Wednesday, July 18, 2018

கடைக்குட்டி சிங்கம்!!!


Share/Bookmark

ஒரு பதினைஞ்சி இருபது வருஷத்துக்கு முன்னால வந்த படங்களப் பாத்தா பெரும்பாலான படங்கள் கிராமத்து கதைக்களங்கள்ல தான் வந்துச்சி. கே.எஸ்.ரவிகுமார், ஆர்.வி.உதயக்குமார், பி.வாசு, சுந்தர்.சின்னு நிறைய பேரு கிராமப்புற கதைகளை படமாகிட்டு இருந்தாங்க. நாளாக நாளாக ஒரு பாதிக் கதை கிராமத்துலயும் மறு பாதி டவுன்லயும் நடக்குற மாதிரி கதைக்களங்கள் மாற ஆரம்பிச்சிது. இன்னும் நாள் போகப் போக கிராமத்துக் கதைக்களங்கள்ல படம் வர்றதே ரொம்ப அரிதான விஷயமாகிப்போச்சு. கிராமத்துக் கதைகள்னாலே டக்குன்னு நமக்கு புடிச்சிப் போகும்.  ரெண்டு காரணங்கள் இருக்கலாம். ஒண்ணு நாம வாழ்ந்த மாதிரியான இடங்கள்ல கதை நடக்குறதால இருக்கலாம். இல்லை இந்த மாதிரி இட்த்துல நாம வாழ்ந்த நல்லாருக்கும்னு நினைக்கிறதால இருக்கலாம்.  இன்னமும் சின்னக்கவுண்டர், நாட்டாமை படங்களையெல்லாம் எத்தனை முறை டிவில போட்டாலும் சலிக்காம பாக்குறோம்னா முக்கியக் காரணம் இதுதான்.


இன்னைய சூழல்ல கிராமப்புற கதைக்களங்கள வச்சி  ஹரி மட்டும்தான் கமர்ஷியல் படங்கள் எடுத்துகிட்டு இருக்காரு.. ஆனா அவரும் மணலும் மணல் சார்ந்த இடங்கள்ல மட்டுமே படம் எடுக்குறதால அவர் படத்துலயும் அந்த ஃபீல முழுமையா உணர முடியிறதில்லை. ரொம்ப நாளுக்கப்புறம் படம் முழுவதும் வயக்காடு, ட்ராக்டரு மாட்டுவண்டி, பெரிய குடும்பம்னு முழுசும் கிரமத்துலயே எடுக்கப்பட்டு வெளிவந்துருக்க படம் தான் இந்த கடைக்குட்டி சிங்கம்.

வீடியோ விமர்சனம்



எப்படா ஆண்குழந்தை பிறக்கும்னு ஏங்கிக்கிடக்குற சத்யராஜூக்கு வரிசையா 5 பொண்ணுங்களுக்கப்புறம் பிறக்குறாரு கடைக்குட்டி கார்த்தி. அப்பா மாதிரியே விவசாயம் பாத்துக்கிட்டு, ஊர்லயே அக்காக்களுக்கெல்லாம் நல்லது கெட்ட்து பாத்துக்கிட்டு ஊர்லயே சந்தோஷமா இருக்காரு. மாமா நம்மள எப்படா கட்டிக்குவாருன்னு ரெண்டு அக்கா பொண்ணுங்க வெய்ட்டிங்ல இருக்க, அப்பன்னு பாத்து கார்த்திக்கு வேற ஒரு பொண்ணப் புடிச்சிப் போயிருது. அதனால குடும்பத்துல ஏற்படுற விளைவுகள்தான் மீதிப்படம்.

முதல் நாலு அக்காவும் சரி அந்த அக்காக்களோட புருஷன்களும்  சரி சூப்பரான கதாப்பாத்திர அமைப்பு.  உண்மைலயே ஊர்சைடுல பல கேரக்டருங்க அப்டித்தான் சுத்திக்கிட்டு இருக்கும். பத்திரிக்கையில பேரு பெருசா போடல.. அவன் பேர முதல்ல போட்டு என் பேர பின்னால போட்டுட்டீங்க... அவன் வந்தா நா வரமாட்டேன் இந்த மாதிரி ஏகப்பட்ட கலவரங்க பன்னிக்கிட்டு திரிவாங்க. அதயேல்லாம் ரொம்ப சூப்பரா படமாக்கிருக்காரு. இளவரசு, சரவணன், ஸ்ரீமன்னு சத்யராஜ் மருமகன்கள் சூப்பரான தெரிவு.

படத்தோட முதல் பாதி குடும்பம், காதல் காமெடி சண்டைன்னு ஒரு மாதிரி ரெகுலர் மசாலா டைப்ல போகுது. ரெண்டாவது பாதி முழுக்க family செண்டிமெண்ட்ல இறங்கிறாங்க. கொஞ்சம் சீரியல் தனமா இருந்தா கூட நல்லாவே எடுத்துருக்காங்க. க்ளைமாக்ஸ்ல கிட்டத்தட்ட அழ வச்சிருக்காங்க. கார்த்திகூடவே வர்ற சூரி நிறைய இடங்கள்ல சிரிக்க வைச்சிருக்காரு.

மாயாண்டி குடும்பத்தார் படம் பெரும்பாலானவங்க பாத்துருப்பீங்க. எனக்கு ரொம்ப்ப் புடிச்ச படம். அது கொஞ்சம் ட்ரையா இருக்கும். அந்தப் படத்தோட கலர்ஃபுல் வெர்ஷன் தான் இந்த கடைக்குட்டி சிங்கம்.

செல்ஃபோன்களாலயும், வாட்ஸாப் மெசேஜ்களால அதிகம் பாதிக்கப்பட்ட இயக்குனர்கள்ல பாண்டிராஜ்தான் முதல்ல. எப்டியும் அவர் பட்த்த்ல கைல ஃபோன வச்சிக்கிட்டு ஃபார்வார்ட் மெசேஜ்ல வந்த மொக்கை ஜோக்குகளையெல்லாம் சொல்லிக்கிட்டு ஒரு கேரக்டர் வரும். இந்தப் படத்துல ப்ரியா பவானி சங்கர். படம் முழுசும் கையில செல் ஃபோன வச்ச்கிட்டு லைவ் போடுறேங்குற பேர்ல சுத்திக்கிட்டு இருக்கு.

அதே மாதிரி ரீசண்டா இந்த விவசாயிகளப் பத்துன ஃபார்வார்டெல்லாம் நிறைய படிச்சிருப்பாரு போல. ஒரு சீன்ல கார்த்தி ஒரு காலேஜ்க்கு போய் விவசாயத்தோட பெருமையப் பத்தி பேசிட்டு உங்கள டாக்டர் ஆகவேணாம், இஞ்னியர் ஆகவேணாம்னு சொல்ல்ல.. ஆனா விவசாயியாவும் ஆகுங்கங்குறாரு. டாக்டர், இஞ்சினியர்லாம் ஆகுறது ஈஸி. ஒருத்தன் MBBS படிச்சி முடிச்சாலே டாக்டர் தான். B.E படிச்சி முடிச்சாலே இஞ்சினியர் தான். வெறும் கையோட நீங்க ஒரு டாக்டர் வேலைக்கோ இஞ்ஜினியர் வேலைக்கோ போக முடியும். ஆனா அப்டி விவசாயியாக முடியாது. விவசாயம் பன்றதுக்கு முதல்ல நிலம் இருக்கனும். நிலம் இருந்தாலும் அதுக்கு பாய்ச்ச தண்ணி இருக்கனும். ஆத்துல தண்ணி விடமாட்றாங்க. போர் போட்ட கரண்டு குடுக்க மாட்டேங்குறாய்ங்க. சும்மா விவசாயி ஆவு விவசாயி ஆவுன்னா எப்டி ஆகுறது ? ஒரு இஞ்சினியரிங் கம்பெனி ஆரம்பிக்கிறத விட ஒருத்தன் விவசாயம் பாக்க ஆரம்பிக்க தேவையான முதலீடு அதிகம். 

இந்தப் படத்துல கார்த்தி ஒரு விவசாயி. நா மாசம் ஒண்ணரை லட்சம் சம்பாதிக்கிறேன்னுவாரு. என்னாது பாத்தா அந்த ஊர்ல கண்ணுக்கெட்டுன தூரம் வரைக்கும் அவரோட இடம்தான். அவர் சம்பாதிச்சதில்லை. அவங்க அப்பா தாத்தாவோட இடம். அதுல ஒரு பக்கம் நெல்லு போட்டுருப்பாய்க்க. ஒரு பக்கம் கரும்பு.. ஒரு பக்கம் வாழை. வாழக்கண்ணு மட்டும் 5000 போட்டுருப்பாங்க. அப்ப அவரோட சொத்து மதிப்பு என்னன்னு பாத்துக்குங்க. இவ்வளவு இட்த்த வச்சிக்கிட்டு நீ விவசாயம் பாக்கலாம்.  இப்ப இங்க ஊர்லருந்து இவ்வளவு இட்த்த வச்சிகிட்டு யாராவது இங்க வந்து நா விவசாயம் பாக்க மாட்டேனு ஐடி கம்பெனில வேலை பாக்குறாங்கன்னா நீங்க பன்ற அட்வைஸூல ஒரு நியாயம் இருக்கு. இங்க வேலை பாக்குறவன் எல்லாம் இருக்ககூட இடம் இல்லாம, சொந்தமா ஒரு இட்த்த வாங்குவோம்னு தான் வேலை பாக்க வந்துருக்கான். அவன்கிட்ட விவசாயம் பாருங்க பாருங்கன்னா எப்டி பாப்பான். வாய் இருக்குன்னு அட்வைஸ அள்ளி வீசக்கூடாது.  

சரி அத விடுங்க. பாடல்கள்னு பாத்தா எல்லாமே ஓக்கே ரகம். இமானோட மத்த படங்கள் அளவுக்கு சூப்பர் டூப்பர் பாடலள் இல்லை. வில்லன் ஆளு செம கெத்தா இருப்பாரு. ஆனா அவருக்கு சுரேஷ்குமார் குரலக் குடுத்து கொஞ்சம் டொம்மையாக்கிட்டாங்க. கார்த்தி ஆளு செம கெத்தா இருக்காரு. உடம்பெல்லாம் குறைச்சிட்டு செம ஃபிட்ட இருக்காரு. ஹீரோயிந்தான் கொஞ்சம் டொம்மையா இருந்துச்சி. அத்தை பொண்ணுங்களா வர்ற ப்ரியா பவானி சங்கர், அழகா இருக்காங்க. பெரிய அளவுல நடிக்க ஸ்கொப் இல்லை. படத்துக்கு இன்னோரு பெரிய ப்ளஸ் சத்யராஜ். எப்பவும்போல ரொம்ப அசாலட்ட அவரோட ரோல சூப்பரா பன்னிருக்காரு.

பாண்டிராஜோட மத்தப் படங்களை விட இந்த கடைக்குட்டி சிங்கம் ஒரு படி மேல தான். கண்டிப்பா பாக்கலாம்.

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

5 comments:

ஜீவி said...

இப்ப இங்க ஊர்லருந்து இவ்வளவு இட்த்த வச்சிகிட்டு யாராவது இங்க வந்து நா விவசாயம் பாக்க மாட்டேனு ஐடி கம்பெனில வேலை பாக்குறாங்கன்னா நீங்க பன்ற அட்வைஸூல ஒரு நியாயம் இருக்கு. இங்க வேலை பாக்குறவன் எல்லாம் இருக்ககூட இடம் இல்லாம, சொந்தமா ஒரு இட்த்த வாங்குவோம்னு தான் வேலை பாக்க வந்துருக்கான். அவன்கிட்ட விவசாயம் பாருங்க பாருங்கன்னா எப்டி பாப்பான். வாய் இருக்குன்னு அட்வைஸ அள்ளி வீசக்கூடாது. //// முத்துசிவா பன்ச்.. சூப்பர். என்னமோ விவசாயம் செலவில்லாத ஒண்ணு ஆனால் இளைஞன் அதை வேணாம்னு விட்டுட்டு சிட்டியில் வேலைக்கு போறான்னு ஆளாளுக்கு அட்வைஸ் அள்ளி விடுறாங்க.. அவங்களுக்கு இது நெத்தியடி

Anonymous said...

கிளைமாக்ஸ் இல் நீங்க அழுதீங்களா

மலேசியாவில் நான் படம் பார்க்கும் போது அரங்கமே சிரிச்சுக்கிட்டு இருந்திச்சு

Anonymous said...

Peculiar article, exactly what I wanted to find.

Anonymous said...

Hello There. I found your blog using msn. That is a
really smartly written article. I'll be sure to bookmark it and come back to learn more of youir
helpful information. Thank you for the post. I'll certainly comeback.

Unknown said...

Super....

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...