Monday, June 3, 2019

NGK- நொந்த கோபாலன் குமரன்!!!


Share/Bookmark

ரொம்ப நாளுக்கப்புறம் செல்வா சார் படம். ஹீரோவுல எப்டி சிம்புவோ  அதேமாதிரி டைரக்டர்ல இவுக.. பூஜை போடுவாரு.. போஸ்டர் விடுவாரு.. ஆனா படம் மட்டும் வராது. அதே மாதிரி கமல் படம்லாம் எப்டி 15 வருஷம் கழிச்சி பாத்தா தான் புரியும்னு சொல்லுவாய்ங்களோ அதே மாதிரி செல்வா சார் படம்மெல்லாம் பத்து வருசம் கழிச்சி பாத்தாதான் புரியும்னு அடிச்சி விட ஆரம்பிச்சிட்டாய்ங்க போன்வாரம்தான் புதுப்பேட்டை நல்ல படம்னு சொல்லிக்கிட்டு இருந்தாய்ங்கஇன்னும் மயக்கம் என்ன, இரண்டாம் உலகம்னு ஏகப்பட்ட படம் லிஸ்டுல வெய்ட்டிங்ல இருக்கு. அநேகமா 2030 இந்த 2030 la இந்த NGK ஒரு மிகச்சிறந்த படமாக அமைய நிறையவே வாய்ப்பிருக்கு. சரி வாங்க படம் எப்டி இருக்குன்னு பாப்போம்.

ஒரு கவுன்சிலரோ இல்ல ஒரு அரசியல்வாதியோட அள்ளக்கையோ விரல் நுனியில செய்யிற வேலைய ஒரு சாதாரண மனிதன் செய்யனும்னா எவ்வளவு நேரம் ஆகுது?  So, அரசியல்வாதியாகி ஒரு பவர்ல இருந்தா நாம நினைச்சத மக்களுக்கு செய்யலாம்னு சூர்யாவுக்கு புரிய, அவரும் ஒரு அரசியல்வாதியாக மாறி எப்டி பவருக்கு வர்றாருன்றதுதான் படத்தோட கதை. கேக்குறதுக்கு நல்லாருக்குல்ல. ஆனா சத்தியமா பாக்குறதுக்கு நல்லால..

படத்துல சூர்யா ஒரு இயற்கை விவசாயி. விவசாயம் செய்யிறதுல உள்ள நிம்மதியப் பத்தி ஒரு சீன் பேசுவாறு பாருங்க. “என்னடா வேலை பாக்குறாங்க. காலையில பஞ்ச் அடிச்சிட்டு உள்ள போட்டு சாத்திடுறாங்க. ஒரே சேர தேச்சி தேச்சி உக்காந்துக்கிட்டு மணியடிச்சா சோறப் போட்டு சாயங்காலம் தொறந்து விடுறாங்க. கேக்க ஜெயில் மாதிரியே இருக்குல்ல. ஆனா விசயம் பண்றப்ப மண்ணு வாசனை, கொழம்பு வாசனை, இயற்கை காத்துன்னு நிம்மதியா இருக்குன்னாரு. உடனே வீறு கொண்டு எழுந்து நம்மளும் வேலைய விட்டுட்டு விவசாயம் பன்னப் போயிருவோம்னு எந்திரிச்சிட்டேன். அப்புறம்தான் யோசிச்சி பாத்தேன். நமக்குதான் ஊர்ல விவசாயம் பன்றதுக்கு இடமே இல்லையே..  அப்புறம் எங்க போறது.. சரி மொதல்ல இந்த வேலையப் பாத்து ஒரு இடத்த வாங்குவோம். அப்புறம் போய் விவசாயத்த பாப்போம்னு வேலைய இப்ப கண்டினியூ பன்னலாம்னு இருக்கேன்.

எதுக்கு அண்ணனும் தம்பியும் மாத்தி மாத்தி விவசாயிகளைக் காக்க புடிச்சிட்டு இருக்காங்கன்னு தெரில. இதே மாதிரி ஒரு அபத்தமான காட்சி கடைக்குட்டி சிங்கம் படத்துலயும் வந்துச்சி. அதுக்கு நம்ம என்ன ரிப்ளை குடுத்தோம்னு கொஞ்சம் பாத்துட்டு வரலாம்.சமீபத்துல LKG ன்னு ஒரு படம் வந்துச்சி. எத்தனை பேர் பாத்துருப்பீங்கன்னு தெரில.. பாக்காதவங்க பாருங்க. கண்டிப்பா ஒரு தடவ பாக்கலாம். அந்தப் படத்தோட கேவலமான வெர்ஷந்தான் இந்த NGK. உண்மையிலயே அந்தப் படத்தோட கதையும் இந்தப் படத்தோட கதையும் கிட்டத்தட்ட ஒண்ணுதான். ஆனா அந்தக் கதையிலயும் திரைக்கதையிலயும் இருந்த தெளிவு சத்தியமா இந்தப் படத்துல கொஞ்சம் கூட இல்ல.

இந்த NGK படத்தோட ட்ரெயிலர் வந்தப்போ இத அடுத்த புதுப்பேட்டைங்குற அளவுக்கு பில்ட் அப் குடுத்துக்கிட்டு இருந்தோம். ஆனா படம் பாத்தப்புறம் புதுப்பேட்டைல ஒரு சீன் குடுத்த தாக்கத்த கூட இந்த முழுப்படமும் தரலன்னு தெரியிது.

"என் பேரு நந்த கோபலன் குமரன். என்ன எல்லாரும் NGK ன்னு கூப்டுவாங்க…"ன்றாரு. நானும் படம் முழுக்க தேடிட்டேன்.. யாராச்சும் NGK ன்னு கூப்டுவாங்களான்னு.. ஒரு பய கூப்டல.. நமக்கு நாமே மாதிரி இவரே சொல்லிக்கிட்டு திரியிறாப்ள.

சாய் பல்லவி, ரகுல் ப்ரீட் சிங்னு ரெண்டு ஹீரோயின். போலீஸ்ல மோப்ப நாய்க்கு எதுவும் உடம்பு சரியில்லன்னா சாய் பல்லவிய அழைச்சிட்டு போகலாம். நல்லா மோப்பம் புடிக்கிது. ரகுல் ப்ரீட் சிங் LKG ல ப்ரியா ஆனந்த் பன்ன அதே ரோல். பல ஸ்டேட்டுல ஆட்சிய கவுத்து விட்டவங்க. பல ஸ்டேட்டுல ஆட்சிய புடிச்சி குடுத்தவங்க. என்னடா எதோ பைப்புல தண்ணி புடிக்கிற மாதிரி சொல்றீங்க.

சூர்யாவோட நோக்கம் என்ன அவரு எத நோக்கி போறாருன்றதெல்லாம் யாருக்குமே தெரியாத புதிர். தடி மாடு மாதிரி உடம்ப வச்சிக்கிட்டு இளவரசுகிட்ட போய் கக்கூஸ் கழுவி, கூல கும்புடு போட்டு வேலை பாக்குற மாதிரியெல்லாம் காட்சி எடுத்துருக்கது பாக்கவே ரொம்ப அபத்தமா இருக்கு.

படத்துல நிறைய முன்ணனி நட்சத்திரங்கள் நடிச்சிருக்காங்க. ஆனா அத்தனையும் சும்மா டம்மியா வந்துட்டுப்போறாங்க. வேல ராமமூர்த்தியெல்லாம் நல்ல screen presence உள்ளவரு. அவருக்கு படத்துல அள்ளக்கைக்கு ஒரு கடைசி அள்ளக்கை இருந்தா என்ன முக்கியத்துவம் இருக்குமோ அதுகூட இல்லை.  தலைவாசல் விஜய்க்கும் அதே கதி தான்.
வழக்கமா எல்லா படத்துலயும் comeback குடுக்குற யுவனோட இசையில ஒரு பாட்டு மட்டும் நல்லாருக்கு. மத்தபடி ரொம்ப ஆவரேஜ் தான்.

முதல் பாதிகூட எதோ பரவால்லாம ஓடுது. ரெண்டாவது பாதியெல்லாம் ச்சை… எந்த வகையில அதெல்லாம் சேக்குறதுன்னே தெரியல. படத்துல சூர்யா மட்டும் பாக்க ஆளு செமையா இருக்காரு. மத்தபடி உருப்படியா எதும் இல்ல.

மொத்தத்துல மேல சொன்ன மாதிரி 2030 வாக்குல இந்த NGK ஒரு நல்ல படமாக வர்றதுக்கு வாய்ப்பிருக்கே தவற இப்பதைக்கு இத பாக்குறது வேஸ்ட்.

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

2 comments:

அசடன் said...

Bluesatta mathiri
Neenga oru padam
Edukalam illa
Unga cinema knowledge
Nalla iruku

Baranitharan.k said...

இந்த முறை நிறைய எழுத்துபிழைகள் ...உங்கள் விமர்சனம் தானா...அல்லது படம் பார்த்த பாதிப்பா...:-)

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...