Thursday, July 28, 2011

FACEBOOK-சில குஜால்டிகளும் சில கடுப்புகளும்:


Share/Bookmark
முன்னாடியெல்லாம் ஃப்ரண்ட்ஸ் phone பன்னி பேசிட்டு இருந்தாய்ங்க... இப்பல்லாம்ஒர்த்தனும் ஃபோன் பண்றதில்ல..ஏண்டா ஃபோன் பண்றதில்லன்னு கேட்டா, நா என்னமோ கேக்கக்கூடாதத கேட்டுட்ட மாதிரி என்ன பாத்து வெறிக்கிறாய்ங்க..இப்பல்லாம் யாரும் வாயல பேசறதில்ல. likes, comments, status updates இப்புடி facebook language la தான் பேசுறாய்ங்க

நேர்ல பாத்தா மூஞ்சி குடுத்து கூட பேச மாட்டானுங்க சில பேரு... ஆனா
Facebook chat ல வந்தா மட்டும் வக்கனைய "hi dude...wassap... how s going" ன்னு
பீட்டர் விட ஆரம்பிச்சிடுரானுங்க.வீட்டுல அம்மா சாப்புட கூப்டா கூட
"facebook la invite பண்ணும்மா.. அப்பதான் சாப்புட வருவேன்னு சொல்ல
ஆரமபிச்சிட்டாங்க. அந்த அளவுக்கு நம்ம ஆளுங்களுக்குள்ள ஒருதாக்கத்த உண்டாக்கிருச்சி இந்த Facebook.

எல்லாரும் இங்க இருக்காங்க. திரையுலகத்த சேந்தவங்க மட்டும் இல்லாம எல்லா துறைய சேந்தவங்களும் இதுல அடக்கம். அரசியல்வாதிகள் எல்லாம்
ஊர் ஊரா போயி "எங்களை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில வெற்றி பெற வைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்" ன்னு கேக்குறதுக்கு பதிலா இன்னும் கொஞ்ச நாள்ல "எங்களை பெருவாரியான "like"க்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற வைக்குமாறு உங்களை வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறோம்னு இங்க வந்துப்ரச்சாரம் பண்ணாலும் ஆச்சர்யபடுறதுக்கில்ல.

Facebook சில குஜால்டிகள்:

1.இதுல நண்பர்களை நம்ம தேடி போக வேண்டியதில்லை. இவிங்களே "இவுங்களையெல்லாம் நீங்க friends ஆக்கிக்கலாம்னு நம்மக்கு லிஸ்ட்டும் குடுத்துடுராய்ங்க (Friend Suggestions) .நம்ம clik பண்ணா மட்டும் போதும். இந்த லிஸ்ட்டுல பாத்தீங்கன்னா, நமக்கு தெரிஞ்ச friend um இருப்பான். அவனோட friend um இருப்பான். அவனோட "ஒண்ணு விட்ட" சித்தப்பா பையனோட கூட படிச்சவனும் இருப்பான். Docamo தத்துவம் மாதிரி வாழ்க்கை சில க்ளிக்குகள்லயே மாறிவிடும்.

2.யாரும் எதையும் யாருக்கும் தெரியாம பண்ண முடியாது. எவன் எவன் யார் யார் ஃபோட்டோவுக்கு எத்தனை லைக் போட்டுருக்கான், என்னென்ன ஜொல்லு
விட்டுருக்கான், எங்கெங்க பல்பு வாங்கிருக்காங்குற மேட்டரெல்லாம் ஊருக்கே தெரிஞ்சிடும்.

3.முன்னாடியெல்லாம் காணாமல் போனவர்களை கண்டுபுடிக்க
தூர்தர்ஷன்ல விளம்பரம் குடுத்து, அவர்களை பற்றிய தகவல் தெரிந்தால்
"காவல் துறை கட்டுபாட்டு அறை, எழும்பூர் சென்னை-8" க்கு தகவல் சொல்ல
சொல்லுவாய்ங்க. ஆனா இப்போ அங்கயெல்லாம் போக தேவையில்ல..காணம போனவங்கள Facebook la தேடுனா ஈசியா கண்டு புடிச்சிரலாம். மூணாங்கிளாஸ் படிக்கும் போது (நீ இப்ப வரைக்குமே அவ்வளவுதானடா படிச்சிருக்கன்னு கேக்குற உங்க மைண்ட் வாய்ச நா கேட்ச்பண்ணிட்டேன்) தொலைஞ்சி போன என் நண்பன முந்தா நாளுதான் இங்க கண்டுபுடிச்சேன்.

4.கும்பலா மொக்க போட நெனக்கிறவிங்க பொதுமக்களை கஷ்டபடுத்தாம தனியா குருப் குரூப்பா பிரிஞ்சி அவனுங்களுக்குள்ளயே மொக்க போட்டுக்கலாம்  (facebook groups). இதுனால மற்ற பொது ஜனங்களுக்கு எந்த விதமான காயமோ உயிரிழப்போ ஏற்படுறதில்லை.

5.நல்ல விஷயமோ கெட்ட விஷயமோ... Facebook புண்ணியத்தாலா ஒரு மணி
நேரத்துல ஒரு விஷயத்த உலகம் ஃபுல்லா பரப்பிடலாம். தமிழ்நாட்டுல
:"மாப்ள தண்ணி கேக்குறாரு"ன்னு போட்டோம்னா அடுத்த அரை மணி நேரத்துல அமெரிக்காவுல "மாப்ள தங்கத்துல  சொம்பு கேக்குறாரு"ங்கற அளவுக்கு விஷயம் பரவும்

சில கடுப்புகள்:

1 .இந்த Yahoo chat la எல்லாம் பாத்த மொத்தமா ஒரு நாலு status message தான்
இருக்கும். available- உயிரோட தான் இருக்கான், idle -வெட்டியா இருக்கான்
busy-வேல செய்யிற மாதிரி ஆக்ட் பண்றான் invisible-யாருக்கும் தெரியாம ஓபி அடிக்கிறான் இதுதான் அந்த நாலு message kum அர்த்தம். ஆனா இதுல போடுறானுங்க பாருங்க status message... கருமம்... " i am eating" "i am bathing" "on the way to office" இப்புடியேலாம் போட ஆரம்பிச்சிட்டாய்ங்க.. ஏண்டா status message ங்கறதுக்காங்க உங்களோட ஒவ்வொரு state (நிலை) ஐயுமாடா message ah போடுவீங்க... முடியலடா...இதவிட கொடுமை இதுக்கு ஒருத்தன் "like" போட்டு "அப்புடியா.. என்ன சாப்டீங்க" ன்னு கமெண்டும் போடுவான்..

2. வழக்கமா பொண்ணுங்க ஃபேஸ் புக்ல இருந்தா profile photo வா ஒரு பட்டாம்  பூச்சி ஃபோட்டோவோ இல்ல, எதாவது ஒரு பூவோட photo வயோ தான் போட்டுருப்பாங்க.எதாவது ஒண்ணு ரெண்டு புள்ளைங்கதான் அவங்களோட ஃபோட்டோவ போட்டுருக்காங்க அதுல நல்லதா ஒண்ண செலெக்ட் பண்ணி friend ஆயிடலாம்னு பாத்தா அதுங்க ஆயிரத்தெட்டு செட்டிங் பண்ணி வச்சிருக்குங்க. பசங்களுக்குண்ணா க்ளிக் பண்ண உடனே friend request போயிருது. ஆனா பொண்ணுங்களுக்கு மட்டும் "U know this person personally" nnu ஒரு கேள்வி வேற. டேய் personal ah தெரிஞ்சிக்கதாண்டா request அனுப்புறோம். அதுக்கு முன்னாடியே இப்புடி கேட்ட எப்புடி? தெரியாதவங்கள freind ஆக்குறத்துக்கு தாண்டா friend "request அனுப்பனும். ஏற்கனவே friend ah இருக்கவன add பன்றதுக்கு பேரு request ila

3.அப்புறம் இந்த personal photo. போட்டோ போடுவாங்களாம். ஆனா அத அடுத்தவங்க பாக்க கூடாதாம்.. அவங்களுக்கு தெரிஞ்சவங்க மட்டும் தான் பாக்கனுமாம் எந்த ஊரு ஞாயம் இது. "ச்சல்லம்.. இங்க வாடி. அடுத்தவன் ஃபோட்டோ பாக்க கூடாதுன்னா அப்புறம் என்னா ....த்துக்கு social network ku வர்ற. உன் ஃப்ரண்டுங்க மட்டும் தான் பாக்கனும்னா நீ என்ன பண்ணிருக்கனும்... சொல்லு ச்சல்லம் என்ன பண்ணிருக்கனும்.. அவங்களுக்கு மட்டும் மெயில் அனுப்பிட்டு பேசாம இருந்துருக்கனும். இப்புடி ஃபோட்டோ போட்டு அத லாக் பண்ணி வைக்க நீ என்ன அவ்வளவு பெரிய அப்பாடக்கரா... இல்ல அவ்வளவு பெரிய அப்பா டக்கரான்னு கேக்குறேன். இனிமே யாராது ஃபோட்டோவ லாக் பண்ணி வைக்கிறத பாத்தேன்.. மூஞ்சில பூரான் விட்டுருவேன்.

4. இன்னொரு தொல்லை இந்த Notificaiton. ஒருத்தனுக்கு ஒரு கமெண்ட் போடோம்னாஅதோட விடமா அதுக்கு அப்புறமா அவனுக்கு 100 பேர் கமெண்ட் போட்டாலும் நமக்கு அந்த 100 தடவையும் notifiaction வந்து சாவடிக்கிது.

5. வயல்ல விவசாயம் பாத்த காலம் போக இப்ப எல்லாம் facebook லயே விவசாயம் பாக்க ஆரம்பிச்சிட்டாங்க. அன்னிக்கு ஒருத்தர் எண்ட "பாஸ் முந்தாநாளு வயல்ல கேரட் போட்டுருந்தேன். இன்னேரம் வளந்துருக்கும்... அருவடை பண்ணனும்"னாரு என்னது முந்தாநாளூ போட்டு இன்னிக்கு அருவடை பண்ண போறீக்களா.. இது என்னப்பா புதுவிதமான கேரட்ட இருக்குன்னு பாத்தா, அவரு facebook game la கேரட் போட்டுருந்துருக்காரு."கம்யூட்டர்ல போடுற கேரட்டு கூட வளர்றதுக்கு மூனு நாள் ஆதுதா.சரி பாஸ்.. போடுறதுதான் போடுறீங்க.. பொன்னி அரிசி
ஒரு மூட்டை போட்டு அருவடை பண்ணி குடுங்க பாஸ்.. வீட்டுக்கு வேணும்"ன்னேன் அதுக்கென்ன.. தாராளமா பண்ணிடலாம்னு இப்ப அவரோட வயல்ல பொன்னி அரிசி போட்டுருக்காரு. கூடிய விரைவில் இந்தியாவுல பஞ்சம் பஞ்சு பஞ்சாய் பறந்து போய்விடும்ங்கறதுல எந்த சந்தேகமும் இல்ல.

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

26 comments:

Anonymous said...

இன்னும் நீ திருந்தலையா தேவையில்லாம வம்ப விலைக்கு வாங்குறே

முத்துசிவா said...

ஏண்டா பண்ணாட... நீ இன்னும் திருந்தலயா...அடுத்தவன் அனானில கமெண்ட் போடுறானு மட்டும் வக்கனையா பேச தெரியிதுல்ல.. இப்ப நீ என்ன பண்ற... நாங்க யாரா திட்டுனாலும் எங்க பேர்ல தாண்டா திட்டுவோம்.. உன்ன மாதிரி அனானி பேர்ல கமெண்ட் போடுறவைங்க இல்ல.. தலைவர பத்தி உன்னோட ப்ளாக்ல ஒரு செண்டிமெண்ட் பதிவு எழுதிட்டு.. அப்புடியே அனானிமஸா வந்து என்க்கு வேற மாதிரி கமெண்டா போடுற. உனக்கு பெருசா செதுக்கி வச்சிருக்கோம்டி....

Anonymous said...

நல்லா நாக்கை புடுங்கிற மாதிரி கேட்டிருக்கிங்க,நியாயம்தான்.

Ashok said...

உனக்கு பெருசா செதுக்கி வச்சிருக்கோம்டி....///

மாப்ள. இப்பல்லாம் அனானிமஸ் தொல்ல தாங்கலடா. அண்ணன் ஜாக்கி கூட அவர் வலைதளத்துல ரொம்ப பீல் பண்ணி எழுதிருந்தாரு. அவருக்கே அந்த கதின்னா நம்ம கதியை நினைச்சுப்பாரு. :-(

Anonymous said...

அண்ணே நான் முதல் கமண்ட் போட்ட அனானியில்லை,மூணாவது கமண்ட் போட்ட அனானி,நான் உங்களை பாராட்டி கருத்திட்டிருக்கிறேன்.தக்காளிங்க பேஸ்புக்ல பண்ற லொல்லு ஒவரு,என் மனசில் இருந்ததை நீங்களே எழுதிட்டீங்க,சபாக்ஷ்.

முத்துசிவா said...

//அண்ணே நான் முதல் கமண்ட் போட்ட அனானியில்லை,மூணாவது கமண்ட் போட்ட அனானி,நான் உங்களை பாராட்டி கருத்திட்டிருக்கிறேன்.தக்காளிங்க பேஸ்புக்ல பண்ற லொல்லு ஒவரு,என் மனசில் இருந்ததை நீங்களே எழுதிட்டீங்க,சபாக்ஷ்.//
ஹி ஹி... நா சொன்னதும் உங்க்ளை இல்லை... புரிய வேண்டியவங்களுக்கு புரியும்...:) பின்னூட்டமிட்டதற்கு நன்றி

karthikkumar said...

@ சிவா // அனானி எல்லாம் உங்க ப்ளாக்-எ தவம்ன்னு இருக்குறாங்க போல. :)... உண்மைலே பேஸ்புக்-ல போட்ற ஸ்டேடஸ் எல்லாம் செமையா கடுப்பேத்துது மை லார்ட். :))

Tamil Stories in Tamil said...

நன்றி....facebook is a good social networking site
இதையும் பார்க்கவும்
http://tamilpadaipugal.blogspot.com/2011/07/blog-post_7108.html

Anonymous said...

Ilavarasan's blog, Tata Docomo, Free Money, North Social, K V Anand, S I (summa irukiren), MOOTHAKURICHI GOVERMENT HIGHSCHOOL, Pattukkottai, PlayUp India, Muthusiva's Blog, Facebook Platform, Envazhi

Anonymous said...

முன்னாடியெல்லாம் காணாமல் போனவர்களை கண்டுபுடிக்க
தூர்தர்ஷன்ல விளம்பரம் குடுத்து, அவர்களை பற்றிய தகவல் தெரிந்தால்
"காவல் துறை கட்டுபாட்டு அறை, எழும்பூர் சென்னை-8" க்கு தகவல் சொல்ல
சொல்லுவாய்ங்க. ஆனா இப்போ அங்கயெல்லாம் போக தேவையில்ல..காணம போனவங்கள Facebook la தேடுனா ஈசியா கண்டு புடிச்சிரலாம்.

Anonymous said...

ஹலோ... சீரியஸா பேசிக்கிட்டு இருக்கேன் சார்

Anonymous said...

நீங்க எல்லாம் வயசானவங்க இப்படிதான் தோனும் .அதெல்லாம் டீன் ஏஜ் பசங்களுக்கு.போட்டோச லாக் பண்ணாட்டி சில கருப்பு ஆடுங்க புகுந்து தில்லாங்கடி வேலை எல்லாம் பண்ணுது.நீ எ டென்சன் ஆகுர தல .

கழுகு said...

சூப்பர் அப்பு...

Anonymous said...

டு தோறும், அதிக லாபத்தை ஈட்டும் நிலையில், அனைத்து வசதிகளையும் கொண்ட அரசு விரைவு பஸ்கள், நஷ்டத்தில் இயங்குகின்றன. குறைகளைக் களைந்து, பயணிகள் வசதியை முறையாக நிறைவேற்றினால், அரசு பஸ்களும் அதிக லாபம் ஈட்டும்.தமிழகத்தில், மாவட்ட தலைநகரங்களை இணைக்கும் வகையில், கடந்த, 1975 முதல் விரைவு பஸ்கள்

Anonymous said...

னியார் நிறுவனங்களும் செய்து கொள்கின்ற ஒப்பந்தத்தைத்தான் புரிந்துணர்வு ஒப்பந்தம் என்று கூறுகிறார்கள். ஒரு மக்கள் நல அரசு என்று சொல்லிக்கொள்கின்ற அரசு அப்படி ஒரு ஒப்பந்தம் போட்டு சேவை செய்வதை நாம் புரிந்து கொள்ளலாம். ஆனால், ஒரு முதலாளி எப்படி சேவை செய்கின்ற ஒரு ஒப்பந்தத்திற்கு முன் வருவான்? விற்க முடியுமென்றால், அதுவும் லாபத்தோடு விற்க முடியுமென்றால் தன் மனைவியையும், பிள்ளைகளையும் கூட விற்கத் துடிப்பதுதானே முதலாளித்துவத்தின் சிறப்பியல்பு. உண்மை இவ்வாறு இருக்க எதனால் அந்த முதலாளி சேவை செய்

Anonymous said...

ல் சேரும் ஊழியர்களை முதல் ஒரு வருட காலத்திற்குப் பல மாவட்டங்களிலும் அதன் பின்னர் சொந்த மாவட்டத்திற்கும் பணியாற்ற அனுப்பப்படுகிறார்கள். ஆனால், வாகனங்களில் எதாவது ஒரு பிரச்னை ஏற்பட்டால் முதலில் நிர்வாகம் செய்வது ஊழியர்களை இடம் மாற்றுவதுதான். ஊழியர்களை அதிகாரிகளுக்கு அடிமைகளாக்கவே நிர்வாகம் நிர்ப்பந்திருக்கிறது. வேலையில் முறையாக இருந்து, அதிகாரிகளின் கேள்விகளுக்கு முறையாகப் பதில் சொன்னாலோ, அல்லது அவசியமான கேள்விகள் எதையும் கேட்டாலோ, உடனடியாக மாவட்டத்தலைமை அலுவலகத்திற்கு வரவழைக்கிறார்கள். தானே தவறு செய்ததாக நிர்ப்பந்தம் செய்து மன்னிப்புக் கடிதம் எழு

Anonymous said...

வினரின் பிரச்சினையோடு இணைந்ததுதான், 108 ஊழியர்களின் பிரச்சினை. இதை 108 -ன் ஊழியர்கள் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். எனவே 108-ன் ஊழியர்களாக இருந்து போராடுகிற அதே வேளையில், இதே காரணத்தினால், பாதிக்கப்பட்டுப் போராடிக் கொண்டிருக்கிற மக்களோடும் அவர்கள் இணைந்து போராட வேண்டும். அப்போது மட்டுமே நிரந்தரமாக இப்பிரச்சினைக்கு ஒரு முடிவு கட்டமுடியும். அத

Anonymous said...

இன்னொரு தொல்லை இந்த Notificaiton. ஒருத்தனுக்கு ஒரு கமெண்ட் போடோம்னாஅதோட விடமா அதுக்கு அப்புறமா அவனுக்கு 100 பேர் கமெண்ட் போட்டாலும் நமக்கு அந்த 100 தடவையும் notifiaction வந்து சாவடிக்கிது.

Anonymous said...

குன்னு பாத்தா, அவரு facebook game la கேரட் போட்டுருந்துருக்காரு."கம்யூட்டர்ல போடுற கேரட்டு கூட வளர்றதுக்கு மூனு நாள் ஆதுதா.சரி பாஸ்.. போடுறதுதான் போடுறீங்க.. பொன்னி அரிசி
ஒரு மூட்டை போட்டு அருவடை பண்ணி குடுங்க

Anonymous said...

ஹலோ... சீரியஸா பேசிக்கிட்டு இருக்கேன் சார்

Anonymous said...

இறைவா.. நண்பர்களிடமிருந்து
காப்பாற்று!

எதிரிகளை நான் பார்த்துக்கொள்கிறேன்

முத்துசிவா said...

@anonymous;

டேய் மெண்டல்.. உனக்கு ரொம்ப முத்திருச்சி... நீயா போய் கீழ்பாக்கத்துல படுத்துக்க...

Unknown said...

"like"

ஜாக்கி சேகர் said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...

நல்ல பதிவு...சுவாரஸ்யமான பின்னூட்டங்கள்...

aalunga said...

ஹா.. ஹா.. அருமை!!

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...