Tuesday, July 10, 2012

ப்ளீஸ் அந்த புத்தகத்த வாங்காதீங்க!!!!


Share/Bookmark

ப்ளீஸ் இந்த கடையில சாப்புடாதீங்க!!

 ப்ளீஸ் இங்க யாரும் துணி எடுக்காதீங்க!!!

 ப்ளீஸ் இந்த கடையில டீ குடிக்காதீங்க!!

இங்த மாதிரி எங்கயாவது கடைக்காரனே போட்டுருந்தான்னா நாம அந்த கடைக்கு போவோமா? சுயநினைவுல இருக்கவன் எவனும் போகமாட்டான். ஆனா இதே மாதிரி ஒரு தலைப்ப வச்சி ஒரு புத்தகம் எழுதி அத 2 லட்சம் காப்பி வித்துருக்கான்யா ஒருத்தன்.


யார சொல்றேன்னு எல்லாருக்கும் இந்நேரம் புரிஞ்சிருக்கும். நம்ம விஜய் டிவி நீயா நானா கோபிநாத் தான் அந்த அதிகப்பிரசங்கி. இவரு ரெண்டு வருசத்துக்கு முன்னால  "ப்ளீஸ் இந்த புத்தகத்த வாங்கதீங்க" அப்புடின்னு ஒரு புத்தகத்த மெனக்கட்டு எழுதி  வெளியிட்டுருக்குறாரு... இத அதிகப்ரசங்கி தனத்தோட உச்சமா இல்லை நம்ம ஊர்காரய்ங்கள நல்லா புரிஞ்சிகிட்ட ஒரு புத்திசாலித்தனமான்னு தெரியல.

ப்ளீஸ் இந்த புத்தகத்த வாங்கதீங்கன்னா அப்புறம் என்னா ....த்துக்கு அத பப்ளிஷ் பண்ணி விலையோட புத்தகக் கடையில வச்சிருக்க? வித்யாசமா பேரு வக்கிறாராம்..அட அவன விடுங்க... இதயும் ரெண்டு லட்சம் காப்பி வாங்கி அவன இன்னும் ஏத்தி விட்டுருக்காய்ங்களே.. நம்மாளுகள என்ன பண்றது... வக்காளி இந்த பேரு வச்சதுக்கு ஒரு புத்தகத்த கூட வாங்கிருக்க கூடாது. அப்பதான் கொஞ்சம் ஓவரா  பொய்ட்டோமோன்னு அந்தாளுக்கு புரியும்.

ரெண்டு வருஷத்துக்கு கம்பெனி வேலையா வேற மாநிலத்துக்கு போகும்போது கூட வேலை பாக்குறவன் ஒருத்தன் இந்த புத்தகத்த வச்சிருந்தான். தலைப்ப பாத்ததுமே கடுப்பாயிருச்சி. சரி அப்புடி என்னதான் இது எழுதிருக்குன்னு பாக்கலாம்னு வாங்குனா

"ப்ளீஸ் இந்த புத்தகத்த வாங்கதீங்க அப்புடின்னு ஏன் தலைப்பு வச்சேன்னா... நா இந்த புத்தகத்துல புதுசா எதையும் சொல்லல.. உங்களுக்கு தெரிஞ்சததேயே தான் நா திரும்ப எழுதிருக்கேன்.." ன்னு சுத்தி சுத்தி எதோ கருத்து சொல்ற மாதிரி ரெண்டு பக்கத்துக்கு சொன்னதே சொல்லிட்டு இருந்தான். அப்புடின்னு போட்டுருந்துச்சி. அப்புடியே மூடி அவன் ட்டயே குடுத்துட்டேன்... "பரவால்லண்ணே படிச்சிட்டு குடு" ன்னான்... "ஆனியே புடுங்க வேண்டாம்னு குடுத்துட்டேன். கண்டவன்லாம் புத்தி சொல்ல வந்துட்டா அப்புறம் நாட்டுல யாருதாண்டா அத கேட்டு நடக்குறதுக்கு இருக்கது.

மத்தவங்க மாதிரியே நானும் இவரோட டைமிங் காமெடிகளுக்கு ரொம்ப ஃபேன்... அடிக்கடி அந்த ப்ரோக்ராம் பாக்குறதில்லன்னாலும் நிறைய தடவ பாத்துருக்கேன். நிறைய விஷயம்  தெரிஞ்சிருக்கு இவருக்குன்னு வியப்பா பாத்துருக்கேன். ஆனா கொஞ்ச நாளுக்கு முன்னாடி தான் ஒரு நண்பர் மூலமா தெரிஞ்சிது இவரு ஒரு டம்மி தாதா... ஒரிஜினல் வேறன்னு... அந்த நிகழ்ச்சில கலந்துக்குற மத்தவங்க எல்லாம் முட்டாளுங்க.. இவரு மட்டும் தான்
புத்திசாலிங்கற நெனப்புல கண்டமேனிக்கு கேள்விகள கேட்டு சில அப்பாவிங்கள கார்னர் பண்ணி கேள்வி கேட்டுகிட்டே இருக்கவேண்டியது.. அப்புறம் அதயே நிகழ்ச்சியோட ஹைலைட்டாக்கி விளம்பரப்படுத்தி வியாபாரம் பண்ண வேண்டியது.

இந்த லட்சனத்துல எங்க இளைஞரணி தலைவன் பவர்ஸ்டாரயே கலாய்க்க ட்ரை பண்ணிருக்கான். என்னய்யா பண்ணாரு அவரு? அவரோட பணத்த போட்டு அவரே படம் நடிச்சி பல பேருக்கு வேலை குடுத்துக்கிட்டு இருக்காரு.. அதுல என்ன ப்ரச்சனை உனக்கு? உன்னை பாருன்னு கம்பல் பண்ணாரா? முடிஞ்சா பாரு முடியலானா மூடிக்கிட்டு இரு. இல்ல அவரு என்ன டி ஆர் மாதிரி அவர கலாய்க்கிறதே தெரியாம ஈஈ ன்னு பல்லகாட்டிகிட்டு இருக்காரா.. நம்மள எல்லாரும் கலாய்க்கிறாங்கன்னு தெரிஞ்சி எல்லாரும் சந்தோசமா இருக்கட்டும்னு சும்மா இருக்காரு.  நீ  வெளியுலகத்துக்கு தெரிய எத்தனை வருசம் ஆச்சி?  ஒரே வருசத்துல ஆல் ஓவர் தமிழ்நாட்டுலயும் ஃபேமஸா ஆனாருல்ல? அவர கூப்டு வச்சி அசிங்கப்படுத்திருக்க... தமிழ்நாடே கொந்தளிச்சிருச்சி பாத்தல்ல...


அதுக்காக கோபிநாத் வேஸ்ட்டுன்னு சொல்லவரல... அதிகப்பிரசங்கித்தனம், சொல்பேச்சு கேளாமை இந்த மாதிரி குணங்கள் அதிகமா இருக்கு.. இத எல்லாம் விட்டுவக்கிறது சரியில்ல.. வெட்டி  வைக்கிறது தான் சரி.

அப்ப நா கெளம்பட்டுமா? எங்கயா? நீயா நானா ஆரம்பிச்சிட்டாய்ங்கப்பா..
தொடந்து பேசுவோம்... Stay tuned... லயன் டேட்ஸ் வழங்கும் கோபிநாத்தா பவர்ஸ்டாரா....

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

8 comments:

ANBUTHIL said...

தலைவா ரெண்டு வருஷம் கழிச்சு ஏன் எப்படி போட்டு கிளிக்கிரிங்க அந்த புத்தகத்தை

ம.தி.சுதா said...

///கண்டவன்லாம் புத்தி சொல்ல வந்துட்டா அப்புறம் நாட்டுல யாருதாண்டா அத கேட்டு நடக்குறதுக்கு இருக்கது. ////

சகோ நல்லா நொந்திட்டிங்க போல.. அந்தப் புத்தகம் இன்னும் என கைக்கு கிடைக்காததால் புத்தகத்துக்டகு நோ கொமண்ட்ஸ்...

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
தென்னிந்தியக் கலைஞர்களின் ஈழவருகையின் சாதகமும் பாதகமும்

திண்டுக்கல் தனபாலன் said...

உண்மை தான் ... தொடர வாழ்த்துக்கள் ! நன்றி ! (த.ம. 2)

Anonymous said...

முன்னணி நடிகர்கள்ன்னு சொல்லிக்கிட்டு ஏகப்பட்ட மொக்கை படங்களை தந்தவங்களை விட பவர் ஸ்டார் எவ்வளவோ மேல்.

HOTLINKSIN.COM திரட்டி said...

////? அவர கூப்டு வச்சி அசிங்கப்படுத்திருக்க... தமிழ்நாடே கொந்தளிச்சிருச்சி பாத்தல்ல.......///

பவர் ஸ்டார்னா சும்மாவா...?

காப்பிகாரன் said...

சூப்பர் சரியா சொன்ன மச்சி

Jayadev Das said...

\\இங்த மாதிரி எங்கயாவது கடைக்காரனே போட்டுருந்தான்னா நாம அந்த கடைக்கு போவோமா? சுயநினைவுல இருக்கவன் எவனும் போகமாட்டான். ஆனா இதே மாதிரி ஒரு தலைப்ப வச்சி ஒரு புத்தகம் எழுதி அத 2 லட்சம் காப்பி வித்துருக்கான்யா ஒருத்தன்.\\ மற்ற விஷயங்களில் எப்படியோ, இதைப் படிக்காதீங்கண்ணு எங்கேயாவது எழுதியிருந்தா அப்படி என்னதாண்டா எழுதியிருக்கான்னு படிச்சுதான் பார்ப்போமே என்று நிச்சயம் தூண்டிவிடும். இது மனிதன் சைக்கலாஜி. அத இந்த ஆள் புரிஞ்சு வச்சிருக்கார்.

Jayadev Das said...

\\ஆனா கொஞ்ச நாளுக்கு முன்னாடி தான் ஒரு நண்பர் மூலமா தெரிஞ்சிது இவரு ஒரு டம்மி தாதா... ஒரிஜினல் வேறன்னு...\\ திரைப் பட நடிகர்கள் பேசும் வசனம் அவனது அல்ல, பாடும் பாடல் யாரோ எழுதுவது, பாடலுக்கு குரல் தருபவர் முகம் பலருக்கு இன்னமும் தெரியாது, சில சமயம் அந்த நடிகனுக்கு தமிழே பேசத் தெரியாது, அவனுக்கு வசனத்தையும் ஒருத்தர் பேசுவார் அதற்க்கு நடனம் சொல்லித் தர ஒரு Dance மாஸ்டர் இருப்பார், சில சமயம் சண்டைக் காட்சிகளில் இவன் நோகாமல் நொங்கு தின்ன டூப் அடி உதை வாங்கி எழும்பு முறிஞ்சு போய் எங்கேயாவது ஆஸ்பத்திரியில் கிடப்பான், ஆனாலும் அந்த நடிகனை அந்த ஸ்டார், இந்த ஸ்டார் என்று பட்டம் கொடுத்து, அவன் கட்டவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்து அவனுக்கு தமிழக முதல்வர் பதவிக்கு வாருங்கள் என்று அவன் காலில் விழாவும் இங்கே ஆட்கள் இருக்கும் போது இந்த கோபிநாத் மட்டும் சகலகலா வல்லவனாக இருக்க வேண்டும் என்று எதிர் பார்க்கிறீர்களே, இது உங்களுக்கே காமடியாகத் தெரியவில்லையா?? நீயா நானா நிகழ்ச்சியில் கோபிநாத் வெறும் பொம்மை என்றால், அவரைத் தூக்கி விட்டு வேறு ஆளை போட்டால் இதே அளவுக்கு வெற்றியடையுமா? உங்களை அந்த நடிகன் போலியாக மகிழ்விக்கிறான் என்றால், கோபிநாத்தும் எங்களை மகிழ்விக்கிறார். அவரது புத்தகத்தை விமர்சனம் செய்ய வந்த நீங்கள், இவ்வாறு அவர் தனிப்பட்ட முறையில் செய்யும் தொழிலை விமர்சித்திருக்கக் கூடாது.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...