Monday, May 28, 2012

MEN IN BLACK 3 - WORST OF 3


Share/Bookmark
நம்ம ஊர்ல சில படங்கள் ஆரம்பிச்சி, ஹீரோவோட கால்ஷீட் ப்ரச்சனை, தயாரிப்பாளர் ப்ரச்சனை ன்னு பல பிரச்சனைங்களால குறிப்பிட்ட நேரத்துல ரிலீஸ் பண்ண முடியாம முடங்கி போயிரும். சில நேரங்கள்ல ரொம்ப முயற்சி பண்ணி நாலு வருஷத்துக்கு முன்னால ரிலீஸ் ஆக வேண்டிய படத்த இப்ப ரிலீஸ் பண்ணுவாங்க. அந்த படங்கள் அந்த சீசன்ல வெளியிடப்படுற மற்ற படங்களோட போட்டி போட முடியாம மட்டை ஆயிரும். அதே மாதிரி ஒரு ஃபீலிங்க தான் தருது MIB 3. பத்து வருஷத்துக்கு முன்னால வந்த (2002) இந்த படத்தோட 2 வது பாகத்தோட கூட ஒப்பிட  முடியாத அளவு ஒரு கேவலமான காட்சி அமைப்பு மற்றும் கிராஃபிக்ஸ். இதயாடா இவளோ கஷ்டப்ப்ட்டு எடுத்தீங்கன்னு நெனைக்க தோணுது.

கதைன்னு பாத்தா ஓரளவுக்கு ஓகே தான். "ஏஜெண்ட் ஜே" (Will Smith) யோட பார்ட்னர் ஏஜெண்ட் கே (Tommy Lee Jones)  40 வருஷத்துக்கு முன்னால ஒரு பயங்கரமான ஏலியன அரஸ்ட் பண்ணி நிலாவுல (Moon) ஒரு ஜெயில்ல வச்சிருக்காரு... அரஸ்ட் பண்ணும்போது சும்மா இல்லாம அந்த எலியனோட கையயும் கட் பண்ணிடுறாரு. யாருமே இல்லாத நிலாவுல யாருக்குடா ஜெயில் கட்டிருக்கீங்கன்னு கேக்குறீங்க.. அதானே?  அட இந்த படத்துல அப்டிதான்பா...

அந்த கிருக்கு பயபுள்ள பாருங்க 40 வருஷம் சும்மா இருந்துட்டு இப்ப அந்த ஜெயில்லருந்து எஸ்கேப் ஆயிடுறான். எஸ்கேப் ஆகி என்ன ப்ரயோஜனம்.. கை இல்லையே... கை இல்லையே....அப்ப பயபுள்ளைக்கு ஒரு யோசனை வருது. டைம் மிஷின்ல 1969 க்கு திரும்ப போயி "ஏஜெண்ட் கே" நம்ம கைய வெட்டுறதுக்கு முன்னால அவன நாம கொண்ணுட்டா நமக்கு கை வந்துடுமேன்னு ப்ளான் பண்றான்.

 ஆமா எப்புடி டைம் மிஷின்ல 1969 க்கு போவான்? டைம் மிஷின் எப்புடி அவனுக்கு கெடைச்சிதுன்னு யோசிப்பீங்களே... ரொம்ப சிம்பிள்... இந்த படத்துல நம்ம மொபைல் கடை காரங்க Airtel, Vodafone, Aircel ன்னு பல சிம்முகள வச்சிகிட்டு நமக்கு எந்த ப்ளான் வேணுமோ அத போட்டுவிடுவாங்கல்ல...அதே மாதிரி எலெக்ரானிக்ஸ்  ஷாப் வச்சிக்கிட்டு ஒரு ஏலியன்  இருக்கும். அதுகிட்ட போய் ஒரு துப்பாக்கிய காட்டி மெரட்டுனா நீங்க எந்த வருஷத்துக்கு போகனுமோ அங்க அனுப்பி விட்டுரும்.

முன்னாடியது டைம் மெஷின் 10 ,15 fan னோட ஒரு ரும் சைஸுக்கு இருக்கும்.. ஆனா இங்க அதுவும் சிம்பிளா  நம்ம ஸ்மார்ட் ஃபோன் சைஸ்ல ஆயிருச்சி... நாம எப்புடி ஃபோன்ல அலாரம் வக்கிறோமோ அதே மாதிரி இதுல நீங்க வருஷம் தேதி நேரத்த செட் பண்ணிட்டு "கம்யூட்டர் ஜி... லாக்... " ன்னு அமுக்குனீங்கன்னா அடுத்த 30 செகண்ட்ல நீங்க பல வருஷங்கள் டைம் ட்ராவல் பண்ணி இருப்பீங்க..

வில்லன் அதே ப்ளான execute பண்ணி 1969 க்கு போய் "ஏஜெண்ட் கே" வ கொண்ணுடுறான். உடனே நம்ம ஹீரோ ஏஜெண்ட் ஜே சும்மா இருப்பாரா? பார்ட்னர காப்பாத்தனுமே.. வில்லன் நம்ம பார்ட்னர கொல்றதுக்கு ஒரு நாள் முன்னாடி அங்க போய் வில்லன கொன்னுட்டோம்னா நம்ம பார்ட்னர காப்பாத்திரலாமேன்னு ப்ளான் பண்றாரு. உடனே ஹீரோ அந்த எலெக்ரானிக் ஷாப்புக்கு போறாரு.. "என்னயும் 1969 க்கு அனுப்புடா நாயே... இல்லான்னா உன்ன கொன்னு, கொலை பண்ணி, விஷம் குடுத்து ஷூட்  பண்ணி மர்டர் பண்ணிருவேண்டா டோங்ரே......." அப்டின்னு அந்த கடைகாரன மெரட்ட அவனும் பயந்து போயி ஏஜெண்ட் ஜே வயும் 1969 க்கு அனுப்பி வைக்கிறான். அவளோதான் இப்ப எல்லாரும் 1969ல.


1969 ah படம் புடிச்சிருந்தாய்ங்க பாருங்க.. கண்றாவி... இப்ப உள்ள லொக்கேஷன்லயே நாலு பழைய டைப் காருங்கள மட்டும் அங்கிட்டு இங்கிட்டு ஓட விட்டுருக்காங்க... அதான் 1969 தாமாப்பா.. இது ஹாலிவுட்ல எடுத்த படமான்னு டவுட் வந்துருச்சி. அப்புறம் என்ன அங்க ஏஜெண்ட் ஜேயும், ஏஜெண்ட் கேவும் சேந்து வில்லன வேட்டையாடுறாங்க. கதைய கேக்குறதுக்கு ஒரளவுக்கு நல்லாருக்க மாதிரி இருக்கும். ஆனா பாக்குறதுக்கு சத்தியமா Body தாங்காது.

மொத ரெண்டு பார்ட்லயும் வில் ஸ்மித் டம்மி பீஸ் தான்.. அதே மாதிரி தான் இந்த  பார்ட்லயும். மொத ரெண்டுல கெத்து கேரக்டர்ல வந்த "ஏஜெண்ட் கே" வுக்கு இதுல நாக்கு தள்ளிருச்சி... வயசாயிருச்சில்லே.... அதனால அவரோட portion ah படத்துல ரொம்ப கம்மி பண்ணிட்டாங்க அதுனாலயே படம் டஸ்ஸாயிருச்சி. மொத்தம் 3 பார்ட்லயும் இந்த 3 வது பார்ட் தான் மிக கேவலம்.. நம்ம ஊரு "3" ah விட மோசம்னா பாத்துகுங்க... DVD வந்தவுடனே ஓட்டி ஓட்டி பாத்துக்கலாம். யாரும் அவசரப்பட வேண்டாம்.

வழக்கமா நா கூப்புடுற படத்துக்கு எவனுமே வரமாட்டாய்ங்க. போன மாசம் என் ரூம் மேட் என்ன "அஸ்தமணம்"ங்கற படத்துக்கு வற்புருத்தி கூப்புட்டதால போனேன். உலக கேவலம் அந்த  படம். So, அத வச்சே அந்த பையன Black mail பண்ணி ரெண்டு மூணு படத்துக்கு அழைச்சிட்டு போயிட்டு இருந்தேன்.. "டேய் அஸ்தமனத்துக்கு எல்லாம் வந்தேன்லடா... இந்த படத்துக்கு  வர மாட்டியா?" ன்னு சொல்லி ஜூனியர் NTR oda  "தம்மு" க்கெல்லாம் கூட அவன மெரட்டி அழைச்சிட்டு போனேன். ஆனா நேத்தோட அது முடிஞ்சி போச்சி. ஏன்னா  MIB க்கு நான் தான் அவன கூட்டிட்டு போனேன். படம் முடிஞ்சப்புறம் "டேய்... அஸ்தமனத்துக்கும் இதுக்கும் கழிஞ்சி போச்சி...இனிமே எதாது மொக்க படத்துக்கு கூப்டா கொண்டே புடுவேன்"ன்னு சொல்லிட்டான்.. இனிமே "தடையற தாக்க" "நான் ஈ" படத்துக்கெல்லாம் நா மட்டும் தனியா தான் போகனும் போலருக்கு :(

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...