Tuesday, November 6, 2012

SKY FALL - கடல்லயே இல்லையாம்!!!


Share/Bookmark
வின்னர்ல வடிவேலு வர்ற   இந்த காட்சி எல்லாருக்கும் ஞாபகம் இருக்கும்னு நெனைக்கிறேன். வடிவேலு மூஞ்சில அவங்க பாட்டி ஆரத்திய கரைச்சி ஊத்திரும்.. அப்ப வடிவேலு "பாத்தியாடா கெழவிக்கு ரவுச... ஆரத்திங்குற பேர்ல ஆசிட்ட மூஞ்சில கரைச்சி  ஊத்திட்டு போகுது..." ம்பாறு . அதுக்கு பக்கத்துல இருக்கவன்

"தல "உம்"னு ஒரு வார்த்தை சொல்லுங்க கெழவிய தூக்கிடுறேன்"

"ஏண்டா... அங்கன என்னய பொறட்டி பொறட்டி எடுத்தாய்ங்க... அப்பல்லாம் சும்மா இருந்துட்டு நாளைக்கு சாவப்போற கெழவியவா தூக்குறேங்குற" ம்பாறு... ஒரு வேலை கெழவிய தூக்கிரட்டுமான்னு கேட்டதுக்கு வடிவேலு "உம்"ன்னு சொல்லிருந்தாருன்னா என்ன நடந்துருக்கும்?

அது தான் இந்த ஸ்கை ஃபாலோட கதை...

ஒரு அகம்புடிச்ச கெழவி... ஏஜெண்டுக்கெல்லாம் ஏஜெண்ட்... MI6 ஓட த்லைவி...முன்னொரு காலத்துல ஒரு ஆப்ரேஷன்ல அதுகிட்ட வேலை பாத்த ஒரு ஏஜெண்ட்ட காப்பாத்தாம, சில பல காரணங்களுக்காக டீல்ல விட்டுருது... அதனால பல பாதிப்புக்கு உள்ளான அந்த  முன்னாள்  ஏஜெண்ட் கெழவிய தூக்கிரணும்னு முடிவோட திரியிறான்...  பேசாமா விட்டா கெழவி இன்னும் கொஞ்ச நாள்ல அதுவே மட்டை ஆயிரும்ங்கறது வேற விஷயம் ... இதுல ஜேம்ஸ் பாண்ட் பேரே  வர்லியேன்னு தானே யோசிக்கிறீங்க... அந்த கெழவிய  காப்பாத்துறதே நம்ம பாண்டு தான்... ச்ச... நம்ம P பாண்டு இல்ல... bond... James bond...



படத்தோட முதல் காட்சியே தாறு மாறான ஒரு chasing... பத்து நிமிஷமும் பட்டைய  கெளப்பியிருப்பாய்ங்க.. ஒருத்தன நம்ம டேனியல் க்ரேக் ஓட ஓட வெரட்ட... அவரு எப்புடி  வெரட்டுராருன்னு அவரு கூட இருக்க பெண் ஏஜெண்ட் மூலமா கெழவி கேட்டுகிட்டே இருக்கு... ஒரு லெவல்ல ட்ரெயின் மேல டேனியல் க்ரேக்கும் வில்லனும் சண்டை போட்டுகிட்டு இருக்க.. கெழவி அந்த பொண்ணுகிட்ட வில்லன சுட சொல்லுது... ட்ரெயினும் ஓட, அதுமேல அவிங்க ரெண்டு பேரும் ஓட இந்த புள்ளை சுட முடியாம தெண்ற... நம்ம கெழவி 'M' டென்சனாயி "வக்காளி இப்ப சுடுறியா இல்லயாடி..."ங்குது...

பதட்டப்பட்டு பாப்பா மாரியாத்தா மேல பாரத்த போட்டு பொட்டுன்னு சுடுது... அது கரெக்டா குறி தவறாம நம்ம ஜேம்ஸ் பாண்ட சுட்ருது.. அவ்ளோதான்... பாண்டுக்கு ஓப்பணிங்லயே  எண்டு கார்டு போட்டுடாய்ங்களே... ட்ரெயின்லருந்து மல்லாந்துடுறாரு... உசேன் போல்ட்  மாதிரி 100 கிலோமீட்டர்  ஸ்பீடுல ஓடுனியே... இப்புடி ஒரே புல்லட்டுல மல்லாந்துட்டியே  என் தேசிங்கு ராசா.. ன்னு ஒரு சாங்கோட டைட்டில் போடுறாங்க... அந்த சாங்கும் சரி அந்த டைட்டில் அனிமேஷனும் சரி... தாறு மாறு...  

அவ்வளவுதான்.. அதுக்கப்புறம் படம் மட்டை... செத்துப்போன ஜேம்ஸ்பாண்ட் ஒரு செம்ம ஆக் சன் ப்ளாக்குல வந்து ரீ என்ட்ரி குடுப்பாருன்னு ஆவலோட இருந்தா, அடுத்த சீன்ல ஒரு அழகிகூட குஜால்ஸ் பண்ணிட்டு இருக்காரு... யோவ்... அந்த ட்ரெயின்லருந்து சம்மர் சாட் அடிச்சி  விழுந்தவன் தானே நீயி... இப்புடி சம்மர் வெகேஷனுக்கு வந்த மாதிரி சாலியா இருக்கா... நாங்க வேற எங்க ஊரு விஜயகாந்து, அர்ஜூனையெல்லாம் தப்பு சொல்லிகிட்டு இருக்கோமேய்யா.. 

கொஞ்ச நாள் அப்புடியே அந்தப்புற அழகிகளுடன் உலாவிக் கொண்டு இருக்குற James Bond அவிங்க ஆபீஸ்ல ஒரு குண்டு வெடிச்சதும், பொங்கி எழுந்து நரம்பு பொடைக்க திரும்ப  வேலைல join பண்ண போறாரு... அவிங்க என்னடான்னா திரும்ப எல்லா டெஸ்ட்லயும் பாஸ் பண்ணாதான் உன்ன வேலைக்கு சேத்துக்குவோம்னு சொல்லி நம்ம bond ah கலாய்ச்சிடுராங்க. ஒரு டெஸ்ட்ல கூட பாஸ் ஆவ மாட்டேங்குறாரு... காரணம்? வேற ஒண்ணும் இல்ல... நாக்கு தள்ளிருச்சி... ஃபுல் டைம் சரக்குலயே இருந்த அப்புறம் என்ன பண்ணும்? அப்புறம்  அந்த கெழவி ரெகமண்டேஷன்ல திரும்ப வேலைக்கு சேந்து வில்லன புடிக்கிறாரு...

வில்லன் யாருன்னு பாத்தா... அவன் ஒரு "அவன்"... தூரத்துலருந்து டயலாக் பேசிகிட்டே கொஞ்சம் கொஞ்சமா கேமரா முன்னால வர்ற வில்லனோட intro சூப்பர். வில்லனோட கேரக்டர் கிட்டத்தட்ட  ஜோக்கரோடது மாதிரியே இருக்கு... body language um சரி அவரு ஜெயில்ல இருக்கது ஜெயில்லருந்து தப்பிக்கிறதும் சரி கிட்டத்தட்ட எல்லாமே ஜோக்கரோட சீன்ஸ் மாதிரியே தான் இருக்கு. அந்த "அவன்" தான்  நம்ம "M" கெழவியல பாதிக்கப்பட்ட ஏஜெண்ட்.. கெழவிய  கொண்ணே ஆகனும்னு அடம் புடிக்கிறான்... அதோட ஒரு சீக்ரட் ஏஜென்ட்ஸ் லிஸ்ட்டயும்  ஆட்டைய போட்டு வச்சிகிட்டு கெழவிய பயமுறுத்துறான். ஞாயப்படி பாத்தா மொத சீன்ல சுட  சொன்னதுக்காக நம்ம Bond um வில்லன் கூட சேந்து தான் கெழவிய போட்டு தள்ளனும்... ஆனா என்ன பண்றது பாண்ட் ஹீரோவா பொய்ட்டாரு... கெழவிய காப்பாத்தியே ஆவனும்...

அதுக்காக அத அழைச்சிட்டு ஒரு சீக்ரட்டான எடத்துக்கு போயிட, அங்கயும் வில்லன் க்ரூப் வந்து அட்டாக் பண்ணுது...  கடைசில என்ன நடக்கும்னு உங்களுக்கே தெரியும்... வில்லன கொன்னு கெழவிய காப்பாத்திருப்பாரு பாண்டு... அப்புடித்தானே நெனைக்கிறீங்க... அதான் இல்லை... சண்டை முடிஞ்சதும் கெழவியும் அடிபட்டு செத்துருது...  மருதமலைல வடிவேலு அர்ஜூன பாத்து கேக்குற மாதிரி

"இதத்தானடா வில்லனும் முன்னாடியே செய்ய வந்தான்... அப்பவே கொன்னுருந்தா கெழவியோட  மட்டும் போயிருக்கும்... நீ ஏன் இப்ப தேவையில்லாம கெழவிய காப்பாத்துறேன்னு காட்டுக்குள்ள அழைச்சிட்டு வந்து 'U" turn எல்லாம் போட்டு ஒரு வீட்டை சல்லி சல்லியா நொறுக்கி...ஏன் இந்த ரத்த வெறி? " ன்னு ஜேம்ஸ் பாண்ட பாத்து நமக்கு கேக்க தோணூம்...


டேனியல் க்ரேக்... ஃபேஸ் கொஞம் ஃபிட் ஆகலன்னாலும் ஆளு செம ஃபிட்... கொஞ்ச நேர ஆக்சன் ப்ளாக்குன்னாலும் பிண்ணி எடுத்துருக்காரு...  ஆனா படத்தோட ஸ்டோரி, ஸ்கிரீன் ப்ளே அவ்வளவு சிறப்பா இல்லை... இவிங்க மொக்கையான ஒரு ஸ்டோரிய படமா எடுத்துட்டு கடைசில "ஜேம்ஸ் பாண்ட் கேரக்டருக்கு டேனியல் க்ரேக் சரிப்பட்டு வரமாட்டாருப்பா" ன்னு அவரு மேல பழிய தூக்கி போட்டுருவாய்ங்க... வழக்கமா நீங்க வெறும் bond ah இல்ல anabond ah ன்னு  கேக்குற அளவுக்கு   ரொமான்ஸ் சீன்ஸ் இருக்கும். இந்த படத்துல அதுவும் இல்லை. அதுனாலதான் படம் புல்லா டேனியல் க்ரேக் உம்முன்னே இருக்காரோ?


'M' பாட்டிய வச்சி இனிமே ஷூட்டிங்லாம் எடுக்க முடியாதுன்னு முடிவு பண்ணி இதுல அத போட்டு தள்ளிட்டாய்ங்க... ஹீரொயின்ஸ் மாதிரி ரெண்டு பேரு இருக்காங்க... மட்டம்... :(

படத்துல முதல் பதினைந்து நிமிடம் மட்டுமே பட்டைய கெளப்புது... அதுக்கப்புறம் மட்டையா மடங்கி எதோ கடனுக்குன்னு ஓடிகிட்டு இருக்கு....


பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

5 comments:

தகிடுதத்தம் ரமணி said...

நீங்க சொன்னதுபோல கிரெய்க்’மேல அப்படி ஒரு அபிப்ராயம் இருக்கறதுனாலதான் இதுவரை பாக்காம இருந்தேன். உங்க பதிவு படிச்சதுக்கப்புறம் ’வேண்டாம்,விட்டுரு....அழுதிருவேன்’

Muralidharan said...

Super writing style...keep it up

Muralidharan said...

Good writing style... keep it up...

Anonymous said...

I just couldn't leave your web site before suggesting that I extremely enjoyed the usual information an individual supply on your visitors? Is going to be back continuously in order to check up on new posts
my page > how to make an app

Anonymous said...

//"தல "உம்"னு ஒரு வார்த்தை சொல்லுங்க கெழவிய தூக்கிடுறேன்"

"ஏண்டா... அங்கன என்னய பொறட்டி பொறட்டி எடுத்தாய்ங்க...

அது தான் இந்த ஸ்கை ஃபாலோட கதை...//

really நச்..

---SRK

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...