இதுகூடப் பரவால்லை. ஆனா இந்த நல்லா படிச்சி மார்க் எடுக்குறவனெல்லாம் சும்மா புத்தகத்த பொட்ட மனப்பாடம் பண்ணி மார்க் எடுக்குறதாகவும், இதுங்கல்லாம் அப்புடியே புரிஞ்சி புத்தகத்த படிச்சதாலதான் மார்க் கம்மியா எடுத்தா மாதிரியும் போடுவாய்ங்க பாருங்க ஒரு சீனு. படிக்க வேண்டிய காலத்துல கண்ட எடத்துல சுத்திகிட்டு இருந்துட்டு, கோட்ட விட்டுட்டு அடுத்தவன் மார்க் நெறைய எடுத்த உடனே என்னவோ அவனுக்கு ஒண்ணும் தெரியாதது மாதிரியும் இதுங்கல்லாம் புரிஞ்சி படிச்சதால அறிவு கொப்புளிச்சி வெளிய ஊத்துற மாதிரியும் பண்றது தான் கொஞ்சம் கூட பொறுத்துக்க முடியல.
இதுங்க ஒரு குரூப்புன்னா இன்னொரு குரூப் இருக்காய்ங்க. பாய்ஸ் பட பரத் மாதிரி "I think something fundamentally wrong with our education system"... ஆமா education சிஸ்டம் மாறிருந்தா மட்டும் இவரு அப்டியே கிழிச்சி நாலு GSLV ய வானத்துல ஏவிருப்பாரு. அதாவது நாம எதயோ ஒண்ண படிக்கிறோமாம். பள்ளிக்கூடத்துல மனப்பாடம் பண்றது வாழ்க்கைக்கு உதவாதாம். நாலு புத்தகத்த முழுசா படிக்க முடியாம law பேசிகிட்டு இருக்கவங்கல்லாம் எங்க மத்த விஷய்த்த எப்டி ஃபேஸ் பண்ணுவாய்ங்கன்னு தெரியல.
நீங்களே நல்லா யோசிச்சி பாருங்க. ஒரு பையன் படிக்கிறான் அப்டின்னா அவனோட பெத்தவங்க கூலி வேலை, செஞ்சா கூட புள்ளை படிக்கிதுன்னு அவன எந்த வேலையையுமே செய்ய விட மாட்டாங்க. அந்த வயசுல நமக்கு இருக்க ஒரே வேளை படிக்கிறது மட்டும் தான். இந்த ஒரு வேலைவே ஒழுங்கா செய்ய முடியல்லன்னா அவன் பின்னால வாழ்க்கையில என்ன பண்ணப்போறான்? எப்டி மத்த கஷ்டங்கள சமாளிப்பான்.
உடனே இந்த நண்பன் பட குரூப் வந்துடுவாய்ங்க. பையனுக்கு எதுல இண்டரஸ்ட் இருக்கோ அத படிக்க வைக்கிறத விட்டுட்டு இப்டி மார்க் எடுக்கலன்னு சொல்றது தப்புன்னு பேசுவாங்க. எந்த ப்ளஸ் டூ படிக்கிற
பையனுக்கும் நா ஃபோட்டோ கிராஃபி படிச்சி பெரிய ஃபோட்டோ கிராஃபர் ஆகனும்னோ, இல்லை பெரிய டைரக்டர் ஆகனும்னோ இல்லை பெரிய பிசினஸ் மேன் ஆகனும்னோ ஆசை இருப்பதில்லை. கல்லூரி நாட்களிலேயே இந்த மாதிரியான , passion, splendor plus எல்லாம் உருவாகுது.
அப்புறம் அதே education system ah வேற மாதிரி குறை சொல்ற இன்னொரு குரூப்பு. நா ஸ்கூல்லயும் காலேஜ்லயும் படிச்சது ஒண்ணு. இப்போ பாத்துக்கிட்டு இருக்க வேலை வேற எதோ ஒண்ணுன்னு இன்னொரு புலம்பல். பள்ளி காலங்கள்ல நாம படிக்கிற விஷயங்களால வாழ்க்கையில நமக்கு எந்த பிரயோஜனும் இல்லையாம். ஒரு விஷயம் நல்லா யோசிச்சி பாருங்க. நீங்க காலேஜ்ல எதோ ஒண்ணு படிச்சிட்டு இப்போ அதுக்கு கொஞ்சம் கூட சம்பந்தம் இல்லாம வேற எதோ ஒரு வேலை பாத்துகிட்டு இருக்கீங்கன்னு வச்சிக்குவோம். so நீங்க படிச்சது உங்களுக்கு யூஸ் ஆகல. நீங்க படிக்காத ஒரு விஷயத்துல வேலை பாக்குறீங்க. அப்டின்னா படிக்காத ஒருத்தர கூப்டு அந்த வேலையை செய்ய சொன்னா அவரால செய்ய முடியுமா?
இன்னொரு விஷயம். சுத்தாமக படிக்காதவருக்கும் ஒரு பண்ணிரண்டாவது வரைக்கும் படிச்சவரோட பழக்க வழக்க்கங்களுக்கும் ஒரு வித்யாசம் இருக்கும். ஒரு பன்னிரண்டாவது மட்டும் படிச்சவருக்கும் ஒரு கலைக்கல்லூரில படிக்கிறவருகும் ஒரு வித்யாசம் இருக்கும். ஒரு கலைக்கல்லூரில படிக்கிறவருக்கும் ஒரு பொறியியல் கல்லூரில படிக்கிறவருக்கும் ஒரு வித்யாசம் இருக்கும். ஒரு பொறியியல் கல்லூரில படிக்கிறாவருக்கும் ஒரு மருத்துவக் கல்லூரில படிக்கிறவருக்கும் ஒரு வித்யாசம் இருக்கும். அந்த வித்யாசம்ங்கறது பேச்சு, பழக்க வழக்கம், ஒரு விஷயத்தை எளிதில் புரிந்து கொள்ளும் சக்தின்னு நிறைய மாறும். ஒண்ணு மட்டும் நாம தெளிவா தெரிஞ்சிக்கனும். நாம படிக்கிற விஷயங்கள் அதே ஃபீல்டுல வேலை பாக்குறதுக்கு மட்டும் இல்லை. நாம என்ன படிக்கிறோம்ங்குறத பொறுத்து தான் நம்மோட மூளை ஒரு விஷயத்தை எளிதில் புரிஞ்சிக்கிற தன்மை அதிகரிக்குது. பின்னால எந்த துறையிலயும் எந்த வேலையையும் ஈஸியா கத்துக்குற தன்மையும் அதிகரிக்குது. இல்லைன்னா எப்புடி சாஃப்ட்வேர் கம்பெனில மெக்கானிக்கல் படிச்சவங்களை
எடுத்து வச்சி வேலை வாங்கமுடியிது?
நீங்கள் படிக்காத மேதையாக இருக்கலாம். இன்று நீங்கள் பெரிய இடத்தில் இருக்கலாம். ஆனால் அனைவருக்கும் உங்களைப் போலவே ஆவார்கள் என்று சொல்ல முடியாது. அல்லது நீங்கள் ஒழுங்காகப் படிக்காமல் திரிந்திருந்தாலும் உங்களுடைய பணக்கார அப்பாக்கள் உங்களை சுமந்திருக்கலாம். பிசினஸ் ஆரம்பிக்கும் அளவுக்கு உங்களுக்கு பரம்பரை சொத்திருந்திருக்கலாம். ஆனா நம்மூரில் வெகுசிலருக்கே அது போன்ற பாக்கியங்கள் வாய்திருக்கும். மீதமிருக்குவரவங்களுக்கு படிப்பே வாழ்க்கையைத் தீர்மானிக்கிறது. ஏன்னா நம்மூர்ல இருக்க முக்கால்வாசி பேர் நடுத்தர வர்க்கங்களையும் அதற்க்கு கீழுள்ளவர்களுமே. அப்படிப்பட்டவங்களுக்கு படிப்பு ஒண்ணு தான் வாழ்க்கையில முன்னேற வழி.
நம்ம படுற கஷ்டத்த நம்ம புள்ளையும் படக்கூடாதுங்குறதுக்காகத் தான் ஒவ்வொருத்தரும் புள்ளைங்கள கஷடப்பட்டு படிக்க வைக்கிறாங்க. அவனும் படிக்காம அதே கஷ்டத்த படுறான்னா அவனோட பெத்தவங்க பட்ட கஷ்டத்துக்கு என்ன பலன். ஒருவேளை நீங்கள் சொல்வது போல் நம்மூரின் education சிஸ்டத்தில் பிரச்சனை இருக்கின்றது என்றே வச்சிக்குவோம். ஒருத்தனோட வாழ்க்கை அந்த சிஸ்டத்தாலயே நிர்ணயிக்கப்படுதுங்கும் போது அதுகூட ஒன்றி வாழ்றதுதான் நல்லதே தவற எதுவும் செய்யாமல் சிஸ்டம் சரியில்லை சிஸ்டம் சரியில்லைன்னு குறை சொல்றதுல எந்த பிரயோஜனமும் இல்லை.
இன்னிக்கு ஹைஸ்கூல் படிக்கிறவங்க கூட சமூக வலைத்தளங்கள்ல ரொம்ப ஆக்டிவா இருக்க ஆரம்பிச்சிட்டாங்க. நமக்குத் தெரிந்த ஒரே ஒரு காமராஜர், ஒரே ஒரு சச்சின் டெண்டூல்கரை இவர்களுக்கு முன்னுதாரணங்களா காட்டி அவங்களோட படிப்ப கெடுக்குறத முதல்ல நிறுத்துங்க. நீங்க படிக்காம இன்னிக்கு பெரிய மிக உயர்ந்த இடத்தில் இருக்கின்றீர்கள் என்றால் அதற்கு எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பீர்கள் என்று உங்களுக்கே தெரியும். எனவே "நானும் இப்டித்தான் இருந்தேன்" ன்னு உங்களுடைய பழைய பஞ்சாங்களை மற்றவர்களுக்கு உதாரணமாக காட்டி அவர்களின் படிப்பை கெடுப்பதை தயவு செஞ்சி நிறுத்துங்க.
7 comments:
அருமை நண்பரே நன்றி
WoW! You are very practical Man!
very good observation, congrats !
ஆகவே நண்பர்களே இந்த வாந்தி எடுக்கிற மெக்காலேவின் கல்வித்திட்டத்தை எக்காரணம் கொண்டும் மாற்றக்கூடாது,எவனுக்கும் எதையும் ஏன்,எதற்கு என்று கேள்வி கேட்கிற நெனைப்பே வந்துடக்கூடாது.வெளங்கிடும் நம்ம நாடு.
இந்த மதிப்பெண் முறையில எதாவது நம்ம சமூகம் சாதிச்சதாங்க.?? இனி வர சமூகமாவது மதிப்பெண்களை தாண்டி யோசிக்கட்டும் பாசு..
Good post siva!
நானும் lkg la பெயில் அதுக்காக இந்தியாவை முன்னேத்தலையா?
இப்படிக்கு
நரேந்திர மோடி
Post a Comment