வழக்கமா
நா சீரியஸான பதிவுகளோ இல்லை கருத்து சொல்ற பதிவுகளோ எழுதுறதில்லை.
இருந்தாலும் புதுசா ஒரு முயற்சி பண்ணேன். அதற்கு நண்பர்கள் அளித்த
ஆதரவுக்கு மிக்க நன்றி. வக்காளி மொத்தமா அந்த போஸ்ட ஒரு 200 பேர் கூட
படிக்கல. அப்பவே முடிவு பண்ணிட்டேன் இனிமே இந்த மாதிரி கருத்து கந்தசாமி
வேலையெல்லாம் நமக்கு சரிப்பட்டு வராதுன்னு. இருந்தாலும் என்ன பண்றது
கமிட் ஆயிட்டேனே.. அதனால அந்த பதிவோட தொடர்ச்சி போட்டே ஆக வேண்டிய
கட்டாயத்துல இருக்கேன். இந்த பதிவின் முதல் பகுதியை படிக்க இங்கே க்ளிக்கவும்.
11. மனிதர்களோட மூளையானது சின்ன வயசுலதான் அதிக சுறுசுறுப்பா இருக்குமாம். உங்க குழந்தை ஏதேனும் ஒரு துறையில் பெரிய ஆளா வரனும்னு விரும்பினீங்கன்னா அதற்கான பயிற்சியை சின்ன வயசுலயே ஆரம்பிக்கிறது நல்லது. உதாரணமா உங்க குழந்தை வயலின் வாசிக்கிறதுல பெரிய ஆளா வரனும்னு ஆசப்பட்டீங்கன்னா அதற்கான பயிற்சிய 10 வயசுல ஆரம்பிக்கிறத விட 7 வயதில் ஆரம்பிக்கிறது ரொம்ப நல்லது. 7 வயசுல வயலின் கத்துகிட்ட குழந்தையோட மூளை 10 வயசுல வயலின் கத்துக்கிட்ட குழந்தையோட மூளைய விட ரொம்ப சுறுசுறுப்பாகவும் ஆரோக்யமாகவும் இருக்குமாம். இதுபோலான பயிற்சில குழந்தைகளை சிறுவயசுலயே ஈடுபடுத்துறதால பின்னால எந்த ஒரு விஷயத்தையும் மற்ற குழந்தைங்கள விட ஈஸியா புரிஞ்சிக்கிற தன்மை அதிகரிக்கும். சுறுக்கமா சொல்லப்போனா குறைந்த நேரம் படிச்சிட்டு அதிக மார்க் வாங்குவாங்க.
12. சின்ன வயசுலருந்தே குழந்தைகள கிரிக்கெட், ஹாக்கி, ஃபுட்பால், கபடி, டென்னிஸ் போன்ற விளையாட்டுக்கள்ல ஈடுபடுத்துவது அவசியம். மேலும் இவற்றில் ஏதாவது ஒரு விளையாட்டுல முழுமூச்சா ஈடுபடுத்துவது அவசியம். யாருப்பாது கேம் சிடி வாங்க ஓடுறது? நல்லா ஓடி ஆடி விளையாடுற மாதிரி வெளில க்ரவுண்ட்ல போய் விளையாட சொல்லுங்கண்ணே. கேம் கேரம் chess போன்ற நோகாக நோம்பு கும்புடுற விளையாட்டுகள் இதில் அடங்காது.
13. மனிஷனோட மூளை வலது பக்க மூளை இடது பக்க மூளைன்னு ரெண்டு பார்ட்டா இருக்கு. வலது பக்க அசைவுகள இடது மூளையும் இடது பக்க அசைவுகள வலது மூளையுமே கண்ட்ரோல் பண்ணிட்டு இருக்கு. இந்த ரெண்டு பக்க மூளையும் ஒண்ணா ஒழங்கா வேலை செய்யனும். என்ன இஸ்கூல்ல zoology புத்தகம் படிக்கிற மாதிரி இருக்கோ. எனக்கும் அதே பீலிங்கு தான். சின்ன வயசுல இந்த ரெண்டு பக்க மூளையும் நல்லாதான் வேலை செய்யுமாம்.
ஆனா குழந்தை வளர வளர "சுயமா எதையும் செய்யாதே" "நீ இதெல்லாம் செய்யக்கூடாது" ன்னு அடக்கி வளர்க்குறதால சுயமா சிந்திக்க விடாம தடுப்பதாலும் ஒரு பக்க மூளை ஒழுங்கா வேலை செய்யாமா கிக்கிரி பிக்கிரி பண்ணிடும். குழந்தைகளோட ஆரோக்யத்திற்கும் நல்ல செயல்திறனுக்கும் இந்த வலது இடது மூளைகளின் சீரான இயக்கம் ரொம்பவும் அவசியம். இந்த ரெண்டு மூளையையும் ஒண்ணா இயங்க வைக்க சில பயிற்சிகள் செய்யனும். அதுக்கு பேர் தான் ப்ரெயின் ஜிம்.
14. இந்த ப்ரெயின் ஜிம் ஆக்டிவிட்டில முதல்ல உங்க குழந்தைகள ரெண்டு கையையும் பயன்படுத்தி விளையாடுற மாதிரியான விளையாட்டுகள்லயும் பயிற்சிகள்லயும் அதிகம் ஈடுபடுத்தனும். உதாரணமா கீ போர்டு வாசிக்கிறது வயலின் வாசிக்கிறது, மலையேற்றம், நீச்சல்போன்ற பயிற்சிகள்ல ஈடுபடுத்தலாம். கேரம்போர்டு மற்றும் செஸ் போன்ற விளையாட்டுங்கள்ல ஒரு கைமட்டும் ஆக்டிவாவும் இன்னொரு கை வெட்டியாகவுமே அதிக நேரம் இருப்பதால அந்த விளையாட்டுக்கள குறைச்சிக்கனும். தோப்புக்கரணம் போடுறங்கறது ஒரு சூப்பரான ப்ரெயின் ஜிம் ஆக்டிவிட்டியாம்பா.
அதனாலதான் ஸ்கூல்ல எதுவும் குழந்தைகள் தப்பு செஞ்சிட்டாலும் இரண்டு காதையும் மாத்தி மாத்தி கையால பிடிச்சிகிட்டு தோப்பு கரணம் போட சொல்றாங்க. நாற்காலியில் உக்காந்து படிக்காம சம்மணக்கால் போட்டு உக்காந்து படிகிறது கூட ப்ரெயின் ஜிம் ஆக்டிவிட்டி தானாம். என்னது? இரண்டு கையையும் யூஸ் பண்ணி விளையாடுற ரம்மி, மங்காத்தா போன்ற விளையாட்டுக்கள்ல உங்க குழந்தைய ஈடுபடுத்தலாமான்னு கேக்குறீங்களா? சாரி சார் இந்த மாதிரி கேள்விகளுக்கெல்லாம் கம்பெனி பொறுப்பாகாது.
15. அப்புறம் goal setting ங்குறது குழந்தைகளுக்கு ரொம்ப முக்கியம். என்னடா software கம்பெனி சீனியர் மேனேஜர் மாதிரி பேசுறீங்க. பச்சை புள்ளைக்கு எதுக்குடா goal settingu ன்னு விவேக் பாணியில அடித்தொண்டையிலருந்து நீங்க கேக்குறது புரியிது. அடுத்த அஞ்சு வருஷத்துல நாம என்னவாக போறோம், எதுக்காக படிக்கிறோம், எதுக்காக ஒரு வேலைய செய்யிறோம்ங்கற clarity உள்ள புள்ளைங்க மற்ற குழந்தைங்கள விட எளிதா அந்த இலக்கை அடைஞ்சிட முடியும்.
16. ஒவ்வொரு குழந்தைக்கு இலக்குன்னு ஒண்ணு இருந்தா பத்தாது. அதை அடைய முடியும்ங்கற நம்பிக்கையை அடிக்கடி ஏற்படுத்தி தருவது பெற்றோரின் கடைமயாகும். அதாவது உங்க குழந்தை ஒரு singer ஆக ஆசைப்படுதுன்னா, ஒரு லீவ் நாள்ல எதாவது ஒரு ரெக்கார்டிங் ஸ்டூடியோவுக்கு அழைச்சிட்டு போயி இங்கதான் இன்னும் 10 வருஷத்துல நின்னு பாடப்போறன்னு காமிச்சி ஒரு தன்னம்பிக்கையை உண்டாக்கனும்.
17. ஒரு குழந்தையோட திறமையை சரியான சமயத்துல வெளிக்கொண்டு வந்து அத சரியாத திசையில பயணிக்க வைக்க வேண்டியது பெற்றோர்களோட மிக முக்கியமான ஒரு கடமை. சச்சின் நல்லா க்ரிக்கெட் விளையாடுறாருன்னு உணர்ந்து அவரோட பெற்றோர் அதுல முழுமையா ஈடுபடுத்தினதாலதான் நமக்கு இப்டி ஒரு ப்ளேயர் கெடைச்சாரு. இல்லை இல்லை படிக்காம என் புள்ளை எந்நேரமும் விளையாண்டுகிட்டு இருக்கான்ன்னு இவன எவள கஷ்டப்பட்டாவது டாக்டருக்கு தான் படிக்க வைக்கனும்னு அவர் நெனைச்சிருந்தா இன்னிக்கு சச்சின் இல்லை.
இதே கருத்த தான் "நண்பன்"ங்கற படத்தின் மூலமா 'சர்' டாக்டர் விஜய் அவர்கள் மக்களுக்கு கூறினார். என்னங்க? விஜய் மட்டும் ஏன் அவருக்கு வர்ற விஷயத்த விட்டுட்டு வராத நடிப்பு துறைக்கு வந்து நம்மள கஷ்டப்படுத்துறாருன்னு கேக்குறீங்களா? அவர் என்னங்க பண்ணுவாரு. அந்த வேலைய SAC செஞ்சிருக்கனும். அய்யயோ... சாரிங்னா... டாப்பிக் டைவர்ட் ஆயி போயிட்டுங்ணா.. மன்னிச்சிருங்ணா
18. உங்கள் குழந்தை நல்லா ஆங்கிலம் பேசனும்னு ஆசைப்படுறீங்களா? அப்போ கண்டிப்பா நீங்க உங்க வீட்டுல உங்கள் குழந்தை நல்லா வளர்ற வரைக்கும் ஆங்கிலத்துலயே தான் பேச முயற்சி பண்ணனும். ஏன்னா ஒரு குழந்தை வீட்டுல என்ன மொழி அதிகம் பேசுதோ அதே மொழியில தான் வெளியுலக கம்யூனிகேஷனுக்கும் அதிகம் பயன்படுத்துமாம். என்னங்க? நமக்கு ஆங்கிலம் தெரியலன்னா என்ன பண்றதா? கொஞ்சம் கொஞ்சம் செண்டன்ஸ எழதி மனப்பாடம் பண்ணி கோவா பட ஜெய் மாதிரி "டுர்ர்ர்ர்ர்ர்ர்.... மோட்டர் பைக்..... oh சாரி எச்ச உட்டுட்டேன்"ன்னு பேச முயற்சியாவது பண்ணுங்க.
19. குழந்தை அடிக்கடி கொட்டாவி விட்டுச்சின்னா மூளை ரொம்ப மந்தமா இருக்குன்னும் எந்த செயல்லயும் ஈடுபாடு இல்லாம இருக்குன்னும் அர்த்தம். அந்த மாதிரி சமயத்துல குழந்தைய தரையில படுக்க வச்சி ரெண்டு கால்களையும் ஒரு நாற்காலியில தூக்கி வச்சிட்டு படுக்க சொல்லலும் (தியேட்டர்ல படம் மொக்கையா இருந்தா முன்னாடி சீட்டுல கால தூக்கி மேல போட்டு நம்ம சீட்டுல கொஞ்சம் சாஞ்சா மாதிரி படுப்போமே அத தான் கொஞ்சம் வேற மாதிரி சொல்றாங்க) அதுமாதிரி செய்றதால மூளைக்கு அதிக ரத்தம் செல்வதோட சுறுசுறுப்பா இயங்குவதற்கு தேவையான ஆக்ஸிசனும் அதிகம் கிடைக்குதாம். அதுக்குன்னு புள்ளை நைட்டு 10 மணிக்கு கொட்டாவி விட்டா chair தூக்கி வச்சி மல்லாக்க படுக்க விட்டுடாதீங்க. பாவம் புள்ளைய தூங்க விடுங்க.
20. உங்க குழந்தைக்கு ஞாபக சத்தியையும் கற்பனை திறனையும் வளர்ப்பது ரொம்ப அவசியம். சும்ம அப்பப்போ நீங்க பொய்ட்டு வந்த எதாவது ஒரு இடத்தை மனசுல நினைச்சிக்க சொல்லி என்னென்ன தோணுதுன்னு சொல்ல சொல்லலாம். அதுமட்டும் இல்லாம கற்பனையாகவே ஒரு இடத்தை மனசுல நினைச்சிக்க சொல்லி அங்க என்ன என்ன இருக்கு தெரியிதுன்னு கேட்டு தெரிஞ்சிக்குங்க. இது உங்க குழந்தையோட க்ரியேட்டிவிட்டிய அதிகரிக்க உதவும்.
21. உங்க குழந்தைய பேச சொல்லி அத ஒரு ரெக்கார்டர்ல ரெக்காட் பண்ணி திரும்ப அத குழந்தைக்கே போட்டு காட்டனும். வார்த்தை உச்சரிப்புகள்ல உள்ள தவற கண்டுபிடிச்சி தாங்களாகவே சரி செஞ்சுக்க இது ரொம்ப உதவியா இருக்கும். தமிழாக இருந்தாலும் ஆங்கிலமாக இருந்தாலும் வார்த்தை உச்சரிப்பில் தெளிவு மிகவும் அவசியம்.
இதுக்கு மேல என்னால தம்கட்ட முடியாது. எதோ அந்த புத்தகத்துல இருந்த சில பாயிண்ட்ஸ ஓரளவு ஒழுங்கான வரிசையில எழுதிருக்கேன்னு நெனைக்கிறேன். ஒரு சில பேருக்காவது இது உபயோகமா இருந்தா சந்தோஷம்.

3 comments:
எனக்கு ரொம்ப பயன் உள்ளதாக இருந்தது நன்றி இதுபோல அறிய தகவல்களை தர வேண்டும் என கேட்டு கொள்கிறேன் சிவா
"டென்னிஸ் போன்ற நோகாக நோம்பு கும்புடுற விளையாட்டுகள் இதில் அடங்காது. "
யாருங்க, இது உங்களுக்கு உட்காந்து விளையாடுர விளையாட்டுனு சொல்லி கொடுத்தது.
@ Arif சாரி பாஸ். ச்செஸ்ன்னு போடுறதுக்கு பதில ஒரு ப்ளோவுல டென்னிஸ்னு போட்டுட்டேன்
Post a Comment