திரையுலகில்
ஒவ்வொரு திரைப்படத்திலும் முந்தைய படங்களைக் காட்டிலும் கேமராவிலோ, காட்சியமைப்பிலோ,
எடிட்டிங்கிலோ, VFX இலோ அல்லது கதை சொல்லும் சிறிய முன்னேற்றத்தை புகுத்திக்
கொண்டே இருக்கின்றர். தொடர்ந்து அந்தப் படங்களினுடன் பயணிக்கும்போது அந்த சிறு சிறு
மாற்றங்களை நாம் பெரிதாக உணர்வதில்லை. ஆனால் இரண்டு மூன்று வருட இடைவேளையில் வந்த இரண்டு
படங்களை ஒப்பிடும் போது நமது சினிமா இவ்வளவு மாறியிருக்கிறதா என்கிற அளவுக்கு நமக்கு
வியப்பைத் தரும். அந்த வகையில் 5 வருடத்தில் சினிமா எவ்வளவு மாறியிருக்கிறது என நமக்கு
உணர்த்தியிருக்கிறது விஸ்வரூபம் 2.
காலம்
கடந்து வரும் பெரும்பாலான படங்கள் வெற்றி பெறுவதில்லை. எதோ சில காரணங்களுக்காக சரியான
நேரத்தில் வெளிவராமல் தாமதமாக வெளியாகும் படங்கள் , அது முடங்கியிருக்கும் காலத்தில்
திரைத்துறையில் ஏற்படும் மாற்றங்களால் மக்கள் மனதில் இடம் பிடிக்காமல் போய்விடுகிறது.
அஜித் ”நடித்த” வரலாறு திரைப்படத்தைத் தவிற ஜீ, பீமா உட்பட பெரும்பாலான லேட் ரிலீஸ்
படங்கள் தோல்வியைத்தான் தழுவியிருக்கின்றன. விஸ்வரூபம் இரண்டாம் பாகமும் அதற்கு விதிவிலக்கல்ல.
விஸ்வரூபத்தின்
முதல் பாகம் ஆரம்பித்ததிலிருந்தே ப்ரச்சனை. முதலில் ஆஸ்கார் ரவிச்சந்திரன் தயாரிப்பில்
இருந்து, இடையில் கமலின் கைக்கு மாறியது. First copy அடிப்படையில் படம் எடுத்துத் தருவதாக
70 கோடி பணம் வாங்கி , மாதங்கள் சில ஆன பிறகு 40% மட்டுமே படம் முடிந்திருக்கிறது
. இன்னும் பணம் வேண்டும் என ஆஸ்கார் ரவிச்சந்திரனிடம் ஆண்டவர் கேட்க அவர் அதற்குப்
பதிலாக பெரிய கும்புடு ஒண்றைப் போட்டு ”என்னோட 70 கோடியை எங்கிட்ட கொடுத்துட்டு நீங்களே
படம் எடுத்துக்குங்க” என்றாதாக ஒரு செய்தியில் படித்தேன். அதுமில்லாமல் ஆண்டவர் கைக்கு
படம் மாறியதும் 70 கோடியில் 40 சதவிகிதம் முடிந்திருந்த திரைப்படம் அடுத்த பத்து கோடியில்
100% முடிந்துவிட்டதாம். சரி அதெல்லாம் ஆண்வர் அரசியல்.
(நம்ம
லாங்குவேஜுக்கு மாறிக்குவோம்)
சரி
படம் எப்படி இருக்குன்னு கேட்டா இருக்கு..
அவ்வளவுதான். முதல் பாகத்துலயே முதல் பாதியைத் தவிர்த்து இரண்டாம் பாதியே ஒரு மாதிரி
சொத சொதன்னுதான் இருக்கும். ஆனா இங்க ரெண்டு பாதியுமே அதே சொத சொத தான்.
படம்
ரொம்ப போர் அடிக்காம ஒரு மாதிரி போகுது. ஆனா படத்துல நடக்குற சம்பவங்கள பாக்குற ஒவ்வொருத்தர் மூஞ்சிலயும் ”ஆமா இவனுங்கல்லாம் யாரு… எதுக்கு வந்தானுக.. எங்க போறானுக.. ஏன் இதெல்லாம்
பன்றானுக” அப்டிங்குற கன்பீசன். படம் எத நோக்கி பயணம் பன்னுதுன்னு படம் முடிஞ்சப்புறம்
கூட நம்மளால கண்டுபுடிக்க முடியலன்னா பாத்துக்குங்களேன்.
சமீபத்துல
மோடியப் பத்துன ஒரு கார்டூன் பாத்துருப்பீங்க. ஒரு சிற்பி முதல்ல ஒரு பெரிய பாராங்கல்ல
எடுத்து உடைப்பாரு.. உடனே பக்கத்துல இருக்கவன் அட்டே.. ”பெரிய சிலையா செய்யிறாரே”ம்பாரு
கொஞ்சம் கொஞ்சமா உடைச்சி உடைச்சி கல்லோட சைஸு சின்னதானதும் “சின்ன சிலையா செய்வாரு
போலருக்கு”ன்னு நினைச்சிக்கவாரு பக்கதுல நிக்கிறவரு. ஆன கடைசில சிலை எதுவுமே செய்யாம
மொத்த கல்லையும்ம் சுக்கு சுக்கா உடைச்சி போட்டுட்டு போயிருவாரு அந்த சிற்பி. விஸ்வரூபத்தோட
முதல் பகுதில எந்த ஒரு முழுமையும் இல்லன்னாலும் சரி ரெண்டவது பகுதில எதாவது சொல்லுவாரு
போலன்னு நினைச்சோம். நான்லாம் முதல் பகுதில Bin Laden பத்தின விஷயமெல்லாம் சொல்லும்
போது ரெண்டாவது பகுதிய ZERO DARK THIRTY லெவலுக்கு ஆண்டவரு எடுத்துருப்பாரு போலன்னு
நினைச்சிட்டுருந்தேன். ஆனா கடைசில மேல சொன்ன சிற்பி கதை தான்.
அதுமட்டுமில்லாம
எந்த ஒரு கதாப்பாத்திரத்த்தோட பேரயும் பெருசா மனசுல பதிய வைக்காம இருந்ததுதான் இந்தப்
படத்தோட ஆகச் சிறந்த சாதனை. படம் பாத்துட்டு வெளில வர்றவங்கட்ட இந்தப் படத்துல கமலோட
பேரு என்னன்னு கேளுங்க. பாதி பேருக்குத் தெரியாது.
தமிழ்
சினிமா வரலாற்றுல Bomb களோட அதிகம் டீல் பன்னது ஆக்சன் கிங் அர்ஜூன் தான். அவரோட சர்வீஸ்ல
ஒரு ஆயிரம் பாம செயலிழக்க வச்சிருப்பாரு. அர்ஜுன் லைஃப் டைம்ல டீல் பன்ன ரெக்கார்ட
ஆண்டவரு ஒரே படத்துல உடைச்சிருக்காரு. சாதா டைம் பாம், ஸ்பெசல் சாதா டைம் பாம், சீசியம்
கலந்த டைம் பாம், வாயால கடிச்சி கப்புன்னு தூக்கி வீசுற பாம் நூறு வருசத்துக்கு முன்னால
தண்ணிக்கடியில முழுகிப் போன டம்மி பாம் அப்டின்னு அத்தனை வகை பாம் களோடவும் ஆண்டவருக்கு
இந்தப் படத்துல லிங்க் இருக்கு.
டைட்டில்ல
“எழுதி இயக்கியவர் கமலஹாசன்” ன்னு போட்டாங்க. ஆனா படத்துல இருந்த வசனங்களையெல்லாம்
கேட்ட உடனே ஆண்டவரே நீங்க இயக்குங்க.. தயவு செஞ்சி இனிமே எழுதாதீங்கன்னு கால்ல விழுந்து
கதறனும்போல தோணுச்சி. அதுவும் படத்துல ஆண்டவரத் தவற மத்த எல்லாருமே ஐயர் பாஷையில பேசுறாங்க.
அமெரிக்காவுல இருந்தாலும் சரி, லண்டன்ல இருந்தாலும் சரி.. ஆண்டவர சுத்தியிருக்கவங்க
எல்லாருமே ப்ராமண பாஷ பேசி சாவடிக்கிறாய்ங்க. சிலசமயம் அவரும் அதே மாதிரி பேசும்போது
சட்டையக் கிழிச்சிக்கிலாம் போல இருந்துச்சு.. புது சட்டைங்குறதால விட்டுட்டேன். கொடுமை
என்னான்னா நல்லா பேசிகிட்டு இருந்த ஆண்ட்ரியா கூட திடீர்னு “பாத்தேளா.. கேட்டேளா”ன்னுது…
இப்டி எரிச்சலூட்டுற மாதிரி கதாப்பாத்திரங்கள பேச வச்சி ஆண்டவர் உலகத்துக்கு எதோ சொல்ல
வர்றாரு… வக்காளி எப்பவும் போல என்னன்னு தான் புரியல.
ஒரு
காட்சில ஒருத்தர கமல் வாய் வார்த்தையில மடக்குற மாதிரியான காட்சி. கமல் என்னென்ன சொல்லனும்னு
நினைக்கிறாரோ அத சொல்றதுக்கு ஏதுவா அந்த கேரக்டர மொக்கைத் தனமா கேள்வி கேக்க வைச்சி
ஆண்டவர் அவரோட கொடிய மேல பறக்க விடுறாரு.
ஆண்ட்ரியாவுக்கு
படத்துல ஓரளவுக்கு ஸ்கோப் இருக்கு. நல்லாவும்
நடிச்சிருக்காங்க. பூஜா குமாரு… நல்லா இருக்காங்க. ஆனா வாயத் தொறந்து பேச ஆரம்பிச்சா…
வாமிட்.. ராகுல் போஸ் ரெண்டாவது பாதில வர்றாரு. நல்ல வேளை ரெண்டாவது பாதில வந்தாருன்னு
சந்தோசப் பட்டுக்கிட்டேன். மத்தவங்களாவது என்ன பேசுனாலும் புரியிற மாதிரி பேசுவாங்க.
ஆனா அவரு பேசுனா காத கழட்டி ஸ்பீக்கருக்குள்ள வச்சாதான் புரியும். படத்துல ரொம்ப நேரமா ஒருத்தரக் காணுமேன்னு நானும் தேடிக்கிட்டே
இருந்தேன். ஒரு சீன்ல வந்து தலை காட்டிட்டு பொய்ட்டாரு கம்பெனி ஆர்டிஸ்டு நாசர்.
டெக்னிக்கலி விஸ்வரூபம் 2 மேல சொன்ன மாதிரி ரொம்ப பழைய படம்ங்குற feel ah நிறைய இடத்துல கொடுக்குது. ஸ்டூடியோக்குள்ள எடுத்து சொருகப்பட்ட நிறைய மோசமான VFX காட்சிகள். ஒரு under water scene um கார் ஆக்ஸிடெண்ட் சீனும் நல்லா பன்னிருந்தாங்க.
டெக்னிக்கலி விஸ்வரூபம் 2 மேல சொன்ன மாதிரி ரொம்ப பழைய படம்ங்குற feel ah நிறைய இடத்துல கொடுக்குது. ஸ்டூடியோக்குள்ள எடுத்து சொருகப்பட்ட நிறைய மோசமான VFX காட்சிகள். ஒரு under water scene um கார் ஆக்ஸிடெண்ட் சீனும் நல்லா பன்னிருந்தாங்க.
காலம்
கடந்த ரிலீஸ்… சரியான மார்க்கெட்டிங் இல்ல.. கலைஞர் மரணம் அப்டிங்குற நிறைய காரணங்கள்
இந்தப் பட்த்தோட ஓப்பனிங் சிறப்பா இல்லாத்துக்கு
கூறப்பட்டாலும் விஸ்வரூபம்-1ன் முடிவு இரண்டாம் பாகத்தின் மேல் எந்த ஒரு மிகப்பெரிய
எதிர்பார்ப்பையும் தூண்டாமல் சப்பையாக இன்னுமொரு முக்கியக் காரணம்.
இன்னொன்னு
இந்தக் காரணிகளெல்லாம் அஃபெக்ட் பன்னாம இருந்தா கூட படத்துக்கு ஓப்பனிங்ல மிகப்பெரிய
மாற்றமெல்லாம் இருந்துருக்காது. மக்களுக்கு சினிமா மேல இருக்க ஆர்வம் குறையல.. ஆனா
திரையரங்கங்களுக்குப் போய் சினிமா பார்க்கிற ஆர்வம் கண்டிப்பா குறைஞ்சிகிட்டே வருது.
திரையரக்கங்களுக்கு மக்கள் படையெடுக்குற காலத்துலயே கமல் படங்கள் கொஞ்சம் ஸ்லோவாதான்
பிக்கப் ஆகும். இப்போ கேக்கவா வேணும்.
கமல்
என்ற நடிகனுக்கு இங்கு நிறைய ரசிகர்கள் இருக்கிறார்கள். ஆனால் கமல் தன்னை படைப்பாளி,
எழுத்தாளன் என்று முன்னிருத்திக்கொண்டு வரும்பொழுது கட்டில் மொதக்கொண்டு தூக்கிக்கிட்டு ஓடி பாதாளக் குழியில பதுங்கிடுறாங்க
அப்டிங்குறதுதான் உண்மை.
இன்னும்
ஒண்ணும் குறைஞ்சி போயிடல. இதற்கு முன்னால இன்னொரு பதிவுலயும் இதத்தான் சொன்னேன். ஆண்டவர்
தன்னை இன்னொரு இயக்குனர்கிட்ட ஒப்படைச்சிட்டு மூடிக்கிட்டு நடிச்சாலே சரிஞ்சி போன மார்க்கெட்டையெல்லாம்
ரெண்டு படத்துல தூக்கி நிறுத்திடலாம். ஆனா
அதப் பன்ன மாட்டாரு. அதாம்லே வர்கீசு..
மொத்ததுல
படம் ரொம்ப மோசமெல்லாம் இல்லை. “ஆமா ஏன் இவரு
இங்க போறாரு?” “இத ஏன் இப்ப பன்றாரு” அப்டிங்குற கேள்வியெல்லாம் உங்க மனசுல வராம இருந்துச்சின்னா
கண்டிப்பா ரசிக்கலாம்.
படத்தை பற்றிய நம்முடைய ட்வீட்டுகள் சில:
***************************************
*************************************************
படத்தை பற்றிய நம்முடைய ட்வீட்டுகள் சில:
நண்பர் (Kamal fan) : படம் எப்டிடா இருந்துச்சி?
நான் : படம் எனக்கு புரியல மச்சி
நண்பர் : ஏண்டா அப்டி சொல்ற?
நான் : இல்ல நான் படம் நல்லால்லன்னு சொன்னா நீ அடுத்து அதத்தான் சொல்லப்போற.. அதான் நானே முந்திக்கிட்டேன் 😁😁😁
***************************************
இந்தப் படத்தோட அருமை பதினைஞ்சி வருஷம் கழிச்சிதான் எல்லாருக்கும் புரியும்..
அதான கோயிந்தா..
ஆமா கோயிந்தா...!!
**************************************************
தியேட்டர்ல இருக்க நாப்பது பேர்ல 15 பேரு ஆண்டவர் ரசிகனுங்க.. அமைதியா இருக்கானுக்க..
மிச்சம் 24 பேரு பூஜா குமாருக்கு ரசிகனுங்க போல.. அது வரும்போது மட்டும் கத்துறானுங்க..
.
.
.
.
.
.
.
.
.
.
கணக்கு இடிக்குதுல்ல.. மிச்சம் இருக்க ஒருத்தன் நாந்தேன் 😁😁😁
*****
கமல்ட்ட மட்டும் காசு குடுத்து படம் எடுக்கச் சொல்லுங்க.. நாலு ஆஸ்கார் வாங்குற மாதிரி ஒரு படம் எடுப்பாருங்க
- பாண்டா
- பாண்டா
"என்கிட்டயும் சைக்கிள் இல்லாதப்ப வா.. நானும் 50 பைசாவுக்கு தர்றேன்" moment
*************************************************
10 comments:
//அதுமில்லாமல் ஆண்டவர் கைக்கு படம் மாறியதும் 70 கோடியில் 40 சதவிகிதம் முடிந்திருந்த திரைப்படம் அடுத்த பத்து கோடியில் 100% முடிந்துவிட்டதாம். சரி அதெல்லாம் ஆண்வர் அரசியல்.
//
idhu varaikum andha sotta thalayan ethana padam produce panirukaan???
panapram vandhu pesu adhu varaikum mooditu iru.
tamilnatula irundhukitu tamil naatu sotha thinukitu, poraduna naadu sudugaadaagirumnu koovitu ipo kalaignar kaga porada varenu soluthu puluthi punda.
oru fight ah movie la efficient ah pana mudiyadha potta naayoda fan kamal oda stunt ah yum making ah yum kora soludhu thu.....
una thavira ella reviewersume nallarukunu dhan solranga da koodhi.
கமலுக்கு தான் எப்போதுமே ஒரு அறிவு ஜீவி என்ற எண்ணம் உண்டு. சாதாரண கேள்விக்கும் வேண்டும் என்றே சுற்றி வளைத்து குழப்பமான பதில் அளிப்பது... தேவை இல்லாமல் தேவை இல்லாத இடத்திலும் தான் சார்ந்த சாதி பற்றிய விமர்சனங்களை சொல்லி சும்மா இருப்பவனுக்கும் அதை ஞாபக படுத்துவது.. இவை எல்லாம் ஆண்டவரின் ஸ்பெஷாலிட்டி.
இப்படி எல்லாம் செய்தாலும் கமல், மணிரத்னம் போன்றவர் படங்களை குப்பை என்றாலும் போய் பார்த்து காலரை தூக்கி விட்டு தெரியும் ஒரு கூட்டம் பல வருடம் முன்பு இருந்தது. இன்று நீங்கள் சொன்னது போல் அவர்கள் தியேட்டர் போவதில்லை.. கமலுக்கு மார்க்கெட் போய் விட்டது.. முதல் வாரத்தில் பார்க்கும் சிலர் சொல்லும் நல்ல விமர்சனம் வைத்துதான் கமல் படங்கள் பிக் அப் ஆகும்.
ஆனால்..
உத்தம வில்லன்,
தூங்கா வனம்,
விஸ்வரூபம் 1
விஸ்வரூபம் 2
என்று
யாருக்கும்
புரியாத கலை பொக்கிஷங்கள்..
இப்போ புரியாத மாதிரி எடுத்தால் இன்றைய இளைஞன் பொட்டுன்னு சொல்லி விடுகிறான்..
ஆனால் இது கமலுக்கு , மணிரத்னம் போன்றவர்களுக்கு புரியாது .
சுத்தமாக மார்க்கெட் போகும் வரை இது போலவே எடுத்து ஓய்வார்கள்.
ஒரு வேளை ஆண்டவரின் கடைசி படமாக இது இருக்குமோ என்னவோ?
நீங்க இவ்ளோ டீசண்டா பேசும்போதே தெரியிது நீங்க ஆண்டவர் ஃபேனாதான் இருப்பீங்கன்னு..
ஓ.. ரஜினி படம் தயாரிச்சதில்லையா? டேய் மெண்டல்.. அவர் தயாரிச்சு ப்ளாக்பஸ்டரே ஆயிருச்சு.. பன்னப்புறம் வந்து பேசனும்னாம்.. போய் வெரியாளு யாரயாச்சும் கூட்டிட்டு வா..
அவ்ளோ பெரிய புடுங்கி இயக்குனர்னா ஏன் தயாரிப்பாளர்லாம் ஓடி ஒளியிறான் உங்களப் பாத்து?
சிவகார்த்திகேயன் அளவு மார்கெட் இல்லாத நீங்கல்லாம் ரஜினியப் பத்தி பேச வண்டீங்க.. பே...
என்னத்தவிற எல்லா ரிவூயர்ஸூம் நல்லாருக்குன்னு சொன்னா அங்க போய் படிச்சிக்க நாயே
சபாஷ்.... எகனைக்கு மொகனை.. ஆனா காலா படமும் மொக்கை டாகுமென்டரி மாதிரிதான் இருக்கு. மொத்தத்தில் கமல், ரஜினி ரெண்டு பேருக்கும் மார்க்கெட் அவுட்.. அது மட்டும் நிஜம்
ஒரே மல்டிப்ளக்ஸில் ஒரு நாளைக்கு 90 ஷோ போட்டு அதுல சில சீட்டு காலி ஆக இருந்ததும், அதே ஒரு நாளுக்கு நாலு ஷோ போட்டு அதுல பாதி காலியா இருக்கதுக்கும் வித்யாசம் இருக்கு தோழர் 😁😁😁😁
//
நீங்க இவ்ளோ டீசண்டா பேசும்போதே தெரியிது நீங்க ஆண்டவர் ஃபேனாதான் இருப்பீங்கன்னு
//
engamma sathyama kedayave kedayadhu...
kabaali padam paathutu kaluvi oothunathun naandhan..
kaala padatha 3 vaati theatre la paathu ovvoru scene kum visil adichadhum naan dhan...
teriyama vandhu pesikitu...
//
tamilnatula irundhukitu tamil naatu sotha thinukitu, poraduna naadu sudugaadaagirumnu koovitu ipo kalaignar kaga porada varenu soluthu puluthi punda.
oru fight ah movie la efficient ah pana mudiyadha potta naayoda fan kamal oda stunt ah yum making ah yum kora soludhu thu.....
//
idhuku inum padhil varala...
If you want to post comments against his article,then you should have post it through your real identity not an anonymous. That is absurd weird not an ethical.
எந்தவித கூச்சமும் இன்றி,இவ்வளவு அசிங்கமாக கமென்ட் பண்ண கமல் ரசிகர்களால் தான் முடியும்.
intha pathivar oru rajini fan. so rajini padam evlo mokkaya irunthalum super hit nu solluvaru. but matha padangal evlo super ah irunthalum mokkai nu than solluvaru!!
2.o review enga....
Post a Comment