ஹாரர் படங்களின் தலைவன் ஜேம்ஸ் வானின் அடுத்த படைப்பு. ஹாரர்
படங்களில் முத்திரை பதித்துவிட்டு அடுத்து Fast & Furious, Aqua Man என அடுத்த லெவலிற்குச் சென்று மறுபடியும் தாய்க்கழகமான
ஹாரருக்கு திரும்பியிருக்கிறார்.
இவரின் ஹாரர்கள் எப்பொழுதுமே ஒரு ட்ரெண்ட் செட்டர்களாக இருக்கும்.
அதுமட்டுமல்லாமல் ஒரு திரைப்படத்தின் முதல் அல்லது முதல் இரண்டு பாகங்களை மட்டும் இவர்
கதை, திரைக்கதையில் இயக்கி அதை பெரிய வெற்றி பெற வைத்து அந்தப் படங்களின் அடுத்தடுத்த
பகுதிகளுக்கான கதையை மட்டும் எழுதி, வேறு ஒரு இயக்குனரை வைத்து தயாரித்து வெளியிடுவது
ஜேம்ஸ் வானின் வழக்கம். SAW, Insidious, The conjuring என அனைத்தும் இதே பேட்டர்ன்
தான். மேற்கண்ட படங்களின் இவர் இயக்காத பாகங்கள் சற்று டொம்மையாக இருப்பதை நன்றாகவே
உணரலாம்.
ஜேம்ஸ் வான் கதை, இயக்கத்தில் வெளியாகியிருக்கிறது
Malignant. Insidious, Conjuring படங்களில்
கொடுத்த அதே பீதியை ஆரம்பத்திலிருந்தே கொடுத்திருக்கிறார். காட்சிப் பதிவுகள், கேமரா
ஆங்கிள்களில் நிறைய புதுமையைக் காண முடிகிறது. ஆனாலும் காட்சிகள் அனைத்தும் நமக்கு
ஏற்கனவே பழக்கப்பட்ட நாடா. அதுமட்டுமல்லாமல் படம் கொஞ்சம் கொஞ்சமாக நீள, என்ன இது நம்ம
ஷங்கர் வழக்கமா எடுக்குற ”மூணு கொலை” கதை மாதிரிப் போகுதே என்று ஒரு சலிப்பும் வர ஆரம்பித்தது.
ஆனால் க்ளைக்மாக்ஸில் இருந்த ஒரு சர்ப்ரைஸ் எலெமெண்ட் சலிப்பை
அப்படியே போக்கி ஒரு நிமிடம் உறைய வைத்தது.
இந்த Malignant அவரின் முந்தைய படங்களைப் போல அடுத்தடுத்த
பாகங்கள் எடுக்கும் அளவு ஒர்த்தா எனக் கேட்டால் இல்லை. ஆனால் நிச்சயம் ஒரு புது அனுபவத்தைக்
கொடுக்கும்.
த்ரில்லர், ஹாரர் விரும்பிகள் நிச்சயம் பார்க்கலாம்.
No comments:
Post a Comment