Monday, November 22, 2010

நகரம்-அசத்தலான மறுபக்கம்


Share/Bookmark
வியக்கவைக்கும் திருப்பங்கள் அதிகம் இல்லை. அனல் பறக்கும் சண்டை காட்சிகள் அதிகம் இல்லை. படம் பாக்குறவங்கள சீட்டோட நுனியில உக்கார  வைக்கிற மாதிரி எந்த காட்சிகளும் இல்லை. ( இப்ப வர்ற படத்துக்கெல்லாம் படம் எப்படா விடுவாய்ங்க, எப்படா எழுந்து ஓடலாம்ங்குறதுக்காக தான் ரசிகர்கள் சீட்டோட நுனியில் உக்கார்ந்து இருக்காங்கங்குறது வேற விஷயம்)

வேற என்ன தான் இருக்கு இந்த படத்துல?

தியேட்டர குலுங்க வைக்கிற வடிவேலுவின் காமெடி காட்சிகளே அவை. வடிவேலுவை சரியாக உபயோக படுத்தினா படத்தை நகர்த்த வேறு எதுவும் தேவை இல்லை என்பதை ஏற்கனவே நிரூபித்த சுந்தர்.C, இந்த படத்திலும் அதே யுக்தியை கையாண்டு வெற்றி பெற்றிருக்கிறார். படத்தை தனி ஆளாக தூக்கி நிறுத்துறாறு வடிவேலு. ஸ்டைல் பாண்டியாக வரும் வடிவேலுவின் காட்சிகளுக்கு தியேட்டரே குலுங்குகிறது. குறிப்பாக வடிவேலுவின் நூறாவது திருட்டுக்கு சக நண்பர்கள் போஸ்டர் அடித்து ஒட்டி, போலீஸில் மாட்டிக் கொள்வது கலக்கல்.

கேட் செல்வமாக சுந்தர்.C. முன்னால் ரவுடி திருந்த முயற்சித்து, சந்தர்பங்களால் திரும்பவும் பழைய பாதைக்கே தள்ளப்படுகிறார். யதார்த்தமான நடிப்பு. ஏற்கனவே பார்த்து பழகிய காட்சிகளானாலும் சற்று மெருகேற்றி புதிய பானியில். எந்த காட்சியும் முகத்தை சுழிக்க வைக்கும் அருவை ரகம் இல்லை. ஆரம்பத்திலிருந்து கடைசி வரை ஒரே வேகத்தில் சென்று முடிவடைகிறது.

மதுரை சம்பவத்திற்கு பிறகு, அனுயாவ ஹீரோயினா பாக்க கொஞ்சம் கஷ்டமாதான் இருக்கு. தமன் இசையில் என் பேரு க்ரிஷ்ணவேணி, புடிச்சா புளியங்கொம்பு பாடல்கள் OK. மத்தபடி பிண்ணனி இசை சொல்லிக்கொள்வது
போல் இல்லை.

நகரம்  - வின்னர், கிரி, தலைநகரம் வரிசையில் மற்றொரு ஆக்க்ஷன்+காமெடி கலக்கல்

Thursday, November 11, 2010

கவுண்டரின் பார்வையில் உத்தமபுத்திரன்


Share/Bookmark
(கோயில் காளை பட்த்தில் வரும் அந்த மைக் செட் காமெடியை நினைவு படுத்திக்கொள்ளவும்)


 இடம்: உத்தமபுத்திரன் படம் ஓடும் தியேட்டர். தலைவர் கவுண்டர் டிக்கெட் கவுண்டர்ல டிக்கெட் எடுக்குறதுக்காக நிக்கிறாரு... அந்த நேரத்துல செந்தில் மொத ஷோ படம் பாத்துட்டு பாடு பாடிகிட்டே வெளிய வர்றாரு..

செந்தில்: சட்டி சுட்டதடா.. கை விட்டதடா.... 


கவுண்டர்: டேய் திருட்டு விசிடி வாயா... ஏற்கனவே உன் கை அடுப்புல வச்சி கருக்குன மாதிரிதான் இறுக்கு... இதுல சட்டி சுட்டது எங்க தெரிய போகுது... சரி படம் எப்புடிடா இருக்கு?

செந்தில்: (சோகமான குரலில்) அண்....ண்ணேன்...

கவுண்டமணி: அட சொல்றா.....

செந்தில் :  அண்....ணேன்....

கவுண்டமணி : அடடடா... சின்ன பையன்ங்குறது கரெக்டா இருக்குடா...  நா என்ன படம் நல்லாருக்குன்னு சொன்னா, உன்னை இன்னொரு தடவ டிக்கெட் போட்டு அழச்சிட்டு போ ன்னு சொல்லபோறனா என்ன? இரு நாயே.. உன்ன படம் பாத்துட்டு வந்து வச்சிக்கிறேன்.

(3.30 மணி நேரத்திற்கு பிறகு )

செந்தில் வீட்டு திண்ணைல உக்காந்து பாட்டு பாடிக்கிட்டு இருக்க, கவுண்டர் ரெண்டு காதையும் தாங்கி புடிச்ச மாதிரி கைய வச்சிகிட்டு, மெல்ல வர்றாரு. 

கவுண்டர் : ஆஹ... ஆஹ..... ஆஹ... ஏண்டா சொல்லல?

செந்தில்: அண்...ணேன்....

கவுண்டர் : அப்பயிலருந்து நொண்ணேன் நொண்ணேன்னு சொல்றியே தவற படம் ஏன் நல்லா இல்லை சொல்லல?

செந்தில் : அண்ணேன் அண்ணேன்னு சொல்ல வருது... ஆனா படம் நல்லா இல்லை சொல்ல வரல...

கவுண்டர்:
ஆங்... அதெப்புடி சொல்லுவ... நானும் போயி சாவட்டும் மறச்சிருப்படா நீ... ஒரு மணி நேரமா ரெண்டு மணி நேரமா? 3.30 மணி நேரம்டா... எடையில எழுந்திரிச்சி உடியாந்துரலாம்னா கதவ வேற
மூடிட்டானுக... இதே படத்த நா வேற வேற பேர்ல இதுக்கு முன்னாடியே பாத்துருக்கேன். எம்பது தொண்ணூறு  வயசுல வர்ர கொழப்பமெல்லாம் எனக்கு இந்த படத்த பாத்தோன வந்துருச்சி... அப்புடியே என்ன கை தாங்கலா
கூட்டிகிட்டு போயி அங்க உக்கரவையி...

(அங்கு வடிவேலு வேக வேகமாக வருகிறார்)

வடிவேலு : என்னணே... ரெண்டு பேரும் நல்ல படம் பாத்தீங்களா?

கவுண்டர்: டேய்... போயிரு

வடிவேலு : உத்தமபுத்திரன், குவார்ட்டர் கட்டிங் ரெண்டு படத்தயும் ரெண்டு பேரும், ரெண்டு ரெண்டு தடவ பாத்துருப்பீங்களே?...

செந்தில்: வடிவேலு வேணாம்,,

வடிவேலு : அது எப்புடிண்ணே.. நா ஒரு மனுஷன்னு இங்க இருக்கேன்ல,,.. என்னயும் அழச்சிட்டு போகனும்னு தோனலயா உங்களுக்கு...

கவுண்டர்: டேய் நாதஸ்... அத இப்புடி குடு..

செந்தில் : இந்தாங்கண்ணே...

 கவுண்டர்: இந்தா குவார்ட்டர் கட்டிங் படத்துக்கு நைட் ஷோ டிக்கெட்டு... உனக்காகவே வாங்கி வச்சிருக்கேன்..

வடிவேலு : அவ்வ்வ்வ்வ்.. ரொம்ப நன்றிண்ணே... மிச்சத்த படம் பாத்துட்டு வந்து பேசிக்கிறேன்.... .

கவுண்டர் : படம் பாத்தப்புறம்  நீ உயிரோட இருந்தாதான நாயே... ஊருக்குள்ள நாளைக்கு ஒரு சாவு உறுதியாருச்சிடோய்...ஊ.... ஊ...

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...