Thursday, May 6, 2010

பாக்ஸ் மண்டையனும் பாபா படமும்


Share/Bookmark
என்ன தான் அவங்க அம்மா அப்பா அவருக்கு அன்புமணி ன்னு (பெயர் மாற்றப்பட்டுள்ளது) பேரு வச்சிருந்தாலும் நாங்க அவருக்கு வச்ச பேரு என்னவோ Box மண்டையன் தான். பெயர் காரணம் தேவையில்ல ன்னு நெனைக்கிறேன். யாரு அந்த அவருன்னு கேக்குறீங்களா? அவருதாங்க எங்களுக்கு தொழில் சொல்லிக்குடுத்த குரு.இன்னும் சொல்ல போனா அவரு எங்களுக்கு Faculty Adviser, Personal Adviser இதுமாதிரி இன்னும் பல பதவிங்கள வச்சிக்கிட்டு சும்மாவே இருக்க எங்க college professor.

அவரு subject க்கு மட்டும் book வாங்கவே தேவையில்ல. ஏன்னா புக்குல என்ன இருக்கோ அத அப்புடியே Board la Xerox எடுத்து வச்சிருவாரு. ஏதாவது doubt கேட்டா கூட ( நமக்கு doubt ஏதும் வராது. மத்தவிங்க கேப்பாயிங்க ) Nagrath & Gothari Book la இப்புடி தாம்பா இருக்குங்குற ஒரு answer ah தவற வேற ஏதும் வராது. அட புத்தகத்துக்கு பொறந்தவனே... இதுக்கு ஒரு book ah கையில குடுத்து எங்கள ஹாஸ்டல் லையே இருக்க சொல்லிருக்கலாமேடான்னு நெனச்சிக்குவோம்.

திடீர்னு என்னிக்காவது ஒரு நாளு book ah டேபிள் லையே வச்சிட்டு வந்து , எங்க முன்னாடி நின்னு '7G' ரவிகிருஷ்ணா மாதிரி ஒரு சிரிப்பு சிரிப்பாரு. உடனே நாம கண்டுபுடிச்சிடலாம்.
" அப்ப இவரு இன்னிக்கு எதுவும் மனப்பாடம் பண்ணிட்டு வரல" ன்னு.
மனப்பாடம் பண்ணிட்டு வரலன்னா cabin la குத்த வச்சி தூங்குறத விட்டுட்டு எங்க எல்லாரையும் தூங்க வைக்க கெளம்பி வந்துடுவாரு.


இப்புடி தான் ஒரு நாளு வந்து நின்னரு... "இன்னிக்கு நம்ம கொஞ்சம் general ah பேசுவோம்" ன்னு சொல்லிட்டு விட்டத்த பாத்துகிட்டு நின்னரு.

" என்ன மச்சி ... விட்டத்தையே ரொம்ப நேரமா வெறிக்க வெறிக்க பாக்குறாரு?" ன்னான் என் பக்கத்துல உள்ளவன்.

" யோசிக்கிறாராம் . .. . இரு மச்சி எதாவது சொல்லுவாறு... அதுக்கு தான எல்லாரும் wait பண்ணிக்கிட்டு இருக்கோம்" ன்னேன்.

" நாம எல்லாரும் இப்ப பூமியில இருக்கோம்" ன்னு வேதானந்த மகரிஷி மாதிரி ஒரு start குடுத்தாரு.

" பார்ரா... கழுத மேய்க்கிற பயலுக்கு இவளோ அறிவா?" ன்னுநாங்க எல்லாம் ஷாக் ஆயிட்டோம்.

"நம்மள சுத்தி இருக்க இயற்கைய ரசிச்சி பாருங்க.. நம்மோட ஆன்மாவ அப்புடியே உலாவ விடுங்க.. ராத்திரில மொட்ட மாடில படுத்து வானத்த பாருங்க.. வானத்துல stars இருக்கும்... அத எண்ணி பாருங்க..... "

" ஏன்டா ராத்திரி ல வானத்துல stars தெரியாம சன் டிவி யாடா தெரியும்... நாங்க ஏன்டா அதெல்லாம் எண்ணனும்? பாரு மச்சி .... subject ah படிக்காம night full ah வேற எதையோ உக்காந்து மனப்பாடம் பண்ணிட்டு வந்து இங்க ஒளரிக்கிட்டு இருக்கு பாரு.. "

" அது ஒன்னும் ல மச்சி நேத்து சன் டிவி ல பாபா படம் போட்டயிங்கல்ல அதோட effectu தான் இது.. (மன்னிச்சிரு தலைவா). இன்னும் ரெண்டு மூணு நாளைல சரியாயிடும்." ன்னான் .

இந்த ஆன்மீக சொற்பொழிவு சுமார் ஒன்னற மணி நேரம் நடந்துச்சி... அதுக்கு ஒரு finishing touch ஒண்ணு குடுத்தாரு பாருங்க...

" எந்த work ah இருந்தாலும் நீங்களே செஞ்சி பாருங்க.. வீட்டுல டிவி rapair ah, இல்ல fan repair ah? நீங்களே பாருங்க.. இப்புடி தான் ஒரு நாளு எங்க வீட்டுல grinder work பண்ணல... நா உடனே mechanic ah கூப்புடாம நானே பாக்கலாம்னு grinder ah கழட்டிட்டேன்.. உள்ள பாத்தா..............

எனக்கு ஒண்ணுமே புரியல... சரி mechanic ah ye கூப்புட்டுடலாம்னு நெனச்சி திரும்ப மாட்டிட்டேன்.. மாட்டும் போது கடைசில ஒரு screw ah மட்டும் என்னால மாட்ட முடியல.. அப்பத்தான் எனக்கு தெரிஞ்சிது..

"எதையும் கழட்டுறது Easy... மாட்டுறது தான் கஷ்டம்னு"...

இந்த moral of the story ah கேட்ட உடனே எங்க எல்லாரோட கண்ணுலயும் ஒரு பாட்டு ஒடுநிச்சி... "சிலர் அழுவார்.. சிலர் சிரிப்பார்.... நாங்கள் அழுதுகொண்டே சிரிக்கின்றோம்.."

"சரி ஓகே... மணி 4.30 ஆயிடுச்சி...நீங்கல்லாம் கெளம்புங்க.. இதுமாதி intraction class இனிமே ஒவ்வொரு வாரமும் வச்சிக்குவோம்..." ன்னு சொல்லிட்டு அவரு கெளம்பிட்டாரு..

உடனே என் பக்கத்துல உக்கார்ந்து இருந்தவன் ,

" பாத்தியா மச்சி மண்டயனுக்கு ரவுச.... ஒன்னரை மணி நேரமா அவரு ஒருத்தரே பேசிக்கிட்டு இருந்துட்டு இதுக்கு பேரு intraction class aam... "

உடனே நா...
" எனக்கு அதுக்கு கூட கவலை இல்ல மச்சி....பாபா பாத்ததுக்கே இந்த effect na அடுத்த வாரம் 'ராஜ காளி அம்மன் " படம் போடுராயிங்க... அப்பா நம்மளோட நெலம?"

ஊஊஊஊஊஊ..... தான்....

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

10 comments:

Anonymous said...

I really liked the humour... but i did not like the comments like this as you are talking about a professor...

//" பார்ரா... கழுத மேய்க்கிற பயலுக்கு இவளோ அறிவா?" ன்னுநாங்க எல்லாம் ஷாக் ஆயிட்டோம்.by they way you have good sense of humour

-Sekar

kanagabush said...

i want ti know the professor name da?????

Anonymous said...

hahahahhahahah.. weightu machi.... andha box mandayanuku idhai motta kaduthaasi podanumda..... sema comedy....

Srinivas said...

//" அது ஒன்னும் ல மச்சி நேத்து சன் டிவி ல பாபா படம் போட்டயிங்கல்ல அதோட effectu தான் இது..//

vanmayaaga kandikkiren!!!!!!!!

Anonymous said...

Really good sense of humor... Enjoyed reading this and I really was reflecting that day in my mind :)
guess it was during our third year...

முத்துசிவா said...

Exactly :)

துளசி கோபால் said...

:-))))))))))))

Anonymous said...

Enaku aniku classla nyabakam vandha ore dialogue
"Ayo.. raama...ena en intha kalisadai pasangaloda kootu sera vekira...!!!"
intha blog matm than antha box mandai padichanu vei, rubber bandla thooku matti sethuruvan...hahaha...

முத்துசிவா said...

ஹா..ஹா...ஆனா அவன் வெக்கப்பட மாட்டான்..."அட இதுல வெக்கப்பட என்ன இருக்கு.. தொழில்ல பொறும தான முக்கியம்" ன்னு சொல்லிட்டு இதே கதைய நம்ம ஜூனியர்கிட்டயும் சொல்லிகிட்டு இருப்பான் டப்பா தலையன்...

சுதர்ஷன் said...

//அட புத்தகத்துக்கு பொறந்தவனே//.
hehe.. இப்பிடி நிறைய பேர் இருக்கானுங்க :)

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...