Saturday, August 16, 2014

அஞ்சான் – அவ்வ்வ்…. அழுதுருவேன்!!!


Share/Bookmark
எச்சரிக்கை: அஞ்சான் பாக்க போகும் போது உங்கள் டூவீலரையோ அல்லது ஃபோர் வீலரையோ ஈஸியாக எடுக்குற மாதிரி இடத்துல பார்க் பண்ணிட்டு படம் பாக்கப் போங்க. ஏன்னா படம் முடியிறதுக்குள்ளயே நீங்க வண்டிய எடுக்க வேண்டிய சூழ்நிலைகள் ஏற்படும். அந்த சமயத்துல ரொம்ப உள்ளயோ இல்லை எடுக்க முடியாத இடத்துலயோ வண்டிய விட்டுட்டீங்கன்னா, தவிர்க்க முடியாமல் முழுப் படத்தையும் பாக்க வேண்டிய சூழ்நிலைக்கு ஆளாவீர்கள். மேலும் இதன் காரணமாக மருத்துவச் செலவுகள் அதிகரிக்கக் கூட வாய்ப்புகள் அதிகம். 

எனக்கு ரொம்ப புடிச்ச சில டைரக்டர்கள்ல லிங்குசாமியும் ஒருத்தர்.ரொம்ப அதிக படங்கள் எடுக்கலைன்னாலும் எடுத்த படங்கள் எல்லாமே ஓரளவுக்கு நல்ல படங்கள் தான். விஷாலுக்கும், மாதவனுக்கும் தமிழ்ல ஒரு நல்ல ப்ளாட்ஃபார்ம் குடுத்தது  இவரோட படங்கள் தான். ரன் எவ்வளவு பிச்சிக்கிட்டு ஓடுச்சின்னு எல்லாருக்கும் தெரியும். சண்டைக்கோழி இன்னொரு ட்ரெண்ட் செட்டிங் படம்.அந்தப் படம் பாத்தது இன்னும் ஞாபகம் இருக்கு.காலேஜ் செகண்ட் இயர் படிக்கும் போது காலையில செமஸ்டர் எக்ஸாம் எழுதிட்டு அப்டியே ஃபுல் மீல்ஸ போட்டுட்டு அந்தப் படத்துக்கு போனோம்.போனது லிங்குசாமிக்காவோ, விஷாலுக்காகவோ இல்லை.ஒன் அண்ட் ஒன்லி மீரா ஜாஸ்மீனுக்காக மட்டும் தான்.

“பையன் மேல எதுவும் கை வச்சிடலயே.. விஷயம் பெருசாருக்குண்ணே.. தொரை அண்ணேன் பையன்… தேனி கம்பம் சுத்துப்பட்டு ஏரியவுல அவுங்க வச்சதுதான் சட்டம் அவங்க சொன்னது தான் ஞாயம்ன்னு சொன்னோன்ன ராஜ்கிரன் நாலு பேர தூக்கி போட்டு மிதிச்சிட்டு , ஈரக் கொலைய அத்துபுடுவேன்” ன்னு பேசுற சீன் வரும்போது உண்மையிலயே புல் அரிக்க வச்ச படம். பீமாவும் அப்டித்தான்.படம் கமர்ஷியலா ப்ளாப்புன்னாலும், க்ளைமாக்ஸ் தவற மத்த எல்லாமே செமயா இருக்கும்.குறிப்பா மார்க்கெட்ல விக்ரம் ஒருத்தர் மட்டும் நின்னு சமாளிக்கிற சீன்.

இவ்வளவு ஏன் கடைசியா வந்த வேட்டை படத்துல கூட மாதவன் அடிவாங்கி ஹாஸ்பிட்டல்லருந்து திரும்பி வந்ததும் தம்பி ராமைய்யாவ பாத்து மொறைச்சிகிட்டே கேப்பாரு..“ஏண்டா அன்னிக்கு என்ன விட்டு ஓடுன?” ன்னு.அதுக்கு தம்பி ராமைய்யா “எங்க சார தனியா விட்டு போறதுல எனக்கு என்ன சார் பயம்.நீங்க எப்பவும் தனியா போய் சாதிச்சித் தான சார் பழக்கம். என்கிட்ட வண்டிய விட்டு ஓடிருன்னுசொன்னானுங்க.. எல்லாரும் ஒண்ணா வந்து மாட்டுனானுங்கன்னு நெனைச்சேன்.. விடுங்கசார்… யானைக்கும் அடி சருக்கும்” ன்னு  சொல்ற சீன் எனக்கு ரொம்ப புடிக்கும். 

அஞ்சான் படத்தப் பத்தி சொல்ல சொன்னா எதுக்குப்பா  இப்ப லிங்குசாமியோட வாழ்க்கை வரலாறல்லாம் விட்டு நோண்டிக்கிட்டு இருக்கன்னு தானே வெறிக்கிறீங்க. அதிலருந்து நா சொல்ல வர்றது என்னன்னா அவர் எடுத்த எல்லா படத்துலயும் ஒரு நல்ல சீனாவது இருக்கும். ஆனா அஞ்சான்ல அந்த மாதிரி அறிகுறி எதுவுமே தெரியலயேப்பா. அஞ்சான் பார்க்கும் ஆர்வமிருப்பவர்கள், பார்க்கலாம் என முடிவு செய்திருப்பவர்கள் இதுக்கு மேல தொடர்ந்து படக்க வேண்டாம் என அறிவுறுத்தப் படுகிறார்கள்.

ஓப்பனிங்கலயே வாக்கிங் ஸ்டிக்க வச்சிக்கிட்டு கிருஷ்ணாங்குற நம்ம சூர்யா (மீசை தாடி ட்ரிம் செய்யப்பட்டவர்) மும்பைக்கு ராஜூங்குற அவரோட அண்ணன தேடி வர்றாப்டி. ஒவ்வொரு ரவுடியா போய் அண்ணன் எங்க அண்ணன் எங்கன்னு கேக்க ஒவ்வொருதனும் உங்க அண்ணன் பெரிய டானுப்பா. அவன் நின்னா ஊர்வலம், நடந்தா கலவரம்ன்னு  ராஜுவ கண்டமேனிக்கு ஏத்தி விடுறாய்ங்க. அப்போ ஒருபையன் கிருஷ்ணாவோட லாப்டாப் bag ah புடிங்கிட்டு ஓடிருறான். நம்மாளல தான் ஓட முடியாதே அப்டியே ஷாக் அடிச்சி நிக்க, அடுத்த நிமிஷம் லாப்டாப் திருடிட்டு போன பச்சக் குழந்தைய நாலுபேரு அடிச்சி இழுத்து கொண்டாந்து விடுறாய்ங்க.

சார் உங்க லாப்டாப் வால்பேப்பர்ல ராஜூபாய் போட்டோ இருந்துச்சி நீங்க ராஜூக்கு வேண்டப்பட்டவர்னு தெரியாம இவன் பண்ணிட்டான். இத ராஜூபாய்கிட்ட சொல்லிடாதீங்கன்னு கெஞ்ச…. ஒரு நிமிஷம் பொறுங்கப்பா இந்த சீன வேற ரூபத்துல நா எங்கயோ பாத்துருக்கேனே.. ஆங்.. அது ஒண்ணும் இல்லை… “அண்ணேன்.. நீங்க அருணாச்சலம் வீட்டுக்கு வந்துருக்கீங்கன்னு தெரியாம உங்ககிட்ட பணம் கேட்டுட்டேன்.. நா பணம் கேட்ட விஷயத்த மட்டும் அருணாச்சலம் அண்ணன் கிட்ட சொல்லீடாதீங்கண்ணே…” 

சரி ஒழிஞ்சி போவட்டும்.அடுத்து ஒரு பார்ல போய் நாலு ரவுடிங்ககிட்ட ராஜூவ பத்தி கேக்குறாரு. அவனுங்க சொல்லாம முறைச்சிட்டு போயிட, அங்க பாட்ஷா செகண்ட் ஹாஃப் ரகுவரன் மாதிரி ஒரு கெழவன் ஃபுல் மப்புல கிருஷ்ணாவ கூப்டு “ ராஜூ நாய் (நஹி)… நாஜூ பாய் போலோ” “சிங்கத்த பத்தி பன்னிங்க்கிட்ட கேட்டா அதுங்களுக்கு எப்டி தெரியும்” “ராஜூபாய் பேரு விண்டே சச்சுப்போவாலீ” ங்குறாரு. டேய்.. அவன் என்ன ராஜூபாயா இல்ல ராஜ்தானி எக்ஸ்ப்ரஸாடா… ரயில்வே ஸ்டேஷன்ல சொல்ற மாதிரி மூணு லாங்வேஜ்ல பில்ட் அப் குடுக்குறீங்க. இந்த ட்ரை லிங்குவல் படம்ன்னு கேள்விப்பட்டுருக்கோம். ஆனா ஒரே படத்துல மூணு லாங்குவேஜயும் வச்சி எடுத்த ட்ரை லிங்குவல் படத்த இப்பதாண்டா பாக்குறோம்.

சரி Build up பயங்கரமா இருக்கே ராஜூபாய் பெரிய டான் போலருக்கு. பாம்பேல எல்லா குட்டி தாதாக்களும், சேட்ஜீக்களும் அவரு கையில கிஸ் குடுப்பாங்க போலருக்குன்னு பாத்தா இவன் வர்றான். டேய்… என்னடா இது டீப்பாய் உயரம் இருக்க இவந்தான் ராஜூபாயா.. அது என்ன மண்டையில புலிக்குட்டி தம்பி பூனைக்குட்டி மாதிரி முள்ளம்பன்றி சிலுப்பிக்கிட்டு நிக்கிது. பக்கத்துல நிக்கிறவிங்க தள்ளி நில்லுங்கடா..கண்ணகுத்தி அவிச்சிறப் போறான்.

சரி இண்ட்ரோ மொக்கையாயிடுச்சி… விடுப்பா விடுப்பா.. மொக்கை படத்துக்கு நல்ல இண்ட்ரோ இருக்கதும் நல்ல படத்துக்கு மொக்கை இண்ட்ரோ இருக்கதும் சகஜம் தானப்பா… இனிமேயாச்சும் ராஜூபாய் களத்துல இறங்குவார்னு பாத்தா படக்குன்னு சமந்த்தா உள்ள வந்துடுது. ராஜூபாய்க்கு லவ் மூடு சாட் ஆயிடுது.அரே பாய்… அரே பாய்… நீங்க இன்னும் ஆக்சன் செக்மெண்டயே ஒழுங்கா கம்ப்ளீட் பண்ணல பாய்.இதுல அதுக்குள்ள லவ்வுக்கு பொய்ட்டீங்களா.சரி விடுங்கபாய். லவ்வயாச்சும் ஒழுங்கா பண்ணுங்கன்னு  பாத்தா… ஒரு நிமிசம்baa… இந்த லவ் ட்ராக்கயும் நா எங்கயோ பாத்துருக்கேன். ஆங்.. பீமா படத்துல விக்ரம திரிசா தொரத்துற மாதிரி இங்க சமந்த்தா இவர தொறத்துதுbaa.. அவர் படத்துலருந்து அவரே காப்பி அடிச்சிக்கிறாரு.. அதானல இன்னாப்பா..விடுங்க.

First half ஃபுல்லா ராஜுபாய் ராஜூபாய்ன்னு பில்டப்ப அள்ளித் தெளிக்கிறாங்கப்பா.ஆனா ராஜூபாய் எதுவுமே பண்ண மட்டேங்குறாரு. வெட்டியாதான் இருக்காரு. அப்பப்போ சம்ந்தாவ பாத்து வழியிறாரு. சமந்தா இவர்கிட்ட லவ்வ சொல்லவர்றப்போ “உன் கால் தரையில படல நீ  பதட்டமா இருக்க. டைம் எடுத்துட்டு வந்து சொல்லு”ங்குறாரு. நல்லவேளை யோகா க்ளாஸூக்கு போ, காலையில சூரிய நமஸ்காரம் பண்ணுன்னு சொல்லாம விட்டானே.ஹரி படத்துல அதிகமா நடிக்காதைய்யான்னா கேக்குறானா.

இன்னொரு கருமம் என்னன்னா மத்தவிங்க ராஜூபாய் ன்னு கையில பச்சை குத்திருப்பாய்ங்க ஓக்கே.ராஜூவ லவ் பண்ற சமந்தாவும் கையில Raju bhai ன்னு பச்சை குத்திக்கிது.எந்த ஊர்லய்யா லவ்வரு “ராஜூ அண்ணேன்” ன்னு பச்சை குத்திக்கும். ராஜூபாய் அருக்குறது மட்டும் இல்லாம கலாச்சார சீர்கேட்ட வேற உண்டாக்குறாருய்யா.

அப்புறம் அப்பப்போ ராஜூபாய் பஞ்ச் டயலாக்கெல்லாம் பேசுறாரு.“சுட்டோன்ன பறக்க புறா இல்லைடா… உக்காந்துருந்து இறைய குறி வச்சி தூக்கிட்டு போற கழுகுடா”ங்குறாரு. அய்யோ பாய்… உங்களுக்கு பஞ்ச் டயலாக்கே பேசத் தெரில பாய்..இதுல ரைமிங்கும் இல்லை டைமிங்கும் இல்லை.“சுட்டோன்ன பறக்க புறா இல்லைடா… சுறா”ன்னு சொல்லிருந்தா சம்பந்தமில்லாம இருந்தாலும் ஒரு ரைமிங்காவாவது இருந்துருக்கும்.

சூரியாவுக்கு ஒரு க்ளோஸ் நண்பன்.அவனுக்காக இவன் எதுவும் செய்வான். இவனுக்காக அவன் எதுவும் செய்வான்னு இவனுங்க ரெண்டு பேருமே மாத்தி மாத்தி வாயாலயே வடை சுட்டுக்குறானுங்க. ரொம்ப நேரமா இப்டி மாத்தி மாத்தி பில்ட் அப் பண்றானுங்களே தவற எதுவும் பண்ண மாட்றாய்ங்க. அதுவும் அவர் நண்பனா துப்பாக்கி பட வில்லன் வித்யூத்  ஜம்வால் . கொஞ்சம் கூட டயலாக்குக்கு லிப் சிங்கே இல்ல. அந்த ஃப்ரண்டு கேரக்டருக்கு மட்டும் இல்லை..படத்துல முக்கால் வாசி பேருக்கு லிப் சிங்கே இல்லை. டாக்டர் ராஜசேகரோட தெலுகு டப்பிங் “இது தாண்டா போலீஸ்” பாக்குற எஃபெக்ட்டு.

ஒருதடவ டான் கா டான் ஒருத்தன் இவனுங்க ரெண்டு பேரயும் ஒரு பார்ட்டிக்கு கூப்டு “இதுக்கு மேல நீங்க மேல வந்தா பன்னிய சுடுற மாதிரி சுட்டுருவேன்”ன்னு மெரட்ட ராஜூபாயோட ஃப்ரண்டு பீல் ஆயிடுறாப்ள. “பன்னிய சுடுற மாதிரி சுடுவேன்”ன்னு சொல்லிட்டான் “பன்னிய சுடுற மாதிரி சுடுவேன்”ன்னு சொல்லிட்டான்னு மஞ்சப்பை க்ளைமாக்ஸ்ல வர்ற ராஜ்கிரன் மாதிரி சொன்னத்தயே திரும்ப திரும்ப சொல்ல… ஆஹா படம் இனிமே செண்டிமெண்ட் ட்ராக்ல ட்ராவல் ஆவப்போவுதோன்னு பாத்தா நல்லவேளை ஃப்ரண்ட் லூசாவலயாம்பா… சும்மா ஃபீல் ஆயிடுறாப்ள.. வில்லன கடத்தி பதிலுக்கு இவங்க மெரட்டுனோன்ன கூல் ஆயிடுறாப்ளே.

அப்புறம் கொஞ்ச நேரத்துல கூட இருக்க ஒருத்தனே ஃப்ரண்ட கொன்னுடுறான்.ராஜூபாய்யையும் சுட்டு தண்ணிக்குள்ள போட்டுறான்.SO, உங்க அண்ணன் ராஜூபாய் செத்துட்டாருப்பா”ன்னு கிருஷ்ணாவா வர்ற தம்பி சூர்யாகிட்ட ஒரு பாய் (இவரு வேற பாய்) கதைய சொல்லி முடிக்க, அப்போ ஒரு ரவுடி கும்பல் வருது. ராஜூபாய் தம்பி தான் இந்த சூர்யான்னு தெரிஞ்சி அவரையும் கொல்லப்போகும் போது, வாய்க்குள்ளருந்து ஒரு பல்லு குத்துற குச்சிய எடுக்குறாரு சூர்யா.
அதப்பாத்தோன்ன நமக்கு என்ன தோணும்? லூசுப்பய அஞ்சப்பர்ல நல்லா Unlimited meals ah போட்டுட்டு பல்லு குத்துறதுக்கு குச்சிய எடுத்துட்டு வந்துருக்காம்பாருன்னு தானே தோணும். ஆனா அந்த ரவுடிங்கள்ளம் உடனே ஷாக் ஆவுறாங்க.. ஏனா ராஜூபாய் தான் வாயில குச்சி வச்சி நோண்டிக்கிட்டு இருப்பாராம். 

உடனே அவங்ககூட கதை சொன்ன பாயும் ஷாக் ஆயி “ராஜூபாய்ய்ய்ய்” ங்குறாரு. யோவ் கூமுட்ட பாயி.. இவந்தான் ராஜூபாய்ன்னு எங்களுக்கே முன்னால தெரிஞ்சிருச்சி உனக்கு இப்பதான் தெரியிதா.. நீயெல்லாம் எப்புடி கும்கில ஊர்த்தலைவரா இருந்து ஊரக்காப்பத்துன. அனைத்துரவுடிங்களையும் ராஜூபாய்பந்தாடுனப்புரம் இண்டர்வல்.

இண்டர்வல்ல பக்கத்துல ரெண்டு பேரு பேசிட்டு இருந்தாய்ங்க. “மச்சி இவந்தான் அவன்னு எனக்கு அப்பவே டவுட்டு வந்துச்சி.. கடைசில நா நெனைச்சது கரெக்டா ஆயிடுச்சிடா”ன்னான் அவன் ஃப்ரண்டு கிட்ட. நா மனசுசுக்குள்ள நெனைச்சிகிட்டேன் “டேய் இவன் தான் அவன்னு வெளில பாப்கார்ன் விக்கிற அண்ணனுக்கு கூட தெரிஞ்சிருக்கும்டா.. இத ஒரு ட்விஸ்டுன்னு இவனுங்க காமிக்க்றானுங்க..இதுக்கு நீயும் எதோ அணுகுண்ட கண்டுபுடிச்சிட்ட மாதிரி பெருமைப் பட்டுக்குற”ன்னு.அப்புறம் செகண்ட் ஹாஃப் என்ன வழக்கம்போல நண்பன கொன்னவனுங்கள ஒவ்வொருத்தரா ரொம்ப வழவழன்னு இழுத்து பழி வாங்குறாரு.

ஹீரோயினுக்கு சம்பளம் குடுக்குறோம்குறதுக்காக அதுங்கள் எவ்வளவு முடியுமோ அவ்வளவு யூஸ் பண்ணிடனும்னு இந்த டைரக்டர்களுக்கு ஒரு மைண்ட் செட் போலருக்கு.சம்ந்தாவ எல்லாருக்கும் எதுக்கு புடிக்கும்?க்யூட்டா இருக்கும்.சிரிச்சா அழகா இருக்கும்.அதானே.அந்தப்புள்ளை அரைகுறை ட்ரஸ் போட்டுக்கிட்டு ஆடுறதால யாரும் சமந்தாவுக்கு ஃபேனா இல்லை.அரைகுறை ட்ரஸ்ஸ போட்டுக்கிட்டு அது திரியும் போது அருவருப்பா தான் வருது.கண்றாவி.அழகா இருந்த மூஞ்சில ஆப்ரேசன் பண்றேன்னு அலங்கோலமா வேற ஆயிடுச்சி.

யுவன்சங்கர் ராஜா இன்னொரு கப்பி. Bang Bang Bang பாட்டும், சிரிப்பு என் ஸ்பெஷாலிட்டி, சில்க் ஸ்மிதா கம்யூனிட்டி பாட்டும் நல்லாருக்கு. மத்த பாட்டெல்லாம் ரம்பம்.டைட்டில் கார்டு போடும்போது வர்ற BGM செம. மத்தபடி லிங்குசாமியும் யுவனும் போட்டி போட்டு மொக்கை போட்டுருக்காய்ங்க. இருக்குற மொக்கை பத்தாதுன்னு கூடுதல் மொக்கைக்கு சூரி வேற. பொதுவாவே லிங்குசாமிக்கும் காமெடிக்கும் ரொம்ப தூரம்.கருமம் வராதத விட்டுட வேண்டியது தான.

படத்துல எனக்கு புடிச்சதுன்னு பாத்தா மூணே விஷயம்தான்.ஒண்ணு டைட்டில் கார்ட் அனிமேஷனும் அதுக்கு வர்ற மியூசிக்கும்.ரெண்டாவது ஃப்ரண்ட வில்லன் கத்தியால குத்திகிட்டு இருக்கும் போது ரத்தத்தோட ஒரு டயலாக் சொல்வான். “என்கூட இருக்க துரோகத்த தானே நீ பாத்துருக்க. விஸ்வாசத்த இன்னும் பாக்கல… வருவாண்டா” ங்குற டயலாக் செம. அதுவே நல்லா தமிழ் பேசுற ஆக்டர வச்சி எடுத்துருந்தா இந்த சீன் இன்னும் செமையா இருந்துருக்கும். அடுத்து சிரிப்பு ஏன் ஸ்பெஷாலிட்டி பாட்டும் choreography யும்.மத்த எல்லாமே கப்பி.

ராஜூபாய் படத்துல அடிக்கடி ஒரு டயலாக் சொல்லுவாரு.“நா சாகனும்னா நா தான் முடிவு பண்ணனும்.நீ சாகனும்னாலும் நா தான் முடிவு பண்ணனும்”ன்னு.சோக்கா சொன்னீங்க பாய். நாங்க சாகுறதயும் நீங்க தான் பாய் முடிவு பண்ணீருக்கீங்க. உங்கள நம்பி தியேட்டருக்கு படம் பாக்க வந்த மொத்த கும்பலயையும் கொண்டீங்களே பாய்..நிறைய பெண்களும் குழந்தைகளும் வேற இருந்தாங்க. மொத்ததுல ராஜூ பாய் அடுத்த விஷ்வா பாய்!!





பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

8 comments:

Shareef S M A said...


//சரி ஒழிஞ்சி போவட்டும்//

அத்தோட நீ எந்திரிச்சி வீட்டுக்கு போயிருக்கனும் தல...

அரவிந்த் said...

நீங்க என்ன விட அதிகமா பாதிக்கப்பட்டிருக்கீங்க போல. என்னுடைய விமர்சனம் (கண்டிப்பா படத்த விட மொக்கையா இருக்காது)

http://sivigai.blogspot.com/2014/08/blog-post_15.html

Anonymous said...

Super boss.

Anonymous said...

//டேய்… என்னடா இது டீப்பாய் உயரம் இருக்க இவந்தான் ராஜூபாயா.. அது என்ன மண்டையில புலிக்குட்டி தம்பி பூனைக்குட்டி மாதிரி முள்ளம்பன்றி சிலுப்பிக்கிட்டு நிக்கிது.//

-ஹாஹாஹா... சிரிச்சு ஓயல... :) :)

-வினோ

Unknown said...

brahmanandham mokkaya sollama vittutingalae... i saw jigarthanda(2 nd time) and anjaan back to back.. so enaku konjam effect jaasthiyae irundhuchu..

Anonymous said...

Pls respect the individuals and review only about the movies.....

Anonymous said...

உங்ககிட்டே இருந்து இப்படி ஒரு விமர்சனம் எதிர்பார்க்கவில்லை. அஞ்சான் படத்தை பற்றி எது வேணும்னாலும் எழுதுங்க. சூர்யா பற்றி கமெண்ட் எதுக்கு. அவர் கட்டையா இருந்தா என்ன. நெட்டையா இருந்தா என்ன? ரஜினி ரசிகனா இருந்துகிட்டு இப்படி எழுதறது நியாயமா? உங்க மனசாட்சிகிட்டே கேட்டு பாருங்க. அது பதில் சொல்லும்.

m.a.Kather said...

சூர்யாவை அவன்.இவன்னு எழுதியதை தவிர பாக்கி O.k.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...