Saturday, October 1, 2011

வெடி- மரண கடி


Share/Bookmark
ஏண்டா நல்ல நல்ல படம்லாம் ரிலீஸ் ஆயிருக்கும்போது உன்ன யாருடா இந்த படத்துக்கு போக சொன்னதுன்னு கேக்குறீங்களா? ஹி ஹி ஏன்னா I like action movies. அதோடா I'm விஷால் fan. (அவன் இவன் படத்தில் அல்ல).படத்த பத்தி பெருசா சொல்ல ஒண்ணும் இல்லப்பா.. ஏற்கனவே இதே மாதிரி தெலுங்குல ஒரு 75 படம் வந்துருக்கு. தமிழ்ல ஒரு 60 படம் வந்துருக்கு. 
1. விஷால் 6 பாக்ஸ் வச்சிட்டு கரண்ட்ல அடிபட்ட காக்கா மாதிரி இல்லாம லைட்டா தொப்பையோட மனுஷன் மாதிரி இருக்காரு. அவன் இவன்ல 1-1/2 கண்ணோடவே நடிச்சி கண்ணு ஒரு பக்கம் சைடு வாங்கிருச்சி போலருக்கு. க்ளோஸ் அப் ஷாட்டுல எல்லாம் இன்னும் அதே 1-1/2 கண்ணு effect தெரியுது.

2. படத்துல ஒரே நிம்மதி விவேக்தான். பலூன உள்ள வச்சிக்கிட்டு 7 pack bodyoda
வர்ற அவரு கெட் அப்ப பாத்தேலே ஓரமா போய் 1/2 மணி நேரம் சிரிச்சிட்டு
இருக்கலாம்.

3. என்னது சம்சாக்குள்ள ரொட்டியா? ஓ... சமீரா ரெட்டியா? அட போங்க பாஸ்
கூப்புடுற தூரத்துல எத்தனையோ தமிழ் ஹீரோயின் இருக்காங்க..அப்புடியே
இல்லாட்டாலும் ஆந்த்ராவுல இருக்காங்க. அதயெல்லாம் விட்டுட்டு ஹிந்தில
out of focus la இருந்த டம்மி பீஸ கொண்டுவந்து இங்க பெரிய ஹீரோயினாக்கி
கடுப்பேத்துறாய்ங்க. மூஞ்ச பாக்க முடியல.

4.சரிக்கம பத நீசே... கபக் கபக் கப கபக் கபக் கப ஜல்சே... நம்ம DSP ஒரு பாட்டுக்கு டான்ஸ் ஆடிருக்காரு. இவரு பாட சமீரா ரொட்டி ஆட ஒரே புதிய தில்லாணா மோகனாம்பாள் தான் போங்க.

5. விஜய் ஆண்டனி அவரோட வேலைய கரெக்டா பாத்துருக்காரு. பாட்டும்
சரி BGM மும் சரி  நல்லாவே இருக்கு. அருக்குற மாதிரி இல்ல.

6. அப்புறம் படத்துல stunt master அனல் அரசு பட்டைய கெளப்பிருக்காரு. நாலு fight um தெறிக்குது.

6. படத்துக்கு ஏன் வெடின்னு பேரு வச்சிருக்காங்க தெரியுமா? விஷால் ஒரு
சீன்ல  அஞ்சு லாரிய பாம் வச்சி வெடிச்சுருவாரு. அதுனால தான் படத்துக்கு வெடின்னு வச்சிருக்காங்கலாம். Oh What a karvaad.....

மொத்ததுல வெடி- என் சொந்த காசுல என் சீட்டுக்கு கீழ நானே வச்சிக்கிட்டது.




அப்புறம் இன்னொரு முக்கியமான விஷயம். இன்னும் கொஞ்ச நாளுக்கு
யாரும் கமலா தியேட்டர் பக்கம் போகதீங்க. அப்புடி போன உங்க இன்சூரன்ஸ்
பாலிசியெல்லாம் renewal  பன்னிட்டு போங்க. ஏன்னு கேக்குறீங்களா? நம்ம
பவர் ஸ்டார் அடுத்த ஆப்ரேஷனுக்கு ரெடியா இருக்காரு. யாரு உயிருக்கும்
உத்தரவாதம் இல்லை. நா சொல்றத சொல்லிபுட்டேன்.  அவ்ளோதான்.

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

4 comments:

Karthikeyan said...

//மொத்ததுல வெடி- என் சொந்த காசுல என் சீட்டுக்கு கீழ நானே வச்சிக்கிட்டது// ஹாஹாஹா...

சமீரா ரெட்டிய பாக்கும் போது ஆம்பள மாதிரி இருக்கு.. ஆறடில இப்படி ஒரு ஃபிகரா...அட்டு ஃப்கர்..

Unknown said...

இன்னும் ஆழமான விமர்சனம் வேணும். படம் பாக்கலாமா? வேணாமா?

Karthikeyan said...

//மொத்ததுல வெடி- என் சொந்த காசுல என் சீட்டுக்கு கீழ நானே வச்சிக்கிட்டது// ஹாஹாஹா....

முத்துசிவா said...

//இன்னும் ஆழமான விமர்சனம் வேணும். படம் பாக்கலாமா? வேணாமா?// intha padathukku ithuve over jai... :)

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...