Monday, May 19, 2014

GODZILLA - ஹாலிவுட் ஜில்லா!!!


Share/Bookmark
யாரு விட்ட சாபம்னு தெரியல. தமிழ்ப்படம் தியேட்டர்ல பாத்து 4 மாசம் ஆச்சு. கடைசியா நா தியேட்டர்ல பாத்த படம் நம்ம பழைய ச்சி இளைய தளபதியோட ஜில்லா. அன்னிலருந்து இப்போ வரைக்கும் நானும் தமிழ்ப் படம் பாக்கனும்னு முடிவு பண்ணானும் எதாவது ஒன்னு வந்து ப்ளான கெடுத்துவிட்டுருது. உடனே பசும்பொன் வடிவேலு மாதிரி "எவனோ நாம படம் பாக்கக்கூடாதுன்னு செய்வினை வச்சிட்டான்... செய்வினைய  இன்னிக்கு எடுக்குறேன்"ன்னுட்டு கூட ஒருத்தன அழைச்சிட்டு எப்போ போனாலும் டிக்கெட் கெடைக்கிற ஒரே மாலான OMR AGS க்கு வண்டிய விட்டோம். கவுண்டர்ல போய் யாமிருக்க பயமே டிக்கெட் கேட்டா ஒரே ஒரு டிக்கெட் தான் இருக்குதுன்னுட்டாய்ங்க அய்யய்யோ சிவகாமி ஜோசியம் கொஞ்சம் கொஞ்சமா பலிக்க ஆரம்பிச்சிருச்சே.. பார்க்கிங்குக்கு வேற முப்பது ரூவா குடுத்தாச்சி. வந்ததுக்கு கழுதை எதயாச்சும் பாத்துட்டு போவோம்னு  உள்ள போனதுதான் இந்த காட்ஸில்லா. பாத்தப்புறம் தான் தெரிஞ்சிது பேசாம 30 ரூவா போனாலும் பரவால்லன்னு அப்பவே கெளம்பி வீட்டுக்கு வந்துருக்கலாம்னு.

நம்மூரு பழைய ராஜ்கிரன் படத்த லைட்டா ரீமாடல் பண்ணி, நம்ம கும்கி கதையையும் கொஞ்சம் மிக்ஸ் பண்ணி  கொஞ்சம் டெக்னாலஜிக்கள அள்ளிப்போட்டு எடுத்து ரிலீஸ் பண்ணிருக்காய்ங்க. ஆரம்பத்துல வந்த டைனோசர் படங்களான ஜூராசிக் பார்க், த லாஸ்ட் வோல்ட் மற்றும் காட்ஸில்லா படங்களை கொஞ்சம் கூட நெருங்க முடியாத அளவு இருக்கு இந்த படம். அந்தப் படங்கள் ஏற்படுத்துன impact la பத்துல ஒரு பங்குகூட இந்த மார்டன் காட்ஸில்லா ஏற்படுத்தலங்குறது தான் உண்மை.

படம் ஆரம்பிக்கும் போது நல்லாதான் ஆரம்பிக்கிறாய்ங்க. பழைய காலத்துல நடந்த ஆராய்ச்சி அது இதுன்னு பழைய நியூஸ் பேப்பர் நியூஸ் ரீலெல்லாம் போட்டு காமிச்சி கிட்டத்தட்ட  கொஞ்சம் இண்ட்ரஸ்டிங்கா தான் ஆரம்பிக்கிறாய்ங்க. ஆனா போகப் போக செண்டிமெண்டப் போடுறேங்குற பேர்ல நம்மள கொன்னு  எடுத்துடுறாய்ங்க. எப்படா காட்ஸில்லாவ காட்டுவாய்ங்கன்னு காத்திருக்க நமக்கு, அத காட்டும் போது ஒரு பெரிய அதிர்ச்சி ஒண்ணு காத்துருக்கு. டேய் என்னடா இது? கிங்காங் படத்துல வந்த குரங்குக்கு  முதுகுல கட்டி வந்த மாதிரி இவ்வளவு கேவலமா இருக்கு? இதப்பாத்தா சிரிப்பு தாண்டா வருது.

அதுவும் இல்லாம மியூட்டோன்னு இன்னும் ஒரு விலங்கு வருது. நம்மூர்ல மழைகாலத்துல வர்ற வெட்டுக்கிளிய பெருசு பண்ணா எப்புடி இருக்குமோ அதப்பாக்க அப்டியே இருக்கு. அதுவும் ஒரு செம காமெடி விலங்கு. கண்ட குப்பையெல்லாம் கெளரி கடிச்சி திங்கிது. ரேடியேஷன் எங்கருந்தெல்லாம் வருதோ அதயெல்லாம்  அப்புடியே உள்வாங்கிக்குமாம். நம்ம கூடங்குளத்துக்கு இது மாதிரி ரெண்டு மியூட்டோவ வாங்கிட்டு வந்து கட்டிப்போட்டா பிரச்சனை தீந்துரும்னு நெனைக்கிறேன். வழக்கமா இந்த மாதிரி படங்கள்ல அந்த மிருகங்கள் ஊர அழிக்க, மனுஷங்க அத எதிர்த்து போராடுவாங்க. இந்த தடவ வில்லன்களான மியூட்டோக்கள ஹீரோ காட்ஸில்லா எப்படி ஒழிக்கிறார்ங்குறது தான் கதை.

இதுல இன்னொரு கொடுமை இத 3D ல வேற எடுத்துருக்காய்ங்க. ஹெலிகாப்டர மூஞ்சிக்கு முன்னாடி பறக்க விடுறாய்ங்க. தலைக்கு மேல பறக்க விடுறாய்ங்க. சுத்தி சுத்தி கடைசி வரைக்கும் ஹெலிகாப்டர் தான் பறந்துகிட்டு இருந்துச்சி. அதுலயெல்லாம் 3D நல்லா பண்ணிருந்தவிங்க காட்ஸில்லாவ காமிக்கும்  போது 3D எஃபெக்ட் அவ்வளவு சிறப்பா இல்லை. ஜூராசிக் பார்க் படத்துல கடைசில ஒரு டைனோசர் குட்டி ஒருத்தன் கால வந்து கடிக்க வரும். 2D ல பாக்கும் போதே அது நம்ம கால கடிக்க வர்ற மாதிரி இருக்கும். ஆனா இத 3D ல எடுத்துருக்காய்ங்க. ஒண்ணும் வேலைக்காகல.

ஆரம்பத்துலருந்து கம்யூட்டர்ல சிக்னல் வருது சிக்னல் வருதுன்னு பாத்துகிட்டு இருப்பானுங்க. "சிக்னல்  வருது" "அது respond பண்ணுது" "அது எதோ சொல்ல வருது" ன்னு என்னென்னமோ சொல்லிட்டு கடைசில தான் கண்டுபுடிக்கிறாய்ங்க ஒரு MUTO இன்னொரு MUTO வுக்கு "அந்த" மாதிரி விஷயத்துக்காக சிக்னல் குடுத்துருக்குன்னு. "வாய்க்குள் என்னய்யா வேடிக்கை" ன்னு வடிவேலு கேக்குற மாதிரி இந்த சிக்னலயெல்லாம்
ஏண்டா நீங்க பூந்து ஆராய்ச்சி பண்ணிகிட்டு இருக்கீங்க. அவன் அவன் கடுப்புல இருக்கும் போது ரெண்டு MUTO வும்  சந்திச்சி ஒரு உம்மா குடுத்துக்கும் பாருங்க.... வக்காளி டேய்... உங்களால மட்டும் தாண்ட இந்த மாதிரி சீனெல்லாம் வைக்க முடியும்.



ரெண்டு MUTO வும் வந்தப்புறம் கூப்புடுறோம் நம்ம ஹீரோ காட்ஸில்லாவ. அவரு கடல்லருந்து கெளம்பி வந்து ஒரு ஃபைட்ட போட்டு ராஜ்கிரன் அடி ஆளுங்கள தொடையில வச்சி ரெண்டா முறிச்சி போடுற மாதிரி ஒரு MUTO வ ரெண்டா முறிச்சி போட இன்னொரு MUTO வந்து நல்லா சண்டை போட்டுக்கிட்டு இருக்க ஹீரோவ திடீர்னு ஒருத்தன் வந்து கட்டையால பின்னால அடிச்சி மயக்கம் போவ வைக்கிற மாதிரி காட்ஸில்லாவ அடிச்சி தூக்கி வீசிடுது. காட்ஸில்லா மயக்க நிலைக்கு போயிடுறாரு. இந்த சமயத்துல ஹீரோவ மியூட்டோ கடிக்க வரும்போது திடீர்னு ஒரு கை மியூட்டோவ பின்னாலருந்து தடுக்குது. யாருன்னு பாக்குறீங்களா? அட மயக்கமா கெடந்த நம்ம காட்ஸில்லா, ஹீரோயின வில்லன் கொல்ல வரும்போது மயக்கமா கெடக்குற ஹீரோ டக்குன்னு முழிச்சி வந்து சண்டை போடுவாரே அதே மாதிரி முழிச்சி வந்து ரெண்டாவது MUTO வயும் கொண்ணுட்டு தானும் கீழ சரிஞ்சி விழுந்துடுது.

அந்த சோகத்தோட "A film by Bharathi Raja" ன்னு போட்டு முடிச்சிருவாய்ங்கன்னு  பாத்தா இல்லை..  தங்களக் காப்பாத்த தன்னோட உயிரையே விட்ட காட்ஸில்லாவுக்காக மக்கள் கண்ணீர் வடிக்கும் போது, பதினைஞ்சி கத்திக்குத்து வாங்குனப்புரம் அடுத்த சீன்ல "நா எங்கருக்கேன்" ன்னு கேட்டுகிட்ட ICU ward la உயிரோட முழிச்சி பாக்குற ஹீரோ மாதிரி காட்ஸில்லாவும் மெதுவா கண்ண முழிச்சி எழுந்து கால நொண்டிக்கிட்டே மெல்ல மெல்ல நடந்து தண்ணிக்குள்ள போயிருது.  ஊர்காரங்கல்லாம் ஹாப்பி அண்ணாச்சி. அதாவது அந்த சீனுக்கு என்ன அர்த்தம்னா (பாரதி ராஜா குரல்ல படிங்க)  "இவர்களுக்கு இனி எப்போதெல்லாம் உதவி தேவைப்படுகிறதோ அப்போதெல்லாம் இந்த கடல் காட்ஸில்லா மீண்டும் வருவான்". யப்பா டேய்... ஓட்டுனது போதும்டா ரீலு அந்து போச்சு..

நா உருப்படியா ஒரு வேலையச் செய்வேன்னா அது படம் பாக்குறது மட்டும் தான். எவ்வளவு மொக்கையா இருந்தாலும் முழிச்சிருந்து பாப்பேன்.  நண்பர் டான் அசோக் மூணு வருசத்துக்கு முன்னால "Inglorious Basterds"ன்னு ஒரு படத்துக்கு அழைச்சிட்டு போனாரு.  நா இதுவரைக்கும் தியேட்டர்ல அந்த ஒரே ஒரு படத்துல தான் தூங்கிருக்கேன். அதுக்கடுத்து நா தூங்குனதுன்ன படம்னா அது இது தான். என்னய மாதிரியே பார்க்கிங் காசு வீணா போகுதுன்னு யாரும் இந்த தப்பான முடிவ எடுத்துடாதீங்க.

படம் மொக்கையா இருந்தது கூட பரவால்லை. படம் முடிஞ்சி வெளிய வரும்போது ஒரு yo yo boy அவரோட girl friend கிட்ட சொன்னாரு " not bad ya... i give 6.5 out of 10". எனக்கு டபீர்னு வெடிச்சிருச்சி. அத கேட்டுட்டு திருமதி பழனிச்சாமில பாண்டு சொல்ற வசனம் தான் ஞாபகம் வந்துச்சி "அதுகளுக்கு இதத்தான் கல்யாணம் பண்ணி வைக்கனும்.அதுகளுக்கு பொம்பளைய மட்டும் கல்யாணம் பண்ணிவைக்கவே கூடாது" ங்குற மாதிரி "உங்களூக்கு
இந்த மாதிரி படம் தாண்டா எடுக்கனும். நல்ல படம் மட்டும் வந்துடவே கூடாது" ன்னு நெனைச்சிட்டு  வந்தேன்.


பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

8 comments:

தியானி said...

//டேய் என்னடா இது? கிங்காங் படத்துல வந்த குரங்குக்கு முதுகுல கட்டி வந்த மாதிரி இவ்வளவு கேவலமா இருக்கு? //

ரகள...ரகள...

Unknown said...

Enaku 40 aed micham panuna umgaluku romba thanks.

Unknown said...

Enaku 40 aed micham paniya ungaluku romb thanks

Anonymous said...

செம comedyயான விமர்சனம். சூப்பர் bro.

Anonymous said...

I like your comedysense

Anonymous said...

Ungakitta comedy neraiya edhirparthen but indha padathukku idhu pothum

சிகரம் பாரதி said...

அதிரடிக்காரன்னு சொல்றது சரியாத்ான்யா இருக்கு. நல்ல விமர்சனம். ஆனா ஒரு கவலை. இதுவரை திரையரங்குகளில் 25 க்கும் மேற்பட்ட திரைப்படங்களைப் பார்த்திருந்தாலும் 3D இல் இரு படம் கூட பார்த்ததில்லை. முதல் தடவையா காட்ஸில்லாவை பார்க்கலாம்னு இருந்தேன். வட போச்சே! நஷ்டம் எனக்கில்ல எல்லாம் அந்த
காட்ஸில்லா கம்பெனிக்காரனுக்குத்தான்.

நமது வலைத்தளம் : சிகரம்

சிகரம் பாரதி said...

த.ம. 1

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...