ஒரு பதிவுக்கு கமெண்டுங்கறது அந்த பதிவு படிக்கிறவங்களுக்கு அத படிக்கிறதனால
எதாவது ஒரு உண்ர்வு வந்துச்சின்னா,
அவங்களா போடுறது. அது அந்த பதிவை பற்றியதாகவோ இல்லை அந்த பதிவர
பற்றியதாவோ இருக்கலாம். கொஞ்ச நாளா
சிலர் சில பதிவுங்களுக்கு போடுற கமெண்ட்டுகள பாத்தா இதுங்கல்லாம்
என்ன ஜென்மம்னு
தோணுது. இவிங்கல்லாம் இருக்குற இடத்துக்கு நாம தப்பா வந்துமாட்டிகிட்டமோன்னு கூட சில நாள்
எனக்கு தோணிருக்கு.
அந்த வகையில ஹைலைட்டான, சில கமெண்டுங்க உங்களுக்காக
"Me the first"
எதோ 12th public exam la state 1st வந்துட்ட மாதிரி 'பருவம் பதினாறு-அஜால் குஜால் விமர்சனம்"ங்கற பதிவுக்கு ஒருத்தன் "me the first" ன்னு கமெண்டு போட்டுருக்கான். அந்த பதிவ ஒலகத்துலயே மொத மொதல்ல படிச்சி அவரு சாதன பண்ணிட்டாராம். ஏண்டா எதெதுக்கு 'me the fisrt"ன்னு ஒரு வெவஸ்த வேணாமா? இவியிங்க எவனும் பதிவுலஎழுதுறத படிக்கிறது இல்ல... தலைப்ப மட்டும் பாத்துட்டு ஒலிம்பிக்ல கோல்டு மெடல் வாங்குனமாதிரி me the first, me the last nu போடுறது.
"வடை எனக்கே"
அதே மாதிரிதான் "வடை எனக்கே" குருப்பும். பசிச்சா பண்ண வாங்கி திண்ணுங்க.. காசு இருந்தா ஒரு வடைய வாங்கி திண்ணுங்க...அத விட்டுட்டு ப்ளாக்ல வந்து வடை எனக்கு போண்டா பக்கத்து வீட்டுகாரனுக்குன்னு கடுப்பேத்திகிட்டு..
"Wait..I'll read and come"

டாக்டருங்க சாப்புடுறதுக்கு முன்னாடி ஒரு மாத்திரை சாப்புடுங்க... சாப்பிட்ட அப்புறம் இந்த மாத்திரைய சாப்புடுங்கன்னு சொல்ற மாதிரி இவிங்க blog படிக்கிறதுக்கு முன், blogபடிக்கிறதுக்கு பின் ன்னு ரெண்டு கமெண்டு போடுறவிங்க. blog ah படிச்சப்புறம் நல்ல கமெண்டு போடுவாயிங்களான்னா அதும் இல்ல.. "படிச்சிட்டேன் ஓட்டுபோட்டுட்டேன்... வரட்டுமா" ன்னுட்டு போயிகிட்டே இருப்பாய்ங்க.
ஒரு பதிவுக்கு கமெண்டுக்கு போடனும்னு தோனுச்சின்னா போடுங்க.பதிவுக்கு ஓட்டு போடுறதையும், கமெண்டு போடுறதையும் கடமையா நெனச்சி பண்ணாதீங்க. நண்பர் இளவரசன் சொன்ன மாதிரி பதிவர்களுக்கு ஓட்டு போடுறத நிறுத்திட்டு பதிவுங்களுக்கு ஓட்டு போட முயற்சி பண்ணுங்க