பட்டுக்கோட்டை..... மார்கழி மாதம்.. இரவு மணி ஒன்றை நெருங்கிக் கொண்டிருந்தது
ட்ரிங்ங்ங்ங்ங்ங்... அய்யா தியேட்டரில் இரவுக்காட்சி முடிந்ததற்கான மணி ஒலித்தது.. சிறிது நேரத்தில் கலைத்து விடப்பட்ட தேன் கூட்டிலிருந்து தேனீக்கள் வெளிப்படுவதை போல மக்கள் வெளிப்பட்டனர். இரண்டு சக்கர வாகனம் நிறுத்துமிடத்தில் ஒரே horn சத்தங்களும், பைக் ஸ்டார்ட் செய்யும் சத்தங்களுமாக பரபரப்பு தொற்றிக்கொண்டது.
மூன்றாவது வரிசையில் நிருத்தப்பட்டிருந்த தனது splendor plus ல் இக்னீஷியனை உசுப்பி, கிக்கரை உதைத்து உயிர்பித்தான் கதிரேசன்.பின் கதிரின் நண்பன் சுரேஷ், பின் சீட்டில் தன்னை அமரவைத்துக்கொண்ட பின்னர் இருவரும் கிளம்பினர். கதிரேசனுக்கு இருபத்து எட்டு வயது முடிந்து நான்கு மாதங்கள் ஆகியிருந்தன.
உயரத்தில் ஆறடியை தொட்டிருந்தான். சிவப்பா கருப்பா என்று சொல்லமுடியாத கலர். B.sc படித்துவிட்டு ஊரில்அப்பவுடன் விவசாயத்தை பார்த்துக் கொண்டிருப்பவன்.சுரேஷ் கதிரின் பள்ளித் தோழன். ப்ளஸ் டூ வரை படித்திருந்த அவன் பட்டுக்கோட்டையில்ஒரு சிறிய தனியார் கம்பெனியில் கணக்கெழுதும் பணியில் சேர்ந்து மூன்று வருடங்கள் ஆகின்றன.
சரியாக பத்து நிமிடம்.. நகர குடியிருப்பு பகுதிகள் மறைந்து தஞ்ஜாவூர் செல்லும் பிரதான சாலையில் பயணித்துக் கொண்டிருந்தனர். இருவரும். மார்கழிப்பனி இரவிற்கு நன்றாக வெள்ளையடித்து வைத்திருந்தது..வாகனத்தின் வேகத்தால் உடம்பு உறையும் அளவிற்குகுளிர்..
"டேய் இந்த குளுருல வந்து இந்த படத்த அவசியம் பாத்தே ஆகனுமாடா... அதுக்கு பகல்லயாச்சும் வந்துருக்கலாம்ல.." என்றான் சுரேஷ்.
"டேய் பகல்ல தான் வீடு, வயக்காடு, நெல்லுமூட்டை, உரமூட்டைன்னு பொழுது போயிடுது.. ராத்திரி வந்தாதான் நிம்மதியாபடத்த பாக்கலாம்..சரி விடு அடுத்த தடவ வர்ரப்ப வேணும்னா பகல்ல வரலாம்" என்று சொல்லிவிட்டு ஆக்ஸிலேட்டரை முறுக்கினான்.வண்டி 60 கிலோமீட்டர் வேகத்தில் சீறிக்கொண்டு சென்றது.. அடுத்த பதினைந்தாவது நிமிடத்தில் சாலையின் இருபுறங்களிலும் சில குடியிருப்பு பகுதிகள்.... வண்டியின் வேகத்தை குறைத்து சாலை ஓரத்தில் நிறுத்தினான்..
சுரேஷ் கீழே இறங்கிகொண்டு "சரிடா பாக்கலாம்.. பாத்து போ" என்றான்
"சரிடா" என சிரித்துக்கொண்டே தலையாட்டினான் கதிர்.
" டேய்.. நா வேணும்னா உன் கூட உங்க வீட்டுக்கு வந்துட்டு காலைல வரட்டுமா?"
"ச்ச..ச்ச... பரவாலடா... நீ போய் தூங்கு.நா பாத்துக்குறேன்.. காலைல முடிஞ்சா phone பண்ணு" என்று சொல்லிவிட்டு கிளம்பினான் கதிர்.
சுரேஷ் அவ்வாறு கேட்டதிலும் ஒரு காரணம் இருந்தது. கதிரின் ஊர் சுரேஷின் ஊரைப்போல பிரதான சாலையில் அமைந்தது அல்ல..அங்கிருந்து ஆறாவது கிலோ மீட்டரில் வரும் வலது பக்க பிரிவில் சென்றால் ஏழாவது கிலோமீட்டரில் அமைந்துள்ளதுதான்கதிரின் முள்ளுர் கிராமம். இடையில் எந்த குடியிருப்பு பகுதிகளும் கிடையாது. வெரும் வயல்காடுகளும் தோப்புகளும் நிறைந்தது.
பகல் நேரத்திலாவது, வயல்வேலை செல்வோர், வெளியூர் செல்வோர் என ஒன்றிரண்டு பேர்கள் அந்த வழியில் காணப்ப்ட்டாலும் இரவில் ஆள் அரவமற்ற பகுதியாகவே தென்படும்..அதிலும் அந்த பிரிவில் ஐந்தாவது கிலோமீட்டரில் வரும் சவுக்குத்தோப்பை பற்றி சொல்லியே ஆக வேண்டும். சுமார் அரைகிலோமீட்டர் நீளத்திற்கு சாலையின் இருபுறமும் நீள்கிறது அந்த சவுக்கு தோப்பு.
ஏற்கனவே அந்த ஊரில் சிலர், இரவில் அந்த வழியாக வரும்போது, குறிப்பாக அந்த சவுக்கு தோப்பு பகுதியில் இரண்டு சக்கர வாகனங்கள் வரும்போது தானாக நின்று விடுவதாகவும், சில வித்தியாசமான சத்தங்கள் அந்த பகுதியில் கேட்பதாகவும்கதை (?) கட்டி விட்டிருந்தனர். ஆனால் கதிர் அதுபோன்றவற்றை நம்புபவனல்ல..ஏற்கனவே பலமுறை இரவுக்காட்சி பார்த்துவிட்டு அந்தப்பகுதி வழியாக சென்றிருக்கிறான், எந்த இடையூருமின்றி.
அன்றும் அதே போல், சுரேஷை இறக்கிவிட்டு சென்ற கதிர் சிறிது தூரத்தில் "முள்ளூர் 7 கிமீ" என்று வலப்புறம் அம்புக்குறியிட்ட அந்த சாலைப்பலகை இருந்த இடத்தில் திரும்பினான். இப்போது சாலை விளக்குகள் முற்றிலும் அனைந்து, இருள் கவ்விக்கொண்டது. ஹெட் லைட்டின் உதவியுடன் நேர்த்தியாக சென்றுகொண்டிருந்தான். இருபுறமும் வயல்களில் வாழும் தவளைகள் வெளிப்படுத்திய பாரம்பரிய இசை பைக் சத்ததை விட அதிகமாக கேட்டது.
சவுக்குத்தோப்பு நெருங்கிகொண்டிருந்தது. என்னதான் கதிரேசன் அது போன்ற கட்டுக்கதைகளை நம்புவதில்லை என்றாலும், அந்த இடத்தை நெருங்க நெருங்க இதயத்துடிப்பு சற்று அதிகமானது என்னவோ உண்மைதான். அந்த பகுதியை விரைவாக கடந்து விடவேண்டும் என்பதறகாக, ஆக்ஸிலேட்டரை
முறுக்கினான். அதுவரை 40 கிலோமீட்டரில் சென்ற வண்டி, 55 கிமீ வேகத்தில் பறந்தது.
அந்த சவுக்குதோப்பு பகுதிக்குள் நுழைந்து கால் பகுதியை கடந்த பின்னர் வண்டியின் வேகத்தில் தானாக ஏற்பட்ட மாற்றத்தை அவனால் உணர
முடிந்தது.வேகம் மெல்ல மெல்ல குறந்து, இஞ்ஜின் இழுத்து இழுத்து வெட்டி தோப்பின் நடுப்பகுதியில் நின்று போனது. முற்றிலும் இருள் சூழ்ந்தது
கதிரின் பின்னந்தலையில் ஐஸ்கட்டிகளை வத்ததுபோன்றதொரு உணர்வு. முழுதும் வியர்த்திருந்தான். ஆனால் சில நொடிகளிலேயே வண்டி தானக நிற்கவில்லை என்பதும், பெட்ரோல் அளவு குறைந்து ரிசர்வ் ஆகி நின்றிருக்கிறது என்பதும், அப்பா பெட்ரோல் போட சொன்னதை மறந்ததும் நினைவிற்கு வந்தது. மனதுக்குள் சிறியதொரு மகிழ்ச்சி..லேசாக ஒரு மெல்லிய காற்று முகத்தில் தீண்டியதைப்போல உணர்ந்தான். பெட்ரொல் பாயின்டரை ரிசர்வுக்கு மாற்றி வத்து விட்டு, கிக்கரை உதைக்க ஆரம்பித்தன்.
ஒன்று... இரண்டு...மூன்று... இஞ்ஜினை உயிர்பிக்க முடியவில்லை.... அப்போதுதான் அந்த சத்தம் கேட்டது..
"வீல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்..........."
ஒரு பெண்ணின் குரல்....
அடுத்த பதிப்பில் தொடரும்.....
2 comments:
Adutha paguthila Rape attempt scene mattum vachinaa magane unna konne puduven...
1st part is good...
ரிசைர்வில் ஆரமிச்சி மொபையில் ரிங் டொனில் முடிசிடாத டா ....
Post a Comment