ஒரு ஆக்சன் படம் எடுக்கனும்னா எவ்ளோ பணம் தேவப்படுது. எத்தனை செட்டு போட வேண்டியிருக்கு?எத்தனை காரை ஒடைக்க வேண்டியிருக்கு? அதுவும் நம்ம ஹரி சார் படம்னா போதும் கொறைஞ்சது ஒரு 20 கார காலி பண்ணிடுவாப்ள. சிங்கம் 2 படத்துல மட்டும் ஒரு 15 ஸ்கார்ப்பியோவ அடிச்சி ஒடைச்சிருக்காய்ங்க. ஆனா ஒரு பேய் படம் எடுக்க ஒரு பெரிய வீடும் ஒரு நல்ல மியூசிக் டைரக்டரும் கெடைச்சாலே போதும். பட்டைய கெளப்பிடுறாய்ங்க.
காலேஜ்ல படிக்கிறப்போ கொலை வெறித்தனமான படங்கள பாக்குறதே ரொம்ப பிடிக்கும். கிட்டத்தட்ட எல்லாருக்குமே அது மாதிரி தான். Saw, Hostel, Wrong turn, house of wax ன்னு அந்த மாதிரியான படங்களை அடுக்கிட்டே போகலாம். Saw va தவற மத்த மூணு படத்துலயும் வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டுன்னு டைரக்டா வெட்டி தாள்ளிகிட்டே இருப்பாய்ங்க. உதாரணமா wrong turn la ஒரு புள்ளை கொலைகாரய்ங்களுக்கு பயந்துகிட்டு மெதுவா மரத்துல ஏறி மேல உக்காந்துருக்கும். திடீர்னு அதுக்கு தெரியாம ஒருத்தன் வந்து ஒரு பெரிய கோடாரியாள அந்த புள்ளை வாயில வெட்டுவான். வாய்க்கு மேல உள்ள தலைப்பகுதி மட்டும் மரத்தோட இருக்க, வாய்க்கு கீழ உள்ள மொத்த ஒடம்பும் மெதுவா தனியா பிஞ்சி கீழ விழும். இந்த படங்கள்ல போட்டு தள்ளிகிட்டு போய்ட்டே இருப்பாய்ங்க.
ஆனா SAW ல ஒவ்வொருத்தனையும் ரசிச்சி ரசிச்சி டெக்னிக்கலா கொல்லுவாய்ங்க. ஒரு ஹெல்மெட்ல bomb ah வச்சி அத ஒரு பொண்ணூ தலையில மாட்டி லாக் பண்ணிட்டு அந்த சாவிய அவளோட husband ah முழுங்க வச்சிருவாய்ங்க. அந்த husband ku ஒரு மருந்து குடுத்து தலைக்கு கீழ உணர்ச்சியே இல்லாம பண்ணி படுக்க. இன்னும் ரெண்டு நிமிஷத்துல பாம் வெடிச்சிரும். அந்த பொண்ணு தப்பிக்கனும்னா அந்த ஹஸ்பண்ட் வயித்துல இருக்க சாவிய எடுத்து ஆவனும். வேற வழியே இல்ல. டக்குன்னு அவன் வயித்த கிழிச்சி அவனோட குடல உருவி உள்ளே உள்ள சாவிய தேடி எடுத்து தப்பிப்பா. இதுல ஒரு கொடுமை என்னனா அவ husband வயித்த கிழிச்சி எடுக்குறத அவன் பாத்துகிட்டே தான் இருப்பான். ஆனா ஒண்ணும் செய்ய முடியாது. இது ரொம்ப சின்ன சாம்பிள் தான். இன்னும் எக்கச்சக்கமான கொடூரம் இருக்கு இந்த படத்துல.
ஏன் இப்பிடி சம்பந்தமே இல்லாம ஒளரிட்டு இருக்கேன்னு தானே பாக்குறீங்க. வேற ஒண்ணும் இல்ல அந்த SAW, Insidious மற்றும் Dead Silence படங்களை எடுத்த தலைவர் James Wan தான் "The Conjuring" படத்தையும் எடுத்தது. கொடூர கொலை படங்கள்லருந்து கொடூர திகில் படங்களுக்கு நம்மாளு ஷிப்ட் ஆயிட்டாரு இப்போ. சும்மா சொல்லக்கூடாது. பட்டைய கெளப்புறாரு.
இங்க்லீஷ் பேய் படங்களோட வழக்கமான கதைதான் இதுக்கும். ஒரு வீட்டுக்கு 4 பெண் குழந்தைகளோட புதுசா ஒரு ஃபேமிலி குடி வர்றாங்க. அவங்க வீட்டு நாய் மட்டும் வீட்டுக்குள்ள வரவே வராம வீட்ட சுத்தி சுத்தி கொலைச்சிட்டே இருக்கு. மறுநாள் காலையில நாய காணும்னு எல்லாரும் தேட வீட்டுக்கு வெளில ஒரு இடத்துல செத்து கெடக்கு. கொஞ்சம் கொஞ்சம் வித்யாச வித்யாசமான சம்பவங்கள் நடக்குது. வீட்ல உள்ள எல்லா வாட்சும் 3.10 க்கு நின்னுடுது. அந்த வீட்டுக்காரம்மா உடம்பு பூர எதோ நெருப்பு சுட்ட மாதிரி சும்மாவே தழும்புங்க வர ஆரம்பிக்குது.
மொத்த குடும்பமும் வித்யாசமான சம்பவங்களால பயத்தோட உச்சிக்கு போனப்புறம், Exorcism பண்ற ரெண்டு பேர வீட்டுக்கு வரவழைச்சி, வீட்டுல உள்ள அந்த Evil ah வெரட்ட ட்ரை பண்றாங்க. ஏன் அந்த பேய் இவங்கள பயமுறுத்துது, வெரட்டுனாய்ங்களா இல்லையாங்குறத யங்கரமா மெரட்டுற சவுண்ட் எஃபெக்டோட சொல்லிருக்க படம் தான் the conjuring. முதல் ஒரு 20 நிமிஷம் கொஞ்சம் மெதுவா போற மாதிரி இருந்தாலும் ஒரு hide & seek வெளையாடுற சீன்லருந்து படம் மெரட்ட ஆரம்பிச்சிடுது. கடைசி அரைமணி நேரம் நான் ஸ்டாப் திகில்.
அதுவும் hide & seek வெளயாடும் போது திடீர்னு பேய் காதுகிட்ட வந்து கை தட்டுற சீன், தூங்கிட்டு இருக்க புள்ளைய கால புடிச்சி இழுக்குற சீன், அந்த சீக்ரெட் ரூமுக்கு போற சீன், திடீர்னு தலைக்கு பின்னாடி தூக்குல தொங்குற பொண்ணோட கால் தெரியிற சீன், மேல உள்ள போஸ்டர் சீன்னு non-stop ah பீதிய கெளப்பிகிட்டே இருந்தாய்ங்க.
சத்யம்la (S2) மொத அரைமணி நேரம் பேய் படம் பாக்க வந்த மாதிரியே இல்லாமா கோயம்பேடு மார்கெட்டுக்கு வந்த மாதிரி கச கசன்னு பேசிட்டே இருந்தாய்ங்க. அரைமணிநேரத்துக்கு அப்புறம் எல்லாரும் அப்புடியே பொத்துனாப்புல உக்காந்து பாக்க ஆரம்பிச்சிட்டாய்ங்க. அல்லு..... திகில் படம் ரசிப்பவர்கள் கண்டிப்பா பாருங்க. நீங்க நெனைக்கிறத விட அதிகமாவே பயமுறுத்துவாங்க.
இவரோட Dead silence படமும் இரு செமையான பேய் படம். பார்க்காதவங்க கண்டிப்பா பாருங்க. Insidous இன் ரெண்டாவது பாகமும் அடுத்த மாசம் ரிலீஸ் ஆகப்போகுது.

1 comment:
தல நீங்க ஆங்கில படமெல்லாம் பார்பிங்கலா ஓகே ஓகே எனக்கு தெரியாதே
Post a Comment