Sunday, August 11, 2013

தலைவா - ஆவாஸ் அஞ்சிங்!! ஆவாஸ் அஞ்சிங்!!!


Share/Bookmark
வழக்கமா ஒரு படத்துக்கு குழந்தைகள் கற்பிணி பெண்கள், இதய நோய் உள்ளவர்கள் மட்டும்  பார்ப்பதை தவிர்க்கவும்னு தான் வார்னிங் போடுவாய்ங்க. ஆனா இந்த படத்துக்கு "மணிரத்னம், கமலஹாசன் ஏ.ஆர்.முருகதாஸ், ஷங்கர் " போன்றோர் படம் பார்ப்பதை தவிர்க்கவும்னு போடனும் போல. ஏனா?  அட அவிங்க படத்த பாத்தாய்ங்கன்னா டைரக்டர் விஜய போட்டு தள்ளிட்டு கொலை கேஸூல உள்ள போயிருவாய்ங்க. டைரக்டர் விஜய் இருக்காரே அவரு பேசிகல்லாவே ரொம்ப நல்ல மனசு  படைச்சவரு. வேற மொழிகள்ல அவரு பாக்குற படங்கள் அவருக்கு புடிச்சிருந்துச்சின்னா உடனே அத தமிழ்ல எடுத்து  நமக்கும் போட்டு காட்டி சந்தோஷப்படுறவரு.

உதாரணமா பாத்தீங்கன்னா மலையாளத்துல ஒரு படம் அவருக்கு புடிச்சிருந்துச்சி. உடனே அத  கிரீடம்னு எடுத்து நமக்கு போட்டு காட்டுனாரு. டைட்டானிக் படம் அவருக்கு ரொம்ப புடிச்சிருந்துச்சி.  உடனே அதுகூட இன்னும் கொஞ்சம் மசாலாவ தடவி மதராசப்பட்டினமா எடுத்து நமக்கு போட்டு காட்டுனாரு. "I am sam ங்குற" படம் அவருக்கு ரொம்ப புடிச்சிருந்துச்சி. உடனே Sam முக்கே தெரியாம அத தமிழ்ல எடுத்து நமக்கு போட்டு காட்டி சந்தோசப்பட்டாரு. இதுங்களயாது மன்னிச்சிரலாம். அதர் கண்ட்ரி. அதர் ஸ்டேட்டு. ஆனா இப்போ என்ன பண்ண ஆரம்பிச்சிருக்காருன்னா அவரு பாத்து அவருக்கு புடிச்ச தமிழ் படங்களையே திரும்ப தமிழ்ல எடுத்து நமக்கு போட்டு காமிச்சிருக்காரு. அதுல என்ன ஒரு கொடுமைன்னா அவரு பாத்த அந்த படங்கள நாமலும் பாத்துருப்போம்ங்கற மேட்டர சுத்தமா மறந்துடுறாரு.

ஏண்டா டேய்.. நாயகன் படத்த நாங்க பாத்ததில்லை? ரெண்டு மாசத்துக்கு ஒரு தடவ கே டிவில போடுவாய்ங்கடா. வாரம் ஒரு தடவ சூப்பர் சீன்ஸுன்னு சன் டிவில போடுவாய்ங்கடா. அதுமட்டும் இல்லைடா. சிஸ்டம் வச்சிருக்க ஒவ்வொருத்தனும் Tamil movies ன்னு ஒரு folder இருந்தா அதுல நாயகன் இல்லாம இருக்காதுடா. அது எப்புடி கொஞ்சம் கூட வெக்கமே இல்லாம திரும்ப அதயே எடுத்து எங்களுக்கு போட்டுக்காட்டுற? நம்மூர்காரய்ங்கள பாத்தா அவ்வளவு கேனையங்களாவா இருக்கு. இதுக்கு முன்னாடி கூட கேப்டன் விஜய்காந்தோட ஆன்ஸ்ட் ராஜ் படத்த ரீமேக் பண்ணி தாண்டவம்னு பேர மட்டும் மாத்தி ரிலீஸ் பண்ண. எதோ போனா போகுதுன்னு விட்டாய்ங்க. இப்போ அடுத்து கமல் படமா? விட்டா அடுத்து பாட்ஷாவ விகரம வச்சி திரும்ப எடுத்து புதுப்படமா ரிலீஸ் பண்ணாலும் பண்ணுவ போலருக்கு.

என்னடா நாயகன் படம்னு சொல்றானே அந்த படம் மாதிரி நல்லாருக்குமோன்னு நெனைச்சிர போறீங்க. கொஞ்சம் மட்டும் தான் நாயகன். டைரக்டர் விஜய் கொஞ்சம் இந்த படத்துல  முன்னேறிட்டாரு. ஒரு படத்த ஆட்டைய போட்டாதானே  கண்டு புடிக்கிறாய்ங்கன்னு இதுல அவரு சமீபத்துல பாத்த ஒரு அஞ்சி ஆறு படங்கள கலந்து உட்டு அடிச்சிருக்காரு. ரஜினி தில்லு முல்லு  படத்துல தேங்காய் சீனிவாசன பாத்து ஒரு கேள்வி கேப்பாரு. சிந்து பைரவி ராகத்த ஸ்ரீரஞ்சனி ராகத்தோட மிக்ஸ் பண்ணி அடானா ராகத்த அரக்கோணதுல  புடிச்சி ஆதிதாளத்த தொடையில போட்டா கெடைக்கிற ராகம் கல்யாணியா காம்போதியா? கனகப் பிரியாவா சண்முகப் பிரியாவா இல்ல ஸ்ரீபிரியாவான்னு. 

அதே மாதிரியே இந்த படத்தையும் சொல்லலாம். நாயகன் படத்த தேவர் மகன் படத்தோட மிக்ஸ் பண்ணி ஆதிபகவன் படத்த இண்டர்வல்ல புடிச்சி துப்பாக்கியையும் சுந்தர பாண்டியனையும் செகண்ட் ஹாஃப்ல போட்டா  கெடைக்கிற படம் வேட்டைக்காரனா, காவலனா? சுறாவா... இல்லை தலைவா வா?  தலைவாவே தான்.

(தலைவா படம் பாக்குற ஐடியாவுல இருக்கவங்க இதுக்கு மேல படிக்க வேண்டாம்.  கொஞ்சம் உள்ள எறங்கி விளாவாரியா எழுதிருக்கேன். அதுனால படம் பாத்துட்டு வந்து படிங்க)

ட்ரெயிலர் பாத்தவங்களுக்கே புரிஞ்சிருக்கும். படத்தோட கதை என்னன்னு. வேலு நாயக்கராக சத்தியராஜ். அட பேரு மட்டும் வேறப்பா. நாயகன் முழுப்படத்துலயும் வர்ற நல்ல சீன் அத்தனையும்யே திரும்ப எடுத்து இதுல சொருகிருக்காய்ங்க. சரண்யாவ வில்லன்கள் சுட்டுக் கொல்ற சீன், ஜட்ஜ் வந்து வேலு நாயக்கர பாக்க வர்ற சீன் போலீஸ் வேலு நாயக்கர அரெஸ்ட் பண்ண வரும்போது ஒரு கெழவி வழியில மண்ணென்னைய ஊத்தி கொழுத்திகிட்டு நாயக்கரையா போயிருங்கன்னு  சொல்ற, கமல் கொல்ற போலீஸோட பையன் கடைசில கமல கொல்றது மாதிரியான சீன்  அத்தனையுமே அப்புடியே இதுலயும் வருது. டேய் மனசாட்சியே இல்லையாடா உங்களுக்கு.  மொத்தமா பாத்த ஒரு 10 நிமிஷம் தான் சத்யராஜ் வர்றாரு. அதுக்குள்ளேயே இத்தனையும்  எடுத்துருக்காய்ங்க. ஜனகராஜ் வேடத்தில் மனோபாலாவும் பொன்வன்னனும். வேலு நாயக்கர்  எப்படி அவரோட பொண்ணை வெளியூர்ல தங்கி படிக்க வக்கிறாரோ அதே மாதிரி சத்யராஜும் அவர் மகன ஆஸ்திரேலியாவுல தங்கி படிக்க வைக்கிறாரு.

ஏன் ஆஸ்திரேலியாவுல படிக்க வைக்கிறாரா? அட என்னங்க நீங்க? அதான் போன படத்துல டைரக்டர் விஜய் தாண்டவம் எடுக்குறோம்ங்கற பேர்ல லண்டன நல்லா சுத்தி பாத்துட்டாருல்ல. திரும்ப அங்கயே போனா போர் அடிக்காது. அவர் சுத்தி பாக்காத ஊர் ஆஸ்திரேலியா போல. அதான் அங்க ஹீரோ படிக்கிற மாதிரி வச்சிருக்காரு. சும்மா எல்லாத்துக்கும் கேள்வி கேப்பீங்க. சரி  கதை இப்போ ஆஸ்திரேலியாவுக்கு போயிருச்சா. அங்க நாயகன எடுக்க முடியாதுல்ல. அதுனால அப்புடியே பாய்ஸ் படத்துக்கு ஷிப்ட் ஆவுரோம். ஆஸ்திரேலியாவுல விஜய் வாட்டர் பாட்டில் சப்ளை பண்றவரு. சைடுல டான்ஸ் டீம் ஒண்ணு வச்சி ப்ராக்டிஸ் பண்ணிட்டு இருக்காரு. சில பல காரணங்களால ஒரு டான்ஸ் காம்படிஷன்ல கலந்துக்குற வாய்ப்பை அவங்க டீம் இழந்துட உடனே  அந்த செலெக்ஷன் ஆஃபீஸ் முன்னாடி உள்ள ரோட்டுல போய் பாய்ஸ் படத்துல "ப்ளீஸ் சார். ப்ளீஸ் சார்" பாட்டுப் பாடி சான்ஸ் வாங்குற மாதிரி ஒரு மொக்கை பாட்ட பாடி சான்ஸ் வாங்குறாங்க.

விஜய் & டீம் பேரு "தமிழ் பசங்க". அவரு ரோட்டுல ஆடுறத பாத்து மொத்த சிட்னியுமே "தமிழ் பசங்க" டான்ஸ்க்கு fan ஆயிருவாய்ங்க. இத்தனைக்கும் விஜய் வழக்கமா போடுற ஸ்பெஷல் ஸ்டெப்ஸ் கூட எதுவும் போட்டுருக்க மாட்டாரு. ரொம்ப மொக்கையான டான்ஸ் தான். அதுக்கே சிட்னி  ஃபுல்லா எங்க பாத்தாலும் தமிழ் பசங்க ஃபேன்ஸ். கருமமே போய் தொலைங்க. அடுத்து எண்டர் ஆவுது ஹீரோயின் அமலா பால். படத்துல டைரக்டர் விஜய விட மொக்கையான ஒரு  விஷயம் இருக்குன்னா அது அமலா பால் தான். கருமம் அதுவும் அது மூஞ்சும் வாயும். விஜய்க்கு போட வேண்டிய ஹீரோயினாங்க இது? கண்றாவியா இருக்கு. வசனம் பேசும் போது மொகரைய பாக்கவே முடியல.

அப்புறம் கொஞ்சம் மொக்கை காமெடி சந்தானத்தோட கொஞ்சம் கலக்கல் காமெடின்னு படம் மொத பாதில எதோ நகர்ந்து போயிட்டு இருக்கு. ஒரு கட்டத்துல காமெடிக்கு சீன் இல்லாம சாம் ஆண்டர்சன உள்ள கொண்டுவந்து போடுறாய்ங்க பாருங்க ஒரு மொக்கை. டேய் ஏண்டா சாவடிக்கீறீங்க. விஜய்க்கும் அமலா பாலுக்கும் எடையில லவ்வாயி சத்யராஜ பாத்து கல்யாணத்த பத்தி பேச விஜய் அமலா பால் அதோட அப்பா சுரேஷ் மூணு பேரும் இந்தியா வர... இப்போ போறோம் ஆதி பகவன் படத்துக்கு. ஆதிகபகவன் படத்தோட இண்டர்வல் ட்விஸ்ட அப்புடியே அலேக்கா கவ்வி இங்க போட்டுருக்காய்ங்க.ஊருக்கு வந்தா சத்யராஜ பாக்கவே முடியல. விஜய்க்கு அவங்க அப்பா என்ன தொழில் பண்ணாருன்னு கூட தெரியல. சத்யராஜ மீட் பண்ண விஜய ஒரு பத்து பேரு மாறி மாறி சந்து சந்தா அழைச்சிட்டு போவாய்ங்க. அதாவது அவரு இருக்க எடம் யாருக்கும் தெரியக் கூடாதாம். கடைசியா பாத்தா கடலோரமா ஒரு பில்டிங் மொட்டை மாடில எல்லாருக்கும் நல்லா தெரியிற மாதிரி சத்திராஜ் வந்து பேசிகிட்டு இருக்காரு. ஏண்டா டேய் இதுக்கு தான் இத்தனை சந்து மாறி மாறி வந்தீங்களாடா. நா எதோ பதுங்கு குழிக்குள்ளயோ இல்லை யாருக்கும் தெரியாத ஒரு எடத்துலயோ நம்மாளு பதுங்கியிருப்பாருன்னு நெனைச்சேன்.

சரி போதும் போதும். அடுத்த படத்துக்கு ஷிஃப்ட் ஆவுவோமா? அடுத்து அப்புடியே தேவர்மகன் படத்துக்குள்ள நுழையிறோம். சத்தியராஜ எதிரிங்க போட்டு தள்ளிட வேற வழியில்லாம வேலு நாயக்கர் பதவிய விஜய் எடுக்குறாரு. ஒரு கெட்டப் சேஞ்ச் ஒண்ணு பண்ணிருப்பாரு பாருங்க. தேவர்மகன்ல சிவாஜி எறந்தப்புறம் தாடியோட யூத்தா சின்னப்புள்ளை தனமா சுத்திகிட்டு இருந்த கமல் முறுக்கு மீசையெல்லாம் வச்சி வேஷ்டி சட்டையில வெளிய வருவாரு. அத அப்புடியே இங்க போடுறோம். நம்மாளு ஒரு டைட் ஜீன்ல ஒரு வெள்ளை சட்டைய மட்டும் இன் பண்ணிக்கிட்டு துப்பாக்கி படத்துல வந்த அந்த ஹேர் ஸ்டைலோட ஒரு கண்ணாடிய மாட்டிக்கிட்டு வெளிய வர்றாரு. டேய் இரு இரு... அந்த கண்ணாடிய நா எங்கயோ பாத்துருக்கேனே.. புடிச்சிட்டேன். அது தாண்டவம் படத்துல விக்ரம் யூஸ் பண்ண கண்ணாடி. ஏம்பா ஒரு புது கண்ணாடி வாங்கிக்க கூடாது. கண்ணு தெரியாதவன்கிட்ட போய் கண்ணாடிய புடுங்க்கிருக்காய்ங்க்க பாருங்க.

உடனே "தளபதி தளபதி... எங்கள் தளபதி தளபதி... தலைவா... சரிதம் எழுது தலைவா.... " ன்னு கும்பலா சேந்து ஒரு பாட்டு வேற. சரி பெருசா எதோ சரிதம் எழுதப்போறாய்ங்கன்னு பாத்தா டக்குன்னு தேவர்மகன் படத்துக்கு அப்புறம் துப்பாக்கி படத்துக்கு ஷிஃப்ட் ஆயிட்டாய்ங்க. துப்பாக்கி second half la வில்லன் எண்ட்ரி ஆயி நம்மாளுங்கள சுட்ட டீம் எதுன்னு கண்டுபிடிக்கிற அதே சீன் இங்கயும். மியூசிக் உட்பட. படம் எடுக்கும் போது "டேய் ரெண்டு மாசத்துக்கு முன்னாடி தானடா இதே சீன்ல நடிச்சேன்.. திரும்பவும் அதயே எடுக்குறீங்களேடா"ன்னு நம்மாளு பொலம்பிருப்பரு. துப்பாக்கிய கொஞ்ச நேரம் ஓட்டிட்டு அப்டியே க்ளைமாக்ஸ்ல சுந்தரபாண்டியன்ல பூந்தாரு பாருங்க டைரக்டரு... நா  அப்டியே ஸாக் ஆயிட்டேன். ஒரு படத்துக்கு காசு குடுத்தா இத்தனை படத்த   காட்டுறாய்ங்களேன்னு. எதயோ நோக்கி ஆரம்பிச்ச கதை சம்பந்தமே இல்லாம எங்கெங்கயோ போயி மொக்கையா முடியும்.


ஒரு தடவ மாதுங்கவுல ஒரு பெரிய கலவரம் நடக்குது. நம்மாளு கார்ல போயிட்டு இருக்காரு. பொன்வண்ணன் போன் பண்ணி "விஸ்வா... மாதுங்காவுல கலவரம் நடக்குது போய் என்ன்னு பாரு" ன்னு எதோ "அந்த தியேட்டர்ல என்ன படம் ஓடுதுன்னு பாருன்னு சொல்ற மாதிரி  சொல்றாரு. உடனே நம்மாளு அங்க போய் கலவரத்த அடக்குறாரு பாருங்க. நாலு பேர தூக்கி போட்டு மிதிக்கிறாரு. ரெண்டு கொழந்தைகளை உருண்டு பெரண்டு காப்பத்துறாரு. அவ்ளோதான். கலவரத்த அடக்கிட்டாரு. இதுல ஒரு பெரிய மிராக்கிள் என்னனா அவர் போட்டுருக்க வெள்ளை சட்டையில பொட்டு அழுக்கு கூட ஆவாம டக் இன் பண்ண சட்டை கொஞ்சம்கூட கலையாம அந்த கலவரத்த அடக்கிருவாரு. அதுக்கப்புறம் புல்லரிக்கிற மாதிரி ஒரு வசனம் பேசுவாரு பாருங்க.. "நீ யாருடா நா யாருடா... எல்லாருக்கும் ஒரே ரத்தம் தான்.... இந்தியன்" ஆ.. அய்யோ... இது எந்த விஜயகாந்த் படத்துலருந்து சுட்டாய்ங்கன்னு தெரியலையே

ஒரு தம்பி கூட தலைவா படத்த பாக்க முடியாததால தற்கொலை பண்ணிகிட்டாருன்னு கேள்விப்பட்டேன். யாருப்பா சொன்னது உன்னால தலைவா பாக்க முடியலன்னு. நீ ஏற்கனவே இந்த படத்த பாத்துட்ட. என்ன வேற வேற பேர்ல பாத்த. இப்போ அத ஒண்ணா எடுத்து போட்டுருக்காய்ங்க. அது தெரியாம அவசரப்பட்டுட்டியேப்பா...


பாட்டுல உருப்படியா இருந்ததே அந்த "வாங்கண்ணா வணக்கங்கண்ணா" பாட்டுதான். அத 1st half ல போட்டுருந்தலாவது கொஞ்சம் எடுபட்டுருக்கும். படம் நொந்து நூலாயி படுத்ததுக்கு அப்புறம் வருது. கொடுமை என்னன்னா விஜய் நாயக்கரையா ரேஞ்சுக்கு ஃபார்ம் ஆனதுக்கு அப்புறம் அந்த பாட்டு வருது. கருமம். அந்த கேரக்டருக்கும் அந்த பாட்டுக்கும் கொஞ்சம் கூட சம்பந்தமே இல்லை.

படத்துல மிகப்பெரிய காமெடியன் யாருன்னா நம்ம Y.G. மகேந்திரன் தான். படம் ஆரம்பிக்கும் போது சத்யராஜுக்கிட்ட வந்து "அண்ணா ஒரு நடிகர் ஒரு பொண்ண கற்பழிச்சிட்டாரு. என்னால  வாதாட மட்டும் தான் முடிஞ்சிது. சாட்சிங்க பத்தலைன்னு அவன் வெளிய வந்துட்டான். நீங்க தான் நியாத்த வழங்கனும்னு கேப்பாரு. சத்ய ராஜும் அந்த ஹீரோவ கொன்னுருவாரு. திரும்ப அதே மாதிரி விஜய் கிட்ட வந்து "ஒரு கேஸூக்கு தீர்ப்பு வந்துருக்கு... குற்றவாளி தப்பிச்சிடான். என்னால வாதாட மட்டும் தான் முடிஞ்சிது" ன்னு வந்து நிக்கிறாரு. ஏண்டா அப்ப ஒரு கேஸூ கூட நீ வாதாடி ஜெயிக்கவே மாட்ட போலருக்கு.

 இதுல "தலைவன்ங்குறது நாமளா தேடிப்போற விஷயம் இல்லை... தானா தேடி வர்ற விஷயம்னு டயலாக் வேற" டேய் இந்த டயலாக்க நீங்க டைட்டைல் வைக்கும் போது யோசிச்சி பாத்தீங்களாடா...  அதோட "உனக்கு இருக்க மூளைக்கு நீ அரசியல்ல பெரிய ஆளா வருவ போல" ன்னு சந்தானம் ஒரு டயலாக் அடிக்கிறாரு. "உங்களை வெளில எல்லாரும் அழைக்கிறாங்க. அவங்களுக்கு தலைவனா அழைக்கிறாங்க"ன்னு YGM மும் விஜய எக்கச்சக்கதுக்கு ஏத்தி விடுறாய்ங்க. தன்வினை தன்னைச் சுடும்ங்கறது இப்போ  தெரியிதாலே...

விஜய் தலைவனா மாறி மக்கள பாத்து வந்து கைய மெதுவா தூக்கி அசைக்க எனக்கு அப்புடியே படிக்காதவன் விவேக் ஞாபகம் தான் வந்துச்சி. "நா இதுவரைக்கும் உங்களுக்கு என்ன பண்ணிருக்கேன்." "ஒண்ணும் இல்லை" "அதே தான் அவங்களுக்கும்" ங்கற மாதிரி இருந்துச்சி.

விஜய்ய பாத்தா ரொம்ப பாவமா இருக்கு. அவரே தட்டுத் தடுமாறி ரொம்ப நாள போன பேரயெல்லாம் துப்பாக்கி ஹிட்டு மூலமா தூக்கி நிறுத்தி வச்சிருந்தாரு. இந்த டைரக்டர் விஜய் வந்து மொத்ததையும் காலி பண்ணி விட்டுருச்சி. நீங்கல்லாம் நல்லா வருவீங்க சார். கடந்த நாலு நாள்ல விஜய்ய FB la திரும்பவும் நம்பர் ஒன் எடத்துக்கு கொண்டு வந்துட்டாய்ங்க. அட நம்பர் 1 காமெடியனாக்கிடாய்ங்கன்னு சொல்ல வந்தேன்.

படத்துல உருப்படியான ரெண்டு மூணு விஷயங்கள்னு பாத்த ஒண்ணு BGM.. ஆனா அதுவும்  செகண்ட் ஹாஃப்ல துப்பாக்கி மீசிக்க அப்புடியே ஆட்டைய போட்டு போட்டாச்சி. இன்னொன்னு சந்தானத்தோட காமெடி. நிறைய சீன் செமையா சிரிக்க வைக்கிறாரு.

படத்தோட டைட்டில் கார்டு போடும் போது உலகத்தின் சிறந்த தலைவர்களை அனைவரையும்  வணங்குகிறோம்னு ஒவ்வொரு உலக தலைவர்கள் படங்களும் அவர்களோட சிறப்பும் background la இருக்க டைட்டில் ஓடுது. அதுல பாத்தா நெல்சன் மண்டேலா பேர போடுறாய்ங்க, தலாய் லாமா பேர போடுறாய்ங்க. சேகுவாரா பேர போடுறாய்ங்க... கடைசி வரைக்கும் இந்திய தலைவர்கள் யாருமே அந்த லிஸ்டுல வரல... ஒரு காந்தியோ இல்லை சுபாஷ் சந்திரபோஸோ... இந்த லட்சனத்துல இவுக சிட்னில போயி தமிழ் பசங்கன்னு தமிழ பரப்புறாய்ங்க. வெளங்கும்.


மொத்ததுல தலைவா... ஆவாஸ் அஞ்சின்... ஆவாஸ் அஞ்சின் !!!!

தாண்டவம் விமர்சனம் இங்கே
ஆவாஸ் அஞ்சிங் பற்றி தெரிந்து கொள்ள 
 http://www.youtube.com/watch?v=-o4sbXJDweI

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

24 comments:

Unknown said...

சிவா மலாய் பாஷை எல்லாம் கத்துகிட்டிங்க இந்த படத்த்துல்ல இருந்தா

Saran said...

enna boss-u utorrenta illa rajtamila? இந்தப்படம் தமிழ் நாட்ல ரிலீஸ் ஆயுடுச்சா?

முத்துசிவா said...

@சக்கர கட்டி

அது மலாய் தான். விவேக் ஒரு படத்துல சொல்லுவாரு. ஆவாஸ் அஞ்சிங்னா நாய்கள் ஜாக்ரதைன்னு அர்த்தமாம். ஒரு காமெடில வரும்.

முத்துசிவா said...

@Mariyappan sarawanan:

Bossu நா இப்போ டெல்லில இருக்கேன் அதான் பாத்துட்டேன்.

அப்புறம் இன்னொரு மேட்டர் நா தமிழ் படங்கள் தியேட்டர்ல மட்டுமே பார்ப்பேன். அதோட நா தியேட்டர்ல பாக்குற படத்துக்கு மட்டுமே review எழுதுவேன்.

Prem S said...

//விஜய் தலைவனா மாறி மக்கள பாத்து வந்து கைய மெதுவா தூக்கி அசைக்க எனக்கு அப்புடியே படிக்காதவன் விவேக் ஞாபகம் தான் வந்துச்சி. "நா இதுவரைக்கும் உங்களுக்கு என்ன பண்ணிருக்கேன்." "ஒண்ணும் இல்லை" "அதே தான் அவங்களுக்கும்" ங்கற மாதிரி இருந்துச்சி.
//


haa haa செம நக்கல்

கலக்கல் விமர்சனம் பல படம் பார்த்த திருப்தி கிடைக்குதுல

tamilan said...

i think ur vijay hater...

வெங்கட் நாகராஜ் said...

நல்ல விமர்சனம்.....

தில்லியில் இருக்கீங்களா?

Anonymous said...

அது...Awas..! Anjing! (நாய்கள்..!ஜாக்கிரதை! - அவாஸ், அஞ்ஜிங்)

Unknown said...

நீங்க சொன்ன அதே பீலிங்கோட பாத்து தொலைச்சம். ஹீரோவ
அழிக்குரதுக்குன்னு தனியா சம்பளம் குடுக்குறாங்களோ தெரியல. காந்திய டைட்டில்ல போட்ட்மாரி இருந்திச்சு. சுபாஷ் சந்திரபோசுதான் பாவம். படத்தில ரெண்டு பேரு ஹீரோவ ஏமாத்துறாங்க. நெசத்தில ஹீரோவ ஒருத்தரு ஏமாத்திருக்காரு - இயக்குனர். நாம பாத்ததுதான் நெசமான படமா அல்லது சென்சார்,அரசியல், இத்தியாதி இத்தியாதிகளுக்கு இரையான படமா என்ற டவுட்டோடும்...கடுப்போடும் சண்டே நாசமாகப்போனது!
இந்தப்படத்திலும் புத்தனையும் காந்தியையும் கம்பேர் பண்ணுறார்கள்.

Unknown said...

என்ன கொடும சார் இது...நண்டு கொழுத்தா வலையில் தங்காதும்பாங்க...ஸ்ஸ்ஸ் அபா!

கும்மாச்சி said...

அருமையான விமர்சனம்.ஆவாஸ் அஞ்சிங்

கும்மாச்சி said...

அருமையான விமர்சனம்.ஆவாஸ் அஞ்சிங்

Anonymous said...

நானும் பார்த்தேன். இந்த படம் விஜய் ரசிகன் மட்டும் பார்த்து ரசிப்பான். விஜய பிடிக்காதவங்களுக்கு அவரோட பில்ட் அப் காட்சிகள் சிரிப்பை வரவைக்கும். நடுநிலை மக்களுக்கு இந்த படம் பிடிக்குமான்னு தெரில. நான் சிரிச்சது -விஜய் முதல் தடவைய மக்களை பார்த்து அப்டி கைய கூப்பி கும்பிடுவார் பாருங்க ஏதோ இவர் ரொம்ப அப்பாவி மாதிரி மூஞ்ச வச்சிக்கிட்டு ஏசுநாதர் மாதிரி அப்பப்பா முடியல.


தமிழ்வாசி பிரகாஷ் said...

விமர்சனம் செம காண்டுல எழுதியிருகிங்க....

விமர்சன நடை ரசித்தேன் சிவா...

முத்துசிவா said...


@Shabarmathi

I guess u love to bitch more than encouraging and appreciating... Good character!!!.. A good review should have both positive and negative comments.. First develop your attitude and then post Blogs ... U Mr..N how dare u give space for comments.. I wonder!!!

ஏன் இந்த கமெண்ட்ட delete பண்ணிட்டீங்க?

//I guess u love to bitch more than encouraging and appreciating... Good character!!!.. //

30 கிலோ மீட்டர் வண்டிக்கு பெட்ரோல் போட்டுகிட்டு போயி, 3 மணி நேர படத்துக்கு 100 ரூவா பார்க்கிங்குக்கு குடுத்து, 150 ரூவாய்க்கு டிக்கெட் எடுத்து, 30 ரூபா பெப்சிய 70 ரூபாய்க்கு வாங்கி குடிச்சிட்டு இப்புடி ஒரு மொக்கை படத்த பாருங்க... வயிறு எரியும்.. அப்டி பாருங்க... appreciate பண்றீங்களான்னு பாக்கலாம். சும்மா படம் ரிலீசான நாலாவது நாளு ஒரு திருட்டு ப்ரிண்ட்ட வீட்டுல வாங்கி போட்டு பாட்டை எல்லாம் ரிமோட்ல ஓட்டிட்டு 3 மணி நேர படத்த 2 மணி நேரமா பாத்தா எல்லா படமும் உங்களுக்கு நல்லாருக்க மாதிரி தான் தெரியும்.

//A good review should have both positive and negative comments..//

positive things இருக்கும் போது கண்டிப்பா positive comment பண்ணுவேன்.

//how dare u give space for comments..// இப்டியெல்லாம் பயமுறுத்தாதீங்க.. அப்புறம் நா பயந்துட போறேன்.

முத்துசிவா said...

@வெங்கட் நாகராஜ்:

இந்த ஒரு வாரம் மட்டும் பாஸ்.

Ananda said...

தல கலக்கல் போங்க, அருமையான பதிவு, உங்களுக்கு துன்பத்திலும் நகைச்சுவை உணர்வு வருகிறது ;)

அந்த வக்கில் இரண்டாம் தடவை vijay idam வந்து சொல்லும் போது உங்க காமென்ட் தான் நினைவுக்கு வந்தது, அப்படி வாய் விட்டு சிரித்தேன், theatrela எல்லாரும் ஒரு மாதிரி பாக்குறாங்கப்பா!

படத்தை paarkkum போது காட்டிய உங்க porumaiyai, ஒரு விஜய் வெரியர் ketta kelvikku பதிலலிக்கும் pothum காட்டி பொருமை ஸாலி endru niroobithu viteergal

Anonymous said...

awas anjing!(malaysia)

Unknown said...

ஏலே உனக்கும் தமிழ் தெரியும் எனக்கும் தமிழ் தெரியும்.
விஜய் படம் தான் என்று சொல்லி இருந்தா நான் அப்பிடிக்கா போயிருப்பன். நீ இப்பிடிக்கா போயிருப்பா.

சந்துரு said...

ஹஹாஹ் செம ...சிறப்பான பதிவு

ram said...

Mudiyala boss.. thayavu senji intha mathiri padangalai encourage pannathinga tamil pepole.. appuram pinnadi feel pannathinga

Riyas said...

"வாங்கண்ணா வணக்கங்கண்ணா situvation basha rara ramaiya irunthu suddathu

pala sean bhasha vilairunthu eduthathu bhasha padam pakkaliya nenga

Padmanaban said...

"விஸ்வா... மாதுங்காவுல கலவரம் நடக்குது போய் என்ன்னு பாரு" ன்னு எதோ "அந்த தியேட்டர்ல என்ன படம் ஓடுதுன்னு பாருன்னு சொல்ற மாதிரி சொல்றாரு.

top of the top

Karthikeyan said...

ரெண்டு விஜய்க்கும் பொதுவா சொல்லிக்கிறது என்னான்னா - “சாத்தானே அப்பாலே போ”

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...