“இது ஒரு லைட்
காமெடி படம்”
”படம்
பாத்து சிரிக்கிற சிரிப்புல ஹார்ட் லைட் ஆயிருமா?”
“இல்ல..
படத்துல காமெடியே லைட்டாதான் இருக்கும்”
காமெடியைத் தவிற ஒரு காமெடி படத்திற்குத் தேவையான அனைத்துமே உள்ள ஒரு திரைப்படம்..
”எலெக்டீஷியன்
வேஷத்துல இருக்க நா டைமண்ட்ட சுத்தி இருக்க லேசர கட் பண்ணுவேன். ஹவுஸ் கீப்பிங் வேஷத்துல
இருக்க நா ரூம் ஃபுல்லா புகை போட்டுருவேன். ட்ரைவர் வேஷத்துல இருக்க நா வெளில காரோட
வெய்ட் பன்னுவேன்”
”அப்ப
டைமண்ட்ட யார்ரா எடுக்குறது?”
“அய்யய்யோ
அத மறந்துட்டோமேப்பா”
அதே மாதிரி தான். ஒரு நல்ல காமெடி படத்திற்கான கதைக்களம்
இருக்கு. நல்ல திரைகதை இருக்கு.. நல்ல காமெடி நடிகர்கள் இருக்காங்க.. ஆனா காமெடி எழுதுறதுக்கு
நல்ல ரைட்டர கூப்ட மட்டும் மறந்துட்டாங்க.
கிராமத்து
வாழ்க்கை போரடித்து, சிட்டில வேலை பாத்தாதான் மதிப்பும் மரியாதையும் கிடைக்கும்னு நம்பி
ஹைதராபாத்துக்கு போய் சிக்கி சின்னாபின்னமாகுற மூணு இளைஞர்களைப் பத்துன கதை தான் ஐந்த
ஜாதி ரத்னாலு.
காமெடிக்கு
நிறைய ஸ்கோப் இருந்தும் பெரிய அளவுல காமெடி ஒர்க் அவுட் ஆகல. முரளி ஷர்மா, ப்ராம்ஜி, வென்னெலா க்ஷோர், ப்ரம்மானந்தம்
இவங்களயெல்லாம் வச்சிகிட்டு இந்த கதையில Krishnagadi Veera Prema katha அளவுக்கு காமெடில
தெறிக்க விட்டுக்கலாம். ஆனால் வெகு சில இடங்களிலேயே
சிரிப்பு வருது.
கடைசில
கோர்ட்ல வர்ற ஒரு சீன் மட்டும் தான் கொஞ்சம் ஒகே ரகம். ஹீரோயின் கொஞ்சம் நல்ல புள்ளையா
இருக்கு.
மத்தபடி
படம் எந்த அளவு பெருசா இம்ப்ரஸ் பன்னலயோ அதே அளவு பெருசா அருக்கவும் இல்ல. சீரியஸான
கண்டெண்ட் எதும் இல்லாததால ஓரளவுக்கு டீசண்டா போகுது.
ரொம்ப
எதிர்பார்க்காம பாத்தா சுமாரா இருக்கும்.
1 comment:
விரைவில் பார்க்கின்றேன் சகோ!
Post a Comment