Monday, November 19, 2012

துப்பாக்கி - விஜய்யின் மங்காத்தா!!!


Share/Bookmark
படம் பாக்க வர்றவிங்கள பஞ்ச் டயலாக் பேசியே தியேட்டர விட்டு அலற அலற ஓட விட்ட டாக்டர் விஜய்கிட்டருந்து இப்புடி ஒரு படம் வந்துருக்கத பாத்து நா மட்டும் இல்ல தமிழ்நாடே ஸாக் ஆயிருச்சி. கில்லிங்குற ஒரு மிகப்பெரிய வெற்றிக்கு அப்புறம் தமிழ்நாடே தன்னோட கைக்குள்ள வந்துட்டதா நெனைச்சி நம்மாளு அடுத்தடுத்த படங்கள்ல பேசுன பஞ்ச் டயலாக்குகளால நம்மூர காலி பண்ணிட்டு வடநாட்டுல போய் செட்டில் ஆனவங்க ஆயிரக்கணக்கானபேரு விஜய்ங்கர ஏரியாவுலருந்து அஜித்துங்குற ஏரியாவுக்கு தாவுனவுங்க லட்சக்கணக்கானபேரு. ரொம்ப நாளுக்கு முன்னாடி குனிஞ்ச விஜய் ரசிகர்களோட 'தல'ய தைரியமா நிமிர்ந்து பாக்க வைக்க ஒரு படம் துப்பாக்கி. 


வரிசையா வெற்றிப்பாதையில போய்கிட்டிருந்த முருகதாஸுக்கு 7ம் அறிவுல அடியப்போட்டதும் நம்மாளு உசாராயிட்டாரு. சாதாரண ஒரு ஒன்லைணுக்கு உருண்டு பெரண்டு ஒரு செமயான ஸ்கிரீன் ப்ளே எழுதி, பட்டைய கெளப்பிருக்காரு. இந்த வருஷத்துல பயங்கர build up ஒட வந்த பல பெரிய படங்கள்  மண்ணை கவ்வ,   நம்ம டுப்பாக்கியும் அந்த வரிசையில சேந்துருமோன்னு பயந்திருந்த பல  விஜய் ரசிகர்களோட மனசுல பீர வாத்துருக்காங்க. (மிஸ்டர் முருகதாஸூ..விஜய வச்சி டைம் பாஸ் பண்ணிகிட்டு இருந்த எங்க நெலைமையெல்லாம் யோசிச்சி பாத்தீங்களா...)

இந்த படத்தோட வெற்றிக்கு ரெண்டே விஷயம் தான்...  ஒண்ணு முருகதாஸோட ஸ்கிரீன் ப்ளே.. இன்னொன்னு விஜய்... மிலிட்ரி ஆஃபீசரா வர்றா இவரோட கெட்டப்பும் சரி ஆளும் சரி... சூப்பர்... எந்தவித மான அலட்டலும் இல்லாம, ஒவ்வொரு காட்சிலயும் பின்னி  பெடல் எடுத்துருக்காரு. காஸ்ட்யூமும் செம. வாய கட்டுனாதான்யா இவர மனுசனாவே மதிக்க முடியுது. ஒரு செக்யூரிட்டிகிட்ட பேசி அவர தற்கொலை பண்ண வைக்கிற சீன்ல விஜயோட டயாலக் டெலிவரி தாறுமாறு... முதல் பாதி ரொம்ப ஸ்லோவா நகந்தாலும் இண்டர்லல் சீன பாத்துட்டு எழும்பும் போது அந்த நெனப்பெல்லாம்  காணாம போயிடுது. காட்டுத்தனமான  அடிதடியெல்லாம் இல்லாம நீட்டான காட்சிகள்

என்னங்க? ஹாரிஸ் ஜெயராஜ பத்தியா? அவர ஏங்க வம்புக்கு இழுக்குறீங்க... அவர நம்பி வர்றவங்களுக்கெல்லாம் அவர்ட்ட இருக்க அந்த நாலு ட்யூன போட்டுகுடுத்துட்டு அவரு பாட்டுக்கு அவரு சோலிய பாத்துகிட்டு இருக்காரு...  இதுல விஜய்க்கு வர்ற அந்த தீம் சூப்பர். அத தவற BGM அதுபாட்டுக்கு சம்பந்தம் இல்லாம் எதோ ஒடிகிட்டு இருக்கு. "வாராயோ வாராயோ காதல்  கொள்ள" "வெண்நிலவே வெள்ளி வெள்ளீ நிலவே" இந்த பாட்டு ட்யூனுங்களயெல்லாம் BGM ah  போட்டு வச்சிருக்காரு.. சனியன் கடைசி வரைக்கும் திருந்தாது போல. கேமரா சூப்பர். பஸ்ல குண்டு வெடிக்கிற மாதிரி ஒரு சீன் செமயா இருக்கு.

சில கடுப்புகள்:

படத்துல கடியான ஒரு விஷயம் என்னன்னா இந்த காஜல் அகர்வால் வர்ற சீன்ஸ் தான்.  கண்றாவி... மொக்கைய போட்டு சாவடிக்குது... அதுகூட பரவால்ல.. அதுக்கு ஒரு வாய்ஸ்  டப்பிங் குடுத்துருக்கானுங்க பாருங்க... அத கேக்கும்போது காதுக்குள்ள காய்ச்சின கம்பிய விட்டு  கொடாயிற மாதிரி ஒரு ஃபீலிங்கு... அதுகூட பரவால்ல... சத்யன் அதுக்கும் மேல... காட்டு மொக்கை.

ஹாரிஸ் "அதே டெய்லர் அதே வாடகை" பாடல்கள குடுத்துருந்தாலும் எல்லா பாட்டுமே நல்லா  தான் இருக்கு. ஆனா பாட்டு picturization செம கப்பி.. "குட்டி புலி கூட்டம்" பாட்டு என்னோட  ஃபேவரெட்... ஆன அத ஸ்கிரீன்ல பாக்க எதோ பாட்ட எடுத்து அத ஸ்லோ மோஷன்ல  போட்டு பாக்குற மாதிரி இருந்துச்சி... அப்புறம் இன்னொன்னு இந்த பாட்டு முடிஞ்ச அடுத்த  5 வது நிமிஷத்துல அடுத்த பாட்டு... ஆதத்தாடி... காஜல ஓப்பன் டைப் பொண்ணுனு  காமிக்கிறாங்க... அதுக்குன்னு ஒருத்தன் ஒரு விளாட்டுதான் வெளயாட முடியும்... ஆனா  காஜல் அந்த பாட்டு முடியிறதுக்குள்ள, லாங் ஜம்ப், ஹை ஜம்ப், பாக்சிங், ரக்பி, ஜாவ்லின் த்ரோ, டென்னிஸ், ஹாக்கின்னு  இந்தியாவுல இருக்க அனைத்து விளையாட்டுகளையும் விளையாடுறாங்க... ஆனாலும் அவங்க  ரொம்ப வெளையாடுறாங்க முருகதாஸ் சார்... அலக்கெல்க்கா, கூகிள் பாட்டுங்க ஓக்கே...  வழக்கமா விஜய் பாடல் காட்சிகள்ல தரையில படுத்து ஆடுறேன்னு சர்க்கஸ் பண்ணுவாரே  அந்த மாதிரி காட்சிகள் எதுவும் இல்ல்லாதது ரொம்ப சந்தொஷம்

வில்லன்னு ஒருத்தன் இருக்கான்யா... ஆட்டுத் தொடைய அப்புடியே அடிப்பான் போலருக்கு.. கை ஒண்ணு ஒண்ணும் ஆலமர தூரு மாதிரி இருக்கு. இந்த மாதிரி body builder வில்லன்கள  போடுறதால ஒரு கடுப்பு என்னன்னா க்ளைமாக்ஸ்ல ஹீரோவோட ஒரு one to one fight வச்சே ஆகோனும்... அப்ப தானே அந்த சிக்ஸ்பேக்குக்கு ஒரு மதிப்பு... அதுமாதிரி ஒரு ஃபைட்டுக்காக
1945லருந்து ஒரு சீன் தான் இப்ப வரைக்கும்... ஹீரோ தலையில துப்பாக்கிய வில்லன்  வச்சிருவாரு.. சுட்டா மேட்டர் முடிஞ்சிரும்.. ஆனா சுட மாட்டாய்ங்க... திடீர்னு "உன்ன கொல்ல  எனக்கு துப்பாக்கியா...இஹா இஹா இஹா" ன்னு சொல்லிட்டு துப்பக்கிய ஒடைச்சி போட்டுட்டு  அப்புறம் ஹீரோ கையால அடி வாங்கியே சாவுவானுங்க... இதுலயும் அதுமாத்ரி ஒரு காட்சி இருக்கு... "சிக்ஸ் பேக்ஸ் வில்லன்கள் இருந்தால் திரைக்கதையில் வேறு என்னதான் மாற்றம் ஷெய்ய  முடியும்" ன்னு வி.எஸ்.ராகவன் ஸ்டைல்ல சொல்ற ஏ.ஆர்.முருகதாஸோட மைண்டு வாய்ஸ்  எனக்கு கேக்குது... உங்களுக்கு?.. இதுக்கு தான் பேசாமா தலைவர் ரகுவரன் மாதிரி வில்லன்களா போடனும்... அப்போ இந்த மாதிரி கப்பி காட்சிகளே வைக்க தேவையில்ல.

நிறைய காட்சிகள் செம மாஸ்ஸா இருந்தாலும், விஜய் ஒரு புள்ளி வச்ச வெள்ள பேப்பர்ல குத்து மதிப்பா நம்பர போட்டு அத மேப்பாக்குறது அல்டிமேட் காமெடி.. அதோட கோட்டு  போடுறத வச்சி  வில்லன் முலிட்டரி ஆஃபீசர்ஸ கண்டுபுடிக்கிறது அதுக்கும் மேல... என்னங்கடா நீங்களும் உங்க கண்டுபிடிப்பும்..

அப்புறம் விஜய் மிலிட்டரிங்குறாரு... சரி.. அப்புறம் அதுக்குள்ளயே வேற ஒரு சீக்ரெட்  ஆபீசருங்குறாரு. ஏங்க கேங்கும் நீங்க தான் லீடரும் நீங்கதானா... உங்களுக்கு பாஸூன்னு  யாரும் கெடையாதா...நீங்களா பாக்குறவிங்கள எல்லாம் போட்டு தள்றீங்க. என்ன பண்ணி  தொலைக்கிறது. உள்ள வந்துட்டா நீங்க சொல்றதயெல்லாம் நம்பித்தானே ஆகனும்.

ஆமா "taken" படத்த தான் நம்ம கேப்டன் விருதகிரிங்குற பேர்ல ஒரு சீன் கூட மாறாம தமிழ்ல ஏரீமேக் பண்ணிட்டாரே திரும்ப ஏன் அதே படத்துல போயி அதே டயலாக்க ஆட்டைய போட்டு "i am வொய்ட்டிங்"  ங்குற சீனா வச்சிருக்கீங்க... ஒரு வேள நீங்க விருதகிரி பாக்கல போலருக்கு.

எது எப்புடியோ படம் முடிஞ்சி வரும் போது கண்டிப்பா ரொம்ப நாளுக்கு அப்புறம் ஒரு நல்ல  படம் பாத்த எஃபெக்ட்டு. ஏற்கனவே தன்கிட்ட கதை சொல்ல வர்ற டைரக்டர்கள் கிட்ட "திருப்பாச்சி"  "சிவகாசி" பட dvd க்கள குடுத்து அதே போல காட்சி அமைக்க சொன்ன விஜய் இனி இந்த துப்பாக்கி படத்தின் DVD யை மட்டுமே கொடுப்பார் என நம்புவோம்.

என்னதான் விஜய்க்கு கில்லிங்குற படம் ஒரு மிகப்பெரிய ஹிட்டா இருந்தாலும், ப்ரகாஷ்ராஜ்  தான் முதல்ல ஞாபகம் வருவார். விஜய்ங்குற ஒரு நடிகருக்கு முழுசா கிடைச்ச மிகப்பெரிய வெற்றிப்படம்னா  இந்த துப்பாக்கி தான். சுருக்கமா சொல்லப்போனா 'தல' க்கு எப்புடி ஒரு மங்காத்தாவோ அதே மாதிரி விஜய்க்கு ஒரு துப்பாக்கி... இந்த வருடத்தின் மிகப்பெரிய வெற்றிப்படம். 

( இது விஜய் படத்துக்கு நா எழுதுற முதல் விமர்சனம். விஜய பத்தி நல்ல விதமா நா  எழுதியிருக்க முதல் பதிவும் இதுதான்னு நெனைக்கிறேன்)

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

14 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

செம ஹிட்...

நல்ல விமர்சனம்... அவரைப்பற்றி முதல் பதிவே முத்தான பதிவு...

நன்றி...

முத்தரசு said...

ஹிட்......நன்றி

Unknown said...

tv la படத்தை எப்போ போடுவாங்க?

scenecreator said...

என்னதான் விஜய்க்கு கில்லிங்குற படம் ஒரு மிகப்பெரிய ஹிட்டா இருந்தாலும், ப்ரகாஷ்ராஜ் தான் முதல்ல ஞாபகம் வருவார்
அதே போல தான் அஜித்துக்கு மங்காத்தா படம் ஒரு சுமார் ஹிட் என்றாலும் அதில் த்ரிஷாவுக்கு அப்பாவாக வருவாரே ஜெயபிரகாஷ் அவர்தான் ஞாபகத்திற்கு வருவார், .அஜித்துக்கு இன்னும் முழுசா ஒரு வெற்றி படம் கூட கிடைக்கல

Thava said...

விமர்சனம் நல்லாருக்குங்க..நன்றி.

"ராஜா" said...

//த்ரிஷாவுக்கு அப்பாவாக வருவாரே ஜெயபிரகாஷ் அவர்தான் ஞாபகத்திற்கு வருவார்,

யாரு பாஸ் நீங்க பெரிய காமெடி பீஸா இருப்பீங்க போல?

பாலா said...

//என்னதான் விஜய்க்கு கில்லிங்குற படம் ஒரு மிகப்பெரிய ஹிட்டா இருந்தாலும், ப்ரகாஷ்ராஜ் தான் முதல்ல ஞாபகம் வருவார்
அதே போல தான் அஜித்துக்கு மங்காத்தா படம் ஒரு சுமார் ஹிட் என்றாலும் அதில் த்ரிஷாவுக்கு அப்பாவாக வருவாரே ஜெயபிரகாஷ் அவர்தான் ஞாபகத்திற்கு வருவார், .அஜித்துக்கு இன்னும் முழுசா ஒரு வெற்றி படம் கூட கிடைக்கல

@முத்துசிவா

ஆண்டவன் ஆட்டுவாலை ஏன் அவ்ளோ சின்னதா வச்சிருக்கிறான்னு புரிஞ்சதா? கொஞ்சம் வளர்ந்ததும் என்ன ஆட்டு ஆட்டுதுன்னு பாருங்க. பெரிசா வளர்ந்துட்டா அவ்ளோதான்.

முத்துசிவா said...

@திண்டுக்கல் தனபாலன்,முத்தரசு

நன்றி !!!!

முத்துசிவா said...

@scene creator//

உங்களுக்கு கவுண்டர் ஸ்டைலேல தன பதில் சொல்லணும்... "கால் நூற்றாண்டுக்கு அப்புறம் உங்க வாழ்க்கைல ஒரு சந்தோசம் வந்துருக்குன்னு ஓவரா ஆடாதிங்க அது நல்லதில்ல "

முத்துசிவா said...

@பாலா

//ஆண்டவன் ஆட்டுவாலை ஏன் அவ்ளோ சின்னதா வச்சிருக்கிறான்னு புரிஞ்சதா? கொஞ்சம் வளர்ந்ததும் என்ன ஆட்டு ஆட்டுதுன்னு பாருங்க. பெரிசா வளர்ந்துட்டா அவ்ளோதான்.//

ஹா ஹா ஹா ஹா ... இதுக்கு மேல சிறந்த உதாரணம் வேற ஏதும் இல்ல தல... செம :)

scenecreator said...

உங்களுக்கு கவுண்டர் ஸ்டைலேல தன பதில் சொல்லணும்... "கால் நூற்றாண்டுக்கு அப்புறம் உங்க வாழ்க்கைல ஒரு சந்தோசம் வந்துருக்குன்னு ஓவரா ஆடாதிங்க அது நல்லதில்ல "
அந்த சந்தோஷமும் உங்களுக்கு எந்த காலத்திலும் கிடைக்கபோவதில்லை .துப்பாக்கி வெற்றி தொப்பை நடிகரின் சொம்புகளை நன்றாக எரிச்சல் கிளப்பியுள்ளது தெரிகிறது.சந்தோசம் ,பரம சந்தோசம்.வயதேரிச்சளோட வேலையை பாருங்க.

selvan said...

//ஆண்டவன் ஆட்டுவாலை ஏன் அவ்ளோ சின்னதா வச்சிருக்கிறான்னு புரிஞ்சதா? கொஞ்சம் வளர்ந்ததும் என்ன ஆட்டு ஆட்டுதுன்னு பாருங்க. பெரிசா வளர்ந்துட்டா அவ்ளோதான். //


அது போல துப்பாக்கி படம் ஹிட் மூலமா ஆண்டவன் அஜித் ரசிகன் வால ஒட்ட வெட்டிடாரு. இருந்தாலும் கொஞ்சம் வளர்ந்ததும் என்ன ஆட்டு ஆட்டுராங்க பாருங்க விஜய்யோட வெற்றி பொருக்க முடியாம!!!

selvan said...

//ஆண்டவன் ஆட்டுவாலை ஏன் அவ்ளோ சின்னதா வச்சிருக்கிறான்னு புரிஞ்சதா? கொஞ்சம் வளர்ந்ததும் என்ன ஆட்டு ஆட்டுதுன்னு பாருங்க. பெரிசா வளர்ந்துட்டா அவ்ளோதான். //

@பாலா

அது போல துப்பாக்கி படம் ஹிட் மூலமா ஆண்டவன் அஜித் ரசிகன் வால ஒட்ட வெட்டிடாரு. இருந்தாலும் கொஞ்சம் வளர்ந்ததும் என்ன ஆட்டு ஆட்டுராங்க பாருங்க விஜய்யோட வெற்றி பொருக்க முடியாம!!!

Unknown said...

உங்ககிட்ட இருந்து ஒரு பாசிடிவ் மெசேச் கிடைப்பது இது தான் முதல் முறைன்னு நினைக்கிறேன்.எந்த படத்தையும் ஒரு ஓட்டு ஒட்டுனு ஓட்டிதான் இத்தனை நாளாய் படித்து இருக்கேன்.பாராட்டி எழுதி இருக்கும் ஒரு படம் துப்பாக்கி. நீங்களே சான்று தந்தவுடன் படம் ஓடாம இருக்குமா ! என்னா!

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...