Sunday, June 17, 2012

முரட்டுக்காளை - அந்தக் காளைய கொல்லுங்கடா!!


Share/Bookmark
For the Past 25 years ah அதாவது கிட்டத்தட்ட 25 வருஷங்களா இப்புடி ஒரு படத்த தான் தேடிக்கிட்டு இருந்தேன். என்னோட இத்தனை வருஷ  அனுபவத்துல இப்படி ஒரு படத்த நா பாத்ததே இல்லை. I have never seen a such a beautiful movie in my life. ரஜினியின் முரட்டுக்காளை ரிலீஸ் ஆனப்ப நான் பொறக்கவே இல்லை. ஆனா அப்ப இருந்துருந்தா எந்த அளவு என்ஜாய் பண்ணிருப்பனோ அதே மாதிரி ஒரு அனுபவத்தை இந்த முரட்டுக்காளை ரீமேக்கின் மூலமாக தந்திருக்காரு டைரக்டர் செல்வபாரதி.  அதுவும் என்னோட favorate சுந்தர்.சி ய வச்சே.

இது ரீமேக் தானான்னு நாமளே சந்தேகப்படும் அளவுக்கு ஒவ்வொரு காட்சியிலயும் புதுமை  புதுமை புதுமை. விவேக்கோட காமெடில தியேட்டரே அதிருது.. இருமல் வர்ற அளவுக்கு சிரிப்பு. விழுந்து விழுந்து சிரிச்சதுல ரெண்டு தடவ முன்னாடி சீட்டுல உக்கார்ந்துருந்த அங்கிள் மேல  விழுந்துட்டேன்னா பாத்துக்குங்களேன். ரஜினி இந்த படத்த பாத்தாருன்னா "ச்ச.. நாம இன்னும் கொஞ்சம் நல்லா பண்ணிருக்காலாமோ" ன்னு ஃபீல் பண்ணுவாரு. அதே எஸ்.பி. முத்துராமன் இந்த படத்த பாத்தாருன்னா "நாம இன்னும் கொஞ்சம் நல்லா எடுத்துருக்கலாமோ" ன்னு  வருத்தப்படுவாரு.

படத்துல முக்கியமா சொல்லவேண்டிய இன்னொரு விஷயம் ஸ்ரீகாந்த் தேவாவோட மிரட்டல் இசை.பட்டைய கெளப்புது. ஸ்நேகாவுக்கும் சிந்து துளானிக்கும் ஒரு போட்டி படத்துல. என்ன போட்டியா? யாரு சிறந்த குடும்ப பெண் அவார்டு வாங்குறதுன்னு தான். படம்முழுக்க சேலையிலயே குடும்ப குத்துவிளக்கு மாதிரி வலம் வர்றாங்க. கொஞ்சம் கூட சலிப்படைய வைக்காத புத்தம் புதிய விறுவிறுப்பான திரைக்கதையில படம் ஜெட் வேகத்துல பயணிக்குது.

மொத்ததுல முரட்டுக்காளை ஒருமுறை பார்க்கும் அளவுக்கு சுமாரான படமாக இல்லாமல் திரும்ப திரும்ப பார்க்க வைக்கும் சூப்பரான படம் என்று சொன்னால் அது மிகையாகாது..."படம் நல்லாருந்துருந்தா இப்புடியெல்லாம் எழுதலாம்னு தான் ஆசைப்பட்டேன்... ஆனா நடந்தது என்ன? வக்காளி படமாடா இது... சில படங்களை முழுவதும் பாக்க முடியாது.. சில படங்கள பாதிக்கு மேல பாக்க முடியாது. ஆனா இந்த படத்துக்கு போனா கால் மணி நேரத்துல வீட்டுக்கு ஓடிரலமான்னு தோணும். அந்த அளவு கேவலாமான ஒரு படம்.

எஸ்.பி முத்துராமன் எடுத்த அதே ஸ்கிரிப்டுல கேரக்டர மட்டும் மாத்தி போட்டு கருமத்த எடுத்துட்டு டைட்டில்ல  மட்டும் "கதை, திரைக்கதை, வசனம், டைரக்ஷன் செல்வபாரதின்னு போட்டுக்குது.. ஏண்டா உனக்கெல்லாம் வெக்கமே இல்லையா? முப்பது வருஷம் முன்னாடி எடுத்த அந்த படத்துல ஹீரோ பேரு காளையன். சரி 2012 ல எடுத்த இந்த படத்துலயாது காளையங்கற பேர மாத்தி கொசக்ஸி பசப்புகழ், பஞ்சவன் பாரிவேந்தன் எதாவது லேட்டஸ்ட் தமிழ் பேர வச்சிருக்கலாம்ல.

இந்த படத்துல சுந்தர்.சி ய பாக்கும் போது ரொம்ப பாவமா இருந்துச்சி. அவரோட ஹீரோ  அவதாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க இந்த ஒரு படம் மட்டுமே போதும்.  படம் பாக்கும் போது  நண்பர் ஒருத்தர் சொன்னாரு இந்த படம் எடுக்கும் போது "சுந்தர்.சி க்கு கால் உடைஞ்சதால  தான் இந்த படம் வர லேட் ஆயிருச்சின்னு. அப்புடியே இந்த படத்த ட்ராப் பண்ணிருந்தா கூட அவரு மேல ஒரு நல்ல மரியாதை இருந்துருக்கும்.

படத்துல் ஒரு கொடூர காமெடி என்னன்னா சுந்தர்.சி போலீஸ்லருந்து தப்பிச்சி ஒரு பயரமான காட்டுல ஒளிஞ்சிருப்பாரு (ஒளிஞ்சி- நோட் திஸ் பாய்ண்ட் யுவர் ஹானர்) ஆனா அவர ஹீரோயின் போய் பாத்துட்டு வருவாங்க. போலீஸ் போய் பாத்துட்டு வருவாங்க. வில்லன் பாத்துட்டு வருவான். அவரு தம்பிங்க பாத்துட்டு  வருவாங்க. எல்லாருக்கும் தெரிஞ்ச ஒரு எடத்துல எதுக்குடா ஒளிஞ்சிருக்கீங்க. அதுக்கு பேசாம வீட்டுலயே வந்து இருக்கலாமே (ஒரிஜினல் படத்துலயும் இப்டிதான் இருக்கும்... ஆனா இப்பயாது
அத கொஞ்சம் மாத்திருக்கலாமே)

விவேக்க பத்தி சொல்லியே ஆகனும். 2.30 மணி நேர படத்துல சுந்தர்.சி அரை மணி நேரம் தான் வருவாரு. மத்த நேரமெல்லாம் இந்த சனியன் தான் வந்து கத்தி கத்தி காது வலிய வரவச்சிருச்சி. அவன் பேசுனதுல முக்காவாசி டபுள் மீனிங் வசனங்கள். படத்துல பாக்குற மாதிரி இருந்த ஒரே விஷயம் பதினாறு வயதினிலே டாக்டர் கேரக்டர்ல  வர்ற செல்முருகன் சீன்ஸ் மட்டும் தான்.

அப்புறம் சிந்துதுலானி... இந்த பீஸுக்கு எக்ஸ்பைரி டேட் முடிஞ்சி பல வருஷம் ஆகுது. திரும்ப இத ஹீரோயினா பாக்குறத்துக்கு ரெம்ப குஷ்டமா இருக்கு. அந்த பட்டிக்காட்டுல அரைக்கால்  டவுசரும் முண்டா பனியனையும் போட்டுக்கிட்டு இது பண்ற அநியாயம் தாங்க முடியல.மார்டன் கேர்ளாமாப்பா. அதுகூட பரவால்லா.. ஆத்தா ஸ்நேகா...பாக்க ரொம்ப அழகா இருக்கீங்க. காலம் போன கடைசில ஏன் உனக்கு இந்த வேலை. உங்க விட்டுல தாவணிலாம் எப்புடி போட்டுக்கிறதுன்னு சொல்லித்தரலயா.. இந்த மாதிரி தாவணி போடுறத நாம எங்கயுமே பாத்துருக்க முடியாது. இதயெல்லாம் பாத்தா ப்ரசன்னா எவளோ வருத்தப்படுவாரு.

மக்களே எனக்காக ஒரே ஒரு உதவி பண்ணுங்க.. இந்த ஸ்ரீகாந்த் தேவாவ எங்கயாச்சும் பாத்தீங்கன்னா கல்ல கொண்டு எறிஞ்சி கொண்ணுடுங்க. என்ன கேஸானாலும் நா பாத்துக்குறேன். நாரப்பயபுள்ள. படம் எடுக்குறதுக்கு முன்னாலயே மியூசிக் போட்டுடான் போல. அதுபாட்டுக்கு தனியா என்னமோ ஒடிகிட்டு இருக்கு. இது ஒரு ரீமேக் படம்ங்கறதால இவரும் பல படங்களோட இசைய ரீமேக்  பண்ணி இதுல போட்டுருக்காரு.

சுந்தர்.சிக்கு தம்பிங்களா ஒரு நாலு பேர செலக்ட் பண்ணிருந்தாங்க பாருங்க.. beautiful selection லொல்லு சபா ஜீவா.. ரோபோ ஷங்கரோட நடிக்கிற அரவிந்த். காதல் படத்துல வர்ற ஒர்க் ஷாப் பையன். அப்புறம் விவேக் காமெடிகள்ல வர்றா சின்ன பையன்.. இந்த காம்பினேஷன்கள பாக்கவே கன்றாவியா இருக்கு. இதுல பாவப்பட்ட ஜீவன்னா அது ஜீவா தான். அவர் டயலாக் பேசுறத பாத்தா ஒரு சீன்ல சரத்குமார் பேசுற ஸ்லாங்ல இருக்கு.. இன்னொரு சீன்ல ரஜினி பேசுற ஸ்லாங்ல இருக்கு.... லொல்லு சபால நடிச்சி நடிச்சி சொந்த ஸ்லாங்க தொலைச்சிட்டியேப்பா...நான் இதுவரைக்கும் பார்த்த சிறந்த கேவலாமன படங்களை வரிசைப்படுத்தினா இந்தபடம் கண்டிப்பா முதல் இடத்த புடிச்சிரும்.


முரட்டுக்காளை Remake      = 20 ஆழ்வார்
                                                       = 15 அசல்
                                                       = 10 வில்லு
                                                       =  5 சுறா

மொத்தத்துல முரட்டுக்காளை The Remake - டிவில போட்டா கூட பாத்துடாதீங்க.


பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

16 comments:

ANBUTHIL said...

இந்த குப்பய பாக்குறதுக்கு 10 வெள்ளி(டாலர்)செலவு பண்ணிட்டேன் தல

முத்துசிவா said...

ஹி ஹி..விதி யார விட்டுச்சி :)

Manimaran said...

பாஸ் இப்படி வெரட்டி வெரட்டி அடிச்சிரிக்கீங்க...சத்தியமா ஒந்த படம் ஓடுற தியேட்டர் பக்கம் தலை வச்சிக்கூட படுக்கமாட்டேன்

Prem S said...

முரட்டுக்காளை Remake = 20 ஆழ்வார்
= 15 அசல்
= 10 வில்லு
= 5 சுறா //என்ன ஒரு வில்லத் தனம் .நகைச்சுவை ததும்பும் உங்கள் விமர்சனத்தை ரசித்தேன்

JR Benedict II said...

HI.. HI.. SEMA REVIEW..
எனக்கு பிடித்த டாப் 10 பிளாக்குகள்
http://ideasofharrypotter.blogspot.com/2012/06/10_16.html

JR Benedict II said...
This comment has been removed by the author.
Gobinath said...

அப்பாடா நான் தப்பிச்சன். ஒரு திருட்டு டிவிடி காசை மிச்சப்படுத்துறத்துக்கு உங்க விமர்சனம் உதவியிருக்கு தலைவா. நன்றிகள் பலகோடி

திண்டுக்கல் தனபாலன் said...

நல்ல விமர்சனம் ! இதற்கு மேல் இந்த படத்திற்கு போக பிடிக்குமா ? நன்றி !

scenecreator said...

ayyo pavam.
my blog about rajini
http://scenecreator.blogspot.com/2012/05/2_30.html

யாஸிர் அசனப்பா. said...

அய்யய்யோ படம் நல்லா இருக்கும் போல, போச்சுடா இனி சுந்தர் சி. நடிக்கவந்துடுவாரே, பிறகு கலகலப்பு மாதிரியான படங்களை எடுக்க ஆளே இருக்கமாட்டாங்களேன்னு கவலைப்பட்டேன். நல்ல வேளை ஆண்டவன் காப்பாற்றிவிட்டான்.

Anonymous said...

சிம்புவின் குரலில்... சுந்தர புருஷா பாடல் சும்மா பிச்சி உதறுதாம்ல..

முத்துசிவா said...

எல்லாரும் தியேட்டர விட்டு போனப்புறம் அது பிச்சி உதறி என்ன பிரயோசனம் :)

MANO நாஞ்சில் மனோ said...

முரட்டு காளை சக்சஸ்'ன்னு சொல்லுங்க...

Unknown said...

சேம் பிலீங் படத்த டிவில போட்டா என்ன டிவில டிரைலர போட்டா கூட பார்த்துராதீங்க

Karthikeyan said...

பிரிச்சி மேஞ்சிட்டீங்க போங்க.. உள்ளது உள்ளபடியே உங்க விமர்சனம் சொல்லுது..

Jayadev Das said...

நீங்க சொல்றத பார்த்தா திருட்டு சி.டி. யில கூட பார்க்க லாயக்கில்லாத படம் போல இருக்கே!

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...