டேபுளு... chairருலு..வாஸ்துலு... சாஷ்த்ரலு,,,, சம்ப்ரதாயலு... வாய மூடுலு.. தெரியுதுலு பல்லு... நா எப்ப தெலுங்கு படம் பாத்தாலும் என் நண்பன் இந்த டயலாக்க தான் சொல்லி தான் கலாய்ப்பான். அதுவும் ரவிதேஜாவ பாத்தாலே யார்ரா இவன் செம்ம காமெடியா இருக்கான்னு சிரிக்க ஆரம்பிச்சிருவாய்ங்க... "போங்கடா டேய்... கழுதைக்கு தெரியுமா கருவாட்டு வாசனை" ன்னு நெனைச்சிக்குவேன். போன மாசம் தம்முக்கு அழைச்சிட்டு போன கடுப்பே இன்னும் தீரல... இந்த நெலமையில ரவிதேஜா படத்துக்கு நண்பன் எங்க வரப்போறான்னு நெனைச்சிட்டு சிங்கம் சிங்கிளா ஆப்ரேஷன்ல எறங்குச்சி...
வக்காளி ஒரு தியேட்டர்லயும் டிக்கெட் இல்ல.. அப்புறம் தேவுடு மனசு வச்சதால நேத்து எஸ்கேப்ல எக்ஸ்ராவ ஒரு தியேட்டர் புக்கிங் ஓபன் பண்ணதால டிக்கெட் கெடைச்சுது. தாம்பரத்துலருந்து எஸ்கேப் போயி படம் பாக்குறது என்னவோ நாடு விட்டு நாடு போயி படம் பாக்குறமாதிரி இருக்குப்பா. எத்தனை சிக்கல்..எத்தனை சிக்னல்.. எத்தனை டென்ஷன்.. எத்தனை போலீஸ்.. எத்தனை ஸ்பீட் ப்ரேக்கர்... எத்தனை டேக் டைவர்ஷன்னு போயி பாக்குறவனுக்கு தான் கஷ்டம் தெரியும்..
கஷ்டப்பட்டு தியேட்டர் உள்ள போனா என் சீட்டுல வேற ஒருத்தன் உக்காந்துருக்கான். என்னாடான்னு கேட்டா "if you don mind can you please sit in B3" ன்னான். சரி தனியா உக்காந்து பாக்கபோற நாயி எங்க உக்காந்தா என்னன்னு நானும் சரின்னு கெளம்புனா, அவன் உடனே பக்கத்துல உள்ளவன்ட்ட "வீடு சிங்கிலே" ன்னான். ஆஆஆ.. உனக்கும் தெரிஞ்சி போச்சாடா.. மொகரைய பாத்தா உடனே கண்டுபுடிச்சிடுராய்ங்க. தனியா இருந்தா என்னென்ன அவமானங்கள தாங்க வேண்டியிருக்கு.. சரி படத்துக்கு வருவோம்.
தெலுகுல போக்ரி, பிஸினஸ்மேன்னு பல ஹிட்டுகள குடுத்த பூரி ஜெகன்நாத் ரவி தேஜாவ வச்சி காமெடி பண்ணியிருக்கும் படம் தான் இந்த தேவுடு சேசின மனுஷுலு... ரவிதேஜாவுக்கு கடந்த மூணு நாலு படங்கள் மரண அடி வாங்குனதால இந்தாளு எடுக்குற படமாச்சும் கண்டிப்பா நல்லாருக்கும்னு நெனைச்சி போனதுக்கு எனக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும். எதோ கடனுக்குன்னு என்னென்னமோ எடுத்து வச்சிருக்காய்ங்க. வக்காளி எங்த தெலுங்கு படத்துலயுமே வில்லன் ஹைத்ராபாத்ல இருக்க மாட்டேங்குறான்பா. அதுவும் இந்த பூரி ஜெகன்நாத் படத்துல இருக்கவே மாட்டன் போலருக்கு. மலேசியா தான். பாங்காக் தான்.
படத்தோட 1st பாக்கும்போது கிட்டத்தட்ட நம்மூரு குருவிய திரும்ப பாக்குற மாதிரி இருந்துச்சி கருமம். ரவிதேஜாவ பத்தி சொல்றதுக்கு ஒண்ணும் இல்லை. வழக்கமான பாணில நடிச்சிருக்காரு. ஆனா வழக்கத்தைவிட காமெடி வசனங்களும் ஆக்சன் ப்ளாக்ஸும் கொஞ்சம் கம்மி தான். இவருக்கு ஒவ்வொரு படத்துலயும் ஒவ்வொரு டைட்டில்... மாஸ் ராஜா.. மாஸ் மஹாராஜான்னு வித விதமா போடுவாங்க. இந்த படத்துல என்ன போட போராய்ங்கன்னு எதிர் பாத்துட்டு இருந்தப்ப வெறுமன ரவிதேஜான்னு போட்டு ஆஃப் பண்ணிட்டாய்ங்க.
ப்ரகாஷ்ராஜ் வழக்கம்போல கலக்கல். முதல் பாதில மறக்குறா வியாதி உள்ள கேங்க்ஸ்டரா அவரு பண்ற லூட்டி செம. முதல் பாதி எதோ ஓடுறதே இவராலதான். அதே போல ரெண்டவது பாதில இலியானாகிட்ட தங்கச்சி செண்ட்டிமெண்ட்ட பொழிஞ்சி அழுகுறதும் டாப்பு. க்ளைமாக்ஸ்ல ரவிதேஜா இலியானா ப்ரகாஷ்ராஜ் மூணுபேரும் சேந்து ஒரு காமெடி பண்ணுவாங்க பாருங்க. படத்துக்கு தேவையே இல்லாதமாதிரி இருந்தாலும் மனசு விட்டு சிரிக்கிற மாதிரி இருந்துச்சி.
நாலு நல்லி எழும்பு... ஒரு முள்ளெலும்பு ஒரு அரைக்கிலோ கறி.. இதான்ங்க இந்த படத்தோட ஹீரோயின். அட இலியானாவதான் சொன்னேன். இது உடம்ப மெயிண்டெய்ண் பண்ற ரேஞ்ச பாத்தா கூடிய சீக்கிறம் பாடம் பண்ண மனுஷ உருவமா இத அப்புடியே மியூசியம்ல வச்சிறலாம் போல.... சில சீன்ஸ்ல ஃபாரின் ஃபிகர் ரேஞ்ல பட்டய கெளப்புனாலும் பல சீன்ல லோக்கல் பிச்சக்காரி மாதிரி செம கேவலாம இருக்கு.
பாட்டும் ஒண்ணும் சொல்லிக்கிற மாதிரி இல்லை. நம்ம ஊரு "அக்கா மக அக்காம எனக்கொருத்தி இருந்தாடா" பாட்ட குத்துப்பாட்டா ரீமிக்ஸ் பண்ணிருக்காய்ங்க. ஒரு படம் நல்லாருந்தா எல்லாமே நல்லாருக்கு.. நல்லா இல்லைன்னா எதுமே நல்லா இருக்க மாட்டேங்குது. கருமம் காமெடியும் நல்லால்ல.. ஸ்கிரீன் ப்ளேயும் சரி இல்லை. ரவி தேஜாவுக்கு ஏழரை உச்சத்துல இருக்காரு போல. படம் பாத்து முடியும் போது "ஆமா இது ஆக்சன் பிலிமா இல்லா காமெடி பிலிமா" ன்குற கன்பீசன் தான் மிஞ்சுது
இதுதான் கடுப்புன்னா, படம் முடிஞ்சி வண்டிய எடுத்துட்டு வெளிய வந்தா பார்க்கிங்குக்கு "சார் 80 ரூவா குடுங்க"ன்னாய்ங்க. டேய் நா என்ன கார்லயாடா வந்தேன். ஏண்டா இப்டி கொல்றீங்க...இதுவரைக்கும் உங்ககிட்ட பார்க்கிங்க்கு குடுத்த காசுல ஒரு புது ஹோண்டா சிட்டியவே வாங்கிருக்கலாம்டா... வக்காளி இனிமே உங்க ஏரியாவுக்கு படம் பாக்க வந்தா பஸ்ல வர்றேன்... இல்லநடந்தே வர்றேன்.."ன்னு காச குடுத்துட்டு வயித்தெரிச்சலோட வீட்டுக்கு வந்தேன்.

4 comments:
"ஆமா இது ஆக்சன் பிலிமா இல்லா காமெடி பிலிமா" ன்குற கன்பீசன் தான் மிஞ்சுது////////// மச்சி சூப்பர் விமர்சனம் ஹ ஹஹா ஹஹா
செம..விமர்சனம்...
விளக்கமான விமர்சனம்... தொடர வாழ்த்துக்கள்... நன்றி… (TM 1)
Akkamage is an Malaysian song..created by Malaysian local artists..
Post a Comment