Thursday, September 1, 2011

மங்காத்தா- VENKAT & YUVAN'S GAME


Share/Bookmark
அஜித்த பொறுத்த அளவு ஒரு படம் சூப்பரா இருக்கனும்னு அவசியம் இல்ல.மொக்கையா இல்லாம இருந்தாலே அவருக்கு அது ஹிட்டாயிடும். அவ்ள வெறித்தனமான Fans அவருக்கு. தமிழ்நாட்டுல ரஜினி படத்துக்கு அப்புறம் இவ்ளோ பெரிய opening வேற எந்த ஹீரோ படத்துக்கும் கெடைக்கிறது இல்ல.

வழக்கமா ஒரு பெரிய ஹீரோ ஒரு படம் start பண்ணா ஒவ்வொரு movement um
நியூஸ் ஆயிடும். ரஜினி எந்திரன் தொடங்கும் போது, ரோபோவ வச்சி படம் பண்ண போறாங்கன்னு ஒரே ஒரு நியூஸ் தான் வந்துச்சி. அத வச்சி உலகத்துல எத்தனமொழில ரோபோ related ah படம் வந்துச்சோ அத்தனை படத்தோட கதையயும் இதான் எந்திரன் கதை இதான் எந்திரன் கதைன்னு கெளப்பி விட்டுட்டானுங்க.அதே மாதிரிதான் மங்காத்தா ஆரம்பிக்கும் போதும். gambling பத்தி படம் எடுக்க போறோம்னு மட்டும் தான் சொன்னாங்க. அதுக்குள்ள நம்ம ஆளுங்க ஓஷன்ஸ் 11 ah எடுக்க போறாங்க... கேசினோ ராயல எடுக்க போறாங்கன்னு. அத எடுக்க போறாங்க... இத எடுக்க போறாங்கன்னு கெளப்பி விட்டுட்டாங்க. எல்லாத்துக்கும் April fool சொல்லிட்டு வித்யாசமான கதைகளத்துல வந்துருக்கு இந்த மங்காத்தா.

அஜித் ரொம்ப நாளுக்கு அப்புறம் ஒரு உருப்படியான கதைய செலெக்ட் பண்ணிருக்காருன்னு சொல்லலாம். இந்த படத்துக்கு உண்டான மொத்த credit um மூணே பேருக்கு தான் மொதல்ல வெங்கட் ப்ரபு... அஜித்துக்கு ஏத்த மாதிரி ஒரு நல்ல ஸ்கிரிப்ட ரெடி பண்ணதுக்கு. ரெண்டாவது கேமரா மேன் சக்தி சரவணன். நாசம் பண்ணிருக்காரு. செம்ம ரிச் லுக் ஒவ்வொரு சீனும்.. மூணாவது யுவன்.... படத்த தூக்கி நிறுத்துறதே யுவனோட BGM தான். மாஸ்..... ஒரே தீம் மியூசிக் தான். ஆனா தெறிக்க விட்டுருக்காரு. 3 பாட்டு ஒகே..

அர்ஜுன் வழக்கம் போல... "நடிச்சா போலீஸ் சார்... நா wait பண்றேன் சார்" ங்கறாரு.படத்துல ஏகப்பட்ட கேரக்டர்ஸ். அஜித்த தவற வேற யாருக்கும் அதிக வெயிட்டேஜ்  இல்ல அர்ஜுன் மொதக்கொண்டு. படத்துல கடிக்கிற மாதிரி உள்ளதுன்னு பாத்தா ப்ரேம்ஜி போடுற மொக்கைதான்.. சில சீன்ஸ்ல சிரிக்க வச்சாலும் பல சீன்ஸ்ல கடுப்பேத்துறாரு. ஆனா அதெல்லாம் தலயோட performance la காணாம போயிடுது.

மங்காத்தா எல்லாதரப்பினருக்கும் புடிச்சமாதிரியான ஒரு படமா இருக்கும்ங்கறதுல எந்த சந்தேகமும் இல்ல. "தல" யோட 50 வது படம் அவர் நடிச்ச 50 படங்கள்லயும் சிறந்த படம்னு சொல்லாம். செம்ம மாஸ்........

ஓபனிங் சீனையும் டைட்டிலயும் கண்டிப்பா மிஸ் பண்ணிடாதீங்க..

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

12 comments:

Unknown said...

கல்க்கல்ய்யா மாப்ள! விநாயக சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்!....அப்போ படம் ஹிட்டுன்னு சொல்லுங்க!

vivek kayamozhi said...

படம் ஹிட்...தல ஜெயிசிட்டார்....மன்றங்களை களைத்தாலும் அவருக்கு மாஸ் இருக்கிறது...ஒளிவு, மறைவற்ற அவரது நேர்மை தான் இதற்க்கு காரணமாக முடியும்.
எனக்கு தெரிந்த வரை அவருக்கு இருப்பது வெறும் ரசிகர்கள் அல்ல..அவரது நலம் விரும்பிகளே....ரசிகர்கள்தான் ஒரு படம் ஓடாவிட்டால் ஓடிவிடுவார்கள்...

உங்கள் விமர்சனத்துக்கு நன்றி... தல இந்த முறை ஏமாற்றவில்லை....மீண்டும் மீண்டும் கியூ வில் நிற்கும் கூட்டமே சாட்சி....

கடம்பவன குயில் said...

ஒவ்வொரு பதிவரும் ஒவ்வொரு விதமாக தான் ரசிக்கறீங்க..ஒவ்வொருவிதமாக தான் விமர்சனம் எழுதறீங்க.. தல ஆன்ட்டி ஹீரோவா நடிச்சதை மக்கள் ஏத்துக்குவாங்களானு நானே பயந்துட்டு இருக்கேன்.

மங்காத்தா ஆட்டத்தில் ஜெயிக்கணும்னு தல ரசிகரா நானும் ஆசைப்படுகிறேன். பார்ப்போம்.

John said...

HANGOVER+ITLAIANJOB+SWORD FISH=MANGAATHA

Philosophy Prabhakaran said...

படத்துல அஜீத் பேசின முதல் வசனம் காதுல விழவே இல்ல... அவ்வளவு ஆரவாரம்... விளையாடு மங்காத்தா பாட்டு முழுவதிலும் முன் சீட்டில் ஒருத்தன் எழுந்து ஆடிக்கொண்டே இருந்தான்... அவனை உட்காரச்சொல்லியே என் உயிர் போயிடுச்சு... கூட்டம் குறைஞ்சதுக்கு அப்புறம் இன்னொரு முறை பார்க்கணும்...

Philosophy Prabhakaran said...

உங்க வலைப்பூவின் பெயர் ஆரம்பத்தில் இருந்தே அதிரடிக்காரன் தானா...? இடையில் மாற்றினீர்களா...

முத்துசிவா said...

@Philosophy Prabhakaran:

என் வலைப்பூவின் பெயர் ஆரம்பத்திலிருந்து அதிரடிக்காரன் இல்லை. போன மாதம் தான் மாற்றினேன். முதலில் "BOSS " எனவும் பின்பு கொஞ்ச நாள் "சிவ சம்போ " எனவும் வைத்திருந்தேன்.

கேரளாக்காரன் said...

Review podarennu motha storyum sollama supera oru review. Super thala

kobiraj said...

என்னமா புகழுறீங்க .ஓட்டு போட்டாச்சு .

rajesh said...

Multi hero subject la ore oruthara matum appreciate panringooo.
arjun, prem ji & other 3 heros performance also good.

முத்துசிவா said...

@Rajesh:

Ennathaan kaalu, kai ellam udambula irunthaalum thala illanna athukkellam mathippe illaiyeda....

:)

Unknown said...

அருமையான விமர்சனம். படம் பாத்துட்டு வரேன்

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...