Monday, April 4, 2011

சக்தி- தெலுங்கில் ஒரு ஆயிரத்தில் ஒருவன்


Share/Bookmark
ஏன் இப்புடி சொல்றேன்னா இவ்ளோ செலவு பண்ணி ஒரு படம் எடுத்து அது எதுக்கும் ஆகாம போயிருச்சேன்னு தான். ஆயிரத்தில் ஒருவன் 1st half எதோ நல்லா இருக்கமாதிரி போயி 2nd half ல சம்பந்தம் இல்லாம படம் திசை மாறி கடைசில பலபேருக்கு புரியாத ஒரு க்ளைமாக்ஸ்.. technical excellece இருந்தாதான் அதை புரிஞ்சிக்க முடியும்னு நம்ம செல்வராகவன் பேட்டி வேற...

இங்கயும் நம்ம ஜூனியர் NTR க்கு ஆப்பு வைக்க வந்த படம் இது. NTR ரோட முந்தைய படங்களான அதுர்ஸ், ப்ருந்தாவனம் ரெண்டும் அவ்ளவா நல்லா போகலன்னாலும் காமெடியும் படமும் நமக்கு எரிச்சல கெளப்பாது. ஆனா சக்தி நம்மல சுத்தி சுத்தி அடிக்குது. வழக்கமா ஒரு தெலுங்கு படம் பாக்கனும்னா ரெண்டு மூணு விஷயங்கள்ல  நாம டென்ஷன் ஆயிட கூடாது. ஒண்ணு பறந்து பறந்து அடிக்கும் சண்டை காட்சிகள்.இன்னொன்னு எதிர்பாக்காத நேரத்துல டக்குன்னு வரும் பாடல் காட்சிகள். இந்த விஷயங்கள்ல பரிட்சயம் இல்லாத ஒருத்தர படத்துக்கு அழைச்சிட்டு போயி படம் முடியிரதுக்கு முன்னாலயே அவரு கெளம்பி வந்துட்டாரு. அப்புறம் என்ன நா மட்டும் கடைசி வரைக்கும் இருந்து முடிச்சி வைச்சிட்டு வந்தேன்.

கதைய பத்தி சொல்லனும்னா மகதீரா, அருந்ததீ, போக்கிரி போன்ற படங்களை கலந்து விட்டு அடிச்சி வந்ததுதான் சக்தி.  வழக்கமான intro song, fightu ன்னு ஆரம்பிச்சி ஜெய்ப்பூர், ஜம்மு, ஹரித்வார், எகிப்துன்னு படம் நகருது. கொஞ்சம் சஸ்பென்ஸோட. நம்மாளு ஒரு டூரிஸ்ட் guide ah வந்து இலியானா & co va ஊர் சுத்தி காமிக்கிராரு. அங்கங்கே சில நல்ல காமெடிகளும் உண்டு ( பெரிய காமெடி second half la தான்). ஹீரோயின ஒரு குரூப் தேடுது. அவங்க கிட்டருந்து இலியானாவ காப்பாதுராரு NTR. 

அப்புறமா? அதான் காப்பாத்திட்டாருல்ல. லவ்வோ லவ்வு... பாட்டு... fightu... பாட்டு... fightu... போயிகிட்டே இருக்கு படம். நம்மாளு எப்பவும் ஒரு பெரிய மர பொட்டி ஒண்ண இழுத்துகிட்டு தான் போவாரு எங்கயா இருந்தாலும். அது ஏன்னு அப்ப தெரியல. அப்பதான் நாம ஆவலோட எதிர்பார்த்த interval வந்துச்சி. ரவுண்டிங்க ஒரு 50 பேரு சுத்தி வளைச்சி ராக்கெட் லாஞ்சர்லாம் வச்சி NTR ah தாக்க முயற்சிக்க, அப்ப open பண்ணாரு அந்த பொட்டிய..,, அதுக்குள்ள வெரும் ak47, pk47 ன்னு ஏகப்பட்ட துப்பாக்கி. அப்பதான் சொல்றாங்க நம்மாளு NSA commando ன்னு. oh wat a twist? ஒரு பத்து நிமிஷம் துப்பாக்கிய வச்சிகிட்டு கதகளி ஆடுறாரு போட்டாயிங்க இண்டர்வல்ல...

இடைவேளைக்கு அப்புறம் படம் முழுசா ஆன்மீகத்துக்கு திரும்பிடுது. ஒரு flashback. அப்பா NTR, மகதீரா ராம்சரண் மாதிரி கழுத்து வரைக்கும் முடி வச்சிகிட்டு வந்து பூந்து வெளையாடுறாரு (கெட் அப் ரொம்ப கப்பி தனமா இருந்துச்சி :( ) அந்த கெட்டப்புல அவர் வீர வசனங்கள் பேசும் போது அப்படியே பாலையா நம்ம கண்ணில். அப்புறம் நம்மாளு எகிப்துலருந்து வரும் பெரிய அரக்கணோட சண்டை போட்டு ஜெயிச்சி உலகத்த அரக்கர்களிடமிருந்து காப்பத்துறாரு.


பிரபு, அகோரி சாமியாராக வரும் நாசர் இருவரும் வேலைய கரெக்டா பண்ணிருக்காங்க. SPB flash back la ரெண்டு சீன் வந்தாலும் வசன உச்சரிப்புல எல்லாரையும் தூக்கி சாப்புட்டுறாரு.தல பிரமானந்துக்காக ரொம்ப நேரம்  wait பண்ணிட்டு இருந்தேன். second half la "அவதார்"ங்கர அட்டகாசமான பேரோட வந்த அவரும் ஏமாத்திட்டாரு. பாடல்கள் அனைத்தும் பெரிய பொருட்செலவில் உருவாக்கப்பட்டு இருக்கின்றன. நல்ல தரத்துடன்.. கேமராமேனும், art directorum கலக்கிருக்காங்க. நம்ம ஷங்கர் இத கொஞ்சம் பாத்தா நல்லா இருக்கும். எவ்ளோ செலவு செஞ்சி hi quality ல காட்சி அமைப்புகள் இருந்தாலும், கிராஃபிக்ஸ்ல மட்டும் கோட்ட விட்டுறாங்க. மிக மோசமான, தரமற்ற கிராஃபிக்ஸ்.

சரி என்னதாம்பா சொல்ல வர்றன்னு கேக்குறீங்களா? ஒரிஜினல் டிவிடி வந்தோன கண்டிப்பா பாருங்க. கடைசி அரைமணி நேரம் தவிற படம் நல்லாவே இருக்கு.

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

6 comments:

சக்தி கல்வி மையம் said...

படம் பார்களாம்ன்னு இருந்தேன்..
தப்பிச்சன்டா சாமி..

Pranavam Ravikumar said...

:-)

Chitra said...

இருந்தாலும் உங்களுக்கு பொறுமை அதிகம் தான்.....

முத்துசிவா said...

அதுனால தான என்ன எல்லாரும் ரொம்ப நல்லவன்னு சொல்றாங்க... :)

Anonymous said...

Inum KO movie pakalaya ...eagerly waiting for ur review

முத்துசிவா said...

கோ 1st day ve பாத்துட்டேன்.. சமீபத்தைய படங்களில் பார்ப்பது போல் உள்ள படம்.. கண்டிப்பாக ஒருமுறை பார்க்கலாம்... நிறைய பேர் கோ படத்திற்கு விமர்சனம் எழுதியிருந்ததால் நானும் அரைச்ச மாவையே அரைக்க வேணாம்னு விட்டுட்டேன்.. :)

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...