என்னதான் ஆண்ட்ராய்டு மொபைல் , ஜியோ சிம், 4G என்று வாழ்க்கை போய்க்கொண்டே இருந்தாலும் ஒரு சில பழக்க வழக்கங்கள் அன்றிலிருந்து இன்றுவரை நம் மக்களுடன் ஒன்றியே இருந்துவிட்டது. அவற்றில் ஒன்றுதான் ஜாதகம் பார்ப்பது. நல்லது கெட்டது என எது நடந்தாலும் “சனி பார்க்கிறான்... குரு சிரிக்கிறான்... சூரியன் முறைக்கிறான்” என ஒவ்வொரு கோள்களின் மேல் பழியைப் போட்டு விட்டு, நல்ல நேரத்திற்காக காத்திருக்கிறார்கள். அந்தக் காலம் இந்தக் காலம், படித்தவர்கள் , பாமரர்கள் என்ற வித்யாசம் இல்லாமல் ஒரு பகுதி மக்கள் இந்த ஜாதகக் கணிப்புகளை நம்பிக்கொண்டு தான் இருக்கின்றனர்.
அது பற்றி ஒரு சில பதிவுகள் எழுதலாம் என நினைக்கிறேன். ஏற்கனவே பலர் இது தொடர்பாக எழுதிய பதிவுகள் கொட்டிக்கிடந்தாலும் நமது பார்வையில் ஒரு முறை எழுதலாம் என்ற யோசனை . அதற்கு முன் நமது இணைய மக்கள் என்ன நினைக்கிறார்கள் என தெரிந்து கொள்வதற்காக ஒரு சிறிய சர்வே.
“ ஜாதகக் கணிப்புகளை நீங்கள் நம்புகிறீர்களா இல்லையா என்பதே எனது கேள்வி. நம்பலாமா வேண்டாமா என்பதல்ல. மேலும் கிளி ஜோதிடம், நாடி ஜோதிடம், கைரேகை ஓலைச் சுவடி ஜோதிடம் போன்றவற்றையும் அவை தொடர்பான உங்கள் அனுபவங்களையும் இதில் கருத்தில் கொள்ளவேண்டாம்.
6 comments:
நானும் ஒரு காலத்தில் ஜாதகம் பொய் அப்படினு சொல்லிக்கிட்டு திறிந்சவன்தான். ஆனா ஏழரை சனி ஒருவனுக்கு பிடித்தால்தான் அதன் உண்மை தெரியவரும். நீங்க சும்மா இருந்தாகூட பிரச்சினை உங்களை தேடிவரும். பள்ளி கல்லூரி சொல்லி குடுக்காத பாடத்தை அந்த ஏழரை வருடம் சொல்லிகுடுத்துரும் . ஆனா அதை நாம Successful'a தாண்டி வந்துட்டோம்னா அடுத்து எதிர்காலத்துல வர்ற பிரச்சனைகளை நாம சுலபமா Handle பன்னலாம்
கஷ்டம் வரும்போது கண்டதையும் நம்பத் தோணும். இது சைக்காலஜி. ஜோசியர்கள் வளர்வது இதனால்தான்
You are a small kid to analyse jothidam. why dont u concentrate on your movie reviews?
//You are a small kid to analyse jothidam// நிச்சயமாக. ஆனால் என் அறிவுக்கு எட்டியவற்றை புரிந்துகொள்ள முயற்சிக்கிறேன். அவ்வளவே
பொய்யை பொய் என்று சொல்ல ரொம்ப வயசு ஆகியிருக்க வேண்டியதில்லை
அண்ணா ஜோதிடம் என்பது உண்மை ஆனால் உண்மையான ஜோதிடர்கள் இப்போது உள்ளனரா என்பதுதான் கேள்விக்குறி. ஜாதகத்தில் உள்ள நல்லதை மட்டும் கூறுபவரே உண்மையான ஜோதிடர்(சாதகமான குறிப்புகளை கூறுவதால்தான் சாதகம் என்பது மருவி ஜாதகம் என்றானது) நாம் ஜோதிடத்தில் முன்னரே அறிந்து கொணடாலும் நடக்க இருப்பது நடந்துதான் ஆகும் ஏனெனில் நம் முன்னைய ஜென்மங்களின் கர்மாவின் பலனுக்கேற்பவே இந்த ஜென்மம் அமையும்.
Post a Comment