Friday, November 1, 2013

ரம்பம் பம் ஆ..ரம்பம்!!!


Share/Bookmark

நேத்து நடுராத்திரிலருந்து facebook la ஆரம்பம் படத்த பத்தி ஸ்டேட்டஸ் போட்டுகிட்டு இருக்காங்க. "On the way to Arrambam" "me @ arrambam" ன்னு என்னென்னவோ. ஆனா யாருமே படம் எப்டி இருக்குன்னே போடல. படம் எப்டி பாஸ்  இருக்கு? "thala rocking boss"   படம் எப்டிங்க இருக்கு? " தல தாறு மாறு மாஸ்"  அண்ணே படம் எப்டிண்ணே இருக்கு? "தல பட்டைய கெளப்பிருக்காருல்ல" அய்யோ படம் எப்டி பாஸ் இருக்கு? " தல மரண மாஸ்"  வக்காளி படம் எப்டிடா இருக்கு? "தல தெறிக்க விட்டுருக்காரு..... தல ராக்கிங்"  கடைசி வரைக்கும் தல ராக்கிங் தல ராக்கிங்னு சொல்றாய்ங்களே தவற படம் எப்டி இருக்குன்னு ஒருத்தரும் வாயே தொறக்கல.. அப்பவே லைட்டா ஒரு டவுட்டு...  டவுட்டு ஆனமாதிரியே கரெக்கிட்டா ஆயிப்போச்சி.

அஜித் ரசிகர்கள பொறுத்த அளவுல ஃபோட்டோக்கு போஸ் குடுக்குற மாதிரி நிக்கிறதும், BGM போட்டுக்கிட்டு ஸ்லோ மோஷன்ல நடந்து வர்றதும் மட்டும் தான் மாஸ்ஸுன்னு கணக்குல எடுத்துக்குறாங்க போல. எதாவது ஒரு பஞ்ச் சீன் வச்சப்புறம் இந்த மாதிரி ஸ்லோமோஷன்ல நடந்தா நல்லாருக்கும். ஆனா இங்க ஸ்லோமோஷன்ல நடக்குறது மட்டும் தான் பஞ்ச் சீனாவே இருக்கு. ஆனா இந்த அளவு கெத்தான ஒரு லுக் யாருக்குமே இருந்ததில்லைங்கறது கண்டிப்பான உண்மை. முதல் பாதில அஜித்த பாத்துகிட்டே இருக்கலாம் போலருக்கு. செம ஸ்டைலிஷ்... காஸ்டியூம்ஸூம் சரி.. செம.. ஆனா கெத்தா இருக்கவன் வெத்தா நின்னுகிட்டே இருந்தா என்ன ப்ரயோசனம்...

ஆரம்பதோட ஆரம்பத்துல அஜித் இண்ட்ரோவும் சரி "அட்டடடா ஆரம்பமே" பாட்டு ஆரம்பிக்கிறதும் அந்த பாட்டு எடுத்துருக்கதும் சரி செம சூப்பர். அதுக்கப்புறம் நம்ம ஆர்யாவ ஃபோகஸ் பண்றோம். இவ்வளவு கேவலமான லவ் ஃப்ளாஷ்பேக் இதுவரைக்கும் எவனுக்கும் வச்சிருக்கமாட்டாய்ங்க. நம்ம விஷ்ணுவர்தன் மட்டும் எப்புடி இப்டியெல்லாம் யோசிக்கிறாருன்னு தெரியல கருமம். அதுவும் அவருக்கு ஜோடி டாப்ஸி... கருமம்... ரெண்டும் சேந்து பண்ற லவ்வுல நமக்கு மண்டை வெடிச்சி போயிருது. அதவிட கொடுமை என் பக்கத்துல இருந்த ஒருத்தன் இதுங்க லவ்வ பாத்து "வாவ்.. வாவ்" ன்னு அடிக்கடி சொல்லிக்கிட்டே இருந்தான். கண்றாவி.. நீயெல்லாம் நல்ல படம் பாத்ததே இல்லையாடா... மிஸ்டர் ஆர்யா உங்க மொகரையையும் டாப்ஸி மொக்ரையையும் பாக்கவாடா நாங்க இப்டி 200 ரூவாய்க்கு டிக்கெட் எடுத்துக்கிட்டு வந்தோம்.. அஜித்த காமிங்கடா... நல்ல வேளை கொஞ்ச நேரத்துல நம்மாளும் வந்துட்டாரு.

முதல்பாதில வர்ற சீன்ஸ்லாம் நல்லாருக்குன்னு சொல்ல முடியாது. ஆனா அஜித் அந்த சீன்ல இருக்கதால வேற வழியே இல்ல. நல்லா இல்லைன்னாலும் நல்லா இருக்க மாதிரி மைண்டு செட் ஆயிக்குது.  ஒவ்வொரு ஷாட்லயும் வரைஞ்சி வச்ச படம் மாதிரி அவ்ளோ செமயா இருக்காரு. அதுவும் ஒரு சீன்ல ஒரு ப்ளாக் டிஷர்ட் போட்டுகிட்டு ஆர்ம்ஸ் தெரியிற மாதிரி இடுப்புல கைவச்சிட்டுநிப்பாரு பாருங்க.. ப்பா... சத்தியமா யாருக்கும் அந்த லுக் வரவே வராது. என்னடா யாருக்கும் வராது யாருக்கும் வராதுன்னு அப்பத்துலருந்து சொல்றேனேனு பாக்குறீங்களா? சரி வேற எந்த ஹீரோவையாது இந்த மாதிரி சுண்ணாம்பு சட்டி தலையோட நரைச்ச தாடியோட imagine பண்ணி பாருங்க.. பண்ணிபாத்தீங்களா? ரொம்ப கண்றாவியா இருக்குல்ல.. அதுக்கு தான் சொன்னேன். 

முதல்பாதி முழுக்க பெருசா எந்த ப்ரச்சனையும் தெரியல.. அஜித் நின்னா, திரும்புனா நடந்தா ஒரே சத்தம் தான் தியேட்டர்ல.  படம் ஓக்கே வாதான் போயிட்டு இருந்துச்சி. ஆனா செகண்ட் ஹாஃப் ஆரம்பிச்சோன்னா ஒரு ஃப்ளாஷ்பேக்க ஓப்பன் பண்ணாய்ங்க பாருங்க.. மூடி வச்ச பிரியாணிய மூணு நாள் கழிச்சி ஓப்பன் பண்ணா மாதிரி அப்புடி ஒரு பழைய வாடை. எத்தனை தடவ? எதோ விஷ்ணுவர்தன் ஒரு வருஷமா எடுக்குறாப்ளே.. நல்லா பண்ணிருப்பாப்ளேன்னு பாத்தா சிட்டிசன திரும்ப எடுக்கவாய்யா உன்னைய
கூப்டாய்ங்க? அதயும் ஒழுங்கா எடுத்துருக்கியா? ஃப்ளாஷ்பேக்கயும் அதுல வர்ற காரணங்களையும்  பாக்கும்போது இம்சை அரசன்ல வடிவேலு சொல்ற ஒரு டயலாக்குதான் ஞாபகம் வந்துச்சி. "ஒரு புறாவுக்கு போரா.. பெரிய அக்கப்போராக அல்லவா இருக்கிறது?"

மொதல்ல அஜித் எவ்வளவு சூப்பரா இருந்தாரோ அப்புடியே ஆப்போசிட் ஃப்ளாஷ்பேக்ல.. கண்றாவியா இருக்காரு. மீசை முழுக்க வழிச்சிட்டு வெள்ளை தலையோட பாக்கவே முடியில.. அசிங்கமா இருக்காரு. செம குண்டா வேற ஆயிட்டாரு. "மேலால வெடிக்குது வாடா" பாட்டோட visual சூப்பர். ஆனா  அதுல அஜித்துக்கு ஒரு டைட் டீ ஷர்ட்ட போட்டு விட்டு வேகமா வேற ஆடச்சொல்லிருக்காய்ங்க. அப்டியே அட்டகாசத்துல "தீபாவளி தல தீபாவளி" பாட்டுக்கு தல ஒரு ஸ்டெப்பு போடுவாரே..  அப்டியே கண்ணு முன்னால வந்துட்டு போச்சி.

ராணா டக்குபார்டி கொஞ்ச நேரம் வந்தாலும் ஆளு பெரிய சைஸ் விஷால் மாதிரி செமையா இருக்காரு.  ஏண்டா விஷாலே பெரிய சைஸ் தானே அதுல என்னடா பெரிய சைஸ் விஷாலுன்னு கேக்குறீங்களா? அட இவர பாருங்க.. பனை மரத்துல பாதி இருக்காரு. முதல் பாதிலயாது அஜித்த அப்பப்போ நடக்க விட்டு அப்பப்போ மீசிக் போட்டு ரசிகர்கள கத்த வச்சிகிட்டு இருந்தங்க. ரெண்டாவது பாதில அந்த மாதிரி சம்பவங்கள் கூட எதுவும் நடக்காததால ரசிகர்கள் என்ன பண்றதுன்னு தெரியாம உக்கார்ந்துருக்காங்க. ஒரு லட்சம் கோடி ஊழல், ஒரு லட்சத்தி 75 ஆயிரம் கோடி ஊழல்னு நாம பல ஊழல்கள கேட்டு பழகிட்டோம். அஜித் ஒருத்தர்கிட்ட போயி 200 கோடி ரூவா உழல பத்தி கொதிச்சி பேசிகிட்டு  இருக்கும் போது பக்கத்துலருந்து ஒருத்தரு "இன்னாப்பா 200 கோடிக்கு போய் இவ்ளொ பில்ட் அப் குடுத்து பேசிகிட்டு இருக்காரு" ங்குறாரு. நம்ம அரசியல் வாதிங்க நல்லா பழக்கி வச்சிருக்காங்க நம்மள.

ஒருத்தன கொல்லனும்னா சுட்டு தண்ணிக்குள்ள தூக்கி போடுவாய்ங்களா இல்லை தண்ணிக்குள்ள தூக்கி போட்டு சுடுவாய்ங்களா? நம்ம தமிழ்சினிமா வில்லன்கள் மட்டும் ஏன் இப்படி மங்கினிகளாவே சித்தரிக்கபடுறாய்ங்ன்னு தெரியில. ஹீரோவ தப்பிக்கனும்னே இதெல்லாம் பண்றாய்ங்க  ராஸ்கல்ஸ். முன்னாடி இருக்கவன பொட்டுன்னு நெத்தில  சுட்டு போடாம தோள் பட்டையில சுட்டு தண்ணிக்குள்ள தூக்கி போட்டு அப்புறமா சுடுறாய்ங்க.. இந்த கேம் நல்லாருக்குண்ணே... 

அதவிட செம்ம காமெடி ஆர்யா கேரக்டர். அவர் ஒரு செம்மையான hacker. சும்மா ஒரு லேப்டாப்ப வச்சிகிட்டு இன்னா வேணும்னாலும்  பண்ணுவாரு. இன்னா பண்ணுவாரா? ஸ்விஸ் பாங்க access பண்ணி எல்லா பணத்தையும் கொஞ்ச நேரத்துல ஆட்டைய போட்டுருவாரு. சும்ம இங்க உக்காந்து சிஸ்டம்ல ரெண்டு enter  ah மட்டும் தான் தட்டுவாரு.. அது உடனே connecting server ன்னு காட்டி பட்டுன்னு கனெக்ட் ஆயிரும். அது மட்டும் இல்லாம எந்த account லருந்து எந்த account க்கு பணம் transfer ஆயிருக்குன்னு world map ல graph lam வேற போட்டு காமிக்கும். அடேங்கப்பா… பலே பலே… 

அதுவும் க்ளைமாக்ஸ் வர்றதுக்குள்ள போதும் போதும்னு ஆயிடுது. அஜித்த எப்புடி ஸ்டைலா காட்டலாம்னு யோசிச்ச விஷ்ணுவர்தன் அதுல கொஞ்ச நேரத்தயாவது கதைய எப்புடி நல்லா எழுதலாம்னு யோசிச்சிருக்கலாம். விஷ்ணுவர்தன் மேல ஒரு தனி மரியாதை வச்சிருந்தேன். பொதுவா மொத படம் ஹிட் ஆயிட்டா அடுத்த படம் கண்டிப்ப அதே பார்முலால தான் எடுக்க பாப்பாங்க. ஆனா அறிந்தும் அறியாமலும் ஹிட்டுக்கு அப்புறம் பட்டியன்னு டோட்டல வித்யாசமான ஒரு படத்த குடுத்துருந்தாரு. அதுக்கப்புறம் வந்த சர்வமும் சரி, தெலுகு பஞ்சாவும் சரி அதே போல தான். ஒவ்வொன்னும் வேற வேற மாதிரி குடுத்துருந்தாரு. ஆனா இந்த தடவ ஏன் அருத பழசான ஒரு கதைய எடுத்துகிட்டார்னு தெரியல். 

அஜித் ஆர்யா மட்டும் இல்லாம கிஷோர் , அதுல் குல்கர்னி, ராணா டகுபார்டி ன்னு நிறைய கெத்தான ஆக்டருங்க. ஆனா என்ன ஆக்டருங்கள மட்டும் எடுத்து வச்சி என்ன பண்றது. கதை நல்லா இருந்தாதானே எதாது வேலைக்கு ஆவும். கிஷோர முதல் சீன்ல பாத்ததுமே செம சந்தோஷமா இருந்துச்சி.. சமீபத்துல எனக்கு ரொம்ப புடிச்ச ஆக்டருங்கள்ல அவரும் ஒருத்தரு. ஆனா படம் முடியும் போது கிஷோர இப்புடி டம்மி பீஸாக்கிட்டாய்ங்களேன்னு ரொம்ப வருத்தமா இருந்துச்சி. நயன் தாரா ஓக்கே.. டாப்ஸி கண்றாவி.

யுவனோட  BGM 1st half la விசில் சத்தத்தால சுத்தமா கேக்கவே இல்லை. செகண்ட் ஹாஃப்ல ஒரு தீம் சூப்பரா போட்டுருந்தாரு. 3 பாட்டு ஓக்கே. ரொம்ப நாள் கழிச்சி "ஹரே ராமா ஹரே கிரிஷ்ணா" ன்னு ஒரு சூப்பரான பாட்டு போட்டுருந்தாரு. கடைசில அத படத்துலயே காணும். கடைசில வர்ற  stylish தமிழச்சி பாட்டுக்கு பதிலா அத போட்டுருக்கலாம்.

இன்னும் ஒரு நாலு நாள்ல "தல தூள் டக்கருடோய்" ன்னு கத்துற சத்தமெல்லாம் கம்மி ஆயிடும். அப்போ தான் படம் உண்மையா எப்டி இருக்குன்னு எல்லாரும் பாப்பாங்க. அதுக்கப்புறம் படம் ரொம்ப நாள் தாங்காது.

யாருப்பா அது ஸ்டெரெய்ட்டா scroll பண்ணி கடைசி பாராவ படிக்கிறது? போங்க பாஸ் போய் மேலருந்து வாங்க.. :-)

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

26 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

இனிய தீப ஒளித் திருநாள் நல்வாழ்த்துக்கள்...!

Dhilipan said...

You got a nice writing style.....
Happy Diwali

Dhilipan said...

You got a nice writing style.....
Happy Diwali

Anonymous said...

great writing bro! I specially love ur works on Mysskin! More mysskin pls...

ansii said...

டே மூதேவி நீயெல்லாம் விமர்சனம் எழுதி ஆரம்பம் வெற்றியை தடுக்க முடியாது ........
தல டா.......

முத்துசிவா said...

ஆமா நா மூதேவி... இவரு மூஞ்சில தெய்வீக கலை அப்டியே தாறு மாறா தாண்டவம் ஆடுது.. ஏண்டா மெண்டல்.. என்ன சொல்றாய்ங்கன்னு பாக்காமயே சொம்மா தலடா கைடா கால்றான்னு கத்திகிட்டு.. சீ.. ப்பே..

Samuel Johnson said...

நான் தான் பா :-)
(கடைசி பாரா)

Samuel Johnson said...
This comment has been removed by the author.
Unknown said...

சிவா எப்பவும் போல கலக்கள் விமர்சனம்

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

முத்துசிவா said...

@திண்டுக்கல் தனபாலன்

தீபாவளி வாழ்த்துக்கள் தல!!!

முத்துசிவா said...

@dhilipan:

thanks boss

முத்துசிவா said...

//great writing bro! I specially love ur works on Mysskin! More mysskin pls...//

More mysskin ah ? he he.. முயற்சி பண்றேன் :-)

முத்துசிவா said...

@Samuel Johnson:

நீங்க தானா அது? உங்களத்தான் ரொம்ப நாளா தேடிக்கிட்டு இருக்கேன் :-)

முத்துசிவா said...

@சக்கர கட்டி :

தீபாவளி வாழ்த்துக்கள் நண்பா!!

Unknown said...

நீங்கள் மட்டும் தான் படத்துக்கு தெளிவான உண்மையான விமர்சனம் எழுதியிருகிறீர்கள் மற்றவர்கள் எல்லாம் என்னவோ படம் தாறுமாறு என்று எழுதுகிறார்கள் எனக்கும் படத்தில் அஜித்தை தவிர ஒன்றும் பிடிக்கவில்லை.

Unknown said...

நீங்கள் மட்டும் தான் படத்துக்கு தெளிவான உண்மையான விமர்சனம் எழுதியிருகிறீர்கள் மற்றவர்கள் எல்லாம் என்னவோ படம் தாறுமாறு என்று எழுதுகிறார்கள் எனக்கும் படத்தில் அஜித்தை தவிர ஒன்றும் பிடிக்கவில்லை.

Unknown said...

Boss hemant bullet proof scam evlo periya matter...atha poi satharanama solitinga....nobody in bolly have guts to use this script......this movie is much better than many masala commercials of some mass heros ...Ofcourse everyone have their own view of movie....but ur view is always against ajith :) .........waiting ur review for all in all alaraja

Unknown said...

Boss hemant bulletproof scam evlo periya scam atha poi ivlo satharanama solitinga....no one in bolly have gutd to touch this script...I was in mumbai that time. So I know wel how much sensitive this issue in north media......this movie is much better than many masala commercial movies infact better than many ajith movie itself......ofcourse everyone have their own view in movie.......but ur always against ajith movies it seems....
.waiting for ur review on all in all alaraja...

Anonymous said...

good review...thala style mattum nalla irunthathu...

முத்துசிவா said...

@Raja RAjan:

Bullet proof scam பெரிய மேட்டரா இருக்கலாம் பாஸ்.. ஆனா அந்த impact படத்துல கொண்டு வரவே இல்லை... ஒரு வேளை ராணா கூட இன்னும் நிறைய பேர் அந்த ஜாக்கெட்னால இறந்துட்டாங்குற மாதிரி இருந்தா கூட ஓரளவு பெரிய மேட்டரா தெரிஞ்சிருக்கும்.

நா அஜித்துக்கு against lam இல்ல பாஸ்... ஒரு படம் நல்லா இல்லைன்னு சொன்னா அடுத்த படம் கண்டிப்பா நல்லா இருக்குன்னுலாம் என்னால சொல்ல முடியாது.. பத்து படம் நல்லா இல்லைன்னாலும் நல்லா இல்லைன்னு தான் சொல்லுவேன்.. வீரமாவது நல்லா இருக்கும்னு எதிர்பாப்போம்.. :-)

Anonymous said...

பாஸ் விமர்சனம் முழுவதும் நீங்கள் அஜித் மீது வச்சிருக்கும் வெறுப்பு தெரிகிறது அவருக்கு ஏன் நடனம் நன்றாக வராது என்பது எல்லாருக்கும் தெரியும் மற்றவர்கள் 5நிமிடங்கள் ஆடி வாங்கும் கைதட்டைல வெறும் simple look ல் பெறுகிறார்.....

Anonymous said...

நடிக்க தெரியாதவன் எல்லாம் நான்தான் அடுத்த முதல்வர் எங்கப்பாதான் அடுத்த பாரதபிரதமர் என்கிறான்....நடனம் தெரியாது என்பது பெரிய விஷயம் இல்ல....of course யாரும் அஜித்டம் நடனம் எதிர்பார்ப்பது இல்லை அப்புறம் வீரம் பட release ku பிறகு
வீரம் பட விமர்சனத்துலயும் நடனம் ஆட வரல template ah...எழுதாதிங்க

Raja said...

ok i agree....ada enna bosss i was eagerly waiting for AAA review from u....kadaisila poga matanu solitingala.....

Raja said...

okkkk....ada ponga bossss i was eagerly waiting for ur review on AAA. ipdi poga matanu solli enna mari "Muthusiva" fans lam upset panitinga.......

முத்துசிவா said...

பாஸூ... அஜித்துக்கு நடனமாட தெரியாதுங்கறத நா ஒரு குறையாவே சொல்லலியே.. முதல் பாட்டுல சூப்பரா இருக்குன்னு தானே எழுதிருக்கேன். மேலால வெடிக்குது வாடா பாட்டுல காஸ்டியூம்ஸ் சரியில்லை. அந்த மூவ்மெண்ட் நல்லா இல்லை... அதுனால அவருக்கு டான்ஸ் ஆடதெரியாதுன்னு அர்த்தம் இல்லை. அவர்க்கு ஏத்தா மாதிரி நடனம் அமைக்க நடனக் கலைஞர்களுக்கு தெரியலைன்னு வேணா சொல்லிக்கலாம்.

பாலாஜி said...

2013 இன் மிக பெரிய வெற்றி படம்!!!!

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...