
இடம்: உத்தமபுத்திரன் படம் ஓடும் தியேட்டர். தலைவர் கவுண்டர் டிக்கெட் கவுண்டர்ல டிக்கெட் எடுக்குறதுக்காக நிக்கிறாரு... அந்த நேரத்துல செந்தில் மொத ஷோ படம் பாத்துட்டு பாடு பாடிகிட்டே வெளிய வர்றாரு..
செந்தில்: சட்டி சுட்டதடா.. கை விட்டதடா....
கவுண்டர்: டேய் திருட்டு விசிடி வாயா... ஏற்கனவே உன் கை அடுப்புல வச்சி கருக்குன மாதிரிதான் இறுக்கு... இதுல சட்டி சுட்டது எங்க தெரிய போகுது... சரி படம் எப்புடிடா இருக்கு?
செந்தில்: (சோகமான குரலில்) அண்....ண்ணேன்...
கவுண்டமணி: அட சொல்றா.....
செந்தில் : அண்....ணேன்....
கவுண்டமணி : அடடடா... சின்ன பையன்ங்குறது கரெக்டா இருக்குடா... நா என்ன படம் நல்லாருக்குன்னு சொன்னா, உன்னை இன்னொரு தடவ டிக்கெட் போட்டு அழச்சிட்டு போ ன்னு சொல்லபோறனா என்ன? இரு நாயே.. உன்ன படம் பாத்துட்டு வந்து வச்சிக்கிறேன்.
(3.30 மணி நேரத்திற்கு பிறகு )
செந்தில் வீட்டு திண்ணைல உக்காந்து பாட்டு பாடிக்கிட்டு இருக்க, கவுண்டர் ரெண்டு காதையும் தாங்கி புடிச்ச மாதிரி கைய வச்சிகிட்டு, மெல்ல வர்றாரு.
கவுண்டர் : ஆஹ... ஆஹ..... ஆஹ... ஏண்டா சொல்லல?
செந்தில்: அண்...ணேன்....
கவுண்டர் : அப்பயிலருந்து நொண்ணேன் நொண்ணேன்னு சொல்றியே தவற படம் ஏன் நல்லா இல்லை சொல்லல?
செந்தில் : அண்ணேன் அண்ணேன்னு சொல்ல வருது... ஆனா படம் நல்லா இல்லை சொல்ல வரல...
கவுண்டர்: ஆங்... அதெப்புடி சொல்லுவ... நானும் போயி சாவட்டும் மறச்சிருப்படா நீ... ஒரு மணி நேரமா ரெண்டு மணி நேரமா? 3.30 மணி நேரம்டா... எடையில எழுந்திரிச்சி உடியாந்துரலாம்னா கதவ வேற
மூடிட்டானுக... இதே படத்த நா வேற வேற பேர்ல இதுக்கு முன்னாடியே பாத்துருக்கேன். எம்பது தொண்ணூறு வயசுல வர்ர கொழப்பமெல்லாம் எனக்கு இந்த படத்த பாத்தோன வந்துருச்சி... அப்புடியே என்ன கை தாங்கலா
கூட்டிகிட்டு போயி அங்க உக்கரவையி...
(அங்கு வடிவேலு வேக வேகமாக வருகிறார்)
வடிவேலு : என்னணே... ரெண்டு பேரும் நல்ல படம் பாத்தீங்களா?
கவுண்டர்: டேய்... போயிரு
வடிவேலு : உத்தமபுத்திரன், குவார்ட்டர் கட்டிங் ரெண்டு படத்தயும் ரெண்டு பேரும், ரெண்டு ரெண்டு தடவ பாத்துருப்பீங்களே?...
செந்தில்: வடிவேலு வேணாம்,,
வடிவேலு : அது எப்புடிண்ணே.. நா ஒரு மனுஷன்னு இங்க இருக்கேன்ல,,.. என்னயும் அழச்சிட்டு போகனும்னு தோனலயா உங்களுக்கு...
கவுண்டர்: டேய் நாதஸ்... அத இப்புடி குடு..
செந்தில் : இந்தாங்கண்ணே...
கவுண்டர்: இந்தா குவார்ட்டர் கட்டிங் படத்துக்கு நைட் ஷோ டிக்கெட்டு... உனக்காகவே வாங்கி வச்சிருக்கேன்..
வடிவேலு : அவ்வ்வ்வ்வ்.. ரொம்ப நன்றிண்ணே... மிச்சத்த படம் பாத்துட்டு வந்து பேசிக்கிறேன்.... .
கவுண்டர் : படம் பாத்தப்புறம் நீ உயிரோட இருந்தாதான நாயே... ஊருக்குள்ள நாளைக்கு ஒரு சாவு உறுதியாருச்சிடோய்...ஊ.... ஊ...
7 comments:
நீங்கள் எழுதிய விதம் படிக்க அருமையாக உள்ளது
வாழ்த்துக்கள்
@THOPPITHOPPI
நன்றி
machi... Chinna thala kooda sanda pota dhanush padam epdi machi nallarukum?
weight na ,, uthama puthiran team patha ,,,, oouuuuuuuu .......
Very nice flow.Good article
thanks
அண்ணே.. எப்படிண்ணே உங்களால மட்டும் முடியுது.. சூப்பர் காமெடி..
Post a Comment