
சண்டக்கோழி.. என்னோட லைஃப்ல
மறக்க முடியாத ஒரு படம். ஏன்னா அவ்ளோ பெரிய சர்ப்ரைஸ வேற எந்தப் படமும்
இதுவரைக்கும் கொடுத்த்தில்ல. சண்டக்கோழி வந்தப்போ கல்லூரில படிச்சிட்டு இருந்தோம்.
அன்னிக்கு செமஸ்டர் எக்ஸாம் எழுதி முடிச்சிட்டு வெளில வந்தா வெளில சண்டக்கோழி
போஸ்டர். அடுத்த மூணு நாள் ஸ்ட்டி லீவு ரைட்டு கெளம்பு. அன்னிக்கு நாங்க
பட்த்துக்கு போனதுகு ஒரே ஒரு காரணம் மீரா ஜாஸ்மீன் மட்டுத்தான். பேர் வேற
சண்டக்கோழின்னு இருந்த்தால அது ஒரு ஹீரோயின் ஓரியண்ட்ட் சப்ஜெக்ட்டா இருக்கலாம்.
மீராஜாஸ்மீன் கெத்து காமிச்சிருக்கும்னு கெளம்பிப் போனோம். ஆனா லிங்குபாய் குடுத்தாரு பாருங்க
ஒரு ட்விஸ்ட்டு. தம்பி காசி வெட்டிருவான் இறங்கி ஓடுன்னு அந்தப் பெரியவர்
சொன்னதும் அய்ய்யோ ஹீரோ செத்தாண்டான்னு நினைக்கும்போது இறங்கிப்போய் பொள பொளன்னு
பொளக்குறது.. அடுத்து அண்ணேன் பையன் மேல எதுவும் கை வைச்சிடலயென்னதும். ஒருத்தன
தூக்கிப்போட்டு மிதிச்சி ராஜ்கிரன் ஒருத்தன எட்டி மிதிச்சி இந்த மண்ணுல உள்ள
ஒவ்வொரு உசுறலயும் என்னோட உசுரும் கலந்துருக்குடான்னு சொல்லி ஒருத்தன குச்சி
மாதிரி ரெண்டா உடைச்சி போடுவாறு.
ஒரு ட்ரெண்ட் செட்டர்
அந்தப் படம். எப்பவும் வில்லன் பெரிய ஆளா இருப்பான். ஹீரோ அடிமட்ட்த்துலர்நுது அவன
எதிர்ப்பான். ஆனா வில்லன் பெரிய ஆளு.. ஹீரோ அவன விட பெரிய ஆளு அப்டிங்குற
கான்செப்ட் அதுக்கப்புறம் நிறைய படங்கள்ல வர ஆரம்பிச்சிது. விஷாலுக்கு தமிழ்ல்ல
மட்டுமில்லாம தெலுகுலயும் மிகப்பெரிய மார்க்கெட் உருவாக காரணமா இருந்த படம் இந்த
சண்டைக்கோழி. குருவி சேக்குற மாதிரி லிங்கு பாய் சேத்து வச்சிருந்த
மரியாதையெல்லாம் அஞ்சான் அப்டிங்குற ஒரு படத்தோட நம்மல்லாம் சேந்து
சிதைச்சிட்டோம். அவருக்கு நாம செஞ்சது
மிகப்பெரிய பாவம். இத விட மொக்கைப் படம் எடுத்தவன்லாம் அசால்ட்டா வெளிய
சுத்திக்கிட்டு இருக்கபோ லிங்குபாய்க்கு மனதளவுல மிகப்பெரிய பாதிப்பை சமூக
வலைத்தளங்கள் மூலமா உண்டாக்கிட்டோம். அந்த பாதிப்புலருந்து அவர் மீண்டு வர சில
வருஷங்கள் ஆயிருச்சி. புதுசா எதாவது ட்ரை பன்னி மறுபடி சிக்கல்ல மாட்டாம இருக்க, ஏற்கனவே
ப்ளாக்பஸ்டரான சண்டக்கோழியோட இரண்டாவது பாகத்தை எடுத்து ஒரு சேஃப்பான கேம் விளையாட
முயற்சி பன்னிருக்காரு லிங்கு பாய். விஷால், கீர்த்தி
சுரேஷ், வரலட்சுமி இவங்கல்லாம் நடிச்சி யுவன் இசையில
லிங்குபாய் இயக்கி வெளிவந்துருக்க இந்த சண்டைக்கோழி -2 எப்டி
இருக்குன்னு பாக்கலாம்.
சுத்துப்பட்டி
ஏழு கிராமங்களும் சேர்ந்ந்து நடத்துற வேட்டைக்கருப்பு கோயில் திருவிழாவுல கறிச்சாப்பாட்டுல
உண்டாகுற சின்ன சண்டை மிகப்பெரிசா மாறி இரண்டு கோஷ்டிங்களுக்குள்ள மோதலா மாறி அதுல
வரலட்சுமியோட கணவர் இறந்துடுறாரு. பதிலுக்கு அவரக் கொன்னவங்க குடும்பத்தையே கருவருக்கனும்னு
முயற்சி பன்னி எல்லாரயும் கொல்ல கடைசி பையன கொல்லப் போகும்போது துரை அய்யா வந்து காப்பாத்தி
அவனோட உசுற காப்பாத்துற பொறுப் பேத்துக்கிறாரு. ஏழு வருஷம் கழிச்சி திரும்பம்வும் திருவிழா
நடத்த, அந்த திருவிழா முடியிறதுக்குள்ள மிச்சம் இருக்க ஒரு பையனயும் கொல்ல வரலட்சுமி
தீவிரமா முயற்சிக்க அவங்கட்டருந்து ராஜ்கிரனும் அவரோட பையன் விஷாலும் எப்படி அந்தப்
பையன காப்பாத்துறாங்கன்றதுதான் கதை.
வீடியோ விமர்சனம்
ஒரு
படம் ஓடும்போது இடையில திருவிழா வரலாம். ஆனா ஒரு திருவிழாவுக்கு இடையில அப்பப்ப படம்
ஓடுறது இந்தப் படத்துலதான். வேட்டக்கருப்பு திருவிழாவுல படம் ஆரம்பிச்சி அதே திருவிழா
முடியும்போது படமும் முடியிது.
ஏற்கனவே
சொன்ன மாதிரி சண்டக்கோழி முதல் பாகத்தோட வெற்றிக்கு காரணம் அது நமக்கு கொடுத்த சர்ப்ரைஸ்
எலெமெண்ட்ஸ் தான். இந்தப் படத்துல அது ஒண்ணு தான் மிஸ்ஸிங்.
படத்தோட
ப்ளஸ்… சர்ப்ரைஸ் எலெம்ண்ட்ஸ் இல்லன்னாலும் சண்டக்கோழி முதல் பாகத்தோட ரெண்டவது பாதி
பாக்குற மாதிரியான் ஒரு சுவாரஸ்யத்த படம் முழுசும் கொண்டு வந்துருக்காங்க. விஷால் ஆளூ
அப்டியே இருக்காரு. கீர்த்தி சுரேஷ் அல்டிமேட்.
முதல் ஒருசில காட்சிகள்ல கீர்த்தி பேசுறது கொஞ்சம் எரிச்சலா வரும். என்ன பன்ற?
மீராஜாஸ்மீன் மாதிரி.. அதான் நமக்கு வரலைல்ல.. விட்டுற வேண்டியதுதான. போகப் போக மனசுல நின்னுடுறாங்க. அதுவும் திருவிழாவுல
ஒரு டான்ஸ் ஆடுறாங்க பாருங்க. தரம். என்ன ஒரு ப்ரச்சனைன்னா தெலுகுல நாக சைதன்யான்னு
ஒருத்தன் இருக்கான். அவனால வாய மூட்வே முடியாது. ஆல் டைம் ஓப்பன்லதான் இருக்கும். கீர்த்தி
சுரேஷுக்கும் கிட்டத்தட்ட அதே ப்ரச்சனை இருக்குன்றதுதான் கொஞ்சம் வருத்தமான் விஷயம்.
படத்துல
ராஜ்கிரன் கூட ஒரு நாலு கெழவங்க இருப்பாங்க. ஆரம்பத்துலருந்து கடைசி வரை.. ”டேய் அய்யா
மேல கை வச்சிட்டாங்கடா.. அவங்க மொத்தத் தலையும் உருளனும்டா.. டாய் தம்பி மேல கை வச்சிட்டானுக்கடா
அவங்க மொத்தத் தலையும் உருளனும்ண்டா.. டாய் நம்ம ஊர்க்காரன் மேல கை வைச்சீட்டாஙக்டா…அவங்க
மொத்தத் தலையும் உருளனும்டா…”ன்னு சொல்லிக்கிட்டே இருப்பானுங்களே தவற கடைசி வரைக்கும்
ஒரு ப்ளேடால கூட யாரயும் கிழிக்க மாட்டானுங்க
கேமரா,
ஸ்டண்டு, பின்ணனி இசை எல்லாமே சூப்பர். யுவன் பாடல்கள்ல மட்டும் கொஞ்சம் கவுத்துட்டார்.
கம்பத்து பொன்ணூ பாட்டு மட்டும் சூப்பரா இருக்கு, அதே மாதிரி அந்தப் பாட்ட நல்லாவும்
பிக்சரைஸ் பன்னிருக்காங்க. விஷாலும் சரி, ராஜ்கிரணும் சரி முதல் பாகத்துல கொடுத்த பர்ஃபார்மன்ஸூல
கொஞ்சம் கூட குறையாம இதுலயும் பன்னிருக்காங்க.
இது
வந்து என்ன கதைன்னே தெரியில.. இதுமாதிரி தமிழ்ல 45003 படம் வந்துருச்சி.. இதெல்லாம்
ஒரு கதையா? அப்டினுலாம் சில விமர்சகர்கள் சொல்ல வாய்ப்பு உண்டு. கதையே இல்லாம படம்
எடுக்கும் திறமையானவர்கள்ல ஒருத்தர்தான் லிங்குசாமி. விளையாட்டா சொல்ல்ல… சீரியஸாதான்
சொல்றேன். ”பையா படத்துல பாத்தீங்கன்னா கதையே இருக்காது… “அப்டின்னு லிங்குசாமியே சொல்லிருக்காரு.
ஆனாலும் படம் ஹிட்.
ஏற்கனவே பார்த்த மாதிரியான காட்சிகள் இருந்தாலும், ஒரு சில காட்சிகள் எளிதா யூகிக்க முடியிறதா இருந்தாலும் படம் கொஞ்சம் கூட போர் அடிக்காம ஓடுது. ராஜ்கிரன், விஷால், ஊரு, கோயில்னு அந்த சண்டக்கோழி atmosphere eh ஒரு நல்ல ஃபீல குடுக்குது. கண்டிப்பா ஒரு தடவ குடும்பத்தோட பார்க்கக்கூடிய ஃபேமிலி எண்டர்டெய்னர் தான் இந்த சண்டக்கோழி.
6 comments:
Τһаnks forr sharing yߋur info. I truly appгeciate your efforts and I will be waiting for y᧐ur newxt post thanks once again.
உங்க விமர்சனத்துகாக ரொம்ப நாளா wait பன்னுறேன் ஜீ.. 96,ராட்தசன்,pp,முக்கியமா "வடசென்னை"க்கு waiting.. சீக்கிரமா post பண்ணுங்க
Sarkar please
Boss, waiting for ur sarkar review...
Ennachu.. seekirama ezhuthunga
சர்க்கார் உட்பட நிறைய விமர்சனத்தை உங்களிடம் எதிர்பார்த்தேன்..ஆளை பாக்க முடியலையே ..
2.0 வுக்கு தான் வருவீங்களா தலைவா..:-)
Go᧐d post. I сertаinly loνe this website. Stick ԝith it!
Post a Comment