Monday, December 3, 2012

DAMARUKAM - அரைச்ச மாவ அரைப்போமா!!!


Share/Bookmark
அடுத்த மாசம் வருதுங்க... என்ன வரலியா? அப்ப தீவாளிக்கு வரும்.. என்னது தீவாளிக்கும் வரலியா? அப்ப கண்டிப்பா அடுத்த வாரம் வந்துரும்.  அட இப்பவும் வரலியா? அட என்னங்க  போங்க... இப்புடி பல ரிலீஸ் தேதிகளை குடுத்து பல ப்ரச்சனைங்களால தள்ளிப்போன தமருகம்  கடைசியா ரிலீஸ் ஆயிருச்சிப்பா.. ஒரு ரெண்டு வாரத்துக்கு முன்னால வேலை விஷயமா ஹைதராபாத் போயிருந்தப்ப எல்லா channel லயும் ஒரே தமுருகம் விளம்பரம் தான்.. இன்னும் சொல்லப்போனா  ஒரு சேனல்ல தமருகம் ரிலீஸுக்கு மூணு நாளுக்கு முன்னாடி கவுண்டவுன் எல்லாம் ஓடிட்டு   இருந்துச்சி. அன்னிக்கு தமருகம் ரிலீஸ் தேதி... காலைல கம்பெனி போற வழில ஒரு தியேட்டர்ல அந்த பட போஸ்டர் போட்டுருந்தாய்ங்க.. சரி என்ன ஆனாலும் சரி ராத்திரி அடிச்சி புடிச்சி  டிக்கெட் வாங்கி பாத்துட வேண்டியதுதான்னு நெனச்சிட்டு போனேன்.. சாய்ங்கலாம் திரும்பி வரும்போது பாத்தா அதுல வேற எதோ ஒரு இங்கிலீஷ் படம் போஸ்டர் போட்டுருந்தாய்ங்க..

"அட பாவிகளா... எங்க ஊர்ல படம் மொக்கையானா ஒரு ரெண்டு நாள் கழிச்சி தானடா தியேட்டர்லருந்து  தூக்குவோம்.. இவிங்க என்னனா ரெண்டே ஷோவுல தூக்கிட்டாய்ங்களே... அவளவு கோவக்காரய்ங்களாய்யா நீங்க?" ன்னு நெனைச்சிட்டு போனேன்.. அப்புறம் தான் தெரிஞ்சிது அன்னிக்கு ரிலீஸ் ஆக வேண்டிய  படம் ரிலீஸ் ஆகலன்னு. சரி படத்துக்கு வருவோம்...

அட நம்மூர் சினிமாவுல இந்த பஞ்ச பூதங்களை அடக்க நினைக்கிற அரக்கர்கள் எப்பதான்  ஒழியுவாய்ங்கன்னே தெரியலப்பா... அந்த ஏழு கிரகங்களும் ஒண்ணு சேர்ர நாள் அன்னிக்கு  இந்த நட்சத்துரத்துல பொறந்த ஒரு பொண்ண பலி கொடுத்தா பஞ்ச பூதங்களும் உன் கட்டுப்படுத்தலாம். இதுதான் விட்டலாச்சாரியா காலத்து வில்லன்கள்லருந்து இப்பவரைக்கும் நம்மூர் படங்கள்ல  அரக்கன்கள் செய்யிற வேலை... பசிச்சா ஒரு பண்ண வாங்கி திண்ணூங்க... காசு இருந்தா ரெண்டு வடைய  வாங்கி திண்ணுங்க .அப்புடி அந்த பூதங்களையெல்லாம் கட்டுப்படுத்தி என்னடா பண்ணப்போறீங்க

இங்கயும் அதே கதைதான்... அசுர குலத்துல ஒக்கே ஒக்க அசுரன் மட்டும் தான் மிச்சம் இருக்கான். அவன் ஒரு புள்ளைய பலி கொடுத்தா 5 பூதங்களும் அவரு கண்ட்ரோல்ல வந்துரும்.. அந்த  அசுரன் வேற யாரும் இல்ல... நம்ம வேட்டைகாரன்ல "வா.....டாஆஆஆஆ"ன்னு ஒருத்தர்  வந்து ஹைபிட்ச்ல கத்துவாரே அவரேதான். எல்லாருக்கும் மண்டை மேல முடி மொளச்சிருக்கும் ஆனா இவருக்கு பாம்பு முளச்சிருக்கு.. தலை நிறையா கசகசன்னு ஒரே பாம்புங்க... இந்த பாம்புகள  கிராஃபிக்ஸ் பண்ணதான் இவிங்களுக்கு நேரம் ஆயிருச்சி போல...

யாரோ ஒரு புள்ளைய பலி கொடுக்கனும்னு சொன்னோமே...ஆங் அது வேற யாரும் இல்ல... நம்ம  அனுஷ்காதான்.. இந்த படத்துல அனுஷ்கா performance காமிக்கிற மாதிரி எந்த காட்சியும் இல்ல. மற்ற சாதா ஹீரோயின் மாதிரி சும்மா வந்துட்டு போறாங்க. சிறப்பா சொல்றமாதிரி எதுவும் இல்லை.

ப்ரகாஷ்ராஜ்... அய்யோ கடவுள்... இவருக்கு செட் ஆகாத வேஷமே இல்ல போல எதுவா இருந்தாலும்  பிண்ணி பெடல் எடுக்குறாரு... இந்த படத்துல சிவபெருமானா வர்றாரு. இவருக்கும் performance காமிக்கிற மாதிரி சீன் எதுவும் இல்லைன்னாலும் அவரு வேலைய கரெக்டா பண்ணிருக்காரு. நம்ம அறை எண் 302ல் கடவுள்ல வர்ற மாதிரியே , கடவுள்னு சொல்லாம ஹீரோ கூட இருந்து அவருக்கு உதவி பண்ணிட்டு இருக்காரு. அப்புறம் ப்ரம்மானந்தம் வரவர படு மொக்கையாயிட்டே வர்றாரு.. காமெடியெல்லாம் ஒண்ணும் வேலைக்கு ஆகல..


சரிக் கமப் பத நீசே... கபக் கபக் கப, கபக் கபக் கப ஜல்சே... இது.தல DSP யோட 50 வது படம். 3 பாட்டு ஓக்கே.. நம்ம சார்மி வந்து ஆடுற "கும்மாங் கும்மாங் சாய்" பாட்டு செம... ட்ரெயிலர்ல  அந்த பாட்ட பாத்துட்டு அதுக்காக படத்துக்கு போறவாங்க ஏராளம். அப்றம் தல ஷங்கர் மகாதேவன் பாடுன க்ளைமாக்ஸ் பாட்டும் சூப்பர். க்ளைமாக்ஸ் பாட்டுனோன வழக்கம்போல குத்துப்பாட்டுன்னு நெனைப்பீங்களே... அதான் இல்லை... இது அகோரிங்க டான்ஸ் ஆடுற பாட்டு... கடைசி வரைக்கும் "Hello everybody....This is DSPeeeeeeeeeeeeeeee" அப்புடின்னு எதாது பாட்டு வந்துருமோன்னு பயந்துட்டே இருந்தேன்.. நல்ல வேளை வரல...

அப்புறம் யாரோ ஒருத்தர விட்டுட்டோமே.. ஆங்... நம்ம நாகர்ஜூனா கூட இந்த
படத்துல நடிச்சிருக்காருப்பா... என்னது ஹீரோவா? ச்ச ச்ச ... அதெல்லாம் இல்லை... அனுஷ்காவ காப்பாத்துற கெஸ்ட் ரோல்ல நடிச்சிருக்காரு... படம் ஆரம்பிச்சி 25 நிமிஷம் கழிச்சி தான் நாகர்ஜூனாவே வர்றாரு... படத்துல இவரு வர்ற காட்சிகள விட மத்தவங்க வர்ற காட்சிகள் தான் அதிகம்.. ஆரம்பத்துல பயங்கர சிவ பக்தனா இருந்துட்டு அப்புறம் குடும்பத்த இழந்தபிறது சிவன்கற பேரகேட்டாலே வெறுக்குற மாதிரியான கேரக்டர் இவருக்கு. ஆனா அத வச்சிகிட்டே பல காட்சிகள்ல மொக்கைய போடுறது செம கடுப்பு.  ஆளு ஆனா செமயா இருக்காரு...  க்ளைமாக்ஸ் பாட்டுல சிக்ஸ் பேக்கோட வர்றப்ப கெத்தா இருக்காரு... ஆனா நம்மாளுக்கு டான்ஸ் சுத்தமா வராது போல.. பாட்டெல்லாம் செம காமெடி.... அப்புறம் க்ளைமாக்ஸ்ல ல ஒரு கிராஃபிக்ஸ் மிருகதோட சண்ட போடுறாரு... பாக்க எதோ கார்ட்டூன் படம் பாத்த ஃபீலிங்கு.. அதோட மிரட்டல் அடி 2 க்ளைமாக்ஸ்ல ஹீரோ மேகத்துக்கு உள்ள போனதும் புத்தர் தெரிவாரு. அத பாத்துட்டு வந்து வில்லன கொல்லுவாரு. அத அப்புடியே இங்க ஆட்டைய போட்டு, க்ளைமாக்ஸ் சீனா வச்சிருக்காய்ங்க. இங்க புத்தருக்கு பதிலா சிவன்.

கிராஃபிக்ஸ்க்கு ரொம்ப உழைச்சிருக்காங்க.. நிறைய காட்சிகள் நல்லா இருந்தாலும் ஒரு சில காட்சிகள் இது தெலுகு பட கிராஃபிக்ஸ்ங்கறத அப்பட்டமா காட்டிக் குடுக்குற அளவு கப்பியா இருக்கு. மத்தபடி பெருசா சொல்லும் படியா எதுவும் இல்லை. வீண் பில்ட் அப் குடுத்தது மட்டும் தான் மிச்சம்.  சுருக்கமா சொல்லப்போனா "அரைச்ச மாவ அரைப்போமா துவைச்ச துணிய துவைப்போமா" தான்


பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

6 comments:

கோவை நேரம் said...

தமிழ் படம் பார்க்கவே முடிய்ல...இதுல தெலுங்கா...?

JR Benedict II said...

/பசிச்சா ஒரு பண்ண வாங்கி திண்ணூங்க... காசு இருந்தா ரெண்டு வடைய வாங்கி திண்ணுங்க .அப்புடி அந்த பூதங்களையெல்லாம் கட்டுப்படுத்தி என்னடா பண்ணப்போறீங்க/

கவுண்டர்ல இருந்து வடிவேலுக்கு ஜம்ப் ஆகிட்டிங்க.. கல கல விமர்சனம் தல

Thava said...

இந்த மாதிரி படங்கள் எனக்கு பிடிக்கும்-ங்க..ஆனால், தெலுங்கு படங்கள் என்றாலே பார்ப்பதற்கு கொஞ்ச பயம்தான்.நான் பார்த்த ஒரு ரெண்டு படங்களும் இன்னும் என்னோட மண்டைய போட்டு பின்னுது.இந்த படம்...பார்க்கலாம்..நன்றி.நல்ல விமர்சனம்.

Anonymous said...

Its like you read my mind! You appear to know so much about this,
like you wrote the book in it or something. I think that you can do with some pics to drive the message home a bit, but instead of that, this is
excellent blog. A fantastic read. I'll definitely be back.
Feel free to visit my webpage :: making money from home

Anonymous said...

Thanks for sharing your thoughts about acne prevention.
Regards
Here is my web site :: berlinnovations.com

வே.நடனசபாபதி said...

கொஞ்சம் மாய மந்திரம், கொஞ்சம் குத்துப்பாட்டுடன் கூடிய டான்ஸ், கொஞ்சம் அடிதடி இல்லாவிட்டால் அது தெலுங்கு படம் அல்ல. நன்றாக விமரிசனம் செய்து உள்ளீர்கள். வாழ்த்துக்கள்!

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...