Tuesday, June 26, 2018

டிக் டிக் டிக்.. !!!!


Share/Bookmark

இந்தியாவின் முதல் ஸ்பேஸ் மூவி அப்டிங்குற கேப்ஷனோட வெளிவந்திருக்க படம் தான் நம்ம டிக் டிக் டிக்… ஜெயம் ரவி, நிவேதா பெத்திராஜ், வின்செண்ட் அஷோகன், ஜெயப் ப்ரகாஷ் இவங்கல்லாம் நடிச்சி சக்தி சவுந்தர் ராஜன் இயக்கத்துல இமான் இசையில வெளி வந்திருக்க இந்தப் படம் எப்டி இருக்குன்னு பாப்போம்.

பூமியை நோக்கி ஒரு பிரம்மாண்டமான வின்கல் ஒண்ணு வருது.. அது அப்டியே பூமிகுள்ள விழுந்துச்சின்னா மிகப்பெரிய பேரழிவ சந்திக்க வேண்டியிருக்கும்.. அதனால அந்தக் கல் பூமிய நெருக்குறதுக்கு முன்னாலயே உடைச்சி துண்டு துண்டாக்கிட்டா பூமிய காப்பாத்திடலாம். ஆனா இந்த வேலைய வெறும் அஸ்ட்ரானட்ஸ் மட்டும் செய்ய முடியாது. அதுக்குன்னு ஸ்பெஷல் டேலண்ட் உள்ள ஒருத்தர் தேவைன்னு ஒருத்தர தேடிப்புடிக்கிறாங்க. அவரு நா  மட்டும் தனியா வந்தா வேலை பாக்க முடியாது.. எனக்குன்னு ஒரு குரூப்பு இருக்கு.. அதயும் கூட்டிட்டு தான் நா வருவேன்னு சொல்லி இன்னும் ரெண்டு பேர டீம் செட் பன்றாரு. பதினெட்டு நாள்ல இவங்க ட்ரெயிங்லாம் முடிச்சி விண்வெளிக்கு போய் அங்க உள்ள சவால்களையெல்லாம் தாண்டி எப்படி அந்த கல்ல உடைக்கிறாங்கங்குறதுதான் கதை.

இது நம்ம டிக் டிக் டிக் பட்த்தோட கதைன்னு நினைப்பீங்க.. சத்தியமா இல்ல.. இது 1998ல வந்த ஆர்மகடான்ங்குரா படத்தோட கதை. நம்ம டிக் டிக் டிக் படத்தோட கதைக்கும் இப்ப நான் சொன்ன கதைக்கும் ஒரு மிகப்பெரிய வேறுபாடு இருக்கு. என்ன்ன்னா அதுல கல்லு மோத 18 நாள் இருக்கும். ஆனா இங்க வெறும்  7 நாள்தான் டைம் இருக்கும். இதான் அந்த மிகப்பெரிய மாறுபாடு.. மத்த்தெல்லாம் அப்படியே தழுவி, இன்ஸ்பையர் ஆகி, அந்தப் படம் எடுத்த டைரக்டருக்கு ட்ரிபியியூட் பன்றதுக்காக எடுக்கப்பட்ட்துன்னு சொல்லிக்கலாம்.

இப்பல்லாம் வெளிநாட்டு படங்களப் பாத்து இன்ஸ்பையர் ஆகுறதுதான் நம்மூர்ல ஃபேஷன். அதப்பத்தி ஒண்ணும் ப்ரச்சனை இல்லை. ஆன இந்த டிக் டிக் டிக் ஆங்கில ஸ்பேஸ் படங்கள கலாய்க்கிறதுக்காக எடுத்த படம் மாதிரி இருக்கு.

வீடியோ விமர்சனம்


ஆரம்பத்துல படத்த ரொம்பத் தெளிவா ஆரம்பிக்கிறங்க. முதல் பத்து நிமிஷத்துல அந்த சீரியஸ்நெஸ்ல ஆடியன்ஸ்கிட்ட கிரியேட் பன்றாங்க. ஆனா எப்போ ஜெயம் ரவி கேரக்டர் படத்துல அறிமுகமாகுதோ அப்பத்துலருந்து படம் ஒரு மாதிரி போக ஆரம்பிச்சிருச்சி. அதுக்கு முக்கிய காரணம் அப்படி ஒரு கேரக்டர உள்ள திணிக்கிறதுக்கு அவங்க பிண்ணிருந்த திரைக்கதை தான் காரணம். பாறைய ரெண்டா உடைக்கனும். அதுக்கு 200 டன் மிஸைல் ஒண்ணு வேணும். மிசைல் எங்கருக்கு.. சைனாவுக்கு சொந்தமான ஒரு ஸ்பேஸ் ரிசர்ச் செண்டர்ல ரொம்ப பாதுகாபான ஒரு வால்ட்ல  இருக்கு… அந்த வால்ட்ட தொறக்குற திறமையுடைய ஒரு மெஜிஷியன், எஸ்கேப் ஆர்டிஸ்டுதான் நம்ம ஜெயம் ரவி.. “என்னோட டீம் இருந்தா எத வேணாலும் தொறப்பேங்குறாரு.. பயங்கரமான டீமா இருக்கும்போலயேன்னு  யாரு அந்த டீமுன்னு பாத்தா ரெண்டுக்கு ரெண்டு சைஸுல ரிச்சி ஸ்ட்ரீட்டுல கடை வச்சிட்டு உக்கார்ந்திருக்காங்க.

ஹேக்கர்ஸ் பத்தி இரும்புத்திரை விமர்சனத்துல ஒண்ணு சொன்னோம் இந்தப் படத்துல வர்ற ஹேக்கரு அதுக்கெல்லாம் மேல. அவனுங்களாவது கண்டம் விட்டு கண்டம் தான் ஹேக் பன்னுவாங்க.…. ஆனா இவரு ப்ளானெட் விட்டு ப்ளானெட்டே ஹேக் பன்றாப்ள… செகண்ட் ஹாஃப்லயெல்லாம் நம்ம லூசா இல்ல இவங்க லூசான்னே ஒரு மிகப்பெரிய் கன்பீசன் வந்திருச்சி.

சைனாவுக்கு சொந்தமான ஸ்பேஸ் ரிசர்ச் செண்டர்லருந்து மிசைல திருடனும். இந்த வேலாயுதம் படத்துல சிங்கமுத்து & co ஒரு மியூசியத்துலருந்து வைரத்த திருடுறதுக்கு ஒரு ப்ளான் போடுவாங்க… நான் கரண்டு கனெக்‌ஷன கட் பன்னுவேன்… நான் அலாரத்த ஆஃப் பன்னுவேன்.. நா வெளில ஜீப்புல வெய்ட் பன்னுவேன்… சரி அப்ப யார்ரா வைரத்த எடுக்குறது? அய்ய்யோ அத மறந்துட்டோமேன்னு அப்பதான் ஞாபகம் வரும். அதுமாதிரிதான் இங்க விண்வெளில சைனாவுக்கு சொந்தமான ஸ்பேஸ் செண்டர்ல திருடப்போறோம். இவன் சிஸத்த ஹேக் பன்னுவான்.. இவன் வால்ட் ஓப்பன் பன்னுவான்… நா ஸ்பேஸ் ஷிப்ப ஓட்டுறதுக்கு ரெடியா இருப்பேன்.. அதெல்லாம் சரி அவனோட ஸ்பேஸ் செண்டருக்குள்ள எப்டி நுழைவீங்கன்னா அதுக்கு எந்தப் ப்ளானுமே இல்ல…

அடுத்து ஆரம்பத்துல ஒரு சீன்ல அந்த ஆஸ்ட்ராய்ல எப்டி உடக்கிறதுன்னு ப்ளான் பன்றப்போ சார் நம்ம கிட்ட 20 டன் மிசைல்தான் இருக்கு.. ஆனா அந்த ஆஸ்ட்ராய்ட உடைக்கனும்னா 200 டன் மிசைல் வேணும். அது இப்பதைக்கு சைனாகிட்ட மட்டும்தான் இருக்கும்பாங்க. சரி 200 டன் மிசைல்ல நல்ல ப்ரம்மாண்டமா இருக்கப்போவுதுன்னு நம்ம மைண்டுல ஒரு ஃபிகர பிக்ஸ் பன்னிக்கும். ஆனா அங்க போய் பாத்த நம்ம தீவாளி ராக்கெட்ட கொஞ்சம் பெரிய சைஸுல பன்னி வச்ச மாதிரி இருக்கு அந்த மிசைலு.. அதக்கூட மன்னிச்சிருவேன்.. ஆனா அந்த மிசைல அக்குள தூக்கிக்கிட்டே ஜெயம் ரவி ஸ்பேஸ்ல அலைவாரு பாருங்க.. அத மட்டும் என்னால பொறுக்கவே முடியாது.

அப்புறம் ஸ்பேஸ் ஷட்டில்ல இவங்கல்லாம் கிளம்புன உடனே இன்னும் 2 மணி நேரத்துல நீங்க ஸ்பேஸ் ஸ்டேஷன அடைஞ்சிருவீங்கன்னு சொல்றாங்க. கொஞ்ச நேரத்துல ஃபியூவல் காலி ஆகி “ஓ எங்கள எதோ இழுக்குது.. எங்கள எதோ இழுக்குது.. oh God..”ன்னு போய் ஒரு இடத்துல டம்முன்னு முட்டி நிக்கிது. எங்கன்னு பாத்தா ஸாக் ஆயிருவீங்க.. we crash landed on moon அப்டிங்குறாங்க.. அடப்பாவி.. அடாப்பாவி… பூமிலருந்து மூனுக்கு போக மூணு நாள் ஆகுமேடா… நீங்க கெளம்பி முழுசா மூணு மணி நேரம் கூட ஆகலயேடா.. அப்புறம் எப்டிடா மூணுல போய் முட்டுனீங்க…. அடிச்சி விடுறதுக்கும் ஒரு அளவு இல்லையாப்பா..

படத்துல நடிச்சிருக்க மத்த ஆர்டிஸ்டுகளப் பத்தி பாத்தோம்னா நிவேதா பெத்திராஜூக்கு நடிக்க பெரிய ஸ்கோபெல்லாம் இல்ல.  ஜெயப்ப்ரகாஷ் வழக்கம்போல நல்லா நடிச்சிருக்காரு. இவங்க காம்பினேஷன்ல ஒரு சில இடங்கள்ல சிரிப்பு வருது. ஆனா காமெடின்னு பாக்குறப்போ அவங்க பன்றத விட பட்த்துல ஜெயம் ரவி பன்ற சீரியஸ் காமெடிக்குதான் விழுந்து விழுந்து சிரிப்பு வருது. அருணாச்சல் ப்ரதேஷ்லருந்து ஒரு 15 பேர கூப்டு வந்து சைனா ஆர்மியா காமிச்சிருக்காங்க. அவங்கள ஏமாத்திட்டு ஜெயம் ரவி மிஸைல திருடுறதெல்லாம் கண் கொள்ளா காமெடி…

அசோகன் பையன் சீஃப் அஸ்ட்ரானட்.. சிங்கம் படத்துல விஜய்குமார் பன்ன மாதிரி செம பவர்ஃபுல்லான ரோல்.. அவருக்கு கொடுக்கப்பட்ட ஒரே வசனம் “ஓ ஷிட்…”   சார் இஞ்ஜின் ஃபெயில்யர் ஆயிருச்சி.. ”ஓ ஷிட்”… சார்.. ப்யூவல் ட்ராப் ஆகுது… “ஓ ஷிட்”… சார் நம்ம ஷிப் க்ராஷ் லேண்ட் ஆகிருச்சி… ”ஓ ஷிட்…” யோவ் என்னய்யா என்ன சொன்னாலும் அதயே சொல்லிக்கினு இருக்க..

இந்த மாதிரி படங்களுக்கு CG தான் முதுகெலும்பே. நீங்க ஒழுங்கான கதை திரைக்கதையெல்லாம் இல்லாம கூட விஷுவல்ல ஆடியன்ஸ அட்ராக்ட் பன்னிடலாம். இந்தப் படத்த பொறுத்த வர ஒரு சில இடங்கள்ல நல்லா பன்னிருக்காங்க.. ஆனா பல இடங்கள்ல இந்த அம்மன், பொட்டு அம்மன், பன்னாரி அம்மன் இந்த படங்களோட CG யே  பல மடங்கு மேலன்னு தோணுச்சி. 2018 இருக்கோம். இப்பப் போயி ரொம்ப மோசமான CG…தெலுங்கு படங்கள்லாம் கூட இப்பப் நல்ல CG காமிக்கிறாங்க.  சரி பட்ஜெட் ப்ரச்சனைன்னு அதயும் விட்டுறலாம்.

ஸ்பேஸ் ரிலேட்ட் படங்களல ப்ரச்சனை என்ன்ன்னா திரைக்கதைய ஒரு குறுகிய வட்டத்துக்குள்ளதான் அமைக்க முடியும். எப்படிப் பாதாலும் இஞ்ஜின் பெயிலியராயிருச்சி.. க்ராஷ் லேண்ட் ஆயிருச்சி.. ஷிப்போட ஒரு சைடு விங்கு உடைஞ்சிருச்சி.. வெளில இருக்க ஒரு பார்ட் ஃபெயிலியராயிருச்சின்னு தான்.. இயக்குனர் ஸ்பேஷ் ஸ்டேஷன்ல சைனா காரங்க கூட சண்டை, அவங்களுக்கு தெரியாம நம்ம ஊர் டெக்னிக்கையெல்லாம் யூஸ் பண்ணி மிசைல திருடுறதுன்னு புதுசா என்னென்னவோ எழுதிருக்காரு.. ஆனா ஒண்ணும் ஒர்க் அவுட் ஆகல.. முதல் முறையா இந்த மாதிரி ஒரு genre ah தமிழ்ல ட்ரை பன்னதுக்காக கண்டிப்பா இயக்குனர பாராட்டலாம்.

முதல் முதலா இந்த மாதிரியான ஒரு கதைக்களத்துல ஒரு படம்ங்குறதத் தாண்டி மத்தபடி பெருசா சொல்ல ஒண்ணும் இல்ல. ஒரு தடவ பாக்கலாம்.  


பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

1 comment:

Anonymous said...

//மத்தபடி பெருசா சொல்ல ஒண்ணும் இல்ல//

நீங்க இப்படி சொன்னதுனால படம் ரொம்ப நல்ல இருக்கும் னு நினைக்கிறேன்

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...