Friday, October 21, 2011

அம்பு ஒன்று.. இலக்கு மூன்று - (சவால் சிறுகதை-2011)


Share/Bookmark
அந்த இரண்டடுக்கு மாடி வீட்டு வாசலில் "தமிழ்நாடு அரசு" முத்திரையிட்ட அந்த அம்பாசிடர் வேகமாக வந்து நின்றது. ஓட்டுனர் இருக்கையிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டு ஒரு வித பதட்டத்துடன் தரையில் கால்பதித்தார் SP கோகுல். வயது நாற்பதுகளில் இருக்கலாம். வெண்ணிற மேலாடை அணிந்திருந்த அவர், காவல் துறையை சேர்ந்தவர் என்பதை அவரின் காக்கி பேண்டும், அதே வண்ண ஷூவும் அப்பட்டமாய் காட்டிக் கொடுத்தன.
வேகவேகமாக அந்த வீட்டிற்குள் நுழைந்தார். நடையில் ஏதோ ஒரு பதற்றம். அவரை வழி நடத்தி சென்று கொண்டிருந்த வீட்டு பணியாளன் முதல் மாடியின் ஒரு விஸ்தார மான அரைக்கு அழைத்து சென்றான். அந்த அரை வெளிச்ச அறைக்குள் நுழைந்ததுமே

"வாங்க SP சார்... எங்க உங்களுக்கு பாசமெல்லாம் இல்லாம போயிடுமோன்னு
பயந்துட்டேன்... டேய் மணி... SP வந்துட்டாரு.. சேகருக்கு போன் போட்டு அவரு பையன ஒண்ணும் பண்ணிடாம வீட்டுல விட்டுட சொல்லு" என்றான் ஆதிமூலம். வயது நாற்பத்தி இரண்டு. தோற்றத்திலும் பேச்சிலும் ப்ரகாஷ்ராஜை ஞாபகப்படுத்தினான்.
"ஆதி உனக்கு என்ன வேணும்..ஏன் இப்புடியெல்லாம் செய்ற" கோகுல்
வெடித்தார்

"செய்ய வச்சிட்டீங்களே SP. இந்த ஆதி ஒண்ணு மேல ஆசப்பபட்டுட்டான்னா அது அவனுக்கு கெடைச்சே ஆகனும். ரெண்டு பேரும் சேந்து என்ன டீல்லயா விட பாக்குறீங்க"

 "புரியிற மாதிரி சொல்லு... "

"டேய் சாருக்கு புரியலையாம்டா.. கொஞ்சம் புரிய வைங்க...."

மணி கோகுலை நோக்கி முரட்டு தனமாக பாய்ந்தான்,

*****************************************************************************
பத்து நாட்களுக்கு முன்பு:

IG சதாசிவத்திற்கு எதிராக அமர்ந்திருந்தார் கோகுல். பாதி சூட்டை இழந்திருந்த
தேநீரை சுவைத்த படி சதாசிவம் ஆரம்பித்தார்.

"பல கோடிரூபா மதிப்புள்ள பணம் இந்த விஷயத்துல involve ஆகியிருக்கதனாலதான் இந்த ஆப்ரேஷன் ரொம்ப சீக்ரெட்டா பண்ணிட்டு இருக்கோம்.. நம்ம டிபார்ட்மெண்ட்லயே அங்கங்க ஓட்டை இருக்கதனாலத இத பத்தி நா யார்கிட்டையுமே சொல்லாம direct ah deal பண்ணிகிட்டு இருக்கேன். ஏன் உங்களுக்கே இப்பதானே தெரியும்?.."

"yes sir... ஆனா இந்த அப்ரேஷனுக்கு நீங்க செலெக்ட் பண்ணிருக்க ஆள நெனச்சா
தான்... " சற்று இழுத்தார்..

"ஏன்.... விஷ்ணு 7 வருஷமா நமக்கு informer ah இருக்கான். infact நாமலே கண்டுபுடிக்க தெணறுண சில கேச கூட அவன் ரொம்ப brilliant ah investicate பண்ணி தந்துருக்கான்..என்ன பொறுத்த வரைக்கும் He is the only guy we can trust for 100%..விஷ்ணு மட்டும் அந்த சீக்ரெட் கோட கண்டுபுடிச்சிட்டான்னா அந்த லாக்கர்ல இருக்கர கோடிக்கணக்கான கருப்பு பணம் நம்ம கஸ்டடிக்கு வந்துடும். இன்னிக்கிருந்து நீங்க இந்த கேஸ்ல Charge எடுத்துக்கோங்க.. from today onwards vishnu will be directly under your control....

Ok sir"

"அப்புறம் அந்த ஆதிய பிடிக்கிறதுக்கு எதாவது step எடுத்துருக்கீங்களா? .."

Evidence தேடிகிட்டு இருக்கேன் சார்.. கூடிய சீக்கிரம் எதுலயாது மாட்டுவான்.

"ஒகே... wish you all the best..."

Thank you sir

கோக்குல் ஒரு சல்யூட்டை உதிர்த்து விட்டு வெளியே வந்தான்... காரின் கதவை
திறக்க போகும் சமயத்தில் அந்த குரல் கேட்டது.."கோகுல கிருஷ்ணா என்னப்பா
கண்டுக்கவே மாட்டேங்குற..." கோகுல் திரும்ப அவனுடன் ஒன்றாக பணிபுரிந்த
நண்பன் சுரேந்தர் நின்றிருந்தான்...

"ஹே சுரேந்தர் எப்டி இருக்க."
"என்னப்பா நீ ஒரு ஃபோன் கூட பண்ண மாட்டேங்குற..." கிண்டலாக கேட்டான் சுரேன்.

"சுரேன்... நா ஒரு முக்கியமான வேலையா கெளம்பிட்டு இருக்கேன்பா.. evening freeya இருந்தா வீட்டுக்கு வா... நாம ஒண்ணா தண்ணியடிச்சி நாளாச்சி" என்று சட்டென விவாதத்தை முடித்துவிட்டு காரில் புறப்பட்டார் கோகுல்
**********************************************************************************
இப்பொழுது

டேபிளின் ஒருபுரம் ஆதி அமர்ந்திருக்க மறுபுறம் தளர்ந்த உடம்போடு பின் கைகள் கட்டப்பட்ட நிலையில் வாயிலிருந்து வழியும் கணிசமான அளவு ரத்ததோடு அமர்ந்திருந்தார் SP. கோகுல்... அந்த டேபிளிலிந்த ஒரு steal ஸ்கேலும், சில வெள்ளை தாள்களும் odd man out ஆக காட்சி அளித்தன.

"SP ...என்ன மறுபடியும் கொலைகாரனா மாத்திடாத..... உங்க போலிஸ் ஸ்டேஷன்
ரெக்கார்ட்ஸே சொல்லுமே இந்த ஆதி பணத்துக்காக என்ன வேணாலும் பண்ணுவான்னு.என்னடா டேபிள்ல பேப்பர்,ஸ்கேலெல்லாம் இருக்கே.. உக்காந்து கணக்கு போட சொல்லப் போறேன்னு பாத்தியா.. என் புள்ள இங்கதான் படிப்பான். அவன் வர்றதுக்குள்ள டீல முடிச்சிட்டு ரத்ததையெல்லாம் சுத்தம் பண்ணி வைக்கனும். அடம் புடிக்காம சொல்லு ராஜா ..எங்க பணம்?"

"எனக்... எனக்கு தெரியாது" பேசமுடியாமல் பேச முயற்சித்தார்... கோகுல்..

மணி... இவன் பேண்ட் சட்டை.. பர்ஸ் எல்லாத்தையும் உருவி பாரு... எதாது மாட்டுதான்னு

அடுத்த 5 வது நிமிடத்தில் கோகுல் முழுவதும் சோதனை செய்யபாட்டர்...

பேண்ட் பாக்கெட்டில் இருந்த அவரது செல் போன் டேபிளில் கிடத்தப்பட்டது,

"நாங்க மாட்டுனா மட்டும் எத எத அவுக்க சொல்றீங்க" ஆதங்கத்தை கொட்டிக்கொண்டே கோகுலின் பர்ஸை கிளரினான் மணி.. இரண்டு க்ரெடிட் கார்டு, லைசன்ஸ், ஐ.டி கார்டு என அவனுக்கு தேவையில்லை என்று பட்டதெயெல்லம் வெளியே வீசிவிட்டு, கடைசியில் மடித்து வைக்கப்பட்டுருந்த அந்த வெள்ளை காகிததை வெளியே எடுத்து
"அண்ணேன் இதுவா பாரு"  ஆதியிடம் நீட்ட ஆதி அதை பிரித்து படித்தான். ப்ரிண்ட் செய்யப்பட்டிருந்த அந்த வாசகம் பளிச்சிட்டது.

"Mr.கோகுல்,
S W H2 6F இது தான் குறியீடு.. கவனம்
-விஷ்ணு"
'
டேய் மணி நேத்து ஒரு சின்ன பையன் கொண்டு வந்து குடுத்துட்டு போனானே ஒரு துண்டு சீட்டு அத எடு...

"தோ... இருக்குன்னே... சட்டையின் உள் பாக்கெட்டிலிருந்து அதே சைஸில் ப்ரிண்ட் செய்யப்பட்ட மற்றுமொரு தாளை நீட்டினான்....."

"sir, கோகுலிடம் தவறான குறியீட்டைத்தான் கொடுத்திருக்கிறேன்..கவலை வேண்டாம்-
-விஷ்ணு" என்ற ப்ரிண்ட் எழுத்துக்கள்...

இவ்விரண்டு துண்ணு தாள்களையும் மாறி மாறி பார்த்துக்கொண்டிருக்கும் போது டேபிளில் கிடத்தப்பட்ட கோகுலின் கைபேசி அலறியது. ஆதி அந்த கைபேசியை
கையில் எடுத்து பார்க்க... " Informer Vishnu calling,,,,,,,,,"


********************************************************************************
ஐந்து நாட்களுக்கு முன்பு

மதிய உணவை முடித்துக்கொண்டு ஆதி கை அலம்பிக்கொண்டிருக்க அவன் செல்போன் சினுங்கியது. எதோ ஒரு லேண்ட் லைன் நம்பர்...... கைபேசியை காதுக்கு கொடுக்க மறுமுனையில் ஒரு ஆண் குரல்..

"சார் நா விஷ்ணு"

"சொல்லு கன்னா... நீ கால் பண்ணுவன்னு எனக்கு தெரியும்... என்ன டீலுக்கு
ஒத்துக்கிறியா?"

"ம்ம்ம்"

"அன்னிக்கு நா உன்கிட்ட அந்த சீக்ரெட் code கேட்டதுக்கு பெரிய சத்தியாவான்
மாதிரி பேசுனியே கன்னா  இப்ப எப்புடி இந்த திடீர் மாற்றம்?"

"நீங்க சொன்னத நானும் நல்லா யோசிச்சி பாத்தேன்... நா 7 வருஷமா போலீஸ்
informer ah இருக்கேன்... இன்னும் சொந்தமா ஒரு two wheeler கூட இல்ல... எனக்கு
இந்த போலீஸ் டிபார்ட்மெண்ட் என்ன செஞ்சிருக்கு? நா மட்டும் ஏன் நல்லவானா இருக்கனும்? அதான் மாறிட்டேன்.."

"அப்புடிவா வழிக்கு.. சரி உன் குரல் ஏன் ஒரு மாதிரி இருக்கு"

"அதெல்லாம் ஒன்னும் இல்ல... லைட்டா ஜலதோஷம்...மேட்டருக்கு வரேன் .எனக்கு

அட்வான்ஸா 10L  வேனும்..."

" 10L அதிகம்"

"உங்களுக்கு கெடைக்க போறது அதைவிட 100 மடங்குங்கறத ஞாபகம் வச்சிக்கோங்க.."

"சரி எங்க தரனும்"

"சரி 10L ah நாளைக்கு பாலிதின் பைல போட்டு ராகினி தியேட்டருக்கு அடுத்து மூணாவது உள்ள குப்பைதொட்டில போட்டு போயிட சொல்லுங்க, நா பாத்துக்குறேன். அப்புறம் இனிமே நமக்குள்ள எந்த ஃபோன் conversationum வேண்டாம். நேரம் வரும்போது தகவல் உங்களை தேடி தானா வரும்..." இணைப்பு துண்டிக்கப்பட்டது.  .

மறுநாள் Sp ஆபீஸ் சுப்ரமணியிடமிருந்து "அண்ணேன் அந்த விஷ்ணு பய இங்க
வந்துருந்தான். SP ya பாத்தான்... ஆனா எதுவுமே ரெண்டுபேரும் பேசிக்கல... ஒரு துண்டுசீட்ட குப்பத்தொட்டியில போட்டுட்டு பொய்ட்டான். அவன் போன அப்புறம் SP அந்த குப்பை தொட்டிலருந்து அந்த சீட்ட எடுத்துட்டு போய்ட்டரு. நா அவருக்கு டீ குடுக்க போகும்போது அவரோட மேசையில அந்த சீட்டு இருந்துச்சி... எதோ குறியீடுன்னு போட்டு இங்கிலீஸ்ல எதோ எழுதிருந்துச்சிண்ணே.. எனக்கு ஓன்னும் புரியல"  என்ற செய்தி ஃபோனில் வந்தது.

இதை கேட்டு "நமக்கு முன் போலீஸில் துப்பு கொடுத்து விட்டானோ அவன
தூக்கிடனும்" என்று ஆதி நினைத்து கொண்டு இருக்கும் போது ஒரு LKG சிறுவன் வீட்டிற்கு வந்து "Uncle இத உங்க வீட்டுல குடுக்க சொல்லி அங்க ஒரு Uncle குடுத்துட்டு போனாரு" என்று சொல்லி அந்த இன்னொரு காகித துண்டை கொடுத்து விட்டு சென்றான்.
*************************************************************************************
இப்பொழுது

Vishnu calling என்பதை பார்த்ததுமே ஆதி பரபரத்தான்... SP உடனே அந்த செல்
ஃபோனை SP kku அருகில் கொண்டு சென்று "தோ பாரு... நீ எப்பவும் பேசற மாதிரி பேசு.... எங்க இருக்கானு விசாரி.... எதாது க்ளூ குடுக்க ட்ரை பண்ண மவனே" என்று சொல்லி call answer ஐ அழுத்தி விட்டு loud speaker ஐ on செய்தான்.

" SP சார் எப்டி இருக்கீங்க" விஷ்ணுவின் பேச்சில் ஒரு ஏளனம் தெரிந்தது.

"விஷ்ணு where are you? where is the money? ரெண்டு நாளா உங்க கிட்டருந்து
எந்த information um வர்ல?

"ரெண்டு நாளா information இல்லண்ணதும் முடிவு பண்ணிருக்க வேணாமா சார்...
பையன் பணத்த எடுத்துகிட்டு எஸ்கேப் ஆயிருப்பான்னு.... எத்தனை நாளுக்கு சார் நானும் அடுத்தவன் பின்னாடி யாருக்கும் தெரியாம லோ லோ லோன்னு அலையிறது அதான் இப்புடி.. பணத்த பாக்குற வரைக்கும் எனக்கும் ஒன்னும் தோணல... மொத்த பணத்தையும் ஒண்ணா பாத்ததும் ஏன் நாமளே ஓனராக கூடாதுன்னு தோணுச்சி...மொத்தமா தூக்கிட்டேன்... அந்த ஆதி தான் ஏமாந்துட்டான் பாவம்... ஏற்கனவே அவன் எனக்கு பத்து லட்சம் மொய் வச்சிருக்கான். அவன ஏமாத்திட்டோம்னு தான் வருத்தமா இருக்கு. "

"விஷ்ணு நீ பெரிய தப்பு பண்ற... நீ மாட்டுனா உனக்கு என்ன தண்டனை தெரியுமா?"

"மாட்டுனா தானே... சொல்லாமயே போயிருப்பேன்... அப்புறம் என்ன ஆச்சின்னு தெரியாமலே கொழம்பி போயிருவீங்கல்ல,,,அதுக்கு தான். இது தான் என்கிட்டருந்து வர்ற கடைசி கால்.... வீனா என்ன தேடி அலையாதீங்க... இப்பவே நா உங்களுக்கு எட்டாத தூரத்துல தான் இருக்கேன்... வர்டா.. Bye..." என்றவுடன் இணைப்பு  துண்டிக்கப்பட்டது.

இதை கேட்டவுடன் ஆதி கோபத்தின் உச்சிக்கே சென்றுவிட்டான்... "___.தா அந்த
______ பையன்  என்னையே ஏமாத்துறானா... அவன கொன்னு பொதைச்சிட்டு தாண்டா மறுவேலை. டேய் இவன அவுத்துவிட்டுட்டு அவன போய் தேடுங்கடா.... என்ன  என்ன கேன____ன்னு நெனச்சிகிட்டு இருக்கானா.. நா யாருன்னு காட்டுறேன்... இந்தா.. SP உன்ன இங்க வச்சி நாலு தட்டு தட்டுனத மனசுல வச்சிகிட்டு பின்னாடி எதாவது ரியாக்ஷன் காட்டுன.... உன் புள்ள இருக்க மாட்டான்..போ...""

SP கோகுல் வரும்போது இருந்த கம்பீரம் குறைந்து சற்று தளர்வான நடையில்
காரை அடைந்து புறப்பட்டார்.

**************************************************************************************
கோகுல் முகத்தில் குத்து வாங்கியதால் ஏற்பட்ட வலியை பொறுத்துக்கொண்டு காரை ஓட்டிச் சென்றார். திடீரென கைபேசி அழைப்பை விடுத்தது...

"Suren Calling...."
call attend செய்து காதுக்கு பொறுத்தினார்... மறுமுனையில்

"என்ன கோகுல்... அர்ச்சனையெல்லாம் முடிஞ்சிதா"

"முடிஞ்சிதுப்பா..எதிர்பாத்தத விட கொஞ்சம் ஓவராவே அடிச்சிபுட்டாய்ங்க.. ரெண்டு பல்ல காணும்பா"

"அட விடுப்பா... தங்கத்துல கட்டிக்கலாம்...இல்ல இல்ல... நம்மகிட்ட இப்ப இருக்க பணத்துக்கு வைரத்துலயே கட்டிக்கலாம்...ஹிஹி"

"ஹாஹா... நல்ல வேளை... கரெக்டான டைமுக்கு விஷ்ணுவ call பண்ண வச்சி
மத்த பல்லு எல்லாத்தையும் காப்பாத்திட்ட... ஆமா எப்புடி அவன இவள
கேசுவலா பேச வச்ச?"

"அதுவா... நெத்திப்பொட்டுல துப்பாக்கிய வச்ச உடனே எழுதிக்கொடுத்தத அப்புடியே ஃபோன்ல ஒப்பிச்சிட்டான்... "

"கில்லாடிப்பா நீ.... ஆமா இப்ப எங்க அவன்..."

"இப்பதான் அவன் தலைக்குள்ள ரெண்டு 7mm புல்லட்ட எறக்குனேன்.. vishnu
on the way to சொர்க்கம்பா..."

(ஏழு நாட்களுக்கு முன்: சுரேந்தர்.... விஷ்ணு மேல எனக்கு கொஞ்சம் சந்தேகம்  இருந்துச்சி. அதுனால அவன் calls ah trace பண்ணதுல நேத்து ஆதி அவனுக்கு ஃபோன் பண்ணி பேரம் பேசிருக்கான்.. எனக்கு ஒரு யோசனை...ஒழுங்க execute பண்ணா நாம எங்கையோ போயிடலாம் என்று சுரேந்தரிடம் தன் யோசனையை கோகுல் கூற சுரேந்தர் முகம் பளிச்சிட்டது)

"சரி... எப்புடியாவது விஷ்ணு பாடிய ஆதியோட தெருவுல போட்டுடு...
விஷ்ணு பேசுனது என்னோட மொபைல்ல auto record ஆயிருக்கு.. அதோட
நீ விஷ்ணு மாதிரி ஆதிகிட்ட 10L பணம் கேட்டதையும் நாம ரெக்கார்டு பண்ணிருக்கோம்.இது ரெண்டை வச்சே ஆதிய, விஷ்ணு கொலைகேசுல உள்ள தூக்கி போட்டுடலாம். விஷ்ணு பேசுனத  IG கிட்ட போட்டு காட்டுனா பணத்த எடுத்தது அவன் தான் அவரும் நம்பிடுவாரு. காணாமல் போன பணத்த தேடுற மாதிரி ஒரு ரெண்டு மாசம் இழுத்தடிச்சிட்டு கேச மூடிடலாம்... நமக்கு வேணும்ங்கற பணமும் கெடைச்சாச்சி..ஒரே  கல்லுல மூணு மாங்கா..

(இரண்டு நாட்களுக்கு முன்: சுரேன்.. இந்த எங்க ஆபீஸ் சுப்ரமணி எனக்கு டீ
கொண்டுவர்ற சாக்குல என் டேபிள்ல இருந்த கோட் ஷீட்ட உத்து உத்து பாத்துகிட்டு இருந்தான். அவன கொஞ்ச நேரம் நோட்டம் விட்டதுல அவன் மேட்டரை ஆதிக்கு சொல்லிட்டான்.. எதாது பண்ணி ஆதிய டைவர்ட் பண்ணு " என்று சொல்ல அந்த இரண்டாவது துண்டு சீட்டை ஆதிக்கு கிடைக்க செய்தான் சுரேந்தர்")


"ஹாஹா...சரி பார்ட்னர்.. சீக்கிரம் வா.. நானும் ஹாஸ்பிட்டல் பொய்ட்டு வந்துடுறேன்..பெரிய பார்டியா celebrate பண்ணிடலாம்".

" கண்டிப்பா... இன்னும் அரை மணி நேரத்துல உன்ன மீட் பண்ணுறேன் கோடிஸ்வரா"

"ஆனா நீ பெரிய கேடீஸ்வரண்டா...."

ஹாஹாஹாஹஹஹ

ஆதி மட்டும் இல்ல.. இந்த கோகுல் கூட பணத்துக்காக என்ன வேணாலும் செய்வான்  என்று நினைத்துக் கொண்டே காரை 100 ல் பறக்க விட்டார்

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

10 comments:

Mohamed Faaique said...

கதை ஏகப்பட்ட திருப்பங்களுடன் சூப்பரா இருக்கு.. முடிவும் சூப்பர்..

முத்துசிவா said...

thanks boss :)

மாய உலகம் said...

பாஸ் ஒரு க்ரைம் நாவல் படிச்ச எஃபெக்ட் சூப்பர்... என்ன கதையில எல்லாருமே திருடங்களா இருக்காய்ங்கிய... ஹா ஹா

முத்துசிவா said...

ஹி..ஹி :)

asksukumar said...

சும்மா...அதிருதுல்ல!!!!

ஷைலஜா said...

கதை புதுமை அருமை!

இராஜராஜேஸ்வரி said...

முடிவு சூப்பர்..

வாழ்த்துக்கள்..

Madhavan Srinivasagopalan said...

எல்லாஞ்ச்சரி.. கோகுல் நல்லவரா கெட்டவரா ?
---------
என்னோட கதையில கோகுல் எப்படின்னு இங்க வந்து பாத்துட்டுப் போங்க.

நம்பிக்கைபாண்டியன் said...

கதை பல திருப்பங்களுடன் பயணிக்கிறது, மங்காத்தா படம் க்ளைமேக்ஸ் பார்த்த எபக்ட் இருந்தது, வாழ்த்துக்கள்

Unknown said...

நல்ல கதை ட்விஸ்ட் நன்றாக எடுபடுகிறது.
வாழ்த்துக்கள்.
அப்படியே என்னோட கதையையும் படிசுடுங்க..
http://venpuravi.blogspot.com/2011/10/blog-post_30.html

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...