Sunday, June 17, 2012

முரட்டுக்காளை - அந்தக் காளைய கொல்லுங்கடா!!


Share/Bookmark
For the Past 25 years ah அதாவது கிட்டத்தட்ட 25 வருஷங்களா இப்புடி ஒரு படத்த தான் தேடிக்கிட்டு இருந்தேன். என்னோட இத்தனை வருஷ  அனுபவத்துல இப்படி ஒரு படத்த நா பாத்ததே இல்லை. I have never seen a such a beautiful movie in my life. ரஜினியின் முரட்டுக்காளை ரிலீஸ் ஆனப்ப நான் பொறக்கவே இல்லை. ஆனா அப்ப இருந்துருந்தா எந்த அளவு என்ஜாய் பண்ணிருப்பனோ அதே மாதிரி ஒரு அனுபவத்தை இந்த முரட்டுக்காளை ரீமேக்கின் மூலமாக தந்திருக்காரு டைரக்டர் செல்வபாரதி.  அதுவும் என்னோட favorate சுந்தர்.சி ய வச்சே.

இது ரீமேக் தானான்னு நாமளே சந்தேகப்படும் அளவுக்கு ஒவ்வொரு காட்சியிலயும் புதுமை  புதுமை புதுமை. விவேக்கோட காமெடில தியேட்டரே அதிருது.. இருமல் வர்ற அளவுக்கு சிரிப்பு. விழுந்து விழுந்து சிரிச்சதுல ரெண்டு தடவ முன்னாடி சீட்டுல உக்கார்ந்துருந்த அங்கிள் மேல  விழுந்துட்டேன்னா பாத்துக்குங்களேன். ரஜினி இந்த படத்த பாத்தாருன்னா "ச்ச.. நாம இன்னும் கொஞ்சம் நல்லா பண்ணிருக்காலாமோ" ன்னு ஃபீல் பண்ணுவாரு. அதே எஸ்.பி. முத்துராமன் இந்த படத்த பாத்தாருன்னா "நாம இன்னும் கொஞ்சம் நல்லா எடுத்துருக்கலாமோ" ன்னு  வருத்தப்படுவாரு.

படத்துல முக்கியமா சொல்லவேண்டிய இன்னொரு விஷயம் ஸ்ரீகாந்த் தேவாவோட மிரட்டல் இசை.பட்டைய கெளப்புது. ஸ்நேகாவுக்கும் சிந்து துளானிக்கும் ஒரு போட்டி படத்துல. என்ன போட்டியா? யாரு சிறந்த குடும்ப பெண் அவார்டு வாங்குறதுன்னு தான். படம்முழுக்க சேலையிலயே குடும்ப குத்துவிளக்கு மாதிரி வலம் வர்றாங்க. கொஞ்சம் கூட சலிப்படைய வைக்காத புத்தம் புதிய விறுவிறுப்பான திரைக்கதையில படம் ஜெட் வேகத்துல பயணிக்குது.

மொத்ததுல முரட்டுக்காளை ஒருமுறை பார்க்கும் அளவுக்கு சுமாரான படமாக இல்லாமல் திரும்ப திரும்ப பார்க்க வைக்கும் சூப்பரான படம் என்று சொன்னால் அது மிகையாகாது..."



படம் நல்லாருந்துருந்தா இப்புடியெல்லாம் எழுதலாம்னு தான் ஆசைப்பட்டேன்... ஆனா நடந்தது என்ன? வக்காளி படமாடா இது... சில படங்களை முழுவதும் பாக்க முடியாது.. சில படங்கள பாதிக்கு மேல பாக்க முடியாது. ஆனா இந்த படத்துக்கு போனா கால் மணி நேரத்துல வீட்டுக்கு ஓடிரலமான்னு தோணும். அந்த அளவு கேவலாமான ஒரு படம்.

எஸ்.பி முத்துராமன் எடுத்த அதே ஸ்கிரிப்டுல கேரக்டர மட்டும் மாத்தி போட்டு கருமத்த எடுத்துட்டு டைட்டில்ல  மட்டும் "கதை, திரைக்கதை, வசனம், டைரக்ஷன் செல்வபாரதின்னு போட்டுக்குது.. ஏண்டா உனக்கெல்லாம் வெக்கமே இல்லையா? முப்பது வருஷம் முன்னாடி எடுத்த அந்த படத்துல ஹீரோ பேரு காளையன். சரி 2012 ல எடுத்த இந்த படத்துலயாது காளையங்கற பேர மாத்தி கொசக்ஸி பசப்புகழ், பஞ்சவன் பாரிவேந்தன் எதாவது லேட்டஸ்ட் தமிழ் பேர வச்சிருக்கலாம்ல.

இந்த படத்துல சுந்தர்.சி ய பாக்கும் போது ரொம்ப பாவமா இருந்துச்சி. அவரோட ஹீரோ  அவதாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க இந்த ஒரு படம் மட்டுமே போதும்.  படம் பாக்கும் போது  நண்பர் ஒருத்தர் சொன்னாரு இந்த படம் எடுக்கும் போது "சுந்தர்.சி க்கு கால் உடைஞ்சதால  தான் இந்த படம் வர லேட் ஆயிருச்சின்னு. அப்புடியே இந்த படத்த ட்ராப் பண்ணிருந்தா கூட அவரு மேல ஒரு நல்ல மரியாதை இருந்துருக்கும்.

படத்துல் ஒரு கொடூர காமெடி என்னன்னா சுந்தர்.சி போலீஸ்லருந்து தப்பிச்சி ஒரு பயரமான காட்டுல ஒளிஞ்சிருப்பாரு (ஒளிஞ்சி- நோட் திஸ் பாய்ண்ட் யுவர் ஹானர்) ஆனா அவர ஹீரோயின் போய் பாத்துட்டு வருவாங்க. போலீஸ் போய் பாத்துட்டு வருவாங்க. வில்லன் பாத்துட்டு வருவான். அவரு தம்பிங்க பாத்துட்டு  வருவாங்க. எல்லாருக்கும் தெரிஞ்ச ஒரு எடத்துல எதுக்குடா ஒளிஞ்சிருக்கீங்க. அதுக்கு பேசாம வீட்டுலயே வந்து இருக்கலாமே (ஒரிஜினல் படத்துலயும் இப்டிதான் இருக்கும்... ஆனா இப்பயாது
அத கொஞ்சம் மாத்திருக்கலாமே)

விவேக்க பத்தி சொல்லியே ஆகனும். 2.30 மணி நேர படத்துல சுந்தர்.சி அரை மணி நேரம் தான் வருவாரு. மத்த நேரமெல்லாம் இந்த சனியன் தான் வந்து கத்தி கத்தி காது வலிய வரவச்சிருச்சி. அவன் பேசுனதுல முக்காவாசி டபுள் மீனிங் வசனங்கள். படத்துல பாக்குற மாதிரி இருந்த ஒரே விஷயம் பதினாறு வயதினிலே டாக்டர் கேரக்டர்ல  வர்ற செல்முருகன் சீன்ஸ் மட்டும் தான்.

அப்புறம் சிந்துதுலானி... இந்த பீஸுக்கு எக்ஸ்பைரி டேட் முடிஞ்சி பல வருஷம் ஆகுது. திரும்ப இத ஹீரோயினா பாக்குறத்துக்கு ரெம்ப குஷ்டமா இருக்கு. அந்த பட்டிக்காட்டுல அரைக்கால்  டவுசரும் முண்டா பனியனையும் போட்டுக்கிட்டு இது பண்ற அநியாயம் தாங்க முடியல.மார்டன் கேர்ளாமாப்பா. அதுகூட பரவால்லா.. ஆத்தா ஸ்நேகா...பாக்க ரொம்ப அழகா இருக்கீங்க. காலம் போன கடைசில ஏன் உனக்கு இந்த வேலை. உங்க விட்டுல தாவணிலாம் எப்புடி போட்டுக்கிறதுன்னு சொல்லித்தரலயா.. இந்த மாதிரி தாவணி போடுறத நாம எங்கயுமே பாத்துருக்க முடியாது. இதயெல்லாம் பாத்தா ப்ரசன்னா எவளோ வருத்தப்படுவாரு.

மக்களே எனக்காக ஒரே ஒரு உதவி பண்ணுங்க.. இந்த ஸ்ரீகாந்த் தேவாவ எங்கயாச்சும் பாத்தீங்கன்னா கல்ல கொண்டு எறிஞ்சி கொண்ணுடுங்க. என்ன கேஸானாலும் நா பாத்துக்குறேன். நாரப்பயபுள்ள. படம் எடுக்குறதுக்கு முன்னாலயே மியூசிக் போட்டுடான் போல. அதுபாட்டுக்கு தனியா என்னமோ ஒடிகிட்டு இருக்கு. இது ஒரு ரீமேக் படம்ங்கறதால இவரும் பல படங்களோட இசைய ரீமேக்  பண்ணி இதுல போட்டுருக்காரு.

சுந்தர்.சிக்கு தம்பிங்களா ஒரு நாலு பேர செலக்ட் பண்ணிருந்தாங்க பாருங்க.. beautiful selection லொல்லு சபா ஜீவா.. ரோபோ ஷங்கரோட நடிக்கிற அரவிந்த். காதல் படத்துல வர்ற ஒர்க் ஷாப் பையன். அப்புறம் விவேக் காமெடிகள்ல வர்றா சின்ன பையன்.. இந்த காம்பினேஷன்கள பாக்கவே கன்றாவியா இருக்கு. இதுல பாவப்பட்ட ஜீவன்னா அது ஜீவா தான். அவர் டயலாக் பேசுறத பாத்தா ஒரு சீன்ல சரத்குமார் பேசுற ஸ்லாங்ல இருக்கு.. இன்னொரு சீன்ல ரஜினி பேசுற ஸ்லாங்ல இருக்கு.... லொல்லு சபால நடிச்சி நடிச்சி சொந்த ஸ்லாங்க தொலைச்சிட்டியேப்பா...



நான் இதுவரைக்கும் பார்த்த சிறந்த கேவலாமன படங்களை வரிசைப்படுத்தினா இந்தபடம் கண்டிப்பா முதல் இடத்த புடிச்சிரும்.


முரட்டுக்காளை Remake      = 20 ஆழ்வார்
                                                       = 15 அசல்
                                                       = 10 வில்லு
                                                       =  5 சுறா

மொத்தத்துல முரட்டுக்காளை The Remake - டிவில போட்டா கூட பாத்துடாதீங்க.


Sunday, June 10, 2012

தடையறத் தாக்க...


Share/Bookmark
"புகைபிடித்தல் புற்று நோயை உண்டாக்கும்.. புகை பிடித்தல் உடல் நலத்துக்கு தீங்கு விளைவிக்கும்"         

"புகைபிடித்தல் புற்று நோயை உண்டாக்கும்.. புகை பிடித்தல் உடல் நலத்துக்கு தீங்கு விளைவிக்கும்"   

 "புகைபிடித்தல் புற்று நோயை உண்டாக்கும்.. புகை பிடித்தல் உடல் நலத்துக்கு தீங்கு விளைவிக்கும்"

ஒரு மூணு தடவ திரும்ப திரும்ப படிக்கிறதுக்கே கடுப்பா இருக்குல்ல... இந்த
படத்துல இத ஒரு அம்பது தடவ இத போடுறாய்ங்க.. புகைபிடிக்கிற காட்சிகளே படங்கள்ல இருக்க கூடாதுன்னுதான் நம்ம அரசாங்கம் புதுசு புதுசா ரூல் போடுறாங்க. ஆனா அதுலயும் எங்கல்லாம் ஓட்டை இருக்குதோ அதயெல்லாம் தேடிப்புடிச்சி அந்த மாதிரி சீன வச்சிடுறாய்ங்க. கேட்டா கதைக்கு தேவைப்படுதுன்னு ஒரு உதாரு வேற.  " உங்க படத்துல ரவுடியா வர்றவரு ஏன்யா சிகரெட் குடிக்க மாட்டேங்குறாரு? உனது கதையில் பிழை இருக்கிறது" ன்னு யாராவது அவர்ட்ட போயி சண்டை போடப்போறாங்களா என்ன...

அருண்விஜயின் இரண்டு மசாலா ஹிட்டுகளுக்கு அப்புறம் ஒரு வித்யாசமான கதை அமைப்போட வந்துருக்க ஒரு படம். தனுஷோட பொல்லாதவன் டைப் கதை மற்றும் காட்சி அமைப்புகள். வழக்கமான மொரட்டு தனமான ரவுடி கும்பல்ல மாட்டிக்கிற ஒரு அப்பாவி சூப்பர் ஹீரோவோட கதை தான் இந்த தடையற தாக்க. ஆனா முடிஞ்ச வரைக்கும் அதுல கொஞ்சம் சஸ்பென்ஸ புகுத்தி வித்யாசமா காட்ட முயற்சி பண்ணி இருக்காங்க.

மொத்தமா படத்துல குறை சொல்லக்கூடிய ஐட்டங்கள் ரொம்ப கம்மி. எல்லாரும் அவங்கவங்க வேலைய கரெக்டா பண்ணிருக்காங்க. குறிப்பா திரைக்கதை, கேமரா, ஸ்டண்ட் மற்றும் இசை. ஆஹா ஓஹோன்னு பாராட்ட முடியலண்ணாலும் அருவை ரகம் இல்லை. முதல் பாதில ஒரளவு காமெடி, காதல், ரவுடிஸம்னு நகருற கதை  ரெண்டாவது பாதில முழுசும் ஒரே சஸ்பென்ஸ் ஆக் ஷனுக்கு  மாறிடுது. முதல் பாதில இன்னும் கொஞ்சம் நகைச்சுவை காட்சிகளை சேத்துருக்கலாம்.

வில்லன்களா வர்ற ரெண்டுபேரும் கேரக்டருக்கு அப்புடியே பொருந்துறாங்க.
அவங்களோட கேரக்டர விளக்க ஒரு ஃப்ளாஷ்பேக் வச்சி தெளிவா எடுத்துருந்த இயக்குனர் அருண்விஜய் ஏன் இப்புடி ரவுடிங்க மேல கோவப்பட்டு பந்தாடுறாருன்னு ஒரு Valid reason காமிக்க மறந்துட்டாரு.
  
ப்ளஸ்:

1. Bore அடிக்காத திரைக்கதை. ஒவ்வொரு சீனும் சூப்பர்னு சொல்ல முடியலண்ணாலும் குறைகண்டுபுடிக்க முடியாத திரைக்கதை.

2. படத்துல மொத்தம் ரெண்டே ரெண்டு பாட்டுதான். அதுவும் முதல் பாதிலயே
முடிஞ்சிருது. குறிப்பா படத்தோட க்ளைமாக்ஸ் நெருங்கிகிட்டு இருக்கும் போது வழக்கமா வர்ற குத்துப்பாட்டு இல்லை. அதுவரைக்கும் சந்தோஷம்.

2. தமனோட BGM சூப்பர். ஆக் ஷன் படத்துக்கேற்ற தரமான music.

3. அருண் விஜய்க்கு எதாவது ஃப்ளாஷ்பேக் இருக்கும்னு நெனச்சேன்.
எதிர்பார்த்தமாதிரி ஃப்ளாஸ்பேக் வைக்காம இருந்தது பெரிய ட்விஸ்டா இருந்துச்சி

4.  அருண் விஜய் ஆளு செம ஃபிட்டா இருக்காரு. ஆக் ஷன் காட்சிகள்ல
பூந்து விளையாடிருக்காரு. நல்ல நடிப்பும் கூட.

5. படத்தோட second half. நல்ல விறுவிறுப்பா, சஸ்பென்ஸோட கொண்டுபோயிருக்காங்க.

மைனஸ்:

1. மம்தாவ ஹீரோயினா போட்டது.. எனக்கு  பிடிக்காத சில ஹீரோயின்கள்ல மம்தாவும் ஒண்ணு. ஆனா என்ன பண்றது..எல்லா படத்துக்கும் ஹண்சிகா, அனுஷ்கா தமன்னாவ போடனும்னா ப்ரொடியூசர் எங்க போவாரு. அவன் அவன் அவனவன் சேஃப்டிய பாக்கதான செய்வான்.

2. யாவரும் நலம் படத்துல அந்த "Cook Book" சீன் பாத்துருப்பீங்க. அந்த சீனோட
கண்டெண்ட் ஒரு மாதிரியா இருந்தாலும் அந்த சீன ரொம்ப டீசண்ட்டா எடுத்துருப்பாங்க அதே மாதிரி இந்த படத்துல பட்டர்ஃப்ளைன்னு ஒண்ண வச்சி எதோ ட்ரை பண்றாய்ங்க.அத பாத்தா கடுப்பு தான் வருது. மம்தா வர்ற காட்சிகள் எல்லாமே கப்பி தனமா இருக்கு.

3. ரவுடிங்கள பத்துன கதைங்கறாதால,  படத்துலஅருண் விஜய தவற
எல்லாரும் கண்டிஷன் பெயில்ல வந்தவிங்க மாதிரியே இருக்காங்க. பாக்கவே ஒரு மாதிரி இருக்கு.

மொத்ததுல இந்த படத்த பாத்தே தீரவேண்டிய படம்னு சொல்ல முடியாது. ஆனா தாராளமா ஒரு தடவ பாக்கலாம். Low Budget படம்ங்கறதுக்காக "வழக்கு எண்" ங்கற மொக்கைகளை எல்லாம் பாத்து வெற்றிபெற வச்ச நாம இந்த படத்த பாக்குறதுல தப்பே இல்லை.



LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...