Sunday, August 11, 2019

நேர்கொண்ட பார்வை :


Share/Bookmark
இது ஒரு Biased Review. ஏன் அப்டி சொல்றேன்னா நம்ம எப்ப அஜித் விஜய் படங்களுக்கு ரிவியூ பன்னாலும் அது baised ah இருக்கதா நண்பர்களே பல பேர் சொல்லிருக்காங்க. நம்ம எப்பவும் போலதான் பன்றோம். அது அவங்களுக்கு பயாஸ்டா தெரியிது. அதனால ஏன் அவங்கள  மேல பல்ல போட்டு பேச வைக்கனும்னு தான் நானே biased review ன்னு போட்டுட்டேன். சரி வாங்க படம் எப்டி இருக்குன்னு பாப்போம்.

பெரும்பாலும் பெரிய ஹீரோ படங்களுக்கு இந்த Press show க்கள் போட மாட்டாங்க. ஆனா வழக்கத்துக்கு மாறா இந்த படத்துக்கு press show லாம் போட்டு நல்லா கவனிச்சிருப்பாங்க போல. புகழ்றதுக்கு என்னெனல்லாம் வார்த்தை இருக்கோ அத்தனையும் உபயோகிச்சி இந்தப் படத்த புகழ்ந்து தள்ளிருக்காங்க.  Press show நல்லா வேலை செஞ்சிருக்கு.

இன்றைய சூழலுக்கு தேவையான ஒரு படம்..இந்த சப்ஜெக்ட்ட எடுத்து நடிச்சதுக்கு அஜித் சார பாராட்டனும்..  h. வினோத்தோட வசனங்களெல்லாம் கத்தி மாதிரி இருக்குது. இது ரீமேக் படம்றதயே மறந்து அடிச்சி தூள் கிளப்பிட்டு இருக்காங்க. சரி அது அவங்க தொழில். சரி நம்ம பார்வைல படம் எப்டி இருக்குன்னு பாப்போம். 

1994 ல ப்ரியங்கான்னு ஒரு படம். ஜெயராம் ரேவதி நடிச்சது. ரேவதி வீட வேலைபாக்குற ஒரு பொண்ண ஒரு கும்பல் ரேப் பன்னிடுவாங்க. அதுக்கு ஐ விட்னஸ் ரேவதி. அந்த கேஸ் ஒழுங்கா நடக்கக்கூடாதுன்னு ரேவதிக்கு பல பக்கங்கள்ளருந்தும் presssure. அப்ப தண்ணியடிச்சிட்டு சுத்துற ஒரு வக்கீல் ப்ரபுகிட்ட  அந்த கேஸ் போகும். அவரு வாதாடி எப்டி கேஸ ஜெயிக்கிறார்ன்றதுதான் கதை. ப்ரபுக்கும் படத்துல ஒரு ஃபைட்டுலாம் இருக்கு..

கிட்டத்தட்ட அதே மாதிரியான கதை மற்றும் ஹீரோவின் கதாப்பாத்திர அமைப்போட வந்துருக்க படம் தான் இந்த நேர்கொண்ட பார்வை. அங்க ப்ரபு குடிகாரரா இருப்பாரு. இங்க அஜித் வந்து கலகலப்பு திமிங்கலம் சுகர் மாத்திரை வச்சிருக்க மாதிரி இவரு டிப்ரஷனால மாத்திரை போட்டுட்டு இருப்பாரு. மாத்திரை போடலன்னா வெறி வந்து பல பேர அடிச்சி தொம்சம் பன்னிருவாரு.  அப்படிப்பட்ட கேரக்டர்.

பசங்க கூட டின்னருக்கு போற மூணு பொண்ணூங்ககிட்ட அவனுங்க சில்மிஷம் பன்னிட்டானுங்கன்னு ஒரு பாட்டில எடுத்து மூஞ்ச பேத்துருது ஒரு பொண்ணு. அதனால ஏற்படுற விளைவுகள்தான் படம். முதல் பாதிய ரொம்ப கஷ்டப்பட்டுதான் கடக்க வேண்டியிருக்கு. பெரிய அளவுல எந்த காட்சியுமே மனசுல ஒட்ட மாட்டுது. 


இந்த பேய் படங்கள்ள பாத்தோம்நா பில்ட் அப்ப ஏத்துறதுக்காக ஒவ்வொரு சீன் முடியிறப்பவும் அந்த வீட்டு  வேலைக்காரனயோ இல்ல தோட்டக்காரனஜ்யோ காட்டுவானுக.. அவன் அப்டியே மொறைச்சிக்கிட்டே இருப்பான். அதாவது அவருதான் பேயின்னு நம்ம கவனத்த திருப்புறானுகளாம். இந்தப் படத்துல அஜித்தும் அந்த மாதிரிதான் வர்றாரு முதல் பாதில. அப்பப்ப அஞ்சலி பாப்பா மாதிரி ஒண்ணு ரெண்டு வார்த்தை பேசுவாறு.  இண்டர்வல்ல அஜித் ரசிகர்கள குஷி படுத்துறதுக்காக  ஒரு ஃபைட்ட சொருவி விட்டுருக்காங்க. 


செகண்ட் ஆஃப்ல கோர்ட் சீன் வந்தபுறம் ஓரளவுக்கு படம் க்ரிப்பா போகுது. கோர்ட் சீன் ரொம்ப லெந்த்து.. அவ்வளவு இழுக்குற அளவுக்கு கண்டெண்டே இல்ல. ஒரு மர்டர் மிஸ்ட்ரி சஸ்பெக்ட் யாருன்னு விசாரணை பன்றாங்கன்னா ஓக்கே.. சுவார்ஸ்யமா இருக்கும். இங்க சுத்தி சுத்தி ரெசாட்டு ரூமுக்குள்ள போனேன் கதவ சாத்துனேன்.. சரக்கு அடிச்சேன் இவ்வளவுதான். சட்டுபுட்டுன்னு முடிச்சி விடுங்கன்னு தான் தோணுச்சி. ரங்கராஜ் பாண்டே அவர் இண்டர்வியூல கேள்வி கேக்குறதே கோர்ட்ல வாதாடுற மாதிரி தான் இருக்கும். அப்டியே படத்துலயும் பேச வச்சிருக்கலாம். ஆனா அவரோட ஸ்லாங்க மாத்தி கொஞ்சம் நக்கலடிக்கிற மாதிரி பேழுறது கொஞ்சம் irritating ah இருக்கு. 


H.vinoth.. நம்ம பசங்க அடிக்கடி யாரு பேரயாச்சும் போட்டு most under rated இயக்குனர்னு போடுவானுங்கல்ல.. அந்த மாதிரி இவர் most overrated இயக்குனரோன்னு தோணுது. இவருக்கும் Al.vijay க்கும் பெரிய வித்யாசம் தெரியல. ஏன்னா Al.விஜய் என்ன பன்னுவாப்ளன்னா சீன் எடுப்பாரு. அந்த சீன்ல நமக்கு எந்த ஒரு எமோஷனும் வராது. அதே மாதிரி தான் இவரும். காட்சிகள சும்மா எடுக்குறாரு. ஆனா சுவாரஸ்யமா எடுக்க மாட்றாரு. உதாரணத்துக்கு வித்யாபலன் சாகுற சீன் எடுத்துருப்பாரு. புளியே இல்லாம புளி சோறு செஞ்சா எப்டி சப்புன்னு இருக்குமோ அந்த மாதிரி எந்த எமோஷனும் இல்லாம கடனுக்குன்னு இருக்கும். தீரன்லயுமே அதான் ப்ரச்சனை. காட்சிகள் நகரும். ஆனா அதுல பெரிய அளவுல சுவாரஸ்யம் இருக்காது.

அதே மாதிரி கதாப்பாத்திர அமைப்புல ஒவ்வொரு கேரக்டரோட தன்மையும் அந்த கதை ஓட்டத்துக்கு எதாவது ஒரு வகையில சப்போர்ட் பன்னனும். இங்க அஜித்த ஏன் இவ்வளவு சோகமா காமிக்கிறாங்கன்னு தெரியல.. அவரு ஃப்ளாஷ்பேக்னால என்ன யூஸ்? அஜித் அந்த மாதிரி despressed ah இருக்கதால கதையில என்ன ப்ரயோஜனம்? May be pink la அமிதாப் அப்டி இருக்கதால இவங்க வச்சிருக்கலாம். ஆனா அஜித்துக்கு அப்டி காட்டனும்னு அவசியம் இல்லை. அவரோட ரோல ஜாலியா பன்னிருந்தா இன்னும் அந்த கோர்ட் சீன்ஸ் நல்லா எடுபட்டுருக்கும். Message um இன்னும் நல்லா ரீச் ஆயிருக்கும் . அஜித் எதோ டாஸ்மாக்குல ரெண்டு ரவுண்டு எக்ஸ்ட்ராவாகி மட்டையான   தாத்தா மாதிரி உக்கார்ந்துருப்பாப்ள. படத்துக்கு பேருதான் நேர் கொண்ட பார்வை. ஆனா தல படம் ஃபுல்லா கேமராவ பாத்து பேசாமா சைடா பாத்துதான் பேசிகிட்டு இருப்பாரு.  இதுல அடிகடி இ.ஆ.பா விபின் சொல்லுவாப இதயம் பலபீனமானவங்க சொல்றாப்ள ரூல் புக் பாயிண்ட் நம்பர் -1 , பாயிண்ட் நம்பர் 2 ன்னு ... தல உசுற வாங்காம உக்காரு தலன்னு இருந்துச்சி.

சோசியல் மெசேஜ்.. இந்த வரிக்குள்ள நிறைய சுமார் படங்கள் எக்கச்சக்கமா பில்டப் பன்னப்படுது. மெசேஜ் சொன்னா அது நல்ல படம் அவ்வளவு தான். அந்த படத்த நம்மாளுங்க criticise பன்ன மாட்டாங்க. 

அஜித் ஃபேன்ஸ satisfy பன்றது ரொம்ப ஈஸி ஃபோல.. உண்மைலயே அவங்கல பாக்க பரிதாபமா இருக்கு. எத எடுத்தாலும் அவங்களுக்கு அவங்களே satisfy ஆகிக்கிறாங்க. விவேகம் எடுத்தாலும் சரி, விஸ்வாசம் எடுத்தாலும் சரி அவங்க ஹேப்பி. இப்டிலாம் இருந்தா கடைசி வரைக்கும் நல்ல படங்களையே பாக்க முடியாது. இன்னும் ஒரு கார் சீன் ஒரு பைக் சீன வச்சித்தானே எல்லா டைரக்டர்களும் இவங்கள ஏமாத்திட்டு இருக்கானுங்க.   ஒருத்தன் காலைல படம் பாத்துட்டு எங்க தலைக்கு போட்டின்னா அது ஜாக்கிசான் தான்ர்றான். ஜாக்கிசானுக்கு தெரிஞ்சா தூக்குல தொங்கிருவாப்ள. தலை 20 நிமிசம் அதிகமா வந்தாரு கெத்தான்றான்.  இன்னொருத்தன் மைக்கு முன்னாடி நின்னுட்டு வெறி நாய் கவ்வ வர்ற மாதிரி  தல தலன்றான். டேய் இருடா நரம்பு வெடிச்சி செத்துறாதடா..  

இன்னொருத்தர் வந்து இந்தப்படத்துக்கு பாருங்க.. லேடீஸ்லாம் எப்டி கூட்டம் கூட்டமா வந்து ஆதரவு குடுக்கப்போறாங்கன்னு. அதுக்கும் பெரிய வாய்ப்பு இல்ல. ஏன்னா இந்தப் படத்துல காண்பிக்கப்படுற பெண்கள் சராசரி பெண்களுக்கு அப்பாற்பட்டவங்களா இருக்காங்க. அதானால இவங்கள சராசரி வாழ்க்கை வாழும் பெண்கள் அவங்களோட ரிலேட் பன்னி பாத்துக்கவே முடியாது. 

படத்துல நல்ல விஷயங்கள்னு பாத்தா, வீட்ட விட்டு தனியா தங்கி இண்டிபெண்டெண்டா இருக்க பொண்ணுங்க, மத்தவங்ககிட்ட ஜாலியா சிரிச்சி பேசுற பொண்ணுங்கள இந்த சமுதாயம் எந்த மாதிரி பாக்குது, இந்த சமுதாயம் பாக்குற பார்வை தவறு அப்டிங்குறத ரொம்ப தெளிவாவும் அழுத்தமாவும் பதிவு பன்னிருக்காங்க. 

அடுத்து அஜித்... என்ன இருந்தாலும் அவர் இல்லன்னா இந்த படத்துக்கு இவ்வள்வு பெரிய மார்க்கெட்டிங் கிடைச்சிருக்காது. அவரோட ரோல நீட்டா பன்னிருக்காரு. 

அடுத்து இந்தப் படம் தயாரிப்பாளர்களுக்கு மிகப்பெரிய லாபத்தை தரக்கூடிய படமா இருக்கலாம். ஏன்னா மத்த அஜித் படங்கள கம்பேர் பன்னும்போது இதுல பட்ஜெட் ரொம்பவே கம்பியா இருக்கும். ரெண்டாவது பாதி முழுக்கவுமே கிட்டத்தட்ட ரெண்டு மூணு ரூம்லயே முடிஞ்சிருது. 

மொத்தத்துல அத்தனை இணைய தளங்களும் பில்ட் அப் குடுக்குற அளவுக்கு இது ஒரு ஆஹா ஒஹோ படமெல்லாம் இல்ல. ஆனா கண்டிப்பா one time வாட்ச் தான். 

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

1 comment:

Anonymous said...

சொல்ல வந்ததை நேர்மையான சரியாக சொல்லி இருக்கிறார்கள்..
அது எல்லோருக்கும் பிடிக்கும் என்று சொல்ல இயலாது

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...