Monday, June 25, 2012

சகுனி - எஸ்கேப் ஆயிட்டான்டா !!!


Share/Bookmark
 
2005 ல விஜய் தன்னந்தனி ஆளா சென்னைக்கு வந்து ஊர்ல உள்ள அத்தனை ரவுடிகளையும் ஒத்த ஆளா போட்டுத்தள்ளுர மாதிரி படம் எடுத்தப்ப, அத திரும்ப திரும்ப பாத்து  ஹிட்டாக்குனது யாரு? நம்ம பயளுகதேன்...

அதே படத்த சிவகாசின்னு டைட்டில மட்டும் மாத்தி எடுத்து ரிலீஸ் பண்ணப்ப அதயும் வெறிக்க வெறிக்க பாத்து 100 நாள் ஓடவச்சவியிங்க யாரு? நம்ம பயலுகதேன்...

அதவிட பழைய பில்லா படத்தோட ஒரு சீன கூட மாத்தாம புது கோட்டு மட்டும் தச்சி  அஜித்துக்கு போட்டு விட்டு அங்க்கிட்டும் இங்கிட்டும் நடக்க விட்டு ரீமேக்குன்னு ரிலீஸ் பண்ணப்ப, அதயும் மூச்சு தெணற தெணற பாத்தவியிங்க யாரு? அதுவும் நம்ம பயலுகதேன்..

ஆன இப்ப கொஞ்ச நாளா மசாலா படங்கள பாக்குறத எதோ மிகப்பெரிய பாவம் பண்ணுறத போல நெனைக்கிறவுகளும் யாரு.. நம்ம பயலுகதேன்..

காமெடி படத்துலயும், மசாலா படத்துலயும் லாஜிக் தேடுறது படிச்சிட்டு போவாத கேள்விக்கு பதில் எழுத ட்ரைபண்ற மாதிரி.. இல்லாத ஒண்ண, இருக்காத ஒண்ண எங்க எங்கன்னு தேடுனா எப்புடி இருக்கும்? போனமா பாத்தமா சிரிச்சமா... ensaai பண்ணமா வந்தமான்னு இருக்கனும்.. சரி படத்துக்கு வருவோம்.

ஏற்கனவே 2003 ல வெளியாகி மெகா ஹிட்டான ஒரு மசாலா படத்தோட ஒன்லைன் சாயல்லயே ஆரம்பிக்குது படம். ரொம்ப நாளுக்கு அப்புறம் நம்ம தல ஷங்கர் மகாதேவன் பாடுன intro song. நல்லா இருந்துச்சி... சந்தானம் கார்த்தி நல்ல காம்பிநேஷன்... குட் காம்பிநேஷன்... காமெடில பட்டைய கெளப்பி இருக்காய்ங்க. சந்தானம் பீச்ல குடைபுடிச்சிட்டு உக்காந்துருக்க ஜோடிகிட்ட டைம் கேட்டுட்டு அடிக்கிற கமெண்ட்டுக்கும குடிகாரங்களோட பெருமைய பத்தி ஒயின்ஷாப்ல பேசுற வசனத்துக்கும் தியேட்டர்ல செம் வரவேற்பு. கார்த்தி சாதாரண நடிகனா இருந்து மகாநடிகனா மாறிட்டு வர்றாரு.. அண்ணாச்சிய தூக்கி சாப்பிட்டுருவாரு போல.



சந்தானத்துக்கிட்ட கார்த்தி நடந்த கதைய narrate பண்றது போல காட்சியமைப்பும், ரஜினி, கமல்னு மாத்தி மாத்தி மொக்கைய போட்டுக்குறதும் கடுப்பா இருந்தாலும் சந்தானம் அடிக்கிற கலக்கல் கமெண்டுல எல்லாம் காணாம போயிடுது.. அனுஷ்கா 2 நிமிஷம் வந்தாலும் செம... அழகென்ற சொல்லுக்கு அனுஷ்காதான்.. இந்த ஹீரோயின் நல்லாருக்கா நல்லா இல்லையாங்குற கன்பீசன்லயே படம் முடிஞ்சிருச்சி..

வழக்கமான மசாலா படங்கள்ல வர்ற மாதிரி பாட்டுன்னா பாட்டே வா... ஃபைட்டு ஃபைட்டு... ஃபைட்டுன்னா ஃபைட்டேவா பாட்டு பாட்டுன்னு இல்லாம ரெண்டு டூயட்டோட நிறுத்திகிட்டு சண்டைக்காட்சிகளையும் கம்மி பண்ணிருக்கது ஒரு நிம்மதி.

ப்ரகாஷ்ராஜ், நாசர், ராதிகா, ரோஜா ன்னு ஒரு பெரிய சீனியர் நடிகர் பட்டாளமே இருக்கு.  இவங்கல்லாம் இருக்கதே படத்துக்கு ஒரு பெரிய ப்ளஸ்... ப்ரகாஷ்ராஜ்... தமிழ்சினிமாவின் மகாநடிகன்.. வழக்கம்போல கலக்கல்...முதலில் வேறு ஒரு வில்லன வச்சி படத்த எடுத்ததுக்கு அப்புறம் சூர்யா படத்த பாத்துட்டு ப்ரகாஷ்ராஜ வில்லானா போட்டு எடுக்க சொன்னதாகவும், திரும்ப ப்ரகாஷ்ராஜ மட்டும் வச்சி அவர் வர்ற காட்சிகளை திரும்ப எடுத்ததாகவும் யாரோ சொல்லி கேள்விப்பட்டேன்.  நாசர் ரெண்டு மூணு  சீனே வந்தாலும் நச்சின்னு நடிச்சிருக்காரு... அதேமாதிரிதான் ராதிகாவும். கொடுக்கப்பட்ட கேரக்டர கரெக்டா பண்ணிருக்காங்க..

குறிப்பா சொல்லவேண்டிய இன்னொரு விஷயம் G.V.ப்ரகாஷ்குமார்... தமிழ்ல்ல இப்போதைக்கு பாட்டு  மட்டும் இல்லாம பிண்ணனி இசையையும் சிறப்பா தர்றதுல ஏ.ஆர்.ரஹ்மான், யுவனுக்கு அப்புறம் இப்பதைக்கு இவருதான். நாலு பாட்டுமே நல்லாருக்கு... குறிப்பா பிண்ணனி இசையும் செம.

படத்துல நெருடுறமாதிரி இருக்க ஒரே விஷயம் கார்த்தி சென்னைக்கு வந்த வேலைய விட்டுட்டு என்னென்னமோ பண்ணி ஸ்டேட்டு சென்ட்ரல்னு எங்கெங்கயோ போயிருவாரு. இத மட்டும் சரிசெஞ்சி வேற பிண்ணனி எதாவது வச்சிருந்தா இன்னும் நல்லா இருந்துருக்கும். 

எனக்கு படம் ஒண்ணும் அவ்ளோ மோசமா இருக்கா மாதிரி தெரியல. குடுத்த காசுக்கு ஒர்த்தா இருக்க  மாதிரியே ஃபீல் பண்ணேன். ஆனா படம் விட்டு வரும்போது சில பேர் "ச்ச.. படமாடா இது... கொண்ணு எடுத்துட்டாய்ங்க" ன்னு பேசிட்டு போனது கேட்டு வழக்கம்போல ஒண்ணும் புரியாம வந்துகிட்டுஇருந்தேன்.

போர் அடிக்கிற மாதிரி சீன்ஸ் அதிகம் இல்லை... லாஜிக் இல்லா மேஜிக்க ஒத்துக்க மனசு இருந்துச்சின்னா சகுனி கண்டிப்பா ஒரு நல்ல பொழுதுபோக்கு படம். 

இப்ப எல்லாரும் பில்லாவ ரொம்ம ஆவலா எதிர் பாத்துட்டு இருப்பீங்களே... ஆனா பில்லா ரிலீஸ் ஆனப்புறம்தேன் சகுனியோட அருமை எல்லாருக்கும்
புரியுமோ?ன்னு உள்ளுக்குள்ள எனக்கு பச்சி சொல்லிகிட்டு இருக்கு



பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

11 comments:

Prem S said...

நடுநிலையான விமர்சனம் பாஸ் வாழ்த்துக்கள் கடைசி பில்லா கமெண்ட் செம

HOTLINKSIN.com திரட்டி said...

good review.... last lines punch super......

திண்டுக்கல் தனபாலன் said...

நல்ல விமர்சனம் !

பதிவின் முடிவில் உங்கள் பச்சி சொன்னது தான் கலக்கமா இருக்கு...

கோவை நேரம் said...

பட்சி சொல்வது கரக்ட் தான்,,,

பூலோகம் said...

கொஞ்சம் இங்க பொய் பாருங்கப்பூ!!!

http://www.karundhel.com/2012/06/soul-kitchen-2009-german.html

முத்துசிவா said...

@பூலோகம்:

ஓ... அண்ணேன் இப்பதான் இத கண்டுபுடிக்கிறாரா? படம் ரிலீஸான அடுத்த நாளே Times of India review la இத போட்டுட்டாங்க.."one line taken from soul kitchen" ன்னு..

Anonymous said...

Aga onnu nalla theriyuthu..Billa 2 supera irunthalum neenga padam mokkai nu review poda poringa...

முத்துசிவா said...

@Anonymous:

//Aga onnu nalla theriyuthu..Billa 2 supera irunthalum neenga padam mokkai nu review poda poringa...//

ஹிஹி.. அப்படியெல்லாம் இல்லை... படம் நல்லா இருந்தா கண்டிப்பா நல்லா இல்லைன்னு விமர்சனம் எழுதமாட்டேன்.. ஒரு வேளை நல்லா இல்லைன்னா அத சொல்லவும் தயங்கமாட்டேன் :)

Unknown said...

"சகுனி" திரைப்படம் தாங்க முடியாத மொக்கைப் படம். மிக மோசமான படம் சகுனி. இதை வெற்றிப் படம் என்று பொய்யாக பீலா விடுவதை நிறுத்தவும். ஆந்திராவில் சகுனி "அட்டர் பிளாப்" எனப்படும் மிக மோசமான தோல்வியை கண்டிருக்கிறது. தமிழ் நாட்டிலும் விளம்பரங்கள் மூலம் நகரங்களில் சிறிது ஒட்டிக் கொண்டிருக்கிறார்கள். மற்றபடி "பி" மற்றும் "சி" சென்டர்களில் சகுனி படம் தமிழ் நாட்டிலும் தோல்விப் படந்தான் !

Unknown said...

"சகுனி" திரைப்படம் தாங்க முடியாத மொக்கைப் படம். மிக மோசமான படம் சகுனி. இதை வெற்றிப் படம் என்று பொய்யாக பீலா விடுவதை நிறுத்தவும். ஆந்திராவில் சகுனி "அட்டர் பிளாப்" எனப்படும் மிக மோசமான தோல்வியை கண்டிருக்கிறது. தமிழ் நாட்டிலும் விளம்பரங்கள் மூலம் நகரங்களில் சிறிது ஒட்டிக் கொண்டிருக்கிறார்கள். மற்றபடி "பி" மற்றும் "சி" சென்டர்களில் சகுனி படம் தமிழ் நாட்டிலும் தோல்விப் படந்தான் !

Anonymous said...

9677178082

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...