Friday, June 13, 2014

மஞ்சப்பை - MUST WATCH!!!


Share/Bookmark
SPB மஞ்சப்பை படத்துல ஒரு பாட்டு பாடிருக்காருன்னு எதேச்சையா கேள்விப்பட்டது தான் இந்தப் படம் பாக்க முக்கியமான ஒரு காரணம். படம் பேர சொன்னா "இப்படி ஒரு படம் வந்துச்சா?"ன்னு நீங்க கேக்கக்குற  மாதிரியான படத்துல கூட SPB பாடுன பாடல்களை எடுத்து பல முறை கேட்டுருக்கேன். ஏன் மேதை படத்துல  அவர் பாடுன ரெண்டு பாட்டயும். J.K.ரித்திஸ் படத்துல வர்ற ஒரு பாட்டயும் கூட இப்ப வரைக்கும் அடிக்கடி கேட்டுக்கிட்டு இருக்கேன்.  அப்படி என்னதான் இருக்கோ அந்தக் குரல்ல... "ஆகாச நிலவு தான் அழகாத்  தெரியல" ன்னு அவர் ஆரம்பிக்கும் போதே  அப்டியே புல்லரிக்குது. படம் பாக்கும் போது புல்லரிக்கிறது  சகஜம். ஆனா பாட்டக் கேட்டாலே புல்லரிக்கிரது  SPB பாடுனா மட்டும் தான். 90s ல வந்த இளையராஜா  பாட்டு மாதிரி இருக்க 'ஆகாச நிலவுதான்" பாட்ட  கேக்கும் போது ரொம்ப நாளுக்கு முன்னால தொலைஞ்சி  போன ஏதோ ஒண்ணு திரும்ப கிடைச்ச மாதிரி ஓரு  சந்தோஷம்.  படம் பாத்து முடிச்சப்புறம் அதே மாதிரி  ரொம்ப நாளுக்கு முன்னால தொலைஞ்சி போன  இன்னொன்னும் திரும்ப கிடைச்ச மாதிரி ரொம்ப  சந்தோசஷம்.

ஒருத்தன சிரிக்க வைக்கிறது எவ்வளவு கஷ்டமோ அதே அளவு அழுக வைக்கிறதும் கஷ்டம். மக்கள ஃபீல்  பண்ண வைக்கனும் அடி மனச டச் பண்ணனும்னு நம்மாளுங்க இப்ப ஒரு கேவலமான ட்ரெண்ட்ட உருவாக்கி வச்சிருக்காய்ங்க. உதாரணத்துக்கு ஒரு குழந்தைக்கிட்ட இப்டி ஒரு கதை சொல்லுங்க. "ஒரு ஊர்ல  ஒருத்தன் நல்லா ஜாலியா இருந்தானாம். திடீர்னு ஒரு நாள் அவன் செத்து போயிட்டானாம்" அப்டின்னு.  அவ்வளவு தான் கதை. பொளிச்ன்னு அந்தக் குழந்தை காரி துப்பிட்டு போயிடும்.  அதாவது யாராது ஒருத்தர  கடைசில சாகடிச்சா மக்களுக்கு அப்டியே அழுக வந்துரும். அடிமனச டச் பண்ணிருவாங்களாம். 

இந்த  ட்ரெண்டோட உச்சக்கட்ட கொடூரத்துல வெளிய வந்தது "எங்கேயும் எப்போதும்"ங்குற ஒரு படம். ஒருத்தன் நல்லா லவ் பண்ணிட்டு ஜாலியா இருக்கான். திடீர்னு அடிபட்டு செத்து போயிடுறான். என்னய்யா இது? நிஜ  வாழ்க்கையில இது நடக்கலாம். ஆனா சினிமாவுக்குன்னு ஒரு மரியாதை இருக்கு. க்ளைமாக்ஸ் டச்சிங்கா இருக்கனும் தான், அதுக்குன்னு இப்புடியா... இந்த மாதிரி கேவலமான் ட்ரெண்டுகளை உடைச்சி, ஒரு  அருமையான செண்டிமெண்ட் படத்த குடுத்ததுக்கு இயக்குனருக்கு முதல் நன்றி.

ஒரு 8 வருஷத்துக்கு முன்னால "தவமாய் தவமிருந்து" ன்னு ஒரு படத்துல "கதையின் நாயகனாக" ராஜ்கிரண் போட்டு ரிலீஸ் பண்ணாங்க. பேருக்கு மட்டும் இல்லாம உண்மையிலயே கதையோட நாயகனா ராஜ்கிரண்  தான் இருந்து படத்த தூக்கி நிறுத்துனாரு. இப்போ அதோட பல மடங்கு ஃபோர்ஸோட இன்னொரு கதை  நாயகனா இறங்கி நம்மள சிரிக்கவும் அழவும் வச்சிருக்காரு. வேற யாரயும்  இந்த கேரக்டர்ல நினைச்சிக் கூட பாக்க முடியல. ஏன்.. மகாநடிகன் ப்ரகாஷ்ராஜ் கூட இந்த கேரக்டர் பண்ணிருந்தா இவ்வளவு impact கொண்டு  வந்துருக்க முடியாது. 

அப்பா அம்மா இல்லாத குழந்தையான விமல்ல தாத்தா ராஜ்கிரன் வளர்த்து ஆளாக்குறாரு. அமெரிக்கா  போறதயே வாழ்க்கை லட்சியமா நினைச்சி வாழ்ந்துகிட்டு இருக்க software engineer விமல், அமெரிக்கா  போறதுக்கு முன்னால இருக்க மூணு மாசமும் தாத்தா ராஜ்கிரன் கூட சந்தோஷமா இருக்கனும்னு முடிவு  செஞ்சி முதல் முறையா அவர சென்னைக்கு அழைக்கிறாரு. ராஜ்கிரன் சென்னைக்கு வந்து  இறங்குனப்புறம்  நடக்குற விஷயங்கள் தான் படம்.

எப்பொழுதும் குழந்தை மாதிரி சிரிப்ப முகத்துல வச்சிகிட்டு அந்த அழுக்கு வேட்டி சட்டையோட அவர்  நடந்து வர்றத பாக்கும் போதே அவர் விமல் தாத்தா மட்டுமில்லாம நம்மோட தாத்தாவுமாயிடுறாரு. புதுசா  ஒருத்தன் சென்னைக்கு வந்தா, அவன் எத எதயெல்லாம் பாத்து குறை சொல்றானோ, அசிங்கம்னு  சொல்வானோ அத்தனை விஷயத்தையும் தாத்தா ராஜ்கிரன வச்சி சிரிக்க வச்சும் சில இடங்கள்ல சிந்திக்க  வச்சும் டைரக்டர் சொல்லிருக்காரு. குறிப்பா பீச்ல முக்காடு போட்டுகிட்டு இருக்க ரெண்டு பேர பாத்து  ராஜ்கிரன் ஆறுதல் சொல்றதயும்அனகோண்டா படத்த பாத்துட்டுஏன் காட்டுக்குள்ள போவானேன்.. பாம்புகிட்ட கடிவாங்குவானேன்ங்குறதும் அல்டிமேட்.

யார் முதல்ல இத ஆரம்பிச்சதுன்னு தெரியல.. சென்னையின்னா அது வேற மாதிரி... அங்க யாரும் யார்கிட்டயும் ஒழுங்கா முகம் குடுத்து பேச மாட்டாங்க.. சிட்டிகாரங்கன்னாலே இப்டித்தான்... அவங்களுக்கு  அடுத்தவங்க பழக்கமே புடிக்காது. ஆமா நா தெரியாமத்தான் கேக்குறேன்.. சென்னையிலயே இருக்கவங்க  எத்தனை சதவீதம்யா? இன்னிக்கு நிலமைக்கு கணக்கெடுத்தா 20% பேர்தான். மத்த ஆளுங்க எல்லாம் இந்த  மாதிரி கிராமத்துலருந்து போய் செட்டில் ஆனவங்கதானே.. நீ கிராமத்தான் தானே.. நீ அடுத்தவண்ட பேச  வேண்டியது தானே... அடுத்தடுத்து வர்றவியிங்களும் அதே மாதிரி இருந்தா அப்புறம் எப்புடிடா இருக்கும்.  இதுல சிட்டில இருக்கவங்கள குறை வேற சொல்றது. இவியிங்களா ஒரு வட்டத்த போட்டுகிட்டு அத விட்டு  வெளிய வராம அடுத்தவன குறை சொல்றது.

பொதுவா படங்கள்ல குறைகள் அப்பட்டமா தெரியும். ஆனா இங்க அத்தனையும் ராஜ்கிரனோட நடிப்புல  காணாம போயிடுது. குறிப்பா விமலோட நடிப்பு. என்ன நடந்தாலும் ஒரே ரியாக்சன மட்டுமே கொடுக்குற விமல் தான் படத்தோட மைனஸ். படத்துல ராஜ்கிரனுக்கு நடிப்ப வெளிப்படுத்த எந்த அளவு ஸ்கோப்  இருக்கோ அதே அளவு பேரன் விமலுக்கும் இருக்கு. ஆனா நம்மாளுக்கு அதெல்லாம் ஒண்ணும் வரல. ஆனா  எல்லாத்துக்கும் சேத்து ராஜ்கிரன் நடிச்சிதள்ளிட்டு பொய்ட்டாரு. தப்புன்னு பட்டா கொஞ்சம் கூட  யோசிக்காகம பேசுறதும், யாருன்னு கூட பாக்காம பொளிச்சின்னு அடிக்கிறதுமா அப்படியே கிராமத்துத்து தாத்தாவாக நடிச்சிருக்காருன்னு சொல்றத விட வாழ்ந்துருக்காருன்னு தான் சொல்லனும்.

தெரியாம அவர் செய்யிற விஷயங்கள், விமலுக்கு கஷ்டங்களக்குடுக்க, "தெரியாம செஞ்சிட்டேன்ய்யா"ன்னு  அந்த சோகமான முகத்த வச்சிகிட்டு சொல்றாரு பாருங்க.. கொடூரம்... குறிப்பா விமலோட லேப்டாப்ப உடைச்ச அப்புறம் "அய்யா அது நீ வேலை செய்யிற பொட்டியாம்ல.. எனக்கு தெரியலைய்யா... அதான் உன்  ஆத்தா தாலில செஞ்ச மோதரத்த வித்து இத வாங்கிட்டு வந்தேன்.. உங்க ஆத்தா இறந்தப்ப கூட அவ  என்கூட தான் இருக்கான்னு நெனைச்சி எனக்கு கஷ்டமா இல்லைய்யா... ஆனா நேத்து நீ செஞ்ச  வேலையெல்லாம் வீணாப்போச்சின்னு தலையில கை வச்சிட்டு நின்னப்போ என்னால தாங்க  முடியலைய்யான்னு " சொன்னோன்ன  background SPB பாட்ட போடுவாங்க.. பாருங்க.. அப்ப்பா...  சத்தியமா ரொம்ப நாள் ஆச்சி இந்த மாதிரி சீனெல்லாம் பாத்து.

கடைசியில தாத்தாவ காணும்னு எல்லாரும் தேடும்போது அவங்கள விட "தாத்தாவுக்கு எதுவும்  ஆயிடக்கூடாதுன்னு நம்ம மனது துடிக்குது. தாத்தா இறந்துபோயிடுற மாதிரி மட்டும் காட்சி  வச்சிடக்கூடாதுன்னு நினைச்சிகிட்டே இருக்க, கடைசில அதைவிட கொடூரமான ஒரு க்ளைமாக்ஸ் வச்சி அழ வச்சிட்டாங்க. அந்த ஒரு சீன்ல மட்டும் தான் விமல் நடிக்க கொஞ்சம் ட்ரை பண்ணிருக்காரு. வேற ஒரு
நல்ல ஹீரோவ போட்டுருந்தா இந்தப் படத்தோட ரேஞ்சே வேற. 

 இன்னொரு முக்கியமான விஷத்துக்காக டைரக்டர பாராட்டியே ஆகனும். படத்துல இருக்க கேரக்டர்கள்  ரொம்ப கம்மி. கதைக்கும் காட்சிகளுக்கும் தேவையான கேரகடர்களத் தவற வேற எந்த extra வும் படத்துல  இல்லை. அதே மாதிரி ஒரு காட்சி கூட தேவையில்லாத காட்சியே இல்லை. எல்லாமே கரெக்டாவும்,  யோசிச்சும் தெளிவா பண்ணிருக்காரு. சூப்பரான ஸ்க்ரீன் ப்ளே. மத்தப்படங்கள் மாதிரி வச்ச டைட்டிலுக்கு  justification  குடுக்குற மாதிரி ஒரு காட்சி 'வந்துட்டனுங்க மஞ்சப்பைய தூக்கிகிட்டு ஊர்லருந்து" ன்னு இவரும் வச்சிருவாரோன்னு பயந்தேன். நல்ல வேளை அந்த விஷயத்துலயும் டைரக்டர் தெளிவாவே இருக்காரு.

ரெண்டு பாட்டு சூப்பர். "பாத்து பாத்து"  பாட்டுக்கு cherography செம. முன்னாலயே சொன்னமாதிரி "ஆகாச  நிலவு தான்" அட்டகாசம்.. இப்போ என்னோட ரிங் டோன், ஹலோ டியூன் அத்தனையும் அது தான். லஷ்மி மேனன் ஓக்கே.. நிறைய காட்சிகள்ல அழகா காமிச்சிருக்காங்க.


மொத்ததுல மஞ்சப்பை ராஜ்கிரனோட one man show. கண்டிப்பா பாருங்க. நிச்சயாமா ஏமாத்தாது. நா  தொலைச்சது எனக்கு கெடைச்ச மாதிரி உங்களுக்கும் நீங்க தொலைச்ச சினிமா கண்டிப்பா இதுல கிடைக்கும்.

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

9 comments:

makka said...

this is remake movie from Hindi. original version "atithi tum kab jaoge". its nice movie

makka said...

this is remake movie from Hindi. original version "atithi tum kab jaoge". its nice movie

Ramesh said...

என்னடாது நம்ப முடியாத விமர்சனமா இருக்கே.... இதை எழுதனது நீங்கதானா... இவ்லோ சீரியஸா இருக்கு..... பட் பார்த்தே ஆகனும்னு நினைக்க வச்சிட்டீங்க....

Anonymous said...

They should have changed the climax to a happy ending

Anonymous said...

Climax should be changed to a happy ending

கரந்தை ஜெயக்குமார் said...

நன்றி நண்பரே

கரந்தை ஜெயக்குமார் said...

tha ma 1

Tamizhan said...

That song feels good simply because you have listened to it already! "Paadaatha themmaangu naa paada vanthaenae...." a vijaykanth movie, cant recollect which one.
Some of the scenes and the story line is from a Malayalam film, a mammotty starrer., sorry i couldn't specify the name of the movie.
Climax of the movie is totally unnecessary. The director probably thought it brings more emotional value, but it actually destroys the feel the movie created till that. The character simply doesn't deserve that fate.

முத்துசிவா said...

@Tamizhan:

//That song feels good simply because you have listened to it already! "Paadaatha themmaangu naa paada vanthaenae...." a vijaykanth movie, cant recollect which one.//

நீங்க சொல்றது சரிதான். பார்க்கப்போனா பெரும்பாலான இளைய ராஜா பாடல்கள் ஒரே ராகத்துல தான் இருக்கும். இந்தப்பாட்ட கேட்டோன உண்மையிலயே ரொம்ப புடிச்சிருச்சி.

//Some of the scenes and the story line is from a Malayalam film, a mammotty starrer., sorry i couldn't specify the name of the movie.//

இருக்கலாம் நண்பா எனக்கும் தெரியில. மேல ஒரு நண்பர் இது ஹிந்தி பட ரீமேக் னு சொல்லிருக்காரு. எப்டியோ இந்தப் படம் நல்லா இருந்துச்சி like நம்ம விகரமன் படங்கள் மாதிரி.

//Climax of the movie is totally unnecessary.// Happy ending இருந்துருக்கலாம். ஆனா எனக்கு இந்த க்ளைமாக்ஸ் ஓக்கே மாதிரி தான் இருந்துச்சி. அந்த பேரனுக்கு இதவிட ஒரு கொடுமையான தண்டனை இருக்க முடியாது. உங்களுக்கு எப்டியே எனக்கு இந்த படம் பாத்த எஃபெக் ஒரு நாள் ஃபுல்லா இருந்துச்சி. :-)

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...