, விவசயாயப் பிரச்சனைகளைப் பற்றி பேசியது என்ற காரணத்தினால் “விவசாயத்தை வாட்ஸாப் மூலம் காக்கும்” கும்பல்களால் மாய்ந்து மாய்ந்து விளம்பரம் செய்யப்பட்டு வெற்றி பெற வைக்கைப்பட்டது. அடுத்த நல்ல உதாரணம் சமீபத்திய மெர்சல். மிகச் சுமாரான மெர்சல் தமிழில் அதிக வசூல் சாதனை படைத்த முதல் 5 படங்களுக்குள் வரவைத்ததும் இதே காரணம்தான்.
தற்பொழுது அதே போன்றதொரு மிகைபடுத்தலுடன் ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் தீரன் அதிகாரம் ஒண்று. தமிழ்நாட்டில் இருபது வருடங்களுக்கு முன்னர் நடைபெற்ற கொலை கொள்ளை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கிறது.
”அட்டகாசம் செய்யும் அரசியல்வாதியை, எண்ணி ஏழே நாட்களில் தூக்குகிறேன் பார்” என்று சவால்விட்டு வெற்றி பெறும் வழக்கமான தமிழ் சினிமா போலீஸ் படங்களிலிருந்து தீரன் நிச்சயம் வேறுபட்ட ஒரு திரைப்படம் என்பதில் துளி கூட சந்தேகமில்லை.
நாம் தமிழில் இதுவரை பார்க்காத, வித்யாசமான கதைக்களம். புதுமையான எதிரிகள். தனிமையில் இருக்கும் வீடுகளில் புகுந்து வீட்டில் இருப்பவர்களைக் கொன்றுவிட்டு கொள்ளையடித்துச் செல்லும் கொலையாளிகளை பற்றிய உண்மைகள் ஒவ்வொன்றாக வெளிவர, நமக்கே அடிவயிற்றில் சற்று புளியைத்தான் கரைக்கிறது. அதுவும் இடைவேளைக் காட்சியில் உச்சகட்ட பயம் கலந்த பதற்றம்.
வேட்டையாடும் குழுக்கள் எப்படி மக்களுடன் சேர்த்துக்கொள்ளப்படமால் கொஞ்சம் கொஞ்சமாக மனிதவேட்டைக்கு மாறினார்கள் என்பதை ஆதி வரலாறுகளிலிருந்து எடுத்துக் கூறுவதெல்லாம் அருமை.
ஆனால் அனைத்தும் அவ்வப்போது தான். முழுப்படத்தையும் அதே ஈடுபாட்டோடு நம்மால் பார்க்க முடிகிறதா என்றால் நிச்சயம் இல்லை. சில இடங்களில் கடுப்பு, சில இடங்களில் கொட்டாவி, இன்னும் சில இடங்களில் வடிவேலு போல் “போதும் போதும் லிஸ்ட் ரொம்ப லென்த்தா போயிட்டு இருக்கு” எனவும் சொல்லத் தோன்றுகிறது.
இயக்குனர் வினோத்தின் முதல் திரைப்படமனான சதுரங்க வேட்டையினை எடுத்துக்கொண்டால், திரைக்கதையில் எந்த இடத்திலும் எந்த விதத் தொய்வுமே இல்லாமல் சீராகச் சென்று முடியும், ஆனால் இந்த தீரன் திரைப்படத்தில் அது ரொம்பவே மிஸ்ஸிங்.
இயக்குனரின் முதல் குழப்பம் இந்தத் திரைப்படத்தை ஃபிக்ஷனாக எடுப்பதா அல்லது டாக்குமெண்டரியாக எடுப்பதா என்பது. கார்த்தி இருப்பதால் அவருக்கு ஏற்றார்போல் ஹீரோயிசத்தையும் காட்டவேண்டும், அதே போல இது உண்மைக்கதை என்பதால் அதன் உண்மைத்தன்மையும் கெட்டுவிடக்கூடாது என்ற இரண்டு மனநிலைகளுக்கு நடுவில் சிக்கி, தீரனை இரண்டு ஜான்ராவையும் கலந்த ஒரு கலவையாக்கி வைத்திருக்கிறார்.
கார்த்தியை அந்தக் கொள்ளை கொலை வழக்கை விசாரிக்கும் அதிகாரியாக அமர்த்துவதற்கு முன்பு கார்த்தியின் காதல், கார்த்தியின் கேரியர் வளர்ச்சி என அவர்கள் காட்ட முயன்றிருக்கும் காட்சிகள்தான் படத்தின் சுவாரஸ்யத்திற்கு மிகப்பெரிய முட்டுக்கட்டை. அதுவும் கார்த்தி-ரகுல் சம்பந்தப்பட்ட காதல் காட்சிகள் அருவையின் உச்சகட்டம். காதலும் எடுபடவில்லை, காமெடியும் எடுபடவில்லை. ஒருவழியாக இடைவேளைக்கு ஒரு இருபது நிமிடங்கள் முன்பு கதை ஓட்டம் சூடு பிடிக்கிறது.
கொள்ளையடிக்கும் கும்பல் பயன்படுத்தும் ஆயுதம், அவர்கள் கொள்ளையடிக்கும் முறை என ஒவ்வொன்றாகத் திரையில் விரியும் பொழுது பயம் கலந்த சுவாரஸ்யத்துடன் நாம் திரைப்படத்திற்குள் ஒன்றுகிறோம்.
தொடர்ந்து இரண்டாம் பாதியில் ராஜஸ்தான் மாநிலத்தின் வறண்ட கிராமங்களுக்குள் குற்றவாளிகளைத் தேடிப் பயணம் என கதை வட மாநிலங்களுக்குள் நுழைகிறது. காட்சிப்பதிவுகள் அருமையாக இருந்தாலும் காட்சிகள் ரொம்பவே சாதாரணமாக சுவாரஸ்யமில்லாமல் கடந்து செல்கின்றன. குற்றவாளையத் தேடி கிராமத்திற்கு சென்று மாட்டிகொள்ளும் போலீஸ் குழுவினரை நூற்றுக்கணக்கான கிராம மக்களிடமிருந்து ஒரு மூங்கில் கம்பை வைத்துக்கொண்டு கார்த்தி காப்பாற்றுகிறார். அதுவரை பயந்து காருக்குள் பதுங்கியிருக்கும் மற்ற போலீஸ்கார்ர்கள் கார்த்தி “லத்தி சார்ர்ர்ஜ்” என்று கூறியவுடன் எதோ அதற்கு முன்பு ஆர்டர் வராமல் இருந்தாதால்தான் காருக்குள் பயந்து ஒளிந்திருந்தவர்கள் போல் வீறு கொண்டு எழுந்து லத்தி சார்ஜ் செய்யும் காட்சி சிரிப்பைத்தான் வரவழைத்தது.
க்ளைமாக்ஸில் ஹவேரியாஸ் கூட்டம் மறைந்திருந்து, கவனத்தை திசை திருப்பிக் கொல்லும் யுக்தியை கையாளும் போது அதை அதற்கு மெல் பிரில்லியண்டாக செயல்பட்டு அவர்களை சுட்டுத்தள்ளும் காட்சி அடுத்த சிரிப்பு.
காட்சிகள் ஓடிக்கொண்டிருக்கும் போதே “நாங்கள் அவனைப் பிடிக்கச் போனோம்.. இன்ஃபர்மேசனுக்காகக் காத்திருக்கோம்” என்பது போன்ற கவுதம் மேனன் பட வகை வாய்ஸ் ஓவர் வேறு எரிச்சலை ஏற்படுத்துகிறது. படம் கிட்டத்தட்ட முடியப்போகிற தருவாயில் ஒரு பதிமூன்று பேரை வரிசையாக பெயர் அவர்கள் செய்யும் செயல் என அறிமுகப்படுத்திவிட்டு ஒவ்வொருவரைத் துரத்தி சுட்டுப் பிடிப்பதை சலிக்காமல் காட்டுவதெல்லாம் வெறும் நேரத்தைக் கடத்துகின்றனவே தவிற வேறு எந்த ஒரு தாக்கத்தையும் நமக்குள் ஏற்படுத்தவில்லை.
“இந்தப் படம் உண்மைச் சம்பவம் என்று சொன்ன ஒரே காரணத்திற்காகப் பிடித்தது. இல்லையென்றால் படம் செம மொக்கைதான்” என்று நண்பர் ஒருவர் இன்று பதிவிட்டிருந்தார். உண்மைச் சம்பவம் என்கிற டேக் லைன் அந்தப் படத்தை நிச்சயம் நன்றாக இருக்கிறது என்று சொல்லியே ஆகவேண்டும் என நம்மை ஏன் கட்டாயப்படுத்துகிறது? உண்மைச் சம்பவம் என்கிற டேக் லைன் என்பது மந்தமான காட்சிகளை எழுதுவதற்கான லைசன்ஸா?
வெற்றி மாறனின் ”விசாரணை” உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது தான். காஞ்சூரிங் உண்மைச் சம்பவங்களைக் அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டதுதான். அந்தத் திரைப்படங்கள் உண்மைக்கதையைப் படமாக்குகிறோம் என்று ஏனோதானோவென்று ஸ்க்ரிப்டை எழுதவில்லையே?
படத்தின் நீளமும் பாடல்களும் இந்தப் படத்தின் சுவாரஸ்யத்திற்கு மிகப்பெரிய தடைக்கல். காதல் காட்சிகளையும் பாடல்களையும் வெட்டியெறிந்து விட்டு வெறும் இரண்டு மணி நேரப் படைப்பாகக் கொடுத்திருந்தால் நிறைய கேள்விகளைத் தவிர்த்திருக்கலாம்.
விவேகம் திரைப்படம் நன்றாக இல்லை என விமர்சனக்கள் எழுந்த சமயம் அஜித்தின் கடின உழைப்பிற்காகப் படத்தைப் பார்க்கலாம் என ஒரு குழு கிளம்பிய பொழுது நகைத்த அதே சிலர் இன்று வினோத் கடினமாக உழைத்திருக்கிறார் என்று தீரனுக்கு விளம்பரம் செய்கின்றனர். ஒவ்வொரு திரைப்படமும் பலரது கடின உழைப்பில் தான் உருவாகிறது. சாக்கடையை சுத்தம் செய்பவருக்கோ, அல்லது உச்சி வெயிலில் தார் வாளியைத் தூக்கிக்கொண்டு ரோடு போடுபவருக்கோ கடினமாக உழைக்கிறார் என்று ஒரு 50 ரூபாயை நாம் இலவசமாகக் கொடுக்கிறோமா? அவர்களது வேலையை அவர்கள் செய்கிறார்கள் அதற்கான ஊதியம் அவர்களுக்கு கிடைக்கும் என கடந்து சென்று விடுகிறோம். ஆனால் சினிமாவில் மட்டும்தான் கடின உழைப்பு என காரணம் காட்டி சுமாரான திரைப்படங்களை சூப்பர் ஹிட்டாக முயல்கிறோம்.
இறுதியில் தீரண் தமிழ் சினிமாவில் வித்யாசனமான முயற்சி என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. ஆனால் சிலர் மிகைபடுத்திச் சொல்லும் அளவிற்கு ஆஹா ஓஹோ படைப்பெல்லாம் அல்ல. ஒரு முறை பார்க்கலாம் வகைப் படமே.
10 comments:
அறம் படம் பற்றி விமர்சனம் எழுதுங்கள்.
பொதுவாக உண்மை சம்பவங்களை காட்சிப் படுத்தும்போது இயக்குநரின் கற்பனையும் அதில் நிச்சயம் கலக்க வேண்டும்... அப்போதுதான் அது சுவை மிகுந்த திரைப்படமாக விரியும். இல்லாவிட்டால் அது வெறும் டாக்குமென்டரிதான். அப்படி எடுக்க கார்த்தி, ரகுல் ப்ரீத் சிங் எல்லாம் எதற்கு?
முதல் இருபது நிமிடங்கள் சுத்த வேஸ்ட்... வெட்டித் தள்ளலாம் என்கிறீர்கள். நிஜத்தில் கொள்ளையர்களை பிடித்த காவல் அதிகாரிகள் குடும்பத்தில் அந்த கொள்ளையர்களால் எந்த ஒரு பாதிப்பும் இல்லாமல் இருந்திருக்கும். இருந்தாலும் அவர்கள் தங்கள் உயிரைபணயம் வைத்து கடமையை செய்திருப்பார்கள்.
சரி.. இங்கே படத்திற்கு வருவோம்.கார்த்தி பல கொலைகளை நேரில் பார்த்த பிறகு அவர் அதனால் படும் வேதனையை இயக்குநர் மிக அழகாக சில காட்சிகளில் காட்டித்தான் இருக்கிறார். இருந்தாலும் அவர் மற்றும் அவரது சக அதிகாரி போஸ் வெங்கட் குடும்பம் நேரிடையாக அடையும் பாதிப்பை உருவாக்கி காட்டும்போது அந்த தேடுதல் வேட்டையின் வீரியம் பலமடங்கு கூடுகிறது.
ஆனால் எந்த இடத்திலும் என் குடும்பத்தை அழித்தவனை பிடிப்பேன் என்பது போன்ற வசனங்களோ suggestive காட்சி அமைப்புகளோ துளியும் இல்லை. கதாநாயகன் body language லேயே அது மறைமுகமாக தோன்றுகிறது. இந்த ஒரு காரணத்துக்காகவே இயக்குநரை எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம்.
சரி விஷயத்துக்கு வருவோம். கார்த்தி..ரகுல் ப்ரீத் காட்சிகளை தூக்கி விட்டால் பிறகு அவருக்கு ஏது கொள்ளையர்களால் பாதிப்பு?
மொக்கை டாக்குமென்டரிதான்.
எல்லா படங்களையும் கஷ்டப்பட்டுதான் எடுக்கிறார்கள் என்று சொல்லி இருக்கிறீர்கள். உண்மை.. உண்மை.. விஜய் கூட கஷ்டப்பட்டு விக்கெல்லாம் வைத்து வருகிறார்(நடிக்கிறாரா என்பது வேறு விஷயம்) அதனால் மெர்சல், தெறி வகையில் தீரனையும் சேர்த்து விட வேண்டியதுதான் !!!
தீரன் கார்த்தி கேரியரில் மட்டுமல்ல.. விறுவிறுப்பான பட வரிசையிலும் நிச்சயம் ஒரு மைல் கல்தான்

ஆனால் லிங்கா போன்ற குப்பைகளை கொண்டாடும் தமிழ்நாட்டில் இந்த படம் கோபுரம் தான்
ஆம்பள படத்தையே செம சூப்பர் படம்னு சொன்ன ஆளுதான நீ..தீரன் தமிழில் வந்த புது கதைகள படம்..வாழ்த்துக்கள் வினோத்
Well said
100 % true
Ungalukku favour ah post iruntha vachukurathu illana remove pannidarathu...
I like this movie ����
Post a Comment