Friday, November 15, 2013

வில்லா - எடுத்துருக்கலாம் இன்னும் கொஞ்சம் நல்லா!!!


Share/Bookmark
 ”இந்த உலகம் பயப்படுறதுக்கு என்னிக்குமே தயாரா இருக்கு. பயமுறுத்துறதுக்கு தான் ஒரு ஆள்  தேவே” என்னடா எங்கயோ கேட்ட மாதிரி இருக்குன்னு யோசிக்கிறீங்களா? எங்கயும் இல்லை. வேட்டைக்காரன் படத்துல வர்ற ஒரு டயலாக்தான் இது. இதுல எவ்வளோ உண்மை இருக்குன்னு நேத்து வில்லாவுக்கு போகும் போது தான் தெரிஞ்சிது.  நிறைய பேர் டிக்கெட் எடுத்து பயப்படுறதுக்கு காத்திருந்தாங்க. பெரிய ஆச்சர்யம் என்னன்னா நேத்து நைட்டு ரெண்டாவது ஷோ கூட ஃபுல்லு. பெரிய ஹீரோவோ டைரக்டரோ இல்லாத ஒரு படத்துக்கு இவ்வளவு வரவேற்பு  இருக்குதுன்னா முதல் காரணம் பீட்சா வோட பெரிய வெற்றிதான். வில்லாவுக்கு வர்ற கூட்டத்த பாத்து கார்த்திக் சுப்புராஜ் திமிரா காலர தூக்கி விட்டுக்கலாம். ஏன்னா இந்த மொத்த கூட்டமும் அவர் கணக்குல தான் சேரும்.

அதுக்கும் மேல இந்த மாதிரி திகில் படங்கள் நம்மூர்ல ஏனோ அதிக அளவுல வர்றதே இல்லை.  வருஷத்துக்கு கொறைஞ்சது 5 ஆங்கில திகில் படமாவது ரிலீஸ் ஆகுது. ஆனா கடந்த 5 வருஷத்துலயும் சேத்து பாத்தாலே நம்மூர்ல நல்ல திகில் படங்கள்னு சொல்லிக்கிற அளவுல வந்தது ரெண்டு மூணு தான் இருக்கும். காமெடிப்படங்கள் எடுக்குறேன்னு ரெண்டு வருஷமா நம்மாளுங்க போட்டு அறுத்த அறுவையில எப்படா வேற மாதிரி படம் வரும்னு காத்துட்டு இருந்து வந்த கூட்டம் தான் அது.

தியேட்டருக்குள்ள நுழையும்போதே காதை பொளக்குற அளவு விசில் சத்தமும் கூச்சலும். என்னடா தெரியாம ஆரம்பம் படம் ஓடுற தியேட்டருக்குள்ள எதுவும் வந்துட்டோமான்னு ஒரே டவுட்டாயிப்போச்சி. அப்புறம் உள்ள போயி பாத்தா தான் தெரியிது.. அட நம்ம முகேஷு... ஒரே சீன்ல நடிச்சி ஒலக ஃபேமஸ் ஆனவன்னா அது நீ மட்டும் தான்யா.. ஒருத்தன திரும்ப திரும்ப பாக்க பாக்க யாருக்கு  வேணாலும் நம்மாளுங்க விசிலடிப்பாங்கங்கறதுக்கு முகேஷ், பவர் ஸ்டாரு, சாம் மார்த்தாண்டன்லாம்
ஒரு நல்ல உதாரணம்.

பீட்சா 2 ன்னு போட்டது இந்த படத்துக்கு எந்த அளவு ப்ளஸ் பாயிண்டோ அதே அளவு மைனஸ் பாயிண்டும் கூட. வந்த கூட்டம் முழுக்க படம் பீட்சா அளவுக்கு நம்மள பயமுறுத்தும்ங்கற மைண்ட் செட்டோட வந்தவங்க. ஆனா உணமை என்னன்னா எந்த இடத்திலும் வில்லா நம்மள பயமுறுத்தவே இல்லை. இப்போ பயமுறுத்துவாங்க அப்போ பயமுறுத்துவாங்கன்னு எல்லாம் சலிச்சி உக்காரும்போது இண்டர்வல் வந்துடுது.

சிலர் சொன்னாங்க. இது horror படம் இல்லை பயமுறுத்துறதுக்கு. இது ஒரு த்ரில்லர் படம்னு. இருக்கட்டும்.  யாவரும் நலம் படத்தை எடுத்துக்குவோம். அது பேய் படம் தான். ஆனா horror படம் இல்லை.  மூஞ்சி கிளிஞ்சி தொங்குற மாதிரி எந்த பேயும் நம்மள வந்து பயமுறுத்தல. திடுக் திடுக்குன்னு தூக்கி போடுற மாதிரி மியூசிக் இல்லை. குறிப்பா இருட்டுல நடக்குற மாதிரியான காட்சிகள் அதிகமா இல்லை. இருந்தாலும் ஆரம்பத்துலருந்து கடைசி வரைக்கும் நம்மள சீட்டோட நுனில நகத்த கடிச்சிட்டு  உக்கார வச்சாய்ங்கல்ல அந்த மாதிரி ஒரு impact ah இந்த படம் கொண்டு வர தவறிடுச்சி.

ஆனா பீட்சா படத்தோட கதைய விட பல மடங்கு சூப்பரான சுவாரஸ்யமான ஒரு கதை. ஆனா அத execute பண்ணது தான் சரியில்லை. சும்மா எதாவது ஒரு ஆங்கில பேய் படத்த எடுத்துக்குவோம். பெருசா எந்த கதையும் இருக்காது. புதுசா ஒரு ஃபேமில ஒரு வீட்டுக்கு குடி போவாங்க. அந்த  வீட்டுல ஒரு பேய் இருக்கும். அவ்வளவுதான். ஒரே ஒரு வீட்ட வச்சிகிட்டு ரத்த வாந்தி எடுக்குற அளவுக்கு நம்மள பயமுறுத்துவாய்ங்க. ஆனா இந்த  படத்துல ஒரு சூப்பரான ஒரு தீம புடிச்சிருக்காங்க. பயமுறுத்துவதற்கான காட்சிகளும், லொக்காஷன்களும் இருந்தும் அத செய்யல.

ஆனா படம் நல்லா இல்லைன்னு கண்டிப்பா சொல்லிட முடியாது. எதிர்பார்ப்பை பூர்த்தி பண்ணலைன்னு தான் சொல்லனும். பீட்சா பேனர் இல்லாம தனியா வந்திருந்தா கூட இந்த படம் நல்ல ரீச் ஆயிருக்கும். மொத்தமா படத்துல உள்ள கேரக்டர்கள எண்ணுனா பத்த தாண்டாது. கேரக்டர் செலக்‌ஷனும் சூப்பர். ஹீரோ ஹீரோயினும் சூப்பர். இவங்க ரெண்டு பேர் நடிப்புலயும் எந்த கொறையுமே சொல்ல முடியாது. ஆனா சில துணை கதாபாத்திரங்கள வர்றவங்களோட ரோல் ஓண்ணு ரெண்டு கவனமில்லாத
வசனங்களால க்ளாரிட்டி இல்லாம போயிடுது.

குறிப்பா ஹீரோவோட ஃப்ரண்டா வர்ற கேரக்டர் அப்புறம் இன்னொரு சயிண்டிஃபிக் பேயோட்டி கேரக்டர். பேயோட்ட வந்துட்டு அவரு எடுத்துட்டு வந்துருக்க ஒவ்வொரு பொருளுக்கும்  அறிவியல் காரணங்கள சொல்லும் போது எரிச்சலா தான் வருது. உணமையாவே இருந்தாலும் அந்த இடத்துல அத கேக்குறதுக்கு என்னவோ புடிக்கல. பீட்சா படம் கார்த்திக் சுப்புராஜுக்கு முதல் படம்னாலும்  முதல் படம்ங்கற சுவடே தெரியாம சூப்பரா பண்ணிருந்தாரு. ஆனா தீபன் சக்கரவர்த்திகிட்ட ஒருசில காட்சிகள்ல அப்பட்டமா தெரியிது.

முதல் ஒண்ணே முக்கால் மணி நேரத்துல விட்டத கடைசி 15 நிமிஷத்துல புடிக்கிறாரு டைரக்டர்.  ஒவ்வொண்ணா ட்விஸ்ட அவுக்க அவுக்க..ப்ப்ப்ப்ப்ப்ப்பாஆஆ.... என்னா கதைடா... சூப்பர்ன்னு தோணுச்சி. என்னவோ தெரியல படம் முடிஞ்சி வீட்டுக்கு வந்தப்புறம் கூட அந்த க்ளைமாக்ஸ் என்னவோ பண்ணிட்டே இருந்துச்சி.. இவ்வளவு நல்ல கதைய இன்னும் நல்லா எடுக்காம விட்டுட்டாய்ங்களேன்னு கடுப்பாவும் இருந்துச்சி.

அதுவும் இல்லாம மியூசிக் இன்னொரு ப்ளஸ்.. படத்தோட ஆரம்பத்துல background la வர்ற “காணும் ஞானம்”ங்கற பாட்டு உண்மையிலயே கேக்கும் போது எதோ செய்யுது. அப்புறம் அந்த ப்யானோ தீமும் சூப்பர். படத்துக்கு இன்னொரு பெரிய விளம்பரமான நாசரை ஒரிரு ஒரு காட்சியில் மட்டும் அதுவும் அவருடைய லெவலுக்கு இல்லாம இருந்தது இன்னொரு சின்ன ஏமாற்றம்.

பீட்சா 2 ன்னு பெயர் போட்டதாலேயே இவ்வளவு ஏமாற்றமுமே தவிற வில்லா என்ற படம் சூப்பரான ஒரு கதையுடனும் சுமாரான திரைக்கதையுடனும், ஒருமுறை பார்க்க கூடிய ஒரு தரத்திலும் உருவாக்கப்பட்ட  ஒரு படமே. கடைசி பாரா படிப்பவர்களின் கவனத்திற்கு. படத்தோட  கதைய நா கொஞ்சம் கூட சொல்லல.  அதனால தைரியமா படிக்கலாம்.



பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

7 comments:

Unknown said...

உங்களிடம் இருந்து பட விமர்சனம் என்றதும் ஆவலுடன் வந்தேன்.
வழக்கமான விமர்சனம் மாதிரி இது இல்லை.வழக்கமான பஞ்ச் இதில் இல்லை.

முத்துசிவா said...

சில நல்ல படங்களுக்கும் வித்யாசமான முயற்சிகளுக்கும் கொஞ்சம் மதிப்பு குடுத்து தானே ஆகனும் :-)

Anonymous said...

வணக்கம்
படவிமர்சனம் நன்று வாழ்த்துக்கள்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

கரந்தை ஜெயக்குமார் said...

விமர்சனம் அருமை

Unknown said...

என்னங்க எல்லாருமே இப்படி சொன்ன அப்பறம் படம் இன்னைக்கு பார்கனும்னு முடிவு பண்ண நாங்கலாம் என்ன பண்றது?

gita said...

Sam marthandam illai sam anderson. Nalla review btw. Enakkum kadhai pidithadhu, thiraikadhai nandraaga illai.

முத்துசிவா said...

@gita

சாம் மார்த்தாண்டன்னு ஒருத்தர எனக்கு ரொம்ப நல்லா தெரியும்.. அதான் ஒரு ப்ளோவுல வந்துருச்சி

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...