Saturday, March 29, 2014

LEGEND - பாலைய்யா வஸ்தாவய்யா!!!


Share/Bookmark
தலைப்ப பாத்ததும் படிக்கிறவங்களத் தவற “இவன் ஏண்டா இப்புடி பாலகிருஷ்ணா படத்துக்கெல்லாம் போய் அடிவாங்குறான்”ன்னு எம்மேல பாவப் படுறவங்கதான் அதிகமா இருப்பீங்க. ஏன்னா பாலகிருஷ்ணாவ நம்மூர்ல அப்டித்தான் வச்சிருக்கோம். ஜெய் சென்னா கேசவான்னு பாலைய்யா சொன்னதும் ட்ரெயின் பொட்டி தனியா கழண்டு ரிவர்ஸ்ல ஓடுறது தான் பாலகிருஷ்ணா பேர சொன்னதும் நமக்கு ஞாபகம் வரும். அதுமட்டும் இல்லை இன்னொரு படத்துல மாடில நிக்கிறவரு திடீர்னு நாலு கேரி பேக்க எடுத்து ஊதி பலூன் மாதிரி முட்டில கட்டிக்கிட்டு கீழ குதிப்பாரு. அடிபடாம இருக்க டேக்டிக்ஸ். அவரு எதுவும் கட்டாம குதிச்சிருந்தா கூட யாரும் கேள்வியெல்லாம் கேக்கப்போறதில்லை, அப்புறம் இன்னொரு படத்துல வில்லன்கள்ல்லாம் AK 47, PK 57 ல்லாம் வச்சிகிட்டு நிப்பாங்க. நம்மாளு அவங்களுக்கு முன்னால பழங்காலத்து வாள் ஒண்ண எடுத்துகிட்டு போய் நிப்பாரு. என்னாடான்னு பாத்தா அந்த வாள லைட்டா சூரியனுக்கு முன்னால ஆட்டுனோன , அந்த கத்தி க்ளார் அடிச்சி அந்த வெளிச்சம் பட்டு வில்லன்களோட கண்ணு கூசுது. டக்குன்னு அவனுங்கள அடிச்சிபோட்டுட்டு நம்மாளு துப்பாக்கிய புடுங்கிருவாரு.

சரி.. இவ்வளவு வக்கனையா பேசுறியே அப்புறம் எதுக்கு படத்துக்கு போனன்னு கேப்பீங்க. காரணம் இல்லாம நா எங்கயும் போய் அடி வாங்கமாட்டேன். நா அதிக தடவ பாத்த தெலுகு படங்கள்ல பாலகிருஷ்ணாவ வச்சி இதே போயப்பட்டி சீனு எடுத்த சிம்மா படமும் ஒண்ணு. பாலகிருஷ்ணா மேல இருந்த அபிப்ராயத்த மொத்தமா மாத்துன படம் அது. வழக்கமான தெலுகு ஓவர்டோஸ் காட்சிங்க பல இருந்தா கூட சில சீன்ல அப்டியே
புல்லரிச்சிரும். உதாரணத்துக்கு ஒரு சீன்

”என்ன கொல்றதுக்கு இந்த ஊர்ல யாரு இருக்கா.... “ம்பான் ஒரு கொடூர வில்லன்

”தேவுடு” அப்டிங்கும் அந்த அம்மா..

”கடவுளா? எங்க? வரசொல்லு பாப்போம்..” ம்பான் அவன்.

”டேய் எங்க எங்கன்னு கேக்காதடா..  எதிர்ல வந்து நின்னாருன்னா எரிஞ்சி சாம்பலாயிடுவ”ங்கும்  அந்தம்மா

உடனே அந்த அம்மாவ ரயில்வே ட்ராக்ல தள்ளி விட்டு

”உனக்கு சாவு வருது... இப்போ உன் சாவு முன்னால வருதா... இல்லை உன் தேவுடு முன்னால வர்றாரா பாப்போம்.. டேய் கடவுள் வர்றாரான்னு பாருங்கடா” ன்னு சொல்ல

வில்லனோட அள்ளக்கை “நீ இருக்கன்னு  தெரிஞ்சா அந்த கடவுள் கூட இங்க வரமாட்டாருன்னா”ன்னு சொல்லிக்கிட்டே அந்த அம்மாவ வெட்டப்
போகும் போது டக்குன்னு நம்ம கஜேந்ராவுல வர்ற மாதிரி சிங்கம் படம் போட்ட கோடாரி கத்தி  ஒண்ணு வந்து அவன் நெஞ்சுல சத்துன்னு பாயும்....

யார்ரான்னு எல்லாம் திரும்பிப்பாக்க ரயில்வே ட்ராக்குக்கு அந்தப்பக்கம் பாலையா கெத்தா நிக்க பின்னால வானத்துல இடி இடிக்கும்.. உடனே அந்த அம்மா

“எங்க இருக்காரு எங்க இருக்காருன்னு கேட்டல்ல... தேவுடு ஒச்சாடுரா “ ன்னு வெறித்தனமா அந்தம்மா சொல்லும். பாலகிருஷ்ணாவுக்கே அந்த சீன் இவ்வளவு effective ah இருக்குன்னா நம்ம தலைவர்லாம் அதே சீன்ல நடிச்சிருந்தா எப்டி இருந்துருக்கும்னு நிறைய தடவ யோசிச்சிருக்கேன்.

(http://www.youtube.com/watch?v=drnwlsrXTdI)



அதே மாதிரி செம பவர்ஃபுல்லான சீன்களோட  வந்து ஜெயிச்சதுதான் 2010 ல வந்த சிம்மா. திரும்பவும் அதே கூட்டணி சேர்ந்துருக்கேங்குற நம்பிக்கையில தான் போனேன். பெரிய அடி ஒண்ணும் இல்லை. படம் ஓக்கே தான். திரும்ப அதே சிம்மாவ லைட்டா டிங்கரிங் பண்ணி எடுத்துருக்காங்க.

இந்த போயப்பட்டி சீனுவுக்கு வேற கதையே தெரியாது போல. ஊர்ல ஒரு பெரிய குடும்பம் இருக்கும். அந்த குடும்பந்தான் ஊர்ல யாருக்கு என்ன ப்ரச்சனை வந்தாலும் தீர்த்து வைக்கும். அந்த பெரிய குடும்பத்துல ஒருத்தர் தான் நம்ம சுமன் (எல்லா படத்துலயும்). அந்த பெரிய குடும்பத்துக்கு தொல்லை குடுக்குறதுக்காகவே ஊர் ஜனங்களை கொடூரமா கொல்லுற ஈவு இறக்கம் இல்லாத வில்லன் குடும்பம் ஒண்ணு இருக்கும். இவிங்க ரெண்டு பேரும் அடிச்சிக்கிறது தான் கதை. சிம்மாவும் அதே தான். அடுத்து வந்த ஜூனியர் NTR ரோட தம்முவும் அதே தான். இப்போ இந்த LEGEND உம் அதே தான்.

சிம்மாவுல கூட பாலைய்யா டாக்டரா இருப்பாரு. அப்டியே சைடுல அநியாயத்த தட்டிக் கேப்பாரு. ஆனா இதுல  அநியாயத்த தட்டிக்கேக்குறது தான் வேலையே. சும்மா இதே பொழப்பா திரியாம சார் அப்டியே எதாவது வேலைவெட்டிக்கு போங்க சார். முதல் பாதில YO YO பாயா வந்து தாறுமாறு குத்தாட்டமெல்லாம் போட்டு செம்ம சிரிப்பு காட்டுறாரு. பாலகிருஷ்ணாவ நம்மாளுகதான் ஓட்டுறாய்ங்கன்னா அவிங்க ஊர்ல அதுக்கும் மேல ஓட்டுறாய்ங்க. கஷ்டப்பட்டு எடுத்த ஃபைட் சீன்லயெல்லாம் பயபுள்ளைங்க சிரிச்சிக்கிட்டு இருக்குங்க. ப்ரம்மானந்தம் கால் மணி நேரமே வந்தாலும் சூப்பர். வழக்கமான தாறுமாறு காமெடி. அவரு பேரு Bendu மாணிக்கம். அதாவது பாம்பேல உள்ள ரவுடிங்களை எல்லாம் பெண்டு எடுத்ததால வந்த பேராம். ப்ரம்மு பாட்ஷா ரஜினி கெட்டப்ல வர்றது
செம.


பாட்டு ஃபைட்டு காமெடின்னு போயிட்டு இருக்க படத்துல ஒரு ட்விஸ்ட்ட வச்சி “LEGEND JUST ARRIVED"  ன்னு போட்டு இண்டர்வல் விடுறாங்க. அடப்பாவிகளா இத மொதல்லையே சொல்லிருந்தா நாங்க டைரக்டா இண்டர்வல் முடிஞ்சப்புறமே வந்துருப்போமேடா... நம்ம LEGEND பாலைய்யா ghost rider பைக்குக்கு  மஞ்ச பெயிண்ட் அடிச்சா மாதிரி ஒரு பைக்க எடுத்துக்கிட்டு தப்ப தட்டிக்கேக்குறாரு. பாக்குறவங்களயெல்லாம் அந்த கஜேந்த்ரா கத்திய வச்சி பொளந்து கட்டுறாரு. திடீர்னு ஆக்‌ஷன்லருந்து மாறி “பொண்ணுன்னா யாருன்னு தெரியுமாடா.. நம்மள பத்து மாசம் சுமந்து பெக்குறவதாண்டா பொண்ணு.. நமக்கு ஒண்ணுன்னா நம்ம கூடவே இருந்து பாத்துக்குறா பாரு அவ தாண்டா பொண்ணு” ன்னு செண்டிமெண்ட போட்டு தாக்குறாரு. அய்யய்யோ.. நாட்டாமை படத்துக்கு வசனம் எழுதுன யாரோ அந்தப்பக்கம் பொய்டாங்க போல. எத்தனை தடவ.

அங்கங்க ரெண்டு மூணு சூப்பர் சீனும் வருது. பாலைய்யா வில்லன்கிட்ட ஒரு ட்ரெயின் கதை சொல்றாரு.

பாலைய்யா : ரயில்வே ட்ராக்குல ஒருத்தன் வேகமா ஓடுறான். அவனுக்கு எதுத்தாப்புல ஒரு ட்ரெயின் வேகமா வருது. ட்ரெயின் அவன அடிச்சி தூக்கிட்டு போயிடுது. இதுல ட்ராக்ல ஓடுனவன பத்தி நீ என்ன நெனைக்கிற?

வில்லன் : ரிஸ்க் எடுத்துருக்கான்

பாலைய்யா : அதே ட்ராக்ல ஒருத்தன் வேகமா ஓடுறான். ட்ரெயின் அவன் பின்னால வருது. அவன அடிச்சிட்டு ட்ரெயின் போயிடுது. இப்போ என்ன நெனைக்கிற?

வில்லன் : இப்பவும் அவன் ரிஸ்க் எடுத்துருக்கான்.

பாலைய்யா : அந்த ரெண்டு கதையிலயிமே வர்ற ட்ரெயின் நாந்தான். எங்க இருந்தாலும் அடிச்சி  தூக்கிட்டு போயிட்டே இருப்பேன்னு கெத்தா சொல்லுவாரு.

ரொம்ப நேரம் ஓடுற ஃப்ளாஷ்பேக்ல கடைசில legend சார் ஒரு லவ் சாங் பாடப்போக மொத்த தியேட்டருமே கொந்தளிச்சிட்டாய்ங்க. படத்துல 1st half தனி படமாவும் 2nd half தனி படமாவும் ஓடுது. அதவிட கொடுமை க்ளைமாக்ஸ் ரெண்டுக்குமே சம்பந்தம் இல்லாம அரசியல உள்ள கொண்டு வந்து கடுப்பேத்துறாங்க. வில்லன் ஜகபதி பாபு ஆள் செம கெத்தா இருக்காரு. ஆனா வழக்கமான தெலுங்கு பட கொடூர வில்லன் கேரக்டர்தான்.

DSP.... BGM லைட்டா மொக்கைன்னாலும் பாட்டெல்லாம் பக்கா. வீரம் படத்துக்கு இண்ட்ரோ சாங் போட்டுக் குடுத்த கையோட இந்த படத்துக்கும் போட்டுருப்பாப்ளே போல. ”சூர்யுடு சந்த்ருடு” பாட்டுல அதே எஃபெக்ட். போயப்பட்டி சீனுசார் அடுத்த படத்துலயாவத்து திரும்ப சிம்மாவயே எடுக்காம வேற எதாவது எடுங்க.

படத்துல பாலைய்யா டான்ஸ் ஆடுறேன்னு பண்ற காமெடியத் தவற வேற எங்கயும் அந்த அளவு போர் அடிக்கல. சமீபத்துல பாத்த பல தெலுங்கு படங்களுக்கு இது கொஞ்சம் பரவால்லை.  மொத்தத்துல படம் சிம்மாவுக்கு கீழ்.. தம்முவுக்கு கொஞ்சம் மேல். 

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

2 comments:

scenecreator said...

சீன்ல அப்டியே
புல்லரிச்சிரும். உதாரணத்துக்கு ஒரு சீன்

”என்ன கொல்றதுக்கு இந்த ஊர்ல யாரு இருக்கா.... “ம்பான் ஒரு கொடூர வில்லன்

”தேவுடு” அப்டிங்கும் அந்த அம்மா..

”கடவுளா? எங்க? வரசொல்லு பாப்போம்..” ம்பான் அவன்.

”டேய் எங்க எங்கன்னு கேக்காதடா.. எதிர்ல வந்து நின்னாருன்னா எரிஞ்சி சாம்பலாயிடுவ”ங்கும் அந்தம்மா

உடனே அந்த அம்மாவ ரயில்வே ட்ராக்ல தள்ளி விட்டு

”உனக்கு சாவு வருது... இப்போ உன் சாவு முன்னால வருதா... இல்லை உன் தேவுடு முன்னால வர்றாரா பாப்போம்.. டேய் கடவுள் வர்றாரான்னு பாருங்கடா” ன்னு சொல்ல

வில்லனோட அள்ளக்கை “நீ இருக்கன்னு தெரிஞ்சா அந்த கடவுள் கூட இங்க வரமாட்டாருன்னா”ன்னு சொல்லிக்கிட்டே அந்த அம்மாவ வெட்டப்
போகும் போது டக்குன்னு நம்ம கஜேந்ராவுல வர்ற மாதிரி சிங்கம் படம் போட்ட கோடாரி கத்தி ஒண்ணு வந்து அவன் நெஞ்சுல சத்துன்னு பாயும்....

யார்ரான்னு எல்லாம் திரும்பிப்பாக்க ரயில்வே ட்ராக்குக்கு அந்தப்பக்கம் பாலையா கெத்தா நிக்க பின்னால வானத்துல இடி இடிக்கும்.. உடனே அந்த அம்மா

“எங்க இருக்காரு எங்க இருக்காருன்னு கேட்டல்ல... தேவுடு ஒச்சாடுரா “ ன்னு வெறித்தனமா அந்தம்மா சொல்லும். பாலகிருஷ்ணாவுக்கே அந்த சீன் இவ்வளவு effective ah இருக்குன்னா நம்ம தலைவர்லாம் அதே சீன்ல நடிச்சிருந்தா எப்டி இருந்துருக்கும்னு நிறைய தடவ யோசிச்சிருக்கேன்.//////

சத்தியமா இதுக்கு முன்னால மாதிரி இந்த சீனை எந்த படத்திலும் பார்த்ததில்லையா? அவ்வளவா தெலுங்கு பார்த்திறாத நானே அவ்வபோது சேனல் மாற்றும் போதும் டப்பிங் செய்த படங்களிலும் பார்திருக்கேனே .மேலும் இப்போது அந்த சீனை ரஜினி செய்தால் கூட காமெடி ஆகத்தான் இருக்கும் ஓவர் பீலிங்க்ஸ் வேணாம்.
--

முத்துசிவா said...

ஹிஹி... ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு பீலிங்ஸ்.. எனக்கு அந்த சீன் ரொம்ப புடிச்சிருந்துச்சி.

//அந்த சீனை ரஜினி செய்தால் கூட காமெடி ஆகத்தான் இருக்கும்//

உங்களோட ஞான திருஷ்டிய வச்சி நீங்களே சொல்லிட்டீங்க.. அப்புறம் நா என்ன சொல்றது.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...