குறிப்பு: இந்த பதிவில் வரும் சம்பவங்கள் யார் மனதையும் புண்படுத்தும் நோக்கத்தில் எழுதப்பட்டது அல்ல.
இடம்: வடக்குபட்டி சுவாமிகள் ஆசிரமம்
நேரம் : மாலை 6 மணி,
"அரே ஓ சம்போ... அரே ஓ சம்போ... அரே ஓ சம்போ..." ன்னு செந்தில் காவி உடையில சொல்லிக்கிட்டே முன்னால வர வடக்கு பட்டி சுவாமிகளான கவுண்டர் பவ்யமா வந்துகிட்டு இருக்காரு...முகத்தில் தாடி... மெதுவா
வந்து அவருக்கான பீடத்தில் உக்காருறாரு..
செந்திலிடம் மெதுவாக
கவுண்டர்: டேய்... கமண்டல வாயா... என்னடா இன்னிக்கு கூட்டம் கம்மியா இருக்கு....
செந்தில்: அண்ணேன் உங்களுக்கு தெறமை பத்தலைன்னு யாரும் வரமாட்டேங்குறாங்க..
கவுண்டர்: என்னது திறமையா? அப்புடி என்ன திறமைய இவனுக எதிர்பாக்குறானுக?
செந்தில்: உங்களுக்கு வாய்க்குள்ள கைய விட்டு லிங்கம் எடுக்க தெரியலையாம்....
கவுண்டர்: டேய் என்ன என்ன சாமியார்னு நெனைச்சானுகளா இல்ல மேஜிக் மேன்னு நெனைச்சானுகளா? ஏண்டா டேய் வாய்க்குள்ள கைய விட்ட வாந்தி தானடா நாயே வரும்.. லிங்கம் எப்புடி வரும்?
செந்தில்: அதெல்லாம் தெரியாது.. நீங்க லிங்கம் எடுத்தாதான் நல்லா ஃபேமஸ் ஆவீங்க..
கவுண்டர்: அடி செருப்பால ப்ரேமானந்தா மண்டையா.. நா பாட்டுக்கு சைக்கிள் கடை வச்சிக்கிட்டு அஞ்சோ பத்தோ சம்பாதிக்கிட்டு நிம்மதியா இருந்தேன்... சாமியார் தொழிலுல நிறையா சம்பாதிக்கலாம்னு ஆசைகாட்டி என் கடைய மூடுனதும் இல்லாம இப்ப வாய்க்குள்ளருந்து லிங்கம் எடு பைக்குள்ளருந்து
சொம்பு எடுன்னு லொல்லா பண்ற... நாயே இப்புடியே பேசுனா உன் மண்டைக்குளருந்து மண்டை ஓட்ட எடுத்து எல்லாருக்கும் காமிச்சிருவேன்
செந்தில்: நா என்னண்ணே பண்றது.. ஒருத்தரும் வரமாட்டேங்குறானுகளே...
கவுண்டர்: (ஹைபிட்ச்ல) ஏண்டா வரமாட்டேங்குறானுகளா? ஏண்டா நா என்ன மத்த சாமியார்கள் மாதிரி தனியா ரூம்குள்ள அவனுகள கூப்டு பணிவிடை செய்ய சொன்னனா இல்லை கதவ தொறங்க காத்து வரட்டும்
கக்கூச தொறங்க நாத்தம் வரட்டும் அருத்து கொன்னனா? சும்மா வந்து உக்காந்துட்டு 10 ரூவாய உண்டில போட்டு போறதுக்கு இந்த நாயிகளுக்கு என்ன வலிக்குது... யாருடா அவிங்க இந்த அமளி துமுளிலயும் இங்க வந்து உக்காந்துருக்கது...
செந்தில்: அண்ணேன்... அவனுகல்லாம் நம்ம கடையில வேலைக்கு இருந்தவிங்கதான்.. இப்ப சினிமால சேந்து பெரியா ஆளாயிட்டானுக... நீங்கதான் அவருன்னு தெரியாம உங்ககிட்ட் ஆசீர்வாதம் வாங்க
வந்துருக்கானுங்க...
கவுண்டர்: அய்யயோ இவனுகளா... கடையில் இருக்கும்போது மொத்து மொத்துன்னு மொத்திருக்கேன்.. தெரிஞ்சா கொன்னுருவானுகளே..
செந்தில்: அண்ணேன் இப்ப அவிங்க சினிமா கார்ங்கண்ணே.. சாமியார் வேஷத்துல யார் என்ன சொன்னாலும்
நம்புவானுக...சும்மா அள்ளி விடுங்க...
கவுண்டர்: சரி ஒவ்வொருத்தனா வரச்சொல்லு...
முதல்ல சொம்பு வர்றாரு...
கவுண்டர்: அரே ஓ சம்போ.. வா மகனே... உன் பிரச்சனையை கூறு...
சொம்பு : வாழ்க்கையில கஷ்டத்துக்கு மேல கஷ்டமா வந்துகிட்டே இருக்குது ya
கவுண்டர்: அப்ப செத்துப்போயிரு...
சொம்பு : (பதட்டமாக) அய்யோ சாமி...
கவுண்டர்: த... இது... வாய் கெளம்பி... ச்சி.. கொழம்பி மாத்தி சொல்லிட்டேன்...நீ சொல்லு மகனே... உனக்கு
என்ன கஷ்டம்னு
சொம்பு :நா நடிக்கிற எந்த படமுமே ஓட மாட்டேங்குது ya
கவுண்டர்: (மனதிற்குள்.. நடிச்சாத்தானடா ஓடும் போண்டா வாயா..) சரி மகனே அதுக்கு நா என்ன பண்ணனும்?
சிம்பு : நா சினிமாவ விட்டே விலகிடலாம்னு இருக்கேன்.
கவுண்டர் : அப்படியே.. மிக்க மகிழ்ச்சி மகனே.. இந்த மாதிரி நல்ல காரியம் செய்யறதுக்கெல்லாம் யோசிக்கவே கூடாது. டக்குன்னு முடிவெடுத்துடனும்.
சொம்பு என்ன ya நா சும்மா ஒரு பேச்சுக்கு சொன்னா நீங்க என்ன உண்மையிலேயே போக சொல்லிடுவீங்க போல
கவுண்டர் : இப்ப என்ன பண்ணனுங்குற நீயி?
சொம்பு : நீங்க எனக்கு மந்திரிச்சி குடுக்குற ஒத்த தாயித்துல மொத்த தமிழ்நாடும் என் படத்த கொத்தா
பாக்க திரண்டு வரனும்...
இத கேட்டவுடன் கவுண்டர் சைடுல இருக்க செந்தில பாத்து மொறைச்சிகிட்டே...
கவுண்டர்: ஒரே தாயித்துல... அதுக்கென்ன குடுத்துறலாம் மகனே... ஒரே தாயித்துல உன் படம் 100 நாள் ஓடோனும் அவளவுதானே..
டேய் ப்ளாக்பெர்ரி அந்த மந்திரிச்ச தாயித்த எடு...
இந்தா மகனே இத கட்டிக்கிட்டு நீ மட்டும் வெளில போ..அப்புறம் பாரு என்ன நடக்குதுன்னு..
சொம்பு : சரிங்க சாமி..
கவுண்டர் : ஆமா நீ காலையில யாரு முகத்துல முழிக்கிற?
சொம்பு : என்னோட முகத்துல தான் ya.. எழுந்த உடனே கண்ணாடி பாப்பேன் ya
கவுண்டர் : இய்ய்ய்ய்ய்ய்ய்ய்
சொம்பு : ஏன் ya எதாவது பிரச்சனையா?
கவுண்டர் : நல்ல வேளை.. இன்னும் உயிரோட இருக்கியேன்னு சந்தோஷப்படு.. மூஞ்சாடா இது..
”அண்ணே” அப்டின்னு செந்தில் கவுண்டரோட தொடைய கிள்ளுறாரு.
கவுண்டர் : (கவுண்டர் சமாளித்துக் கொண்டு) அ.. இது... காலையில முழிக்கிறதுக்கான இது மூஞ்சி இல்லைன்னு சொல்ல வந்தேன்..
என்னா மூஞ்சி இது.. அப்டியே ராஜ கலை தாண்டவமாடுதே...
சொம்பு : அப்புறம் வேற யாரு முகத்துல முழிச்சா நல்லது சாமி?
கவுண்டர் : டெய்லி ஒரு கரடி முகத்துல முழிச்சா உங்க வாழ்க்கை ஓகோன்னு இருக்கும்
சொம்பு : கரடிக்கு நா எங்க போறது சாமி. அது காட்டுல தான இருக்கும்
கவுண்டர் : தம்பிக்கு எப்பவுமே தமாசுதான்... ஆக கரடிய நீ உங்க வீட்டுல பாத்ததில்லை?
சொம்பு : இல்லையே சாமி
கவுண்டர் : அப்போ நீ தினமும் உன் முகத்துலயே முழிச்சி நாசமா போ.. ன்னு சொன்ன உடனே சிம்பு கெளம்பிடுறாரு.
கவுண்டர் தூரமா எட்டிப்பாத்துட்டு “டேய் ஆக்ஸ்ஃபோர்டு மண்டையா.. என்னடா நம்ம ஆசிரமத்துக்குள்ள தார் போடுற இஞ்சின் ஒண்ணு வருது? நமக்காக ரோடு எதுவும் போடப்போறானுகளா என்ன?
செந்தில் : அய்யோ அண்ணே.. நல்லா பாருங்க.. அது நம்ம விருச்சக காந்த்.
கவுண்டர் : அய்யோ இவன் தொல்லை தாங்க முடியலன்னு தானே நான் சைக்கிள் கடையையே காலி
பண்ணிட்டு சாமியாரா வந்தேன். இங்கயும் வந்துட்டானா...
விருச்சக காந்த் சாமிகள் முன்னால வந்து உட்காருறாரு.
கவுண்டர் : டேய் இவன் எதுக்கு வந்துருக்கான்னு கேளுடா....
வி.காந்த் : கேட்டுங்க மக்கழே கேட்டுக்குங்க... வீட்டுல கரண்ட் இல்லை மக்கழே கரண்ட் இல்லை... கேட்டுக்குங்க மக்கழே
கவுண்டர் : டேய் என்னடா இவன் ஜோசியம் பாக்குற ரோபோ மாதிரி பேசுனதயே திரும்ப திரும்ப பேசிகிட்டு இருக்கான்.
செந்தில் : இன்னும் தெளியலைன்னு நெனைக்கிறேன்
கவுண்டர் : இல்லடா தெளிஞ்சிருச்சின்னு நெனைக்கிறேன். அதான் இப்புடி உளருறான். அந்த கமண்டலத்துல இருக்க குவாட்டர கொஞ்சம் இவன் வாயில ஊத்தி விடு
செந்தில் கமண்டலத்துல இருக்க குவாட்டர வி.காந்த் வாயில ஊத்தி விடுறாரு.
கவுண்டர் : இப்போ தெளிவா பேசுவான் பாரு
வி.காந்த்: ஸ்.. ஸாமி... உங்ககிட்ட ஒண்ணு கேக்கனும் தான் வந்துருக்கேன்..
கவுண்டர் : எங்கிட்ட இருந்த ஒரு குவாட்டரத் தான் இப்போ உனக்கு ஊத்தி விட்டாச்சேடா.. இனிமே என்கிட்ட
எதுவும் இல்லைடா...
வி.காந்த் : அது இல்ல ஸாமி... இந்த log ஸபா எலெக்ஸன்ல யார்கூட gooட்டணி வைக்கல்லாம்னு கேக்கலாம்னு வந்தேன்
கவுண்டர் : டேய் அரை போதை நாயே.,.. எலெக்சன் முடிஞ்சி 10 நாள் ஆச்சுடா இன்னும் கூட்டணியே நீ முடிவு பண்ணாம சுத்திகிட்டு இருக்கியா..
வி.காந்த் : (நாக்கை துருத்திக் கொண்டு ) ஹே... இத ஏன்யா என்கிட்ட கேக்குற.. அந்த அம்மாகிட்ட போய் கேளுய்யா...
கவுண்டர் : டேய் அழகேசா... என்னடா இவன் சம்பந்தம் சம்பந்தம் இல்லாம பேசுறான். இவன் பேசுறதயெல்லம பாத்தா இவனுக்கு யாரோ நைட்டு வீட்டுல குவாட்டர ஊத்தி விட்டு இந்த ரெண்டு மூணு டயலாக்க பேசுறதுக்கு மட்டும் திரும்ப திரும்ப ட்ரெயினிங் குடுப்பாங்க போலருக்கு...
செந்தில் : எனக்கும் அப்டித்தாண்ணே தோனுது..
கவுண்டர் : சரி அத விடு.. டெல்லிக்கு போய் செம வாங்கு வாங்கிட்டு வந்தியாமே உண்மையா?
வி.காந்த்: ஒரு பொண்ணப்பாத்து “துமாரா நாம் கியாஹே” ன்னு எனக்கு தெரிஞ்ச இங்கிலீஸ்ல கேட்டேன்.
கவுண்டர் : நல்ல வேளை .. சோளீக்கே பீச்சே கியாஹேன்னு கேக்கல... பிஞ்ச செருப்பெடுத்துக்கிட்டு ஓட ஓட விரட்டிருப்பா...
வி.காந்த்: இப்போ எனக்கு கூட்டணிதான் பிரச்சனை மக்கழே.. அதுக்கொரு வழி சொல்லுங்க..
கவுண்டர் : சார்.. நீங்க இன்னும் ஒரு ரெண்டு குவாட்டர உள்ள விட்டுக்கிட்டு நல்லா குப்புற படுத்து யோசிங்க அடுத்த எலெக்சனுக்குள்ள கூட்டணிய முடிவு பண்ணிடலாம்.
(ஆசிரம காவளாளிகள் விருச்சக காந்த வலுக்கட்டாயமா அப்புறப்படுத்துறாங்க...)
வி.காந்த் : மக்கழே.. நா எழுதிவச்சி படிக்கல மக்கழே... வாயில வந்தத பேசுறேன் மக்கழேன்னு பொலம்பிகிட்டே
போறாறு..
கவுண்டர் : டேய் ஐ ஃபோன் மண்டையா... என்னடா வெளிநாட்டுலருந்தெல்லாம் நம்ம ஆசிரமத்துக்கு ஆள்
வர ஆரம்பிச்சிட்டாங்களா,.. யார்ரா அவங்க
செந்தில் : அது ஒண்ணும் இல்லைண்ணே.. ஃப்ளைட் ஒண்ணு காணாம போச்சாம்.. அத அமெரிக்காவாலயே கண்டுபுடிச்சி குடுக்க முடியலையாம்.. நீங்க தான் அத கண்டு புடிச்சி குடுக்கனும்னு கேட்டு வந்துருக்காங்க.
கவுண்டர் : அய்யய்யோ... அங்க சுத்தி இங்க சுத்தி கடைசில என்கிட்டயே வந்துட்டாணுகளா.. ஆசிரமத்த
இழுத்து மூடுடா...
3 comments:
ஹா... ஹா... கலக்கல்...
சிம்பு காமெடி சூப்பர்...
Super machi
Post a Comment