சமூக வலைத்தளங்கள்ல இப்பல்லாம் ஒரு விஷயத்த நாம நல்லா
நோட் பண்ணா தெரியும். ரெண்டு
வருஷத்துக்கு முன்னாடி அஜித் ஃபேன்ஸ் விஜய
ஓட்டுவாய்ங்க. விஜய் ஃபேன்ஸ் அஜித்த
அசிங்கப்படுத்துவாய்ங்க. ஒருத்தருக்கொருத்தர் போட்டியாமா... ஆனா இப்போ இது
ரொம்ப நடக்குறதில்ல...
"விஜய் அஜித்தும் சேந்து இருக்க மாதிரி ஃபோட்டோ" "இவருக்கு அவரு
present வாங்கி குடுத்தாரு... அவரு வீட்டுக்கு இவரு போனாரு..." "like
for விஜய் comment for அஜித்" "like tha picture for the two great
actors (?) “ அப்டின்னு எல்லாம் மாத்தி
மாத்தி ஏத்தி விட்டுக்குறாங்க. காரணம்
வேற ஒண்ணும் இல்லை. இவிங்க
ரெண்டு பேரும் மாத்தி மாத்தி
சண்டை போட்டு மொக்கை படங்களை
குடுத்துகிட்டு இருந்த கேப்புல சூர்யா
ரேஸ்ல கொஞ்சம் முன்னாடி போக
ஆரம்பிச்சிட்டாரு. அவ்ளோதான் இப்போ ரெண்டு குரூப்பும்
சேந்து சூர்யாவ மட்டம் தட்ட
ஆரம்பிச்சிட்டாய்ங்க. லிஸ்டுல அடுத்து இருக்கவரு
தனுஷ். சைலண்டா இருந்தாலும் ஆல்
இண்டியா லெவல்ல ரீச் ஆக
ஆரம்பிச்சிட்டாரு. அதானால தனுஷ் படங்களையும்
இப்போ கவுத்துவிட ஆரம்பிச்சிருக்காய்ங்க.
போன
வருஷம் தனுஷ் ஸ்ருதிஹாசன் நடிப்புலயும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்துலயும் வெளிவந்த
'3' படுதோல்வி அடைஞ்சது எல்லாருக்கும் ஞாபகம் இருக்கலாம். அதுக்கு மேல கேவலமா ஒரு படம்
எடுக்க முடியாதுன்னும், தியேட்டர்ல உக்காரவே முடியலன்னும் பலர் பலவித வதந்திகளை கெளப்பி
விட்டதனால அந்த படத்த ரொம்ப நாளா பாக்கவே இல்ல. மூணு மாசத்துக்கு
முன்னால வேற வழியே இல்லாம
"3" படத்த பாக்க வேண்டியதா போச்சி.
அடப்பாவிங்களா... அந்த படத்துக்கு என்னடா
கொறைச்சல்... நீங்க ஓலகப்படங்கள்னு ஏத்திவிட்ட எத்தனையோ
படங்களை கம்பேர் பண்ணும்போது அந்த
படம் எவ்ளோ நல்லா இருந்துச்சி...
ஒரு வேளை ஐஸ்வர்யா அந்த
படத்த எடுக்காம வேற யாராது அந்த
படத்த அத விட மொக்கையா
எடுத்துருந்தா கூட நம்மூர்ல ஒலகப்பட
லிஸ்டுல சேத்து
விட்டுருப்பாய்ங்க.
அதே மாதிரிதான் இப்போ மரியான் படத்துக்கும்
சில பேரு வேலைய காட்ட
ஆரம்பிச்சிருக்காய்ங்க.
"3" படத்துக்கு கெளப்பி விட்ட அதே
கதைய இதுக்கும் கெளப்பி விட்டு
கிட்டத்தட்ட படத்த ஒழிச்சேபுட்டாய்ங்க. ஆனா
உண்மையிலேயே படம் ரொம்பவே நல்லாருக்கு.
சொந்த ஊர்ல கெத்தா சுத்திகிட்டு இருக்க
ஹீரோ காதலிக்காக வெளிநாட்டு வேலைக்கு போயி தீவிரவாதிங்க கிட்ட சிக்கி சின்னாபின்னமாகி
ஊர் திரும்பும் கதை தான் இந்த மரியான்.
படத்த தூக்கி நிறுத்துறதே தனுஷ்
தான். ஒவ்வொரு சீன்லயும் நடிப்புல
நாசம் பண்ணிருக்காரு. தூத்துக்குடியில கடல் ராசாவா கெத்தா
இருக்கும் போதும் சரி சூடான்ல
தீவிரவாதிகள்கிட்ட மாட்டிக்கிட்டு கஷ்டப்படும் போதும் சரி அவர்
நடிப்புல காட்டியிருக்க variations லாம் கொடூரம். பட்டைய
கெளப்பிருக்காரு. தூத்துக்குடில வில்லன அடிச்சி வெளில தூக்கி போட்டுட்டு வீட்டுக்குள்ளருந்து
வெளில வரும்போது, அந்த ஸ்லோ மோஷன் சீனும் background மியூசிக்கும் சேந்து யப்பா... அப்படியே சூப்பர்ஸ்டாரயே
பாத்த மாதிரி இருந்துச்சி.
நண்பன்
செத்துக்க்கு தனுஷ் அழுதுகிட்டு இருக்கும்
போது பார்வதி மேனன்
வந்து பொண்ணு பாக்க வர்றத
பத்தி பேசும் போது கோவப்பட்டு
அடிச்சி மிதிக்கிற காட்சி செம. இன்னும்
கொஞ்ச நேரம் பாட்டு வர்ற
situation னும் ரியாக்சனும் தாறு மாறு. அதுக்கும் மேல தீவிரவாதிங்க சித்ரவதை பண்ணும் போது தனுஷ் காட்டுற ரியாக்சன்லாம் பயங்கரம்.
தீவிரவாதிங்க முன்னாடி இருக்கும்
போது கம்பெனிக்கு ஃபோன் பண்ற மாதிரி ரேணுகா மேனனுக்கு ஃபோன் பண்ணி "சார்.... Money சார்" ன்னு அழும்
காட்சிதான் உச்ச கட்டம். தனுஷ தவற வேற யாரும் அந்த ரியாக்சன்லாம் குடுக்க முடியாது.
படத்துல
கிட்டத்தட்ட ஒரு நாலஞ்சி கெட்டப்புல
வர்றாரு தனுஷ்.. அதுவும் படத்தோட
மொத சீன்ல சூடான் குழந்தைங்க
கூட தனுஷ் வெளையாடுற மாதிரி
ஒரு சீன் வருது. என்ன
ஒடம்புடா அது... நாலு எழும்புக்கு
t shirt போட்டு விட்ட மாதிரி இருந்துச்சி.
தூத்துக்குடி தனுஷ் அப்புடியே ஆப்போசிட்.
செம கெத்து... அதுமட்டும் இல்லாம தீவிர
வாதிங்க புடிச்சப்புறம் நாளுக்கு நாள் கொஞ்ச கொஞ்சமா
தனுஷோட கெட் அப் மாறிட்டே
வர்றதயும் செமயா எடுத்துருக்காங்க.
பசி மயக்கத்துல அடிபட்ட காலோட பாலைவனத்துல மண்டை காஞ்சி சுத்திகிட்டு இருக்கும் போது நாலு கற்பனை சிறுத்தைங்க வந்து மெரட்டுது. நல்ல க்ராஃபிக்ஸ். நாலும் சும்மா சுத்தி பாத்துட்டு கம்புகுச்சில கிழிஞ்ச பனியன மாட்டிவிட்ட மாதிரி இருக்க தனுஷ பாத்துட்டு போயிரும். "இவன கடிச்சா அரைகிலோ கறி கூட தேறாது... டைம் தான் வேஸ்ட்" ன்னு நெனைச்சி போயிருச்சோ என்னவோ.
பார்வதி மேனனும்
பட்டைய கெளப்பிருக்கு. சூப்பரான choice. தனுஷ லவ் பண்ணி
பின்னாடி சுத்திகிட்டு இருக்கும் போதும் சரி, தனுஷ்
தீவிரவாதிங்ககிட்ட மாட்டிகிட்டப்புறம் ஃபீல் பண்ணும் போதும்
சரி, சூப்பரான நடிப்பு. பூ படத்துல ரேணுகாவ
பாத்துட்டு இந்த படத்துல பாக்கும்
போது அந்தப் பொண்ணாவே இதுன்னு
ரெம்பவே ஸாக்கா இருக்கு. முதல் பாதி முழுசுமே பல கோட்டிங்குள அடிச்சி, 1000 watts லைட்ட மூஞ்சில
அடிச்சி பயங்கர பளபளப்பா காட்டிருக்காய்ங்க.
படத்துக்கு
இன்னொரு பெரிய பலம் கேமராமேன்.
வெளிநாட்டுக்காரன் வெளிநாட்டுக்காரன் தாய்ய.. தெறிக்க விட்டுருக்கான்.
காட்சிகள்ல இங்க்லீஷ் படங்களுக்கு இணையான தரம். பாட்டுங்கள்ளாம்
ஏற்கனவே தாறு மாறு ஹிட்.
சோனப்பரியா, இன்னுங் கொஞ்ச நேரம்
, கடல் ராசா, நெஞ்சே எழு
எல்லா பாட்டுமே சூப்பர்.
இயக்குனர்
பரத்பாலா... தனுஷுக்கு ஏத்த மாதிரி ஒரு கதைய செலெக்ட் பண்ணி நல்லாவே execute உம் பண்ணிருக்காரு.
ஆடுகளம் படத்துல தனுஷோட நடிப்ப பாத்து ரொம்ப புடிச்சி பொய்ட்டதா ஏற்கனவே பேட்டியெல்லாம்
குடுத்துருக்காரு. இந்த படமும் கிட்டத்தட்ட ஆடுகளத்தோட தரத்துலயே வந்துருக்கு.
சில மைனஸ்கள்:
முதல்பாதியில்
எந்த காட்சியுமே முகம் சுழிக்கிற மாதிரியோ
போர் அடிக்கிற மாதிரியோ இல்ல. ரெண்டாவது பாதில
ஒரு சில காட்சிகளின் நீளம்
மட்டுமே கொஞ்சம் நெளிய வைக்கிது.
1.
சூடான்ல தீவிரவாதிங்களா வர்ற சின்ன பசங்க சும்மா சும்மா ஜீப்ல வரும்போது கூட
"டம் டம்"ன்னு வானத்த பாத்து சுட்டுகிட்டே வர்றாங்க. அதுகூட பரவால அந்த ஆஃப்ரிகா
சாங்ல நைட் டான்ஸ் ஆடிக்கிட்டு இருக்கும் போது கூட ஒருத்தன் மேல பாத்து சுட்டுகிட்டு
இருப்பான்.
2. தனுஷும்
ஜெகனும் சாப்பாடே இல்லாம இருக்கும் போது
பணிமலர்கிட்ட ஜகனுக்கு சாப்பாடு போட சொல்ற மாதிரி
தனுஷ் சொல்ல ஜெகனும் பணிமலர்
சாப்பாடு போடுறமாதிரியே உக்காந்து காத்துலயே சாப்டுறாரு. இந்த சீன் செமயா
இருந்தாலும் டக்குன்னு முடிக்காம சாப்டு முடிச்சி பீடி
குடிக்கிற அளவுக்கு இழுத்தது கொஞ்சம் அதிகம்.
3.
நெஞ்சே எழு பாட்டுக்கு முன்னாடி தனுஷ் தப்பிச்சி பாலைவனத்துல சுத்துறது கொஞ்சம் நீளமான
காட்சி. MAN vs WILD பாக்குற ஃபீல் இருந்துச்சி. தப்பிச்சி வர்ற காட்சிய அப்டியே நெஞ்சே
எழு பாட்டுலயே merge பண்ணி
விட்டுருக்கலாம். பாட்டு வர்ற அந்த sequence படத்தோட வேகத்த கொறைச்சிடுது.
4. "டேய்
தம்பி என்ன இப்பவே கொண்ணுரு...
இல்லை பிண்ணாடி ரொம்ப வருத்தப்படுவ" ன்னு
அந்த பையன் கிட்ட டயலாக்
பேசிட்டு கடைசில அவன தண்ணிக்குள்ள
அமுக்கி கொல்றது கொஞ்சம் மொக்கையா
இருந்துச்சி.. அவன் Gun ன்னயே புடுங்கி அவன
அடிச்சி, சுட்டு ஒரு ரத்த
களரியா கொண்ணுருந்தா அந்த டயலாக் சொன்னதுக்கு
ஒரு மரியாதை இருந்துருக்கும்.
5.
தனுஷோட அம்மாவா வர்ற உமா ரியாஸ்... கொஞ்சம் கூட மூஞ்சி கேரக்டருக்கு செட் ஆகல. ஆனா
நல்லாதான் நடிச்சிருக்கு. அவங்க அம்மா (கமலா காமேஷ்) விட்டுப்போன அம்மா வேஷங்களை இனி
உமா ரியாஸ் சிறப்பா செய்ய போறாங்க போலருக்கு
ஒரு
சில சின்ன சின்ன மைனஸ் இருந்தா கூட மரியான் கண்டிப்பாக பார்க்க கூடிய தரமான படமே.
4 comments:
சிவா எனக்கு இந்த படம் ரொம்ப பிடிச்சு இருந்துச்சு 1ஸ்ட் ஆப் செம்ம
நானும் உங்கள மாதிரி தான் நெனச்சேன் ஏன்டா இந்த படத்த கூட கடிச்சு குதருறாங்க ன்னு
சரியான விமர்சனம்
நல்ல விமர்சனம்........
it is a good review. But, ungaloda andha isi comedy review idhula illa. Ungaluku dhanush pudikkuma? Bcaz, dhanush acting is overacting in this film, avaruku comedy come comercial padam dhan set aagum,this is my opinion only.
it is a good review. But, ungaloda andha isi comedy review idhula illa. Ungaluku dhanush pudikkuma? Bcaz, dhanush acting is overacting in this film, avaruku comedy come comercial padam dhan set aagum,this is my opinion only.
Post a Comment