இன்னிக்கு இந்த படத்த பாத்துட்டு தியேட்டர்லருந்து நானும் நண்பனும்
வெளிய வந்துகிட்டு இருந்தப்ப ஒரு சம்பவம்... ஒருத்தரு தியேட்டர் ஆப்ரேட்டர்
சட்டைய புடிச்சி "ஏண்டா இப்டி செஞ்ச ஏண்டா இப்டி செஞ்ச" ன்னு எதோ சண்ட
போட்டுகிட்டு இருந்தாரு. சரி என்னனு பாக்கலாம்னு அவர்கிட்ட போய் "என்னண்ணே
ப்ரச்சனை?" ன்னு கேட்டோம். அதுக்கு அவரு "பாருங்க
தம்பி.. சுந்தரபாண்டியன்குற படத்துக்கு டிக்கெட் எடுத்துகிட்டு உள்ள
போனேன்.. ஆரம்பத்துல அந்த படம் தான் ஓடுனுச்சி... கொஞ்ச நேரத்துல கண்ணு
அசத்திட்டதால தூங்கிட்டேன்... முழிச்சி பாத்தா நாடோடிகள் படத்து க்ளைமாக்ஸ்
ஓடிகிட்டு இருக்கு.. நா அசந்த நேரமா பாத்து இந்த நாயி ரீல மாத்தி
போட்டுருச்சி தம்பி... இத நீங்களே கொஞ்சம் என்னன்னு கேட்டு ஒரு பைசல்
பண்ணுங்க.."ண்ணாரு..
அப்புறம் தான் எங்களுக்கு மேட்டர் புரிஞ்சிபோயி " அண்ணே.. ஆப்ரேட்டர் மேல எதும் தப்பு இல்லண்ணே... நீங்க பாத்தது சுந்தரபாண்டியனோட க்ளைமாக்ஸ்தான்... அதே மாதிரி எடுத்துருக்காய்ங்க" ன்னோம்
"அதயே ஏன் தம்பி திரும்ப எடுத்துருக்காய்ங்க? நாம தான் அந்தப்படம் பாத்துட்டோமே... "
"விடுங்கண்ணே... விடுங்கண்ணே... இதெல்லாம் நமக்கு என்ன புதுசா...இவய்ங்க எப்பவுமே இப்புடித்தான்... அடுத்த தடவையாவது தூங்காம படம் பாருங்க" ன்னு சொல்லி அவர அனுப்பி வச்சோம்.
படம் ஆரம்பிக்கும் போதே "நன்றி: திரு. சமுத்திரக்கணி" ன்னு போட்டாய்ங்க. அப்ப எங்களுக்கு ஏன்னு புரியல.. கடைசியா படம் பாத்துமுடிச்சப்புறம்தான் தெரிஞ்சிது அவரோட படத்த ரீமேக் பண்ணிருக்கதாலதான் அந்த நன்றின்னு.
சசிகுமாரோட முந்தைய படங்களை மாதிரியே, காதலையும் நண்பர்களையும் சுத்தி நடக்குறமாதிரி கதை. அதயே கொஞ்சம் அங்க இங்க பட்டி டிங்கரிங்கெல்லாம் பாத்து புதுபடமா எடுத்து ரிலீஸ் பண்ணிருக்காங்க. ஆனா ரொம்ப நல்லாவே எடுத்துருக்காங்க. முதல்பாதிய பரோட்ட சூரியோட டைமிங் காமெடிங்கதான் தூக்கி நிறுத்துது. அவர் பேசுற எல்லா டயலாக்குமே செம.
தமிழ்சினிமாவுல ஏற்கனவே வேலையில்லாம சுத்திகிட்டு இருக்க கேரக்டருக்குன்னே தனுஷ், ஆர்யா, விஷால்னு ஏகப்பட்ட பேரு போட்டி போட்டுக்கிட்டு இருக்காங்க. இந்த குரூப்புல சசிகுமாரும் சேந்துகிட்டாரு. படிச்சிட்டு சும்மா இருக்கவரு. மசாலா படங்கள் மேல ஆசை வந்துருச்சி போல. Intro song எல்லாம் வேற இருக்கு.(ஆனா அந்த பாட்டுக்கு I am fan ஆயிட்டேன்) ஆளு செம பிட்டா இருக்காரு. ஆனா மூஞ்சி மட்டும் கொஞ்சம் சட்டி மாதிரி இருக்கு. இவருக்கு க்ளோஸ் அப் ஷாட் வரும் போதெல்லாம் எனக்கு கலகலப்புல சந்தானம் பேசுற "போடா போடா. உன் மூஞ்செல்லாம் ரெண்டு நிமிஷத்துக்கு மேல தொடர்ந்து பாக்க முடியலடா" ங்குற டயலாக்தான் ஞாபகம் வந்துகிட்டு இருந்துச்சி.
யையா... யய்யா சசிகுமார் அய்யா... ஓட்டுனது போதும் ரீலு அந்து போச்சிய்யா... அந்த க்ளைமாக்ஸ் லொக்கேஷன மட்டும் கொஞ்சம் மாத்திவிடுங்க... புண்ணியமா போகும். ஒருதடவ ரெண்டு தடவன்னா பரவால்ல... ஒவ்வொரு தடவையும் அங்கயேவா..
படத்தோட 1st half ஒண்ணே கால் மணி நேரம்னா அதுல ஒரு மணிநேரம் பஸ்ல தான் எடுத்துருக்காங்க. ஹீரோயின் லக்ஷ்மி மேனன் ஒண்ணும் அவ்வளவு சிறப்பா இல்லை. சுமார் ஃபிகர் தான். பஸ்ல வர்ற இந்த சுமார் ஃபிகர சூப்பரா காட்டனும்னு, மத்த எல்லா சீட்லயும் மொக்க பீசுங்களையா உக்கார வச்சிருக்காய்ங்க. மத்தபடி படத்துல குறிப்பிட்டு சொல்லனும்னா சசிகுமார் அப்பாவா வர்றவரு ரெண்டு மூணு சீனே வந்தாலும் கெத்தா நடிச்சிருக்காரு.
நாம எதிர்பாக்குற டிவிஸ்ட் எல்லாத்தையும் ட்விஸ்ட் இல்லாம ட்விஸ்டா வச்சி க்ளைமாக்ஸ்ல நாம எதிர் பாக்காத சில ட்விஸ்டையும் வச்சி நிறைவா படத்த முடிச்சிருக்காங்க (ரொம்ப ட்விஸ்ட் அடிக்குதோ) தெளிவான போர் அடிக்காத screenplay. டைரக்டர் ப்ரபாகரன் பட்டைய கெளப்பிருக்காரு. சில காட்சிகள் வலுக்கட்டாயமா படத்துல திணிக்கப்பட்ட மாதிரி இருந்தாலும் படம் கொஞ்சம் கூட போர் அடிக்கல. அதுவும் இல்லாம மொத்தபடமும் சிட்டி வாசனை கொஞ்சம் கூட இல்லாம, மரம் செடிகொடிங்களோட ஒரே பசுமையா இருக்கது பாக்க ரொம்ப நல்லாருக்கு.
இந்த வருஷத்துல வெளியான பலபடங்களுக்கு சுந்தரபாண்டியன் எவ்வளவோ மேல். கண்டிப்பா பாக்கலாம். ஆனா என்ன எங்கயோ பாத்த மாதிரியே இருக்கும் அவ்வளவுதான்.

8 comments:
Super Review. Nice and humorous.
Mattam thattanumnu mudivu panni eluthiathu pola irukku.
@kavilini imaya:
நன்றி
@Anonymous:
//Mattam thattanumnu mudivu panni eluthiathu pola irukku.//
ஏங்க சசிகுமார் என்ன எனக்கு தொழில் எதிரியா இல்ல எனக்கும் அவருக்கும் அவருக்கும் பங்காளி சண்டையா இல்லை வாய்க்கா தகறாரா... படத்த மட்டம் தட்டனும்னு எதுவும் இல்லை. படம் பாக்கும் போது எனக்கு என்ன தோணுதோ அத அப்டியே எழுதிட்டு இருக்கேன். உங்க கருத்தோட ஒத்துப் போகலண்ணா நா என்ன செய்றது.
சுந்தரபாண்டியன் என் பார்வையில் சூப்பர் பாண்டியன்
//சுந்தரபாண்டியன் என் பார்வையில் சூப்பர் பாண்டியன்//
ஹி ஹி... ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு ஃபீலிங் :)
ஹீரோயின் லக்ஷ்மி மேனன் ஒண்ணும் அவ்வளவு சிறப்பா இல்லை. சுமார் ஃபிகர் தான். பஸ்ல வர்ற இந்த சுமார் ஃபிகர சூப்பரா காட்டனும்னு, மத்த எல்லா சீட்லயும் மொக்க பீசுங்களையா உக்கார வச்சிருக்காய்ங்க.
இதெல்லாம் சினிமாவுல சகஜமப்பா...
கணவன் : எப்படி நீ அழகாவும் இருக்க, முட்டாளாவும் இருக்க?
மனைவி : நான் அழகாயிருக்கறதுனால உங்களுக்கு என்ன பிடிச்சுருக்கு, நான் முட்டாளாயிருக்கறதுனால எனக்கு உங்களைப் பிடிச்சிருக்கு.
Post a Comment