ஒரு நல்ல இயக்குனர் ஒரே மாதிரி படங்களை எடுப்பவரா இருக்கக்கூடாது.. ஒரே தரத்தில் படங்கள எடுக்குறவரா இருக்கனும். முன்னதற்கு உதாரணமா பல இயக்குனர்கள சொல்லலாம். ஆனா பின்னதுக்கு உதாரணமா சில இயக்குனர்களை மட்டுமே சொல்ல முடியும். அந்த மாதிரி ஆளுங்கள்ள ஒருத்தர்தான் இந்த எஸ்.எஸ்.ராஜமெளலி. ஒரே மாதிரியான ரவுடிஸ கதைகளையே அரைச்சிட்டு இருக்க தெலுங்கு இயக்குனர்கள் மத்தியில வித்தியாசமான படங்களை கொடுத்து அசத்துபவர்.
2008 ல நண்பர் ஒருத்தர் ரவிதேஜா நடிச்ச விக்ரமார்குடு (சிறுத்தையின் ஒரிஜினல்) குடுத்து பாக்க சொன்னாரு. அந்த படம் பாத்ததுலருந்து ரவி தேஜாவுக்கும் fan ஆயிட்டேன்.. ராஜ மெளலிக்க்கும் fan ஆயிட்டேன். அதுக்கப்புறம் வந்த எல்லா ரவிதேஜா படங்களையும் மிஸ் பண்ணாம பாத்துட்டுருக்கேன். ராஜமெளலி விக்ரமார்குடுக்கு அப்புறம் எடுத்த எமதுங்காவயும் பாக்குற வாய்ப்பு கெடைச்சிது. நம்ம தலைவரோட அதிசய பிறவிய தழுவி Jr NTR ah வச்சி எடுக்கப்பட்ட படம்.
ராம் சரண் தேஜாவ வச்சி எடுத்த மஹதீரா எவளோ பெரிய ஹிட்டுன்னு எல்லாருக்கும் தெரியும். வழக்கமா படு மொக்கையான கிராஃபிக்ஸோட வர்ற தெலுங்கு படங்கள் மத்தில முதல் முறைய ஒரு தரமான கிராஃபிக்ஸோட எடுத்து அசத்தியிருந்தாரு. அதுக்கப்புறம் காமெடியன் சுனில ஹீரோவா வச்சி மரியாத ரமன்னா.. அதுவும் ஒரு சூப்பரான படம். 2010 ல ஆரம்பிச்ச இந்த eega, டப்பிங்க பண்ணப்படாம தமிழ்ல நேரடியா எடுக்கப்பட்டது ஒரு நிம்மதி.
சுதீப்தான் படத்தோட ப்ளஸ்ஸே.. பட்டைய கெளப்பிருக்காரு. கோவத்துலயும் சரி, ஈயோட தொல்லையில மாட்டிக்கிட்டு பாவமாவும் சரி.. எக்ஸ்ப்ரஷன்ஸ் பின்னி எடுத்துருக்காரு. அவரோட வாய்ஸும் சூப்பர். டப்பிங் குடுத்தது யார்னு தெரில.. நம்ம அருண் பாண்டியன் வாய்ஸ் மாதிரி இருந்துச்சி. சமந்தா வரைஞ்சி வச்ச மாதிரி இருக்காங்க.. அவங்க சிரிப்புல அப்புடியே நா செதஞ்சி பொய்ட்டேன்.. ஆல் யங் கேர்ஸ்..ஹையோ... நானீ கால் மணி நேரமே வந்தாலும் மனசுல நின்னுடுறாரு. சந்தானம் 5 நிமிஷமே வந்தாலும் தியேட்டரயே கலக்கிடுறாரு.. ஆனா என்ன இவரு சீன்ஸ எங்க சொருகுறதுன்னு தெரியாம கடைசில மொத்தமா போட்டு விட்டுருக்காய்ங்க.
MM கீரவாணி... ஈடா ஈடா ஈடா பாட்டு செம... பாட்டு வரிகள் சூப்பர்...
"ஈஈன்னு என்ன பாத்தான்
நான் ஈ ன்னு என்ன பாத்தான்
என்ன பூச்சியில சேத்தான்
அங்க தான அவன் தோத்தான்
நா மூச்சிக்குள்ள நஞ்சு ஏற்ற வந்திருக்கும் சாத்தான்"
கார்க்கியோட வரிகள்லயே மொத்த படமும் வந்துடுது.. வெய்ட்டு..BGM um நல்லாருந்துச்சி.. ரெண்டு மாசம் முன்னால JR NTR oda தம்மு பாத்தேன்.. அதுல அவருக்கு டண்ட டகர டகர டகர ன்னு BGM ல வாங்கிபோட்டு குத்திருப்பாரு. அத அப்புடியே அலேக்க தூக்கி இந்த "ஈ" க்கும் போட்டுருக்காரு. பாரபட்சம் பாக்காத மனுசன்யா...
அப்புறம் இந்த படத்தோட ஹீரொ கிராஃபிக்ஸ் "ஈ" பத்தி சொல்லியே ஆகனும். பெரிய பெரிய ஆளுங்க கூட முதல்ல சாஃப்ட்டான கேரக்டர்ல நடிச்சிட்டு அப்புறம் தான் ஆக் ஷன் ஹீரோவா ஃபார்ம் ஆவாங்க. நம்மாளு மொத படத்துல ஆக்சன் ஹீரோ... அது பொறந்து மொத மொதலா கஷ்டப்பட்டு பற்க்கும் போது "Life is back" ன்னு ஒரு BGM போட்டுருக்காங்க பாருங்க... சும்மா புல்லரிச்சிருச்சி.. இன்னொரு காட்சில நம்ம தலைவர் தோன்றி "சிங்கம்
சிங்கிளாதான் வரும்" ன்னு ஈக்கு பில்ட் அப் தர்றாரு. படம் முடிஞ்ச அப்புறம் நானீ என் பேரு பாட்டு ரீமிக்ஸ்ல இந்த ஈ, ராஜமெளலியோட முந்தைய பட ஹீரோக்கள் மாதிரி டான்ஸ் ஆடுது பாருங்க... மாஸ்ஸூ...
ஆனா ஈ சமந்தாகூட பேச்சுவார்த்தை நடத்துற மாதிரியான காட்சிகள்
தான் கொஞ்சம் அதிகமா இருக்கமாதிரி தோணுச்சி. படத்துல வர்ற ஒரு ஆக்ஸிடண்ட் சீன் ரொம்ப அருமையா எடுத்துருக்காங்க.. அதுமட்டும் இல்லாம க்ளைமாக்ஸ்ல க்ளாஸ்லாம் உடையிற மாதிரியான காட்சிகளூம் ரொம்ப அருமையா எடுக்கப்பட்டுருக்கு,
மொத்ததுல மிஸ் பண்ணாம பாக்க வேண்டிய ஒரு படம் இந்த நான் ஈ.
சனிக்கிழமை காசில 2nd ஷோ பாத்தேன். தியேட்டர் full... படம் பாக்க வந்தவங்கள விட பில்லா டிரெய்லர் பாக்க வந்தவங்கதான் அதிகம். என்ன சவுண்டுடா ய்ப்பா... முதல் டிரெய்லர விட இந்த ரெண்டாவது டிரெய்லர்ல படம் ஓடுவதற்கான வாய்ப்புகள் அதிகமா தெரியுது.. இன்னும் நாலு நாள் தான.. பாக்கலாம்.
7 comments:
இந்த படத்திலேயே உருப்படியான ஒன்னே ஒன்னு கதாநாயகிதான்
விஸ்வரூபத்தின் டவுசரை இப்பவே உருவியாச்சா, நாசமாபோச்சு போங்க...!
நல்ல படம்... நல்ல விமர்சனம்... கிரபிக்ஸில் அசத்தோ அசத்தென்று அசத்தியிருக்கிறார்கள்...
Billa ticket booke, friday night show:) Vishwaroopam???? kamal
padam ennikku oodirukku???
நீங்கள் ரஜினி, விஜயகாந்த், ஜாக்கிசேகர் போன்ற ஆக்சன் ஹீரோ ரசிகர் போல. அதான் கமல் போன்ற க்ளாஸ் ஹீரோக்களை வெறுக்கிறீர்கள். இன்றைக்குதான் கண்டுபிடித்தேன். பொறாமை பிடித்த ப்ளாக்கர் நீங்கள்.
நீங்கள் ரஜினி, ஜாக்கிசேகர், விஜயகாந்த் போன்ற ஆக்சன் ஹீரோக்களின் ரசிகர் போல. அதான் கமல், சி.பி.செந்தில்குமார் போன்ற க்ளாஸ் ஹீரோக்களை உங்களுக்கு பிடிக்கவில்லை. உங்கள் பொறாமை அப்பட்டமாக வெளிப்படுகிறது. இனி நான் உங்கள் ப்ளாகை புறக்கணிக்கிறேன்
நல்லதொரு விமர்சனம்... பகிர்வுக்கு நன்றி... தொடர வாழ்த்துக்கள்...! (த.ம. 1)
Post a Comment