நான் தான் அப்பவே சொன்னேனேங்க.. இந்த ஆள நம்பாதீங்க நம்பாதீங்க... இவரு ஒரு டுபாகூருன்னு... இப்ப கடைசியா வேலைய காட்டிட்டாரா? நானும் இதுவரைக்கும் பல கேவலமான படங்களை பாத்துருக்கேன். ஆனா இப்படி ஒரு படத்த.... never. இந்த லட்சணத்துல இந்தாளுக்கு வாய் கிழியிற மாதிரி பேச்சு மட்டும் கொறையவே இல்லை. நேத்தி வரைக்கும் "நீ பாத்த படு கேவலமான என்னப்பா? " எண்ட யாராச்சும் கேட்டா பொறி, அஸ்தமனம், முரட்டுக்காளை ன்னு தான் சொல்லிக்கிட்டு இருந்தேன். ஆனா அனைத்தையும் தாண்டி முன்னாடி வந்துருச்சி இந்த முகமூடி.
வழக்கமா கொரியா படம் உகாண்டா படம் ரவாண்டா படங்கள்லருந்து தான சார் அடிப்பீங்க.. அப்புடி அடிச்சாலும் எதோ தியேட்டர்ல உக்கார்ர மாதிரிதான எடுத்துத்துக்கிட்டு இருந்தீங்க. இப்ப ஏன் சார் திடீர்னு இங்லீஷ் படத்துக்கு அலேக்க ஜம்ப் அடிச்சிட்டீங்க? ஓ... இதுக்கு பேருதான் மொதல்ல வில்லனா பண்ணிட்டு படிப்படியா ஹீரோவா பண்றதா... நாங்க நல்லா பண்றமோ இல்லையோ நீங்க நல்லா பண்றீங்க சார். இப்புடியே இன்னும் நாலு படம் எடுத்து ஊருக்குள்ள விட்டீங்கன்னா, நம்மாளுகளுக்கு படம் பாக்குற எண்ணமே சுத்தமா அத்துப்போயிரும்.
சரி அப்புடி என்னதான் இந்த படத்துல இவரு எடுத்துருக்காருன்னு பாப்போம். இந்தாளுக்கு வழக்கமா மாட்டுற மாதிரி கொரியன் படம் எதுவும் கிடைக்கல. சரி பேட்மேனயே ஆட்டைய போட்டுடலாம்னு ஆரம்பிச்சிட்டாரு. நம்மாளுக ஒரு சீன எங்கயாவது ஆட்டைய போட்டாலே ஒண்ணுக்கு போற அளவு Facebook la போட்டு அடிப்பாய்ங்க... மொத்த படத்தையும் சுட்டா மோஷன் போற அளவு அடிப்பாய்ங்களேன்னு இவரே சொந்தமா முயற்சி பண்ணி பேட்மேன் சீரிஸ்ல உள்ள கேரக்டர்களை எல்லாம் தமிழ்படுத்திருக்காரு. (சொந்தமா- நோட் திஸ் பாய்ண்ட் யுவர் ஹானர். இப்பவே புரிச்ஞ்சிருக்கும் உங்களுக்கு எப்புடி இருந்துருக்கும்னு)
மூஞ்சில மாஸ்க்க போட்டுகிட்டு வீடுவீடா கொள்ளையடிச்சிட்டு பாக்குறவிங்களையெல்லாம் கொலைபண்ற ஒரு கும்பல். ஏன் வீட்டுல கொள்ளை அடிக்கிறாங்களா? அட என்னப்பா நீங்க... ஜோக்கர் ரேஞ்சுக்கு அவர் பெரிய பேங்குல கொள்ளை அடிக்கிறாரு. நம்ம தமிழ்நாட்டு ரேஞ்சுக்கு வீட்டுல தான கொள்ளையடிக்க முடியும். புரியல... யாருக்கும் தெரியாத மாதிரி அந்த சீன்கள தமிழ்ப் படுத்தியிருக்காராமா...வழக்கம்போல ஊர சுத்திகிட்டு சும்மா திரியிறவரு ஜீவா (லீ). அவரு ஒரு மாஸ்டர்கிட்ட கும்பூ கத்துக்குறாரு. என்னது குஷ்பூவ எப்புடி கத்துக்க முடியுமா? யோவ் அது கும்ஃபூ யா... அத கத்துக்குடுக்குற நம்ம செல்வா மாஸ்டர பாக்கனுமே... "பாஸ்.. சுகர் மாத்திரைய வீட்டுலயே வச்சிட்டு வந்துட்டேன்" ன்னு தளபதி தினேஷ் சொல்ற டயலாக் இவருக்கு தான் கரெக்டா பொருந்தும். சற்று டொம்மையான மாஸ்டரா இருக்காரு.
அதேமாதிரி இன்னொரு கும்பூ மாஸ்டர் இருக்காரு... அவருதான் நம்ம நரேன். டார்க் நைட்ல வர்ற ஜோக்கர் கேரக்டர திறம்பட தமிழ்ல செஞ்சிருக்கவரு இவருதான். வக்காளி இந்த கண்றாவியயெல்லாம் பாக்க வேணாம்னு அந்தாளு முன்னாடியே போய் சேந்துட்டாரு போலருக்கு. அப்புறம் கமிஷ்னர் GORDAN ah நடிச்சிருக்கவரு நம்ம நாசர். இவர பாக்கதான் படத்துல பாவமா இருக்கு. நேத்து நடிக்கவந்த ஒருத்தன இவருக்கு சீனியர் ஆபீசரா போட்டு இவர அந்தாளுக்கிட்ட திட்டு வாங்குறமாதிரி நெறைய சீன் எடுத்துருக்காய்ங்க கருமம்.
அப்புறம் படத்துல ஹீரோயின்னு ஒண்ணு அப்பப்ப வந்துட்டு போவுதுங்க. இதுக்கு இண்ட்ரோ சீன் எடுத்துருப்பாய்ங்க பாருங்க. மொதல்ல பாத்தா மொகத்த காட்டாம வேறு எத எதயோ காமிச்சி பில்ட் அப் குடுத்துட்டு ரெண்டு சீன் கழிச்சி மூஞ்ச காமிச்சாய்ங்க பாருங்க... "அய்யோ ஆத்தா பல்லு ஏண்ணே அப்புடி இருக்கு?" ன்னு என் பக்கத்துல உள்ளவரு மயங்கியே விழுந்துட்டாரு. அந்த மொகரைய காமிக்காமயே இருந்துருக்கலாம்.
ஓவ்வொரு கேரக்டரும் ரொம்ப செயற்கை தனமா இருக்கு. உதாரணமா ஜீவாவோட தாத்தா ஒரு அந்த காலத்து எலெக்ட்ரானிக்ஸ் எஞ்ஜினர் போல... எப்ப பாத்தாலும் வீட்டு மாடில எதோ ஒரு PCB போர்டுல எதயோ பத்தவச்சமாணியமாவே இருக்காரு. (அநேகமா பேட்மேன்ல வர்ற Mr,Fox சோட தமிழ் கேரக்டர் போலருக்கு இவரு) அப்புறம் அதேவீட்டுல வித்யாசமான துணிங்கள்ளாம் டிசைன் பண்ற ஒருத்தர் இருக்கரு. புரிஞ்சிருக்குமே... அவருதான் ஜீவாவுக்கு அந்த "அருமையான" பேட்மேன் ட்ரஸ்ஸ தச்சி தர்றாரு. என்னது தையக்கூலி எவ்வளவா? என்னங்க ஒரே வீட்டுல இருந்துகிட்டு இதுக்கெல்லாம் காசு கேப்பாரா...
ஜீவாவ ஒரு சூப்பர் மேனா கதைக்குள்ள கொண்டுவர்றதுக்கு இந்த ஆளு கண்டமேனிக்கு உள்ள உக்காரமுடியாத மாதிரி என்னென்ன சீனோ எழுதிருக்காரு. ஒரு சீன்ல ஜீவா, கந்தசாமில வடிவேலு சேவல் வேஷம் போட்டு போற மாதிரியே ஒரு கெட் அப் போட்டுக்கிட்டு "அந்த சூப்பர்" ஃபிகர மடக்குறதுக்காக அது வீட்டுக்கு போய் குட்டிக்கரணம்லாம் அடிச்சி காட்ட அங்கருக்க ஒரு சின்ன கொழந்த "உங்க பேர் என்ன அங்கிள்?" ன்னு கேக்குது அதுக்கு இவரு என் பேரு "முகமூடி" ங்கறாரு. அதுக்கப்புறம் படம் ஃபுல்லா இவர எல்லாரும் "முகமூடி" ன்னு தான் கூப்புடுறாங்க. "முகமூடி அங்கிள் வந்துட்டாரு" "முகமூடி திருடன புடிச்சிக்குடுத்துட்டாரு" "முகமூடி தான் எங்கள காப்பத்தனும்" இப்புடியெல்லாம் பேசிகிட்டு இருக்காய்ங்க. கண்றாவி கேக்கவே எவ்வள கடுப்பா இருக்கு.
படம் ஆரம்பிச்ச் கொஞ்ச நேரதுலருந்தே படத்த காமெடி படமாதான் எல்லாரும் பாத்துகிட்டு இருந்தாய்ங்க. இதுல செல்வாவுக்கு ஒரு ஃப்ளாஷ்பேக்... "இருவது வருஷத்துக்கு முன்னால..." ன்னு ஆரம்பிச்சி 10 நிமிஷம் ஃப்ளாஷ்பேக் சொல்லி முடிக்க, நமக்கு என்ன தோணும்னா "ஃப்ளாஷ்பேக் ஒண்ணும் அவ்வளவு வெயிட்டா இல்லையேப்பா"ன்னு தான். அதவிட ஒரு கொடூர காமெடி, செல்வா ஜீவாகிட்ட "லீ.. நா இன்னும் உனக்கு கும்ஃபூல ஒரே ஒரு form தான் சொல்லிக்கொடுக்கல.. அதயும் கத்துத் தரேன்னு சொல்லி மெட்ரே ரயில் கட்ட கொண்டு வந்த ஒரு க்ரேன் உச்சில ஏறி நின்னுகிட்டு லொல்லுசபா மனோகர் மாதிரி கைய முன்னாடி பின்னாடி ஆட்டிக்கிட்டு என்னமோ பண்ணிகிட்டு இருக்காரு. டேய் இதுக்கு பேருதான் அந்த யாருக்கும் தெரியாத கும்ஃபூ form ah... இந்த கருமத்த கீழ நின்னே சொல்லித்தரவேண்டியதான.. தவறி விழுந்தீங்கண்னா மண்டை செதறிப் போயிருமேடா...
அதவிட செம காமெடி இவரு க்ரேன்மேல ஏறி சொல்லிக்கொடுத்த அந்த ஸ்பெஷல் form ah வச்சிதான் நம்ம முகமூடி, வில்லன் நரேன கடைசில கொல்லுவார்னா பாத்துக்குங்களேன். க்ளைமாக்ஸ்ல நரேன் ஒரு பர்ஃபார்மண்ஸ் பண்ணுவாரு பாருங்க... "சூப்பர்மேன், ஸ்பைடர்மேன், பேட்மேன் இப்ப முகமூடியா... "அப்புடின்னு ஒரு டயலாக்க வாந்தி வர்றமாதிரி ஒரு ஸ்லாங்க்ல பேசிக் கொன்னுடுவான்.
படத்துல நல்லாருக்குன்னு சொல்ற மாதிரி உள்ள ஒரே விஷயம் BGM தான். செமயா இருக்கு. எங்கருந்து அடிச்சாய்ங்கன்னு தான் தெரியல. அப்புறம் பாட்டபத்தி சொல்லனும்னா "நாட்டுல நம்ம வீட்டுல" பாட்டுக்கும் அஞ்சாதே "கண்ணதாசன் காரக்குடி" பாட்டுக்கும் ட்யூன்லயோ இல்ல கொரியோ க்ராஃபிலயோ ஆறு வித்யாசம் கண்டு புடிக்கிறவங்களுக்கு ஆஸ்கரே குடுக்கலாம். அப்புறம் "வாயமூடி சும்மா இருடா" பாட்டும் அவரோட மொத படத்துல வந்த "என்ன ஆச்சுடா... ஏது ஆச்சுடா" மாதிரியே இருக்கு.
ஜீவாவும் சரி நரேனும் சரி... செம ஃபிட்டா இருக்காங்க. ஆனா என்ன பண்றது இப்புடி ஒரு படத்துல நடிச்சிபுட்டாய்ங்களே.. இந்த கொடுமையில இந்த படத்துக்கு மூணு பார்ட் எடுக்கலாம் நாலு பார்ட் எடுக்கலாம்னு மிஸ்கினுக்கு பேச்சு வேற... மிஸ்டர் மொன்னை...மொதல்ல ஒரு பார்ட்ட ஒழுங்கா எடுங்க.
இவ்வளவு சொல்லியும் சில பேரு என்ன பண்ணுவீங்க.."உங்களுக்கு மிஸ்கினின் கலைபார்வையை ரசிக்க முடியவில்லை. உங்களுக்கெல்லாம் 5 பாட்டு 4 ஃபைட்டு இருந்தாதான் படம் நல்லா இருக்குன்னு சொல்லுவீங்கன்னு" எனக்கே கமெண்ட் போட்டுட்டு போய் இந்த படத்த பாத்தே தீருவேன்னு அடம் புடிப்பீங்க. உங்க விதிய யாரால மாத்த முடியும். ம்ம்ம்ம்... கிளம்புங்கள்
படம் பாத்துட்டு மிஸ்கின் மேல கொலைவெறியா இருக்கவிங்க இதயும் படிக்கலாம்.
மிஷ்கின் என்னும் உலகமகா டைரடக்கர்

2 comments:
மச்சி நான் படம் நேத்தே பார்த்துட்டேன் இடைவேளை வரை ஓகே அதுக்கு அப்புறம் தான் போர இருக்கு ஒரு தடவ பாக்கலாம் உன் விமர்சனம் படம் பார்த்தப்ப விட விமர்சனம் படிச்சப்ப காமெடி யா இருந்ச்சு
நாளைக்கு மதியம் இந்தப் படத்துக்குப் போலாம்னு இருந்தேன்.. நலம்விரும்பிகள் "சில பேர் ரொம்ப நல்லவிதமா" சொல்லிருக்கதுனால,
Plan cancel (Great escape...)
அது போகட்டும் தல.. இந்தாளு நெசமாவே நம்ம காலேஜ்லதான் படிச்சானா, இல்ல பொய்யான தகவலா, இல்ல அதுவும் இவனோட சவடால்ல ஒன்னா..?
Post a Comment