
போஸ்டர் ஒட்டுன அன்னியிலிருந்தே கலவரத்த ஆரம்பிச்ச படம். அல்லு அர்ஜூன் மேல ஸ்ருதி சம்மனக்கால் போட்டு உக்காந்த மாதிரி ஒரு போஸ்டர் ரிலீஸ் ஆக மொத்த பேரும் கொந்தளிச்சிட்டாய்ங்க. "போஸ்டர கிழிங்கடா"ன்னு ஒட்டுன போஸ்டரயெல்லாம் கிழிச்சி எறிஞ்சிட்டாய்ங்க. ஏண்டா நல்லாத்தானடா இருந்துச்சி அத ஏண்டா கிழிச்சீங்க? ஒருவேளை கிழிக்கிற சாக்குல பக்கத்துல போயி நல்லா பாத்துட்டு வருவோம்னு போனாய்ங்களான்னு தெரியல. இல்லை படத்துக்கு ஹைப்ப குடுக்க இவிங்களே ஒட்டிவிட்டு இவிங்களே ஆள விட்டு கிழிக்கிறாய்ங்களான்னும் தெரியல. என்னென்னவோ புதுசு புதுசான விளம்பர டெக்கினிக்கெல்லாம் கத்து வச்சிகிட்டு எப்புடியோ படத்த ஓட்டிடுறானுங்க. சரி படம் எப்டின்னு பாப்போம்.
சின்ன வயசுலருந்தே எந்த விஷயத்துலயுமே ஒத்துப்போகாத அண்ணன் தம்பி. அண்ணன் ரொம்ப சின்சியர். நல்லா படிச்சி போலீஸ் ஆபிசர் ஆயிடுறாரு. தம்பிக்கு படிப்பு வராது. தண்ணி அடிச்சிட்டு ஊர்சுத்துர மசால பட ஹீரோக்களுக்குன்னே அளவெடுத்து செஞ்சா மாதிரியான கேரக்டர். சின்சியர் போலீஸ் ஆபீசராக நம்ம ஷாம். ஊர்சுத்துற ஜாலி தம்பியாக அல்லு அர்ஜூன். ரேஸ் குர்ரம்னு பேரு வச்சதுக்காக இண்ட்ரொடக்சன் சீன்ல குதிரைங்க கூட ஓடிவர்றாரு. அதே போல 500 படங்கள்ல நம்ம ப்ரகாஷ்ராஜ் நடிச்சி நச்சி தூக்கிபோட்ட வில்லன் கேரக்டர தாதா ப்ளஸ் அரசியல்வாதி. அச்சு மாறாம இன்னொருத்தர் பண்ணிருக்காரு.
ஸ்ருதியோட அப்பாவா ப்ரகாஷ்ராஜ். எந்த கேரக்டர் எடுத்தாலும் சிறப்பா செஞ்சி முடிக்கிறதுல இவர விட்டா ஆளே கிடையாது. ப்ரகாஷ்ராஜ் மற்றும் ஸ்ருதியோட Characterization செம. ஒரே பட்டுல ஸ்ருதிய கரெக்ட் பண்ணிட்டு ப்ரகாஷ்ராஜ் கூட காமெடி பண்ணிகிட்டு சுத்திகிட்டு இருக்கும்போது தான் வில்லன் ஷாம கொல்ல ட்ரை பண்றது தெரியிது அல்லுவுக்கு. ரத்தம் சூடாயி வில்லன பந்தாடிருறாரு. இப்பதான் ரெண்டு பேருக்கும் இடையில ரேஸ் ஆரம்பிக்குது. சரி போய் டீ சாப்டு வாங்க. அட இண்டர்வல்baa.
ரெண்டாவது பாதில அண்ணன்கிட்ட நல்ல பேர் எடுக்க அண்ணனோட பழைய காதலிய கல்யாண மேடையிலருந்து கூட்டிகிட்டு வந்து ஷாமோட சேத்து வைக்கிறாரு அல்லு. ஜாலியா போயிக்கிட்டு இருக்க டைம்ல வில்லன் ஆஸ்பத்திரலருந்து திரும்ப வந்து மந்திரியாடுறாரு, பருப்புல உசந்தது முந்திரி... பதவில ஒசந்தது மந்திரின்னு சொல்லிட்டு அவரோட பவர வச்சி அல்லுவுக்கு ஆப்பு வைக்கிறாரு. அப்புறம் அல்லு எப்டி ப்ளான் பண்ணீ வில்லனோட சாம்ராஜ்யத்த ஒரே நாள்ல தகர்த்தெறியிறாருங்கறது க்ளைமாக்ஸ்.
நா சொன்ன கதை ரொம்ப போரடிக்கிதுல்ல? ஆனா படத்துல ஒரு சீன் கூட போர் அடிக்கல. காமெடில பட்டைய கெளப்பிருக்காங்க. காமெடி ஆக்சன் செண்டிமெண்டுன்னு அத்தனையும் தேவையான அளவு தேவையான இடத்துல. ரெண்டு மணி நேரம் காமெடில காத்து அடிச்சிதுன்னு சொன்னா கடைசி அரை மணி நேரம் சூராவளி. என்னன்னு பாக்குறீங்களா? தலைவர் ப்ராம்மானந்தம் தான். கால் மணி நேரம் வந்தாலும் தெறிக்க விட்டுருக்காரு. செம்ம மாஸ். சிரிச்சி சிரிச்சி வயிறே வலிச்சிருச்சி. தலைவர் பேரு கில் பில் பாண்டே... இவருக்கு பேரு வைக்க மட்டும் தனியா ஒரு குழு இருக்கும் போல. நா இந்த படம் பாத்து முடிஞ்சப்புறம் யோசிச்சி பாத்தேன். ஒருவேள இந்த படத்த தமிழ்ல ரீமேக் பண்ணா ப்ரம்மு கேரக்டர் யாரு பண்ணுவான்னு? சத்தியமா ப்ரம்முவ ரீப்ளேஸ் பண்ண தமிழ்ல ஆள் இல்லை.
தமனுக்கு சுக்கிரன் உச்சத்துல இருக்கான்னு நெனைக்கிறேன். தெலுங்குல வர்ற படங்கள் அனைத்துக்கும் இப்போ இவருதான். மேட்டர் என்னன்னா எல்லா படத்துலயுமே பாட்டு செமையா இருக்கு. இதுலயும் நாலு பாட்டு பக்கா. என்ன ஒண்ணு DSP ஹாரிஸ் ஜெயராஜ் மாதிரி standard template சாங்ஸ்தான் போடுறாரு. ஓடுறவரைக்கும் வண்டி ஓடட்டும். நம்ம எல்.ஆர்.ஈஸ்வரி பாடுன "கலாசலா கலாசலா " பாட்டு மாதிரி இதுல உஷா உதூப் ஒரு பாட்டு பாடிருக்கு. செம்ம. கடந்த ரெண்டு நாள்ல ஒரு 50 தடவ அந்த பாட்டை கேட்டுட்டேன். படத்துல தான் இந்த பாட்டை பேக்ரவுண்டுல போட்டுவிட்டு கடுப்பேத்திட்டாங்க.
எல்லா பாட்டுமே படமாக்கப்பட்ட விதம் சூப்பர். செட்டெல்லாம் செம ரிச்சா தாறுமாறா இருக்கு. ஸ்ருதி தமிழ்நாட்டை தாண்டிருச்சின்னா ரொம்ப "ஓப்பன்" டைப்பா மாறிடுது. அல்லு அர்ஜுன் செம்ம ஃபிட். டான்ஸ்லாம் பக்கா. ஆனா வழக்கமான அல்லு பட டான்ஸ கம்பேர் பண்ணும்போது இதுல ஸ்பெஷலா எதும் இல்லை.
ஜூனியர் NTR க்கு ஊசரவெல்லி ங்குற மொக்கைப் படத்த எடுத்தவருதான் இந்தபடத்துக்கும் டைரக்டர். ஆனா இந்த முறை கொஞ்சம் கூட மிஸ் ஆகாம எந்த இடத்துலயும் குறை சொல்லமுடியாதபடி க்ளீன் ஹிட் அடிச்சிருக்காரு. ரொம்ப நாளுக்கப்புறம் ஒரு நல்ல மசாலா படம் பார்த்த திருப்தி. கூடிய விரைவில் நம்மாளுங்க இத ரீமேக் பண்ணக் கூட வாய்ப்பிருக்கு. நேரம் கிடைச்சா கண்டிப்பா பாருங்க. குறிப்பா தலைவர் ப்ரம்மானந்தத்தோட ஆக்சன் ப்ளாக்குக்காக.
4 comments:
Who is prammanandam
//ஏண்டா நல்லாத்தானடா இருந்துச்சி அத ஏண்டா கிழிச்சீங்க? ஒருவேளை கிழிக்கிற சாக்குல பக்கத்துல போயி நல்லா பாத்துட்டு வருவோம்னு போனாய்ங்களான்னு தெரியல.//
Mass..
@Mariappan sarawanan
மொழி படத்துல அந்த ஃப்ளாட்ஸ் செக்ரடரியா ஒருத்தர் வருவாருல்ல. அவருதான்
nice review boss. brammanandam and sruthi'kaga kandippa pakkanum. padathula sruthi eppadi?
Post a Comment